Tuesday, July 31, 2007

* சக்தி டிரான்ஸ்போர்ட்-1

பவானி, 6:38Am, பேருந்து நிலையம்.

சக்தி டிரான்ஸ்போர்ட், பவானிலிருந்து கோவை போற ஒரு ரதம்
(திங்கள் காலையிலும், வெள்ளிக்கிழமை கோவையிலிருந்து 5:40 PMக்கும்).

ஆமா, 6:40க்கு கிளம்பவேண்டிய வண்டி 5:50க்கே ஃபுல்லாகிடும் . பவானியிலிருந்து போற பலதரப்பட்ட காலேஜ் பசங்க, பொண்ணுங்களுக்கும் அது ஒரு ஃபோரம் மாதிரி. உள்ளே வறுக்கப்படற கடலையினால, வண்டி நிறைய பொகை விட்டுட்டே போவும் . காவேரி ஆத்துக்கும், பவானி ஆத்துக்கும் நடுவால இருக்கிற ஊருதான் பவானி. திங்கள் கிழமை காலையில், இந்த பஸ்ல இருந்து தனியா இன்னொரு ஜொள் ஆறு உற்பத்தியாகி முணாவதா ரோட்டுல ஓடிட்டு இருக்கும்.


ஆவலோட எட்டி பார்த்தா ரதி.



"என்ன இவனை இன்னும் காணோம்? எப்போ சீட் போட்டு வெச்சாலும் லேட்டாதான் வரான், அதுவும் வண்டி எடுக்க சரியா 5 நிமிசத்துக்கு முன்னாடிதான் வரான். பெரிய துரைன்னு நினைப்பு. ஒரு பொண்ணு காலையில் 5:30 மணிக்கு வந்து சீட் போட்டு வெச்சா இவன் ஆடி அசைஞ்சு 6:35 வருவான். இவனை ஒரு நாள் நிக்க விட்டு பார்க்கனும், அப்போதான் என் அருமை தெரியும்".

டென்சன்ல நகத்தை கடிச்ச படியே அவனை எதிர்பார்க்கும் ரதி நம்ம ஹீரோவைவிட ஒரு மாசத்துக்கு பெரியவள், ஸ்கூல் சீனியரும் கூட. இம்ப்ரூவ்மெண்ட் எழுதியும் சரியா மார்க் கிடைக்காம ஆர்ட்ஸ் காலேஜ்ல சீட் வாங்க, ஜூனியரா இருந்த ஹீரோ அவளோடு வந்து சேர்ந்துகிட்டான். ஊர்ப்பாசமோ, ஸ்கூல் பாசமோ தெரியல, இரண்டு பேரும் சீக்கிரம் தோஸ்த் ஆகிட்டாங்க. அதுவும் ஒரே கிளாஸ், ரெண்டு பேரும் ஹாஸ்டல் வேற. ரெண்டு பேருமே ஒன்னாவே போறதும், வரது நிறைய புரளிய கிளப்பி விட்டுருக்கு. இரண்டு பேருமே இப்போ பிஸ்ஜி காலேஜ்ல 3ம் வருஷம் படிக்கிறாங்க.



சரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான். எப்பயுமே டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருக்கிற 2பேர் சீட்தான் அவுங்களுக்கு. ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுத்துட்டு


"உனக்கு என்னடி ராசாத்தி ? எம்புட்டு அழகா இருக்கே.." அப்படின்னு சொல்லிட்டு முணுமுணுக்க ஆரம்பிச்சான்.

ரதிக்கு இப்போ கோவம் போயி அவன் என்ன சொல்றான்னு கேக்குற ஆர்வம் வந்துருச்சு.

"டேய் என்னடா சொல்றே? எதைச் சொன்னாலும் எனக்கு கேக்குற மாதிரி சொல்லு". ஹீரோவுக்கு தெரியும் இவளோட கோவம் எவ்வளவுதூரம்னு.

"ஒன்னும் இல்லே ரதி , நீ செம அழகு. எப்பயுமே நீ என் கூட உக்காந்துட்டு வர்றதை எல்லாரும் பொறாமையா பார்க்குறாங்க. எனக்கு ஒரு மாதிரியா இல்லே இருக்கு "ன்னு சொல்ல, அவளுக்கு கோவம் போன இடமே தெரியல "ஏன் உக்காந்துட்டு வந்தா என்ன இப்போ? ஒரு ஒரே காலேஜ், ஒரே கிளாஸ், ஹாஸ்டல் கூட. எரியறவனுக்கு எரியட்டும், நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே".

ஹீரோ, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வந்து, ஷட்டில் பேட்மிண்டன்ல யுனிவர்ஸ்டி பிளேயர், அதுவுமில்லாம பெயிண்டிங்க் கிளப் சேர்மேன், சிந்தனையாளர் மன்றத்துல செயலாளர் போஸ்ட் வேற. ஹீரோ கிளாசுக்கு போறது ரொம்ப கம்மி. ரதியோ லேடிஸ் ஹாஸ்டல் சேர்வுமன். ரெண்டு பேருமே அவுங்க அவுங்க ஏரியாவுல பெரிய ஆளுங்க . ஹீரோவோட அத்தனை அசைன்மெண்ட் பேப்பர்ஸ் எழுதறது ரதிதான். அவனும் என்னாச்சின்னே கேக்கமாட்டான். இவளா எழுதி சம்மிட் பண்ணிருவா. ஆனா பாவிப்பய , பைனல் எக்ஸாம்ல அவளை விட நல்ல மார்க் எடுத்து அவளை மண்டை காய விடுவான். ஹீரோ நிறைய பொண்ணுங்களோட பேசினாலும், லவ் மட்டும் அவனுக்கு வரவே இல்லே. அதைப்பத்தி அவனும் யோசனை பண்ணலை, யோசனை பண்ண நேரமும் இல்லே. அவனைச் சுத்தி எப்போ பார்த்தாலும் பசங்க கூட்டம். அந்த கூட்டமும் அவனை அப்படி நினைக்கவே வெக்கலை.


காலேஜ் கேண்டீன், ஜெய்யும் ஹீரோவும் டீ சாப்பிட்டபடி இருக்க, வடையும் தோசையும் வாங்கிட்டு வந்த அயூப் "மச்சான், ரதிக்கு பெரிய ஃபிகருன்னு நெனப்புடா. அவ கூடவே இருக்கிற ராஜிய பாரேன் எவ்வளவு அமைதியான பொண்ணு. எவனாவது அவளைச் சீண்டறானா? எல்லாரும் ரதி பின்னாடியே அலையறாங்க. பாவம்டா ராஜீக்கு எப்படி இருக்கும்.? நேத்து பாக்குறேன், ரெண்டு பேரும் ஒன்னாதான் ஹாஸ்டல் போறாங்க , அந்த நேரத்துல பிஜி படிக்கிற தர்மன் வந்து 1 மணி நேரம் ரதிக்கிட்டே வழிஞ்சுட்டு இருக்காரு. ராஜீயும் சும்மா ஓரமா நின்னுட்டே இருக்கா. எப்படி இருந்து இருக்கும் அவளுக்கு? அவ கிட்ட ஒருத்தனும் பேசவும் மாட்டேங்குறாங்க. எல்லாருமே அவளை ஒதுக்கிறாங்கன்னு கஷ்டமா இருக்காதா? ஒரு கிளாஸ்மேட்டா அவளுக்கு அந்த ஃபீலிங் வராம பார்த்துக்கனும்டா "

"சரிடா அயூப், எனக்கும் இது தோணும். ஜெய் , நீ தான்டா நம்ம காலேஜ் கமல். நீ அவகிட்டே புரபோஸ் பண்ணு. நான் சாயங்காலம் ஹாஸ்டல்ல ராஜிய பார்த்து உன் புரபோஸலை ரிஜக்ட் பண்றா மாதிரி அவகிட்டே பேசிக்கிறேன் . அப்புறம் அவளுக்கு அந்த ஃபீலிங் வராதுல்லே. என்ன சொல்றே?"

"ஆஹா, என்னை கோட்டிக்காரன் ஆக்கப்பார்க்கிறீங்களேடா. இந்த விஷயம் தெரிஞ்சா, அப்புறம் எவளும் என்னை கண்டுக்க மாட்டாங்க, வேணாம்டா என்னை விட்டுருங்கடா டேய். ப்ளீஸ்டா ", ஜெய் அழற நிலைமைக்கே வந்துட்டான்.

"சரிடா, நானும் புரபோஸ் பண்றேன். என்ன சொல்றான்னு பார்ப்போம் . சரியா? உனக்கு கம்பெனி நானு. என்ன ஆனாலும் பரவாயில்லே"ன்னு ஹீரோ சொல்ல, எங்கேயோ ஒதை விழபோவுது. ஹீரோவும் வரேன்னு சொல்றான், அப்புறம் என்னான்னு "சரிடா, ஆனா நீ பேசக்கூடாது. நீ பேசினா விவரமா என்ன மாட்டி விட்டிருவே, அயூப் பேசட்டும் " சொன்னான் ஜெய்.

ஒரு தம்முக்கு அப்புறம் டீல் மாற்றப்பட்டது. இவங்க ரெண்டு புரபோஸலையும் அயூப்; சங்கீதா மூலம் ராஜீக்கு சொல்றதா முடிவு செஞ்சாங்க. அயூப் மேல ரெண்டு பேருக்கும் அவ்வளவு நம்பிக்கை. 3வது கிளாஸ் 11:15- 12:15க்கு. சாப்பாட்டு நேரம் 45 நிமிஷம் அதாவ்து 12:15-1:00. 11:00-11:15 பிரேக் அந்த நேரத்துல ஜெய்யும் ஹீரோவும் கிளாஸை விட்டு வெளியே போயிட்டு, சாப்பாட்டுக்கு அப்புறம், அதாவது 1 மணிக்குதான் கிளாசுக்கு வரனும். அயூப் சங்கீதாகிட்டே சொல்லி ராஜிக்கிட்டே 11-11:15 பிரேக்லயே சொல்றதா ஏற்பாடு ஆச்சு. 11 மணி ஆச்சு, ஜெய்யும் ஹீரோவும் வெளியே போக , அயூப் சங்கீதாகிட்டே விஷயத்தைச் சொல்ல, சங்கீதா ராஜிய கூப்பிட்டு "ஹீரோவும், ஜெய்யும் உன்னை சின்சியரா லவ் பண்றாங்க. நீ யாரை சூஸ் பண்ணப்போறேன்?"னு கேட்டா. ராஜிக்கு செம கோவம், நோட்ட எடுத்துகிட்டு வேகமா ஹாஸ்டலுக்கு போய்ட்டா. இதைக் கேள்விப்பட்ட ரதியும் அவ பின்னாடியே போய்ட்டா. ராஜி போனதோ, ரதியும் அவ பின்னாடியே போனதோ தெரியாம ஜெய்யும், ஹீரோவும் சினிமா பார்க்க போய்ட்டாங்க. அன்னிக்கு மத்தியானம் அவுங்க காலேஜ்கே வரலே .

அடுத்த நாள் காலையில், 6:15க்கு போன் ஜெய் வீட்டு அயூப் கூப்பிட்டான் "டேய் ஜெய், நேத்து ரெண்டு பேரும் எங்கேடா போய்த்தொலைஞ்சீங்க? ஒரு பெரிய பிரச்சினை ஆகிருச்சு மச்சான். 8 மணிக்கே ராஜியும், ரதியும் கேண்டீனுக்கு வரதா சொல்லி இருக்காங்க. நீ ஹீரோவை கூட்டிகிட்டு சரியா போயிருடா"

"என்னது போயிடாவா? நீ வரலையா?"

"இல்லே மச்சி. எனக்கு உடம்பு சரியில்லே"னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் அயூப். அவன் நல்லாதான் இருக்கான், ஆனா போவலை.

ஹீரோவ கூட்டிக்கிட்டு சரியா 7:55க்கே கேண்டீனுக்கு போய்ட்டான் ஜெய். இரண்டு பேரும் ஒரு தம்மு கூட அடிக்கலை. இப்போ ரெண்டு பேருக்குமே டென்ஷன். எங்கே யாராவது ஒருத்தனுக்கு ராஜி ஓக்கே சொல்லிட்டாள்ன்னா என்ன பண்றதுன்னு பயம்.



"மச்சான் மாட்டிக்கிட்டோம்டா. ஒருத்தனை செலக்ட் பண்ணிட்டாலும் பிரச்சினை, பிரின்சிகிட்டே போட்டு குடுத்தாலும் பிரச்சினை. என்னடா பண்ண? அந்த நாதாறி நாயி சும்மா இருந்தவங்களை சொறிஞ்சி விட்டுட்டு ஒடம்பு சரியில்லைன்னு வீட்டுல இருக்கான். இப்போ எவன் ஒடம்பு சரியில்லாம போவுதே தெரியல?. எல்லாருக்கும் சனி இப்படிதான் வடை வாங்கித்தந்து பிளான் போடுமா?"ன்னு ஹீரோ நடுங்கிகிட்டே சொல்ல ஜெய்க்கோ பேச்சே வரலை .



தூரத்துல ராஜியும், ரதியும் வர, "மச்சி, நான் போறேன்டா. நீ சமாளிச்சுகோடா . ஒரு அமைதியான பொண்ணை எப்படி பத்ரகாளியா மாத்தி வெச்சுருக்கான்னு பாரேன். அயோ, நான் எஸ்கேப்புடா " ன்னு சொல்லி பின்னாடி கேட் வழியா கிரவுண்டு ஓடிப்போயிட்டான் ஜெய்.


பில்டிங் ஸ்ட்ராங். ஆனா பேஸ்மட்டம் வீக்குங்குற மாதிரி உள்ளுக்குள்ள நடுங்கிட்டே வெளியே சிரிச்சா மாதிரி ராஜிக்கு "ஹாய் " சொன்னான் ஹீரோ. ரதியோ தனியா வேற டேபிள் போயி உக்காந்துகிட்டா. எதிர்பார்த்த மாதிரி கோவமா இல்லாம, செம கூலா வந்து இருந்தா ராஜி. மஞ்சள் கலரு சுடிதாரு போட்டு, தலைக்கு குளிச்சு, லூஸ் ஹேர் போட்டு, வாசமா முன்னாடி வந்து அழகா ஒரு சிரிப்பை தவற விட்டா. அப்போதான், ஹீரோவுக்கு DTS எஃபக்ட்ல ஆப்பு அடிக்கிற சவுண்ட் கேட்க ஆரம்பிச்சது.

(தொடரும்....) Part- 2 படிக்க

12 comments:

  1. தலைவா,
    சூப்பரா போகுது உங்க கதை...

    ஹீரோ பேரு இளா தானே :-)

    ReplyDelete
  2. //ஹீரோ பேரு இளா தானே//
    //சொந்தக்கதை? :)) //

    இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனா ஹீரோ பேரு இளாதான்.

    ReplyDelete
  3. //வெட்டிப்பயல் said...
    தலைவா,
    சூப்பரா போகுது உங்க கதை...//
    வெட்டி, நீங்க எழுதுனதுல எனக்கு ரொம்ப பிடிச்ச தூறலுக்கும் இதுக்கு ஒரு ஒத்துமை இருக்கு. அதாவது கடைசி வரி..

    ReplyDelete
  4. கோயமுத்தூர்ல இருந்து ஈரோட்டுக்கும், ஈரோட்ல இருந்து கோயமுத்தூருக்கும் இப்படித்தான நாங்க கடலை போட்டுட்டு போவோம்.
    மலரும் நினைவுகளா இருக்கு எனக்கு
    .கடைசி சீட் முழுக்க புடிச்சு வைச்சிருவார் கண்டக்டர்.
    ம்ம்ம்ம்ம் அது ஒரு கனாக்காலம்

    ReplyDelete
  5. ஒஎருந்துறையிலிருந்து ST பஸ் ல தான் நானும் திங்கள் காலையில போவேன். உக்கார்ந்ததே இல்லை ':)

    ReplyDelete
  6. தள கத, சாரி அனுபவம் சூப்பர் போங்க.....

    ReplyDelete
  7. சம்பவம் நல்லா நகருது. ராஜிக்கு அயூப்பை பிடிச்சதை ஒருவேளை சொல்ல வந்திருக்கிறார்களோ? சஸ்பென்ஸ் தாங்க முடியலை :-)

    ReplyDelete
  8. தொடரா...ரைய்..ரைய்ய்ய் :))

    ReplyDelete
  9. சின்ன அம்மணி-SCP/National பஸ்ஸா? இந்த ரெண்டு பஸ்ஸுமே STயோட ரேஸ் அடிச்சுட்டே போவுமே.

    //உக்கார்ந்ததே இல்லை ':) //
    அதான் பவானியிலேயே ரொம்பி வழியுமே உதய். அப்புறம் எங்கே பெருந்துறையில் சீட் கிடைக்கும்?

    ReplyDelete
  10. இளா
    கதை சூப்பரா போகுது.

    ////ஹீரோ பேரு இளா தானே//
    //இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனா ஹீரோ பேரு இளாதான்//

    ஓ...
    நாங்க இளா பேரு தான் ஹீரோ-ன்னுல்ல நெனச்சோம்! :-)

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)