Click here to Read [Part-1]
"டேய் ஹீரோ, நீ என்னை ஏமாத்த முயற்சி பண்றேன்னு தெரியும். அதனால நான் உன்னை லவ் பண்ணலே". எஸ்கேப்பு ஆன சந்தோசத்துல அப்படியே ஒரு 100 அடி பறந்தான் ஹீரோ, உடனே கீழே வந்து
"அப்போ ஜெய்ய லவ் பண்றியா ராஜி" ன்னு கேட்டான். அடுத்தவன் நாசமா போறதுல அவ்ளோ சந்தோசம் இந்தப் பசங்களுக்கு.
ராஜியோ "இல்லேடா, நான் எதிர்பார்க்கிற மாதிரி ஜெய் இல்லேடா. சோ, அவன் கிட்டே சொல்லிடுடா. உங்க ரெண்டு பேரையும் நான் லவ் பண்ணலை" அப்படின்னதும் ஹீரோவுக்கு ஒரு பெரிய டிரீட் இருக்குறது கண்ணுல தெரிஞ்சது, அப்படியே ஒரு கும்பல் அயூப்பை தொரத்தி, தொரத்தி வெட்டுறதும் தெரிஞ்சது.
அவ்ளோதான் முடிச்சுட்டாள்னு பார்த்தா, ஹீரோ கழுத்த புடிச்சுட்டு குசுகுசுன்னு சொன்னா
"நீயும் ரதியும் ஸ்கூல் இருந்தே லவ் பண்றீங்களாமே, என் கிட்ட சொல்லி எப்படி அழுதா தெரியுமா?அவளை இப்படி சின்சியரா லவ் பண்ணிட்டு எப்படிடா எனக்கு புரபோஸ் பண்ண மனசு வந்துச்சு. அவளை நினைச்சு பார்த்தியா? அறிவு இல்லே உனக்கு? அவளைப்பாருடா, பாவமா இல்லே. ஏண்டா இப்படி பொண்ணுங்களை கஷ்டப்படுத்துறீங்க? போயி அவளை சமாதானப்படுத்து".
ஹீரோவுக்கு இப்போ லைட்டா வயித்த கலக்க ஆரம்பிச்சு இருச்சு. இதென்னடா, சூன்யம் மஞ்சள் கலர் சுடிதாரு போட்டு வந்துருக்குன்னு சொல்லி திரும்பி பார்த்தான். இதுவரைக்கும் லவ் பண்ற எண்ணமே இல்லாதவன் ஹீரோ, இவனை பல வருஷம் லவ் பண்ணினதா சொல்றா ரதி. ஹீரோவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. மனசுக்குள்ள் வருத்தம் எதுவும் சொல்லாம் கிளம்பி நேரா ஊருக்கு போய்ட்டான். ரெண்டு பேருமே அந்த வார இறுதியில போன்ல பேசிக்கலை.
அடுத்த வாரம் சீட் போட்டு வெச்சும் ஹீரோ வரவே இல்லே, காலேஜ்க்கும் வரலே. அயூப் கிட்டே கேட்டதுக்கு ஹீரோ மேட்சுக்காக திருச்சி போனதா சொன்னான். ஹீரோ கோச்சுக்கிட்டு இருந்தான்னா "ராஜி சும்மா விளையாட்டுக்குதான் அப்படி சொன்னாள்"னு சொல்லி தப்பிச்சுக்கலாம்னு முடிவு பண்ணினா ரதி. வெட்கத்தை விட்டு அவன்கிட்டே புரபோஸ் பண்ணினா, அடிச்சாலும் அடிப்பான் அந்த காட்டுப்பய. அதனால ரதியும் மனசை தேத்திக்க ஆரம்பிச்சா, ரெண்டு ராத்திரி தூங்காம அழுதிட்டு இருந்தது ராஜிக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். அவளோட காதல் முடிஞ்சு போன விஷயம் நனைஞ்சு போன தலகாணிக்கு மட்டுமே தெரிஞ்சுது.
வெள்ளிக்கிழமை, ஹீரோ ஜெயிச்சுட்டதா நோட்டீஸ் போர்ட்ல போட்டு இருந்தாங்க. அன்னிக்கு சாயங்காலம் தனியா STல ஏறி, பவானி போற வரைக்கும் அழுதிட்டே போனாள் ரதி.
அடுத்த வாரம் திங்கட் கிழமை
பவானி, 6:35Am, பேருந்து நிலையம்.
சரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான்.
ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுப்பான்னு பார்த்தா ஒன்னும் பேசாம் உக்காந்துட்டு தரைய பார்த்துட்டு இருந்தான் ஹீரோ. இனிமே பேசாம இருந்தா இவன் தப்பா நினைச்சுக்குவான்னு நெனச்சு
"டேய், என்னடா என் மேல கோவமா? ராஜிதாண்டா உன்னை கலாய்க்க அப்படி சொன்னா. அதுக்காக என்கிட்ட பேசாம இருக்காதடா, ப்ளீஸ்" னு கெஞ்ச ஆரம்பிச்சா ரதி.
இதுவரைக்கும் சும்மா தரைய பார்த்துட்டு இருந்த ஹீரோ ரதிய பார்த்து கேட்டான் "அப்போ ராஜி சொன்னது பொய்தானே?"
"ஆமாண்டா" எச்சில் விழுங்கியபடி ரதி சொல்லும் போது தொண்டை அடைச்சுக்கிச்சு.
ரதிக்கு சந்தோசமா இருந்த ஹீரோவ பார்க்க கோவமாவும் இருந்துச்சு, அழுகை வர மாதிரியும் இருந்துச்சு.
"அப்போ ஒன்னு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே ரதி?"
"சொல்லுடா"
"இனிமே நான் கேரா மில்க் சாக்லெட் எல்லாம் தரமாட்டேன். infact பிரண்ட்ஸா பழகுறதையும் நிறுத்திக்குவோம், சரியா?"
"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே?"
அதுக்குள்ள ஹீரோவை டிரைவர் வரச்சொன்னாரு
"இரு, ஆனந்து வரேன் ஒரு நிமிஷம்"னு சொல்லிட்டு
"என்ன ரதி சொன்னே?"
"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே?"
"எவன் அப்படி சொன்னான்?"
"நீதான்"
"லூஸூ, காதலர்களா பழகுவோம்னு சொன்னேன்"ன்னு சொல்ல, ரதிக்கு அவன் என்ன சொன்னான்னு புரியவே கொஞ்சம் நேரம் ஆச்சு. அதுக்குள்ள டிரைவர் பக்கத்துல போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுட்டான் ஹீரோ.
ரதிக்கு, இப்போ அவன் கைய கோர்த்துட்டு இருக்கனும் போல இருந்துச்சு. யோசனை பண்ணாம, யாரைப்பத்தியும் கவலைப்படாம சத்தம் போட்டு சந்தோசமா கூப்பிட்டா
"இளா, இங்கே வரப்போறியா இல்லியா?"
--முற்றும்--
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
//இளா, இங்கே வரப்போறியா இல்லியா?"//
ReplyDeleteAppadi podu! Sontha Kadhaiya!
Nice Finishing!
கதை சூப்பர்...
ReplyDeleteபோன பகுதிலயே தெரிஞ்சிடுச்சி ஹீரோ நீங்க தானு :-)
//அடுத்தவன் நாசமா போறதுல அவ்ளோ சந்தோசம் இந்தப் பசங்களுக்கு.
ReplyDelete//
நீங்க இம்புட்டு நல்லவருன்னு சொல்லவே இல்ல :))
//அதுக்குள்ள டிரைவர் பக்கத்துல போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுட்டான் ஹீரோ.
//
எல்லாரும் கல்யாணத்துக்கப்புறம் தான் பயப்புடுவாங்க.. நீங்க லவ்வ சொன்னதுமேவா??
கதை சூப்பர் :))
//Appadi podu! Sontha Kadhaiya!//
ReplyDelete//போன பகுதிலயே தெரிஞ்சிடுச்சி ஹீரோ நீங்க தானு //
"சிறுகதை/கவிதை" வகையில இதை சேர்த்து இருக்கேனே. அப்புறம் ஏஞ்சாமி இவ்ளோ கொலை வெறி.
முழுக்கிணறும் தாண்டுனீங்கதானே? :-))))
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
ReplyDeleteஆனந்த கண்ணீர் வருது பா!!!
நீங்க என்னத்த சொல்லி சமாளிச்சாலும் எங்களுக்கு உண்மை தெரிஞ்சு போச்சு அண்ணாசி!!!
வாழ்த்துக்கள்!!
கதைக்கும் . வாழ்க்கைக்கும்!!! :-)))
தல
ReplyDeleteசூப்பர் கதை! நல்ல விறு விறு!
//இளா, இங்கே வரப்போறியா இல்லியா//
போனீங்களா? - ஓடியிருப்பீங்களே? :-)
இதையைப் போயி கதையின்னு சொன்னா நாங்க நம்பிக்கோணுமாக்கும். எப்பிடியோ கேரா மில்க் வாங்கிக் கொடுத்தே கதையை முடிச்சுப்போட்டீங்களே.நல்லா இருங்க சாமிகளா.
ReplyDeleteதிடீர் திரும்பம்னா இதுதான் நல்ல முடிவுங்க இளா
ReplyDeleteஅப்புறம்?
ReplyDelete//"இளா, இங்கே வரப்போறியா இல்லியா?"
ReplyDelete//
அடங்கொக்கமக்கா...
இத்தனை நாள் கத விடுவீங்க....இப்போ கதை சொல்லுறீங்க... கதையோ, அனுபவமோ... நல்லா இருந்திச்சு...
ReplyDeleteநமக்கும் வேற வழியில்லையே...
ReplyDeleteபோட்டு உடைச்சுத்தானே ஆவனும்...!!
சூப்பர் சொந்த கதை...
ReplyDelete//அவளோட காதல் முடிஞ்சு போன விஷயம் நனைஞ்சு போன தலகாணிக்கு மட்டுமே தெரிஞ்சுது//
எப்படிங்க இப்படியெல்லாம்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//ரதிக்கு, இப்போ அவன் கைய கோர்த்துட்டு இருக்கனும் போல இருந்துச்சு.//
என்னப்பு கதைல கத விடறீங்க. உங்களுக்கு தானே அப்படி இருந்தது.
//"இளா, இங்கே வரப்போறியா இல்லியா?"//
இவ்ளோ மரியாதையா கூப்டாங்களாக்கும்.
அத நாங்க நம்பனுமாக்கும்...
\\"இளா, இங்கே வரப்போறியா இல்லியா?"\\
ReplyDeleteஅட இருங்க அண்ணி...இப்ப தான் ஆரம்பிச்சிருக்காரு அதுக்குள்ள கூப்பிட்டுகிட்டு..
இது உண்மைன்னு நிங்க சொன்னாலும் இந்த தமிழ்மணத்து தம்பிகள் நம்பவோ மாட்டோம்ண்ணே.... ;-))
\\வாழ்த்துக்கள்!!
ReplyDeleteகதைக்கும் . வாழ்க்கைக்கும்!!! :-)))//
வழிமொழிகிறேன். :))
நல்ல கதை. அப்ப ராஜி அவ்வளவுதானா?
ReplyDeleteடீச்சர்: //முழுக்கிணறும் தாண்டுனீங்கதானே? :-)))) //
ReplyDeleteஆமாங்க, கதைய சரியா ரெண்டே நாள்ல முடிச்சுட்டோம்ல
சீவிஆர்://சமாளிச்சாலும் எங்களுக்கு உண்மை தெரிஞ்சு போச்சு அண்ணாசி!!!//
ஊருக்கு வருவீங்களே, அன்னிக்கு சொல்றேம்ப உண்மைய
KRS: /தல
//சூப்பர் கதை! நல்ல விறு விறு!//
நன்றி..
//இளா, இங்கே வரப்போறியா இல்லியா //
போனீங்களா? - ஓடியிருப்பீங்களே? :-) //
இதுக்காக எல்லாம் இன்னொரு பார்ட் எழுத முடியாதுங்கோவ்
//எல்லாரும் கல்யாணத்துக்கப்புறம் தான் பயப்புடுவாங்க.. நீங்க லவ்வ சொன்னதுமேவா??//
ReplyDeleteஅய்யோ நீங்களுமா?
//கதை சூப்பர் :)) //
அதானே, கடைசி வரியில இல்லே சரியா சொல்லி இருக்கீங்க.
TBCD: //இத்தனை நாள் கத விடுவீங்க....இப்போ கதை சொல்லுறீங்க//
ReplyDeleteஎன்ன மக்கா சொல்ல வறீங்க?
சந்துரு: //இதையைப் போயி கதையின்னு சொன்னா நாங்க நம்பிக்கோணுமாக்கும். //
அய்யோ அய்யோ
//சூப்பர் சொந்த கதை...//
ReplyDelete//என்னப்பு கதைல கத விடறீங்க. //
ஏன் இவ்வளவு குழப்பம்?
//நமக்கும் வேற வழியில்லையே...
ReplyDeleteபோட்டு உடைச்சுத்தானே ஆவனும்...!! //
ஆமா ஆமா, இருக்காதா பின்னே.
முத்துலெட்சுமி: \\வாழ்த்துக்கள்!!
ReplyDeleteகதைக்கும் . வாழ்க்கைக்கும்!!! :-)))//
வழிமொழிகிறேன். :))
நன்றி நன்றி நன்றி
ஜெஸிலா://நல்ல கதை. அப்ப ராஜி அவ்வளவுதானா? //
ராஜி இப்ப உங்க ஊர்லதான் இருக்காங்க. பெரியா இராணுவ அதிகாரியோட தங்கமணியா. ராஜி, காலேஜ்ல யாரையும் காதலிக்கிலீங்க.
//இது உண்மைன்னு நிங்க சொன்னாலும் இந்த தமிழ்மணத்து தம்பிகள் நம்பவோ மாட்டோம்ண்ணே.... ;-)) //
ReplyDeleteயாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் :(
வார்ரே வா இளா இப்படி ஒரு சூப்பரா சொந்தக்கதையா ?? ரொம்ப அழகா இருந்துச்சு தல !! கலக்குங்க இன்னும் !! :))))
ReplyDeleteகதை சூப்பர். இது உங்க 'உண்மைக்கதை' இல்லைங்கறத நான் நம்பிட்டேன் ;-)
ReplyDeleteஎன்னது இது....மரம் தன் வரலாறு கூறுதல்...ஆறு தன் வரலாறு கூறுதல்னு தமிழ்ல கட்டுரை எழுதீருக்கோம். இதென்ன நட்சத்திரம் தன் வரலாறு கூறுதலா!
ReplyDeleteஎனக்கு கண்ணுலேர்ந்து அப்படியே கரகரன்னு தண்ணீரா கொட்டுது
ReplyDelete:))) ஒரே மூச்சுல படிச்சுட்டேன்...
ReplyDeleteweekend ஓரு படம் பார்த்த மாதிரி இருக்கு :)
வாழ்த்துக்கள்!!!
ST பஸ் மட்டும்தானா ? இல்லை SRS பஸ்ஸுக்கும் ஒரு கதை இருக்கா?
ReplyDelete