Tuesday, October 28, 2008

நிறம் மாறும் தீபாவ'லி'

நமக்கு தீபாவளி 27ந்தேதின்னா சிலருக்கு 28ம் தேதியாம், சிலருக்கு 29ம்தேதி. குஜராத்திகளோட வருசப் பிறப்பு 29 தேதியாம் அத்தோட தீவாவளியையும் சேர்த்து கொண்டாடுக்குவாங்களாம். நரகாசுரனை கூட மனுசன் நேரம், காலம் பார்த்துதான் சாவார் போல இருக்குங்க.


தீவாவளி கொண்டாட்டம் எல்லாம் நம்ம ஊர் மாதிரி இல்லேன்னு நினைக்கும் போது.. தூ என்ன Onsite வாழ்க்கை இதுன்னு தோணுது. எவ்ளோ நாள்தான் முகமூடிய மாட்டுகிட்டு அலையப்போறேம்னு இருக்கு

10 comments:

 1. ஆமாங்க எங்கனா ஒடிரலாம் போலதான் இருக்கு.
  குடுகுடுப்பை

  ReplyDelete
 2. //நேராவே போய் "இப்போ சிரிலங்காவுல நடக்கிறதுல உங்களுக்கும் என்னைப்போல வருத்தம் இல்லியா?"ன்னு கேட்டேன்.//

  ஞானி குமுதத்துல எழுதியிருக்கறார் படிச்சு பாருங்க. தமிழ்நாட்டுத் தமிழன் சும்மா உணர்ச்சி வசப்பட்டே வீணாப் போகிறோமோ எனத் தோனுது.பிற இந்தியர் கருதுவது போல நாமொரு emotional idiotsதானா? நமக்கு பிரச்சனைனா பிற தமிழர்கள் கவலைபடுவார்களா?

  ReplyDelete
 3. //தீவாவளி கொண்டாட்டம் எல்லாம் நம்ம ஊர் மாதிரி இல்லேன்னு நினைக்கும் போது..//
  மாப்பி.. நம்ம ஊருல இப்ப எவன் தீபாவளி கொண்டாடுறான் சொல்லு.. அல்லாரும் டிவியில நமிதாவை பாத்துட்டு இன்றைய பொழுது இனிதே கழிந்ததுன்னு கவுந்து படுத்துக்குறான்.. இது தான் இங்க தீபாவளி கொண்டாடுகிற அழகு..

  ReplyDelete
 4. தல இங்கே பாருங்க, தெளிவா சொல்லி இருக்காங்க, நீங்க குழப்பிக்காதீங்க

  http://www.qppstudio.net/publicholidays2008/india.htm

  நேத்து தீபாவளி (deepavali) தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரியில் மட்டும்
  இன்று தீவாளி (diwali) மற்ற இடங்களில் எல்லாம்

  ReplyDelete
 5. //இன்று தீவாளி (diwali) மற்ற இடங்களில் எல்லாம்//
  shift போட்டாய்யா நரகாசுரன் செத்தாரு?

  ReplyDelete
 6. அமெரிக்காவிலே திபாவளிக்கு விடுமுறை விட்டால் நல்லாத்தான் இருக்கும்

  ReplyDelete
 7. எங்க ஊர்லே நம்ம பார்லிமெண்ட்லேகூட தீபாவளி விழான்னு ஒரு அழைப்பு அனுப்புனாங்க.

  அது வெலிங்டன் என்றதால் என்னாலே போகமுடியலை.

  இந்த வருசம் லேபர் டே லாங்வீக் எண்ட் சரியான நேரத்துலே வந்து, தீபாவளி விடுமுறையாக ஆகிப்போச்சு:-)

  உள்ளூர் தமிழ்சங்கத்துலே தீபாவளிக் கொண்டாட்டம் நவம்பர் 15க்கு வச்சுருக்கு. அங்கே நானும் கோபாலும்தான் தமிழ்நாட்டு மக்கள்!

  ReplyDelete
 8. நண்பர்களே தயவு செய்து சில கேடு கெட்டவர்களின் பேச்சுக்களை கேட்டு ஈழத் தமிழர்கள் நன்றி அற்றவர்கள். அவர்களுக்கே ஈழத்தில் நடக்கும் போராட்டம் பற்றி அக்கறை இல்லை என்று நினைத்துவிடாதீர்கள்.

  என்ன செய்வது. சுயநலம் கொண்ட மனிதர்கள் எல்லா இனத்திற்கும் சாபக்கேடு.

  ஆனால் பெரும்பாலான வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் இன்னும் மண்ணின் நினைவோடும், மண்ணிற்காக போராடும் வீரர்களுக்கு ஆதரவாகவும்தான் இருக்கின்றோம்.

  சீமான், அமீர், போன்றொரின் கைது மனதை நெருடுகின்றது. எமக்காக சிறை செல்கிறார்களே எனும்போது எழும் உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே இல்லை.

  தமிழக உறவுகளின் ஆதரவுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

  நன்றி.

  ஒரு ஈழத்தமிழன்

  ReplyDelete
 9. கி.ரா. போல் ஒரு நேடிவிடி தெரிகிறது

  "நாங்க எங்கட நாட்டை விட்டு"

  ஒரு சிறுகதையின் கடைசிவரிகள்போல இருந்தது. சற்று உற்று பார்த்தால் எதோ
  செய்தி இருக்கிறது .மனிதனை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனை வளையங்கள் இருக்கிறது. சொந்த வளையங்களை கவனிப்பதற்கே மனிதன் விருப்பபடுகிறான்.மெனகேடுகிறான். தொலை தூரத்தில் உள்ள பிரச்சனை வளையங்கள் அவனை பாதிப்பதில்லை.இப்ப இருப்பவன் சங்க கால தமிழன் அல்ல. இப்ப இருப்பது "கலக்க போவது அல்லது மானாட மயிலாட " தமிழன்

  ReplyDelete
 10. இளா,
  உண்மையாச் சொல்லப்போனா நம்ம ஊரில மக்களோட இல்லையேன்னு தான் ரொம்ப சோகமா இருந்தது.

  ReplyDelete

WhatsApp DP - சிறுகதை

கா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (3) காதல் (14) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)