Wednesday, October 15, 2008

* என்னை நாசமாபோக வெக்க இருந்த சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

அதெல்லாம் ஞாபகத்துக்கு இல்லீங்க. ஊருல திரை கட்டி விசேசத்துக்கு படம் போடுவாங்க. அது சுதந்திரதினம், எம்ஜிஆரு பொறந்த நாளு, மாரியாயி நோன்பி, கருப்பண்ண பொங்கல்னு. மொத படம் பழசாவும், ரெண்டாவது படம் புதுசாவும் இருக்கும். ஆனா நான் பார்த்த மொதோ படம் "நினைத்ததை முடிப்பவன்"னு அம்மா சொன்னாங்க.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம், குரோம்பேட்டை ராகேஷ்ல கூட்டாளிங்களோட ஒரு தடவை, அம்மணியோட ஈரோட்டுல ஒரு தடவை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
பந்தயம்தான். அதெல்லாம் தெனம் ஒரு படம் பார்க்குறோம். Tube Tamil, Tamil Wire, TamilOன்னு வாரம் ரெண்டாவது பார்க்குறோம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பார்க்குற ஆள் நானு. அண்ணாமலை, ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், அப்படின்னு பெரிய பட்டியல் போடலாம்.உன்னால் முடியும் தம்பி என்னிக்குமே புடிச்ச படம், அது மாதிரி ஏதாவது செய்யனும் நினைச்ச படம். கஜேந்திரான்னு ஒரு படம், அது மாதிரி பாதிச்ச படம் எதுவுமே இல்லே. ங்கோ.......

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
சண்டியர், என்ன கருமத்துக்கு தலைப்பை மாத்தச் சொன்னாங்களோ தெரியல.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
அதே தொழிலா இருந்ததால ஒன்னும் சொல்ல முடியல. ஆனா தசாதவதாரம் ஆரம்பக் காட்சிகளின் சொதப்பல் மாதிரி நெறைய குறைய மட்டும் கண்டுபிடிக்க முடியுது. காரணம் அதேத் தொழிலுல 3 ஆண்டு அனுபவம்.
PC SreeRaam, மணி ரதனம், விட்டலாச்சாரியார், மாயாவி வெங்கி இவுங்க எல்லாம் என்னை பாதிச்சவங்க. ஏன் ஜீன்ஸ் படம்,, எப்பா எப்பா, சங்கர் மாதிரி தொழில்நுட்பத்துக்கு மெனக்கெடுற ஆட்கள் ரொம்ப கம்மி(காப்பி அடிக்கிறதை அவர் தவிர்க்கலாம்)

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
நெறைய, எல்லாம் Onlineலதான்.வேற என்ன இருக்கு. சினிமா எக்ஸ்பிரஸ் மாதிரி சினிமாவுக்குன்னே வர பொஸ்தகம் படிக்கிற பழக்கம் எல்லாம் இல்லீங்க. எல்லாம் லைட்ஸ் ஆன் சுனில், சினிமாப் பொன்னையா, வாரமலர் துணுக்கு மூட்டை, ஜூவி மியாவ் மாதிரிதான்.

7.தமிழ்ச்சினிமா இசை?
உயிர்நாடி. பதில் 9 வது கேள்வில பாருங்க.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இரானி, ஸ்பெயின் மாதிரியான தரமான படங்கள் மட்டும்தான் பார்ப்பேன்னு புருடா விடத்தயாரா இல்லே. தமிழ், Subtitleவெச்சா ஆங்கிலம், ஹிந்தி பார்க்குறது உண்டு, Dil Chata Hai, முங்காரு மலே(கன்னடம்), மணி சித்திரதாழ், ..etc

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
4 வருசமா இசை அமைப்பாளர்கள் அலுவலக்த்துக்கு ஏறி இறங்கி நாசமாப் போனது பெரிசு. காசு குடுத்து கேஸட் வாங்கி அதுல நம்ம ட்யூனை போட்டு sampleஆ குடுத்தா, அடுத்த மாசம் ஏதோ ஒரு படத்துல பல்லவியாவோ, சரணமாவோ ஓடும்.. "அய்யோ நம்ம ட்யூனாச்சேன்""னு போயி கேட்டா 5 ஆயிரமோ பத்தாயிரனோ குடுத்து வாயடச்சுருவாங்க. (சங்கர்)கணேசுக்கு குண்டுப் பார்சல் அனுப்பிச்சது சரின்னு அப்போத் தோணும். அப்படி பின்னாடி நெறைய புண்ணு வாங்கின சம்பவங்களினால சினிமாவே வேணாம்டான்னு இப்போ இருக்கிற பொழப்ப பார்க்கிறேன். Junior Artists ரித்தீஸ், நெப்போலியன், ஆட்டம் போடுற ஸ்ரீதர், நோபல், ஜானி இவுங்களோட தெனமும் கூட வாழ்ந்த வாழ்க்கைன்னு நிறைய இருக்கு. அதெல்லாம் ஒரு சோகக்கதை. எங்கூரு ஆபாவாணன், எங்க ஊரே சேர்ந்து எடுத்து சிவாஜி நடிச்சு வெளிவராத ஒரே படம் ஆயிரம் கைகள், பவளக்கொடிக்கு இசை அமைச்ச என் மாமன் திலீப்...etc

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லாவே இருக்கும். ஆனா எந்த நடிகரும் அரசியலுக்கு போவ கூடாது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நல்லா இருப்பாங்க/இருப்பேன். வேற வேலை பார்க்கலாம், பதிவுகள் பாதியா கம்மியாயிரும். பால் மீதி ஆவும், சீரியல் அதிகமாகும், குத்தாட்டம் ஆட்டம் நெறைய நடக்கும்.

பொதுவா சங்கிலித் தொடருக்குன்னா வர மாட்டேன். கொத்தனாரே என்னமோ கேட்க நானும் ஆமாஞ்சாமின்னு சொல்ல.. இப்படி ஆகிப்போச்சு வாழ்க்கை. நானும் 5 பேரைக் கூப்பிடனுமாமே. அதான் சினிமாக்காரங்களையே கூப்பிடுவோம், வந்து எழுதலை....நடக்கிறதே வேற

1. மு.கருணாநிதி
2. ஜெ. ஜெயலலிதா
3. ரஜினி
4. கமல்
5. அமிதாப்(ஆசுபத்திரியிலிருந்த வந்தவுடன் எழுதினாப் போதும்)
6. சிரஞ்சீவி காரு.

29 comments:

  1. 5 பேரைக் கூப்பிடணும் அப்படின்னு சொல்லி ஆறு பேரைக் கூப்பிட்டு அதன் மூலம் ஒருத்தருக்கு மதிப்பே இல்லை அப்படின்னு நீர் செய்யும் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்! :)

    ReplyDelete
  2. //1. மு.கருணாநிதி
    2. ஜெ. ஜெயலலிதா
    3. ரஜினி
    4. கமல்
    5. அமிதாப்(ஆசுபத்திரியிலிருந்த வந்தவுடன் எழுதினாப் போதும்)
    6. சிரஞ்சீவி காரு.//

    என்ன இளா ஜந்து பேருன்னு சொல்லிட்டு ஆறு பேரை கூப்பிட்டு இருக்கே.. so இதுல யாரோ ஒருத்தர் கணக்குல வராத அல்லது கணக்குல சேத்துக்கு முடியாத ஆளு போல யாருப்பா அது..

    ReplyDelete
  3. //என்ன இளா ஜந்து பேருன்னு சொல்லிட்டு ஆறு பேரை கூப்பிட்டு இருக்கே.. so இதுல யாரோ ஒருத்தர் கணக்குல வராத அல்லது கணக்குல சேத்துக்கு முடியாத ஆளு போல யாருப்பா அது..//
    Over to Koths Comment

    ReplyDelete
  4. இளா,
    தமிழ்ச்சினிமாவுக்குன்னு புதுசா அமைச்ச மெட்டெல்லாம் பேசாம பதிவுல போட்டுர வேண்டியது தானே, எங்களை மாதிரி வெட்டி மக்கள்ஸ் அதுக்கு ஏதாச்சும் பாட்டு எழுதி முயற்சி பண்ணுவோம்ல...

    ReplyDelete
  5. ஹ்ம்ம்...புரியுது புரியுது. அந்த ஆறுல மொத ஆள் வந்த இரண்டாவது ஆள் வர மாட்டாங்க. இரண்டாம் ஆள் வந்தா மொத ஆள் வர மாட்டாங்க. அதானே ஆறு பேரக் கூப்பிட்டு இருக்கீங்க?

    ReplyDelete
  6. புது இசை அமைப்பாளர் வர்றதைத் தடுத்துட்டாங்களே...... அடடா......

    (எப்படியும் பாட்டுகளை நான் FF தான் செய்வேன். ஆனாலும் டைட்டிலில் இளா'ன்னு பார்த்தால் எவ்வளோ சந்தோசமா இருக்கும். டைட்டிலை மட்டும் கவனமா நல்லாப் பார்ப்பேனுங்க)

    ReplyDelete
  7. //4 வருசமா இசை அமைப்பாளர்கள் அலுவலக்த்துக்கு ஏறி இறங்கி நாசமாப் போனது பெரிசு. காசு குடுத்து கேஸட் வாங்கி அதுல நம்ம ட்யூனை போட்டு sampleஆ குடுத்தா, அடுத்த மாசம் ஏதோ ஒரு படத்துல பல்லவியாவோ, சரணமாவோ ஓடும்.. "அய்யோ நம்ம ட்யூனாச்சேன்""னு போயி கேட்டா 5 ஆயிரமோ பத்தாயிரனோ குடுத்து வாயடச்சுருவாங்க. (சங்கர்)கணேசுக்கு குண்டுப் பார்சல் அனுப்பிச்சது சரின்னு அப்போத் தோணும். அப்படி பின்னாடி நெறைய புண்ணு வாங்கின சம்பவங்களினால சினிமாவே வேணாம்டான்னு இப்போ இருக்கிற பொழப்ப பார்க்கிறேன். Junior Artists ரித்தீஸ், நெப்போலியன், ஆட்டம் போடுற ஸ்ரீதர், நோபல், ஜானி இவுங்களோட தெனமும் கூட வாழ்ந்த வாழ்க்கைன்னு நிறைய இருக்கு. அதெல்லாம் ஒரு சோகக்கதை. எங்கூரு ஆபாவாணன், எங்க ஊரே சேர்ந்து எடுத்து சிவாஜி நடிச்சு வெளிவராத ஒரே படம் ஆயிரம் கைகள், பவளக்கொடிக்கு இசை அமைச்ச என் மாமன் திலீப்...etc//

    வெளியூர்லதான் திருடுறாங்கன்னு நெனச்சது தப்பா போச்சே. மதிப்பில்லாத அந்த 6 ல பாதி யாருங்க.

    ReplyDelete
  8. நாசமாப் போகாமத் தப்பிச்சுட்டீங்க. வாழ்த்துகள்.
    அதனால்த் தான் வராத ஆறு பேரைக் கூப்பிட்டிகளோ:)

    ReplyDelete
  9. எப்படியோ எஸ் ஆகிட்டீங்க.

    ReplyDelete
  10. அண்ணாச்சிகிட்ட பல விஷயம் இருக்கும் போல இருக்கு...இன்னும் கொஞ்சம் சொல்றது...;)

    ReplyDelete
  11. தமிழ் சினிமாவோட நெருங்கி இருந்திருக்கிறிங்க போல....

    ReplyDelete
  12. //
    1. மு.கருணாநிதி
    2. ஜெ. ஜெயலலிதா
    3. ரஜினி
    4. கமல்
    5. அமிதாப்(ஆசுபத்திரியிலிருந்த வந்தவுடன் எழுதினாப் போதும்)
    6. சிரஞ்சீவி காரு.
    //

    இது சூப்பரு...:)

    ReplyDelete
  13. //கஜேந்திரான்னு ஒரு படம், அது மாதிரி பாதிச்ச படம் எதுவுமே இல்லே. ங்கோ.......//

    ரொம்ப பாதிக்கப்பட்டுட்டீங்க போல :)

    ReplyDelete
  14. 0. விஜயகாந்து - என்று ஏன் எழுதவில்லை. இது எந்த கணக்கிலும் சேராது.

    கஜேந்திராவால் பாதிக்கப்பட்டு இப்படி ஒரு (பம்பர அணி) தலைவனை (கேப்டனாமே) இருட்டடிப்பு செய்வதை (சுகன்யா காட்சியில வர்றதால) கண்ணடிக்கிறேன்.

    -------------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

    ReplyDelete
  15. //இன்னும் கொஞ்சம் சொல்றது...;)//
    ஆமாங்க கோபிநாத் இன்னொரு பதிவு இதைப் பத்தியே போடலாம் போல இருக்கு.

    ReplyDelete
  16. //திவோட தலைப்பு நச்...:)//
    நன்றிங்க தமிழன்

    ReplyDelete
  17. என்னாங்க இது? ஃப்ளாஷ் பேக்கு ஒரு சொழட்டு சொழட்டும் போலருக்கு ;)

    ReplyDelete
  18. //பால் மீதி ஆவும்//

    அது ஏன், பால் மீதி ஆகும்?

    ReplyDelete
  19. //5 பேரைக் கூப்பிடணும் அப்படின்னு சொல்லி ஆறு பேரைக் கூப்பிட்டு அதன் மூலம் ஒருத்தருக்கு மதிப்பே இல்லை அப்படின்னு நீர் செய்யும் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்//

    :):):)

    ReplyDelete
  20. //புது இசை அமைப்பாளர் வர்றதைத் தடுத்துட்டாங்களே//
    :(:(:(

    //புரியுது புரியுது. அந்த ஆறுல மொத ஆள் வந்த இரண்டாவது ஆள் வர மாட்டாங்க. இரண்டாம் ஆள் வந்தா மொத ஆள் வர மாட்டாங்க. அதானே ஆறு பேரக் கூப்பிட்டு இருக்கீங்க//

    :):):)

    ReplyDelete
  21. //தமிழ்ச்சினிமாவுக்குன்னு புதுசா அமைச்ச மெட்டெல்லாம் பேசாம பதிவுல போட்டுர வேண்டியது தானே, எங்களை மாதிரி வெட்டி மக்கள்ஸ் அதுக்கு ஏதாச்சும் பாட்டு எழுதி முயற்சி பண்ணுவோம்ல...//

    அதானே, நான் கூட ஒரு கவுஜ எழுதுவேன், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?

    ReplyDelete
  22. //அடுத்த மாசம் ஏதோ ஒரு படத்துல பல்லவியாவோ, சரணமாவோ ஓடும்//

    :-((

    ReplyDelete
  23. அடடா..தமிழ் சினிமா ஒரு நல்ல இசையமைப்பாளரை
    அமெரிக்காவுக்கு அனுப்பிடுச்சே!

    இப்ப ஒண்ணும் கெட்டுப்போயிடலை!

    திரும்ப வந்து கலக்குங்க!

    ReplyDelete
  24. அருமை.. நல்ல தொகுப்பு

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)