Monday, July 30, 2007

* காதல்னா கெட்ட வார்த்தை

 "தூக்கம் வர மாட்டேங்குதும்மா. ஒரு நல்ல கதை சொல்லேன்"னு கேட்ட சூர்யாவை மடியில் உக்கார வெச்சு
"என்ன மாதிரி கதை வேணும் சொல்லு? பஞ்ச பாண்டவர்கள் கதை சொல்லவா?"


"அய்யோ அம்மா, இந்த மாதிரி கதை எல்லாம் எத்தனை நாள்தான் சொல்லுவே? கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சும்மா. வேற ஏதாவது சொல்லேன்மா"


"இல்ல கண்ணா, இது நவீன பாண்டவர்கள் கதைடா, கேக்குறியா?"

"ஓ, அப்படியா? வில்லு, அம்பு எல்லாம் வெச்சு இருக்க மாட்டாங்களா?"

"இல்லேடா, சொல்றேன் கேளு. புடிச்சதுன்னா சொலறேன்."

"ம்ம்ம்ம்"

"அந்த பாண்டவர்கள் அஞ்சு பேரும் கோயமுத்தூர் கங்கா, காவேரி காம்ப்ளக்ஸ்ல, செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு வெளியே வராங்க. மேல சொல்லட்டுமா?"

"ம்ம் சரி, சொல்லுமா. என்ன படம்?"

"கோகுலத்தில் சீதைன்னு ஒரு படம். நிறைய படம் பார்த்து இருந்தாலும் இவுங்க அஞ்சு பேரையும் இந்த படம் பலமா பாதிச்சுருச்சு. நம்ம ஹீரோ, சரவணன், சுரேஷ், தினேஷ், ஜெகா அஞ்சு பேரும் காலேஜ் முடிச்சுட்டு அவுங்களுக்கு தகுந்த மாதிரி, வேலை கிடைக்காததால கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கிறாங்க. வீட்டுல இருக்கிற பெரியவங்களும் இவுங்களை நம்பி யாரையும் திட்டாம பணம் அனுப்பிட்டே இருக்காங்க, அதனால இவுங்களும் கவலை இல்லாம ஊரைச் சுத்திட்டு இருக்காங்க. என்ன சூர்யா கதை கேக்குறியா? மேல சொல்லட்டுமா?"

"கேக்குறேன்மா"

இனிமே கதை.

"தம் குட்றா, படம் என்னை ரொம்ப பேஜாராக்கிருச்சு" சரவணன்"இருடா சாப்பிட்டு அடிப்போம், செகண்ட் ஷோ வந்தா சோறு வேற கிடைக்காது. கடைய சாத்திட்டு போயிருவாங்க. ராஜா கடைய சாத்தியிருப்பானா"? சுரேஸ் கேட்டான்."ஒரு கட்டிங் குடுத்தா போதும்டா, கொத்து போட்டு குடுப்பான்.விடு, அதை நான் பார்த்துகிறேன், டேய் தினேஷா என்னடா மேட்டரு? இப்படி ஏண்டா இருக்கிற? ஏண்டா எல்லாரும் இப்படி இருக்கீங்க?, என்னை மாதிரியே உங்களுக்கு ஃபீலிங் ஆகிப்போச்சா? " இது நம்ம ஹீரோ."மாப்ளே, நாம அஞ்சு பேருமே நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு ஊர் சுத்திட்டு இருக்கோம்டா. லவ்டுடே பார்த்தோம் இல்லே. அந்த படத்தையும் இந்த படத்தையும் மிக்ஸ் பண்ணி பாருடா. புரியும். நாம ஏதோ தப்பு பண்றோம்னு தோணுது" சொன்னது ஜெகா.

"ஆமாண்டா, இனிமே சினிமா கிடையாது, லஷ்மி காம்ப்லெக்ஸ், சேரன் டவர்ஸ், கிராஸ் கட் ரோடு போயி சைட் அடிக்க கூடாது. அந்தமாதிரி வேஸ்ட் பண்ற நேரத்துல படிக்கனும். சீக்கிரமே முன்னேறனும்டா. நாம பாதி நேரம் ஊரையே சுத்திட்டு இருக்கோம்" இது தினேஷ்.
"இனிமே இந்த மாதிரி ஊர் சுத்துறது எல்லாம் வேணாம். கோர்ஸ் நான் டிஸ்கண்டினியூ பண்றேன். எனக்கு இது ஏறல. அவனவனுக்கு என்ன திறமை இருக்கோ அதை வெச்சு முன்னேறலாம். அஞ்சு வருஷம் தான், .. இதே கங்கா காம்ப்லெக்ஸ், இதே நேரம். இந்தா போறாங்களே, இதை விட பெரிய காருல வரனும். ..த்தா நாம் யாருன்னு இந்த உலகத்துக்கு காட்டனும்" சுரேஸ் உச்சதாயில சொடக்கு
போட்டு சொல்ல,நம்ம ஹீரோ "கரெக்டுடா சுரேசு. ஜெகா, நீ கோடீஸ்வரன், இனிமே எங்க கூட தங்காதே. உங்கப்பா பார்க்குற தொழிலைப்பாரு. 190 ஏக்கர் காடு வேற இருக்கு, நீ இனிமே அதைப்பாரு. தினேஷா நீ எலக்ட்ரானிக்ஸ்ல பிஸ்து, அதுல வேலை தேடு. நானும் சரவணனும் ஆப்டெக் கோர்ஸ் முடிச்சுட்டு வேலை தேடப் போறோம். சுரேஸ், உங்கப்பா ஏற்கனவே அரசியல்ல பெரிய ஆளு அதை வெச்சு முன்னேற பாரு. நாம இனிமே நேரத்தை வேஸ்ட் பண்ண வேணாம்"தம் பத்த வெச்சுகிட்டே சரவணன் "ஆமா, இனிமே நம்ம வாழ்க்கையில ஃபிகருங்களே கிடையாது. இந்த படத்துல சொல்றா மாதிரி லவ் இனிமே நமக்கு கெட்ட வார்த்தை. எந்தப் பொண்ணையும் இனிமே பார்க்கக்கூடாது. டோட்டல் வேஸ்ட்"

"வாழ்க்கையில பெரிய ஆளா வரனும்டா. பொண்ணுங்க, லவ் எல்லாம் மாயை. நம்மள நாமே ஏமாத்திட்டு இருக்கோம். அதனால நம்ம வாழ்க்கையில இனிமே காதல் அப்படிங்கிறது கெட்ட வார்த்தை, இதை ஒத்துகிட்டவங்க சத்தியம் பண்ணுங்கடா"ன்னு கைய நீட்ட, உடம்புல புது ரத்தம் பாய்ஞ்சா மாதிரி எல்லாரும் ஹீரோ கையில சத்தியம் பண்ணினாங்க.


இப்படி சொல்லிட்டு, சூர்யா தூங்கிட்டானான்னு அம்மா பார்க்க, அவன் கொட்ட கொட்ட முழிச்சுகிட்டு இருந்தான்.

"என்னம்மா அவ்ளோதானா கதை?"

"இல்லேடா, தூங்கிட்டியான்னு பார்த்தேன்.மீதிக்கதை சொல்றேன் கேளு. சரவணன் இப்போ சென்னையில இருக்காரு, பெரிய ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றாரு. மூனு பொட்டப்புள்ளைங்க. சுரேசும், ஜெகாவும் அவுங்க அவுங்க அப்பா செல்வாக்குல செட்டில் ஆகிட்டாங்க. தினேஸ் வெளிநாடு போய்ட்டு நல்லா சம்பாரிச்சுட்டு இந்தியா வந்தாச்சு. அடுத்த மாசம் அவுங்களுக்கு குட்டி பாப்பா பொறக்கப் போவுது"

"அப்போ நம்ம ஹீரோ என்ன ஆனாரு?"

"அதோ அங்கே உக்காந்து, நட்சத்திர வாரத்துக்கு பதிவு போட்டுக்கிட்டு இருக்காரே, அவர்தான்"

"ஐய், நம்ம ஃபார்மர் அப்பாவா? சத்தியம் பண்ணினமாதிரியே பாண்டவர்கள் இருக்காங்களாம்மா?"

"இல்லேடா கண்ணா, அஞ்சு பேருமே பண்ணிகிட்டது லவ் மேரேஜ்"

"என்னது லவ் மேரேஜா? அப்போ அவுங்க பாஷையில சொன்னா, கெட்ட வார்த்தை கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம்மா?"

"எகத்தாள ரத்தம்தானே உன் உடம்புலேயும் ஓடுது. இந்தக் கேள்விய உங்கப்பாக்கிட்டேயே போய் கேட்டுக்க"ன்னு சொல்லி, மடியில இருந்து இறக்கி விட

குதிச்சு அப்பாகிட்ட போயி "அப்பா நீ கெட்ட வார்த்தை கல்யாணம் பண்ணிகிட்டீங்களாமே? உண்மையாப்பா? அம்மா சொன்னாங்க என் உடம்புல ஓடுறது எகத்தாள ரத்தமாமே, உங்க ஒடம்புல என்னப்பா ஓடுது?"ன்னு கேட்க.

லேப்டாப்பை மூடி வெச்சுட்டு, சூர்வை தூக்கி முத்தம் குடுத்துட்டு சிரிச்சபடியே சொன்னேன் "சேம் பிளட்டுடா கண்ணா".

64 comments:

  1. நட்சத்திர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. கதை சூப்பரா இருக்கே... அடுத்த பாகம் இருக்கா?

    ReplyDelete
  3. வெட்டிண்ணே, இது கதை மாதிரியாவா இருக்கு? அனுபவம்ண்ணே

    ReplyDelete
  4. //ILA(a)இளா said...

    வெட்டிண்ணே, இது கதை மாதிரியாவா இருக்கு? அனுபவம்ண்ணே //

    சாமி, உங்க அனுபவத்தை குட்டி பையனுக்கு அண்ணி கதையா தானே சொல்றாங்க. அது தான் தொடருமானு கேட்டேன்...

    ReplyDelete
  5. ஹை......... கதை சொல்லிக்கிட்டே வர்ற நட்சத்திரம்!!!!

    வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  6. //சூப்பர் அப்பு!!!! //
    நன்றி சவுண்ட் சேட்டா

    //சாமி, உங்க அனுபவத்தை குட்டி பையனுக்கு அண்ணி கதையா தானே சொல்றாங்க. அது தான் தொடருமானு கேட்டேன்... //
    கண்டிப்பா தொடரும், ஆனா அடுத்த வாரத்துல

    //ஹை......... கதை சொல்லிக்கிட்டே வர்ற நட்சத்திரம்!!!!

    வாழ்த்து(க்)கள். //

    ஆமாங்க டீச்சர், வணக்கம் போட ஒரு பதிவு போட வேணாமேன்னு நேரா கதைக்கே போய்ட்டேன்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் இளா

    ReplyDelete
  8. தலைவ்வ்வ்வ்வாஅ


    வாழ்த்துக்கள்.

    மொதல்ல வணக்கம் சொல்ற மாதிரி பதிவு போடுங்க. முருங்கைக்காய் டைரக்டர் மாதிரி கதை சொல்லிகிட்டே வரிங்களே!

    புதுமையா அழகா சொல்லிட்டிங்க கதையை.

    எனிவே அடிச்சி பட்டைய கெளப்புங்க இளா!

    எலே சங்கத்து மக்களே வாங்கப்பா அண்ணனை வாழ்த்துங்கப்பா!

    ReplyDelete
  9. இளா,

    நட்சத்திர வாழ்த்துக்கள் :)

    அது சரி படமே க்ளைமேக்ஸுல ஆரம்பிச்சிருக்கிற மாதிரி இருக்கு ... ஹீரோ லவ்வை ப்ரொபஸ் பண்ணினது, தர்மஅடி வாங்கினது ;) , ... எல்லாம் flashbackல வருமா :)

    ReplyDelete
  10. நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் :-)
    கலக்குங்க.

    லவ் டுடேவும், கோகுலத்தில் சீதையும் உங்களை இவ்வளவு பாதித்ததா? ஹ்ம்ம்.. சரிதான் :-)

    ReplyDelete
  11. அட நம்ம இளா...

    சூப்பர் கதை .... அப்படியே நட்சத்திர வந்தனமும்

    :)

    ReplyDelete
  12. இளா,
    நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. தமிழ்மணவானில் நட்சத்திரம் தான் வரும்...அட ஒரு இளைய (இளா) நிலா...

    வாவ்....
    :)

    ReplyDelete
  14. //வாழ்த்துக்கள் இளா //
    நன்றிங்க ஆதவன்

    //மொதல்ல வணக்கம் சொல்ற மாதிரி பதிவு போடுங்க//
    கதைக்கே நேரா போய்ட்டேங்க. வணக்கத்துக்கு ஒரு பதிவு போடனுமான்னு ஒரு போடனுமான்னு ஒரு சோம்பேறித்தனம்தான்.

    //அது சரி படமே க்ளைமேக்ஸுல ஆரம்பிச்சிருக்கிற மாதிரி இருக்கு ... ஹீரோ லவ்வை ப்ரொபஸ் பண்ணினது, தர்மஅடி வாங்கினது ;) , ... எல்லாம் flashbackல வருமா :)/
    நல்லா இருங்கய்யா, இப்படி உசுப்பேத்திதானே ஒடம்பு ரணகளமாகிருச்சு.

    //லவ் டுடேவும், கோகுலத்தில் சீதையும் உங்களை இவ்வளவு பாதித்ததா?//
    ஆமாங்க. இந்த கதையில சொன்ன மாதிரி பாதிச்சது. லவ்டுடே மாதிரி வேலை வாங்குற வரைக்கு இருந்தோம். அப்புறம்..ஹிஹி

    ///அட நம்ம இளா...//
    அட நம்ம கோவி.. டேங்க்ஸ்பா

    ---------------------
    வாழ்த்துக்கு நன்றிங்க வெற்றி

    ReplyDelete
  15. //அட ஒரு இளைய (இளா) நிலா...//
    ஆஆஆ ஹச். யாராவது ஜலதோஷத்துக்கு மாத்திரை குடுங்கப்பா. ஐஸ் தாங்க முடியல. இருக்க்கட்டும்யேய், உமக்கும் இருக்கு ஒரு நாளைக்கு

    ReplyDelete
  16. ஹேய் அண்ணா! நீங்க தான் நட்சத்திரமா? ஜொலிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. நட்சத்திர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. சும்மாவே கருத்து சொல்லுறேன்
    நாடு உருப்பட வழி சொல்லுறேன் அப்படின்னு குடைச்சல் தாங்கல..
    இதுல 5 பேர் சினிமா பார்த்து முன்னேறிட்டய்ங்க அப்படின்னா தெரிஞ்சா...போச்சு...
    மத்தபடி நல்லா இருக்கு...

    ReplyDelete
  19. விவ்,

    நட்சத்திர வாழ்த்துக்கள் .....


    இதுக்குதான் அன்னிக்கு அவ்வளோ பில்ட்-அப்'ஆ??? ;-)

    ReplyDelete
  20. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணா!...

    நல்ல வந்திருக்கு உங்க வாழ்க்கை.

    ஆட்டோகிராப் மேட்டர் ஏதாவதி இருக்கா?

    ReplyDelete
  21. கடவுளென்னும் முதலாளி
    கண்டெடுத்த தொழிலாளி
    விவசாயி விவசாயி
    அந்த விவசாயி ஆனாரே நட்சத்திரம்
    அதற்காகத் தொடுப்போமே வாழ்த்துச்சரம்

    வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்

    கதை கதை மாதிரியில்லாம கதையில்லாத மாதிரியே இருக்குற கதை எப்படி அமைஞ்சது? கொஞ்சம் விளக்குங்களேன்.

    ReplyDelete
  22. இளா,

    நட்சத்திர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. அட..கலக்கலான ஆரம்பம் தான்..
    கோகுலத்தில் சீதை அகத்தியனோட மாஸ்டர்பீஸ்.ஐ.சி.மோகன்,நிலா...ஹூம் மறக்கவே முடியாது...

    அப்புறம் எழுத்துருவைப் பெரிசாக்கினா நல்லாயிருக்கும்.(வாத்தியார் மாதிரிப் பெரிசுங்க சாலேசுரத்தில கஷ்டப்பட்டுட்டு இருக்காங்கப்பூ.)

    உங்களுடைய நட்சத்திர வாரத்தில் குவிஸ் பதிவுகளையும் போட்டுத் தாக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்...

    ReplyDelete
  24. நட்சத்திர வாழ்த்துக்கள். இளா.

    ReplyDelete
  25. இளா வாழ்துகள்

    ஆமா இது என்ன பஞ்ச தந்திரத்தில் சிம்ரன் புள்ளைக்கிட்ட கதை சொல்லுவது போல! அந்த படத்தில் வரும் ஹீரோவை போலவேவா?
    (அழகில் கேட்டேன் இளா?)

    கலக்குங்க இளா

    ReplyDelete
  26. விவாசாயி.....விவசாயி..
    கடவுள் என்னும் முதலாளி
    கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
    விவசாயி........

    வாஆஆஆஆஆஆஆஆஆஆத்துக்கள் இளா தம்பி

    அட..அடா...ஆரம்பத்திலேயே கதைவுடத் தொடங்கியாச்சா...ம்ம் கலக்குங்க

    ReplyDelete
  27. எனக்கென்னமோ பஞ்சதந்திரம் ஞாபகத்துக்கு வருதுங்கோ !!

    ReplyDelete
  28. ஆனா ஒன்னு நீங்க உருப்புட்டா மாதிரி இருக்கே இதெப்டிங்கோ வெவசாயி :))))

    ReplyDelete
  29. போய் வீட்ட மாத்துய்யா கோகுலத்தில் சீதையாம் லவ் டுடேவாம் அப்றம் லாட்ஜில் லட்சுமின்னு ஒன் கத வரப் போகுது

    ReplyDelete
  30. இளா,

    கதையும் ... மன்னிக்கவும், உங்கள் அனுபவத்தைக் கதையாக்கியதும் அருமை. நட்சத்திர வாரம் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. நட்சத்திர வாழ்த்துக்கள்.கதை இன்னும் படிக்கலை. அப்புறமா வரேன்.

    ReplyDelete
  32. ஆஹா..ஆஹா..அண்ணே...கலக்கிட்டிங்க.. ;-))

    நட்சத்திர வாழ்த்துக்கள் ;-)

    ReplyDelete
  33. நட்சத்திர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  34. நட்சத்திர வாழ்த்துக்கள் இளா!

    //அம்மா சொன்னாங்க என் உடம்புல ஓடுறது எகத்தாள ரத்தமாமே, உங்க ஒடம்புல என்னப்பா ஓடுது?//

    அம்மாங்க சொன்ன எப்பமே கரெக்டா தான் இருக்கும் தல :-)

    ReplyDelete
  35. //நம்ம பூமி. இப்போதைக்கு நியூயார்க் நகரம் பக்கத்துல இருக்கும் சிக்காகஸ் அப்படிங்கிற கிராமம்.
    வேற?//

    யோவ் இதெல்லாம் ஓவரு!
    சிக்காகஸ் சந்திப்பு-ன்னு போட்டுருக்கே பாக்கலையா?
    எல்லாத் திசையில ஓடற ரயிலும் அங்கிட்டு நின்னு தான் போகுது!
    நாலு விழுப்புரத்துக்கு சமானம்! அதப் போயி கிராமம்-னு சொல்ல எப்படியா உனக்கு மனசு வந்துச்சு? பட்டேல் கடையில உனக்கு ரொட்டி கிடைக்காமப் போக! :-)))

    ReplyDelete
  36. 'கதை'யையும் படிச்சாச்சு. நல்லா இருக்குங்கண்ணா. :)

    ReplyDelete
  37. இளா,

    நட்சத்திரம் ஆனதிற்கு வாழ்த்துக்கள்.....

    நிலாக்கதைகளுக்கு மத்தியில் ஒரு நட்சத்திரம் கதை சொல்லுகிறது பூமியைப்பார்த்து...

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் இளா.. இளவரசன் கதை படா ஜோர்..

    ReplyDelete
  39. நட்சத்திர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  40. நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

    பிளட்டு கொதிச்சு அருமையா துவக்கியிருக்கீங்க. :))

    உங்க பையன விவசாயி ஜூனியர்ணு ஒரு பதிவ துவங்கச் சொல்லுங்க..

    :))

    ReplyDelete
  41. நட்சத்திர வாழ்த்துக்கள் இளா ! :))))
    கதை கலக்கல்!! கதை வெள்ளாமை வெளுத்து வாங்குதே ! :))))

    ReplyDelete
  42. நண்பா அசத்தல் போங்க... ஆரம்பமே படு ஜோரா இருக்குங்கோ.. வாழ்த்துக்கள் இளா

    ReplyDelete
  43. நட்சத்திர வாழ்த்துக்கள் இளா. அனுபவக் கதை சூப்பர் :)

    ReplyDelete
  44. நன்றி->காயத்ரி, அய்யானார், deplphine,கப்பி, JK, ஆசான்,முத்துலட்சுமி,
    //இதுக்குதான் அன்னிக்கு அவ்வளோ பில்ட்-அப்'ஆ??? ;-) //
    நெட் இல்லாம ஸ்டார் பதிவு எப்படி போடுறதாம்?
    //கதை கதை மாதிரியில்லாம கதையில்லாத மாதிரியே இருக்குற கதை எப்படி அமைஞ்சது? கொஞ்சம் விளக்குங்களேன்.//
    ஜிரா, இதை விளக்கவே நான் ஆஃப் ஷோர் போவனும் போல இருக்கு, இதுல நான் விளக்க.
    //அட..கலக்கலான ஆரம்பம் தான்..
    கோகுலத்தில் சீதை அகத்தியனோட மாஸ்டர்பீஸ்.ஐ.சி.மோகன்,நிலா...ஹூம் மறக்கவே முடியாது...//
    உண்மைதாம் பொடியாரே, அகத்தியன் நல்ல படங்கள் குடுத்தவர்தான்.

    //அப்புறம் எழுத்துருவைப் பெரிசாக்கினா நல்லாயிருக்கும்.(வாத்தியார் மாதிரிப் பெரிசுங்க சாலேசுரத்தில கஷ்டப்பட்டுட்டு இருக்காங்கப்பூ.)//
    சைட் கேப்ல வாத்தியாரை இழுத்து விடுறதுல உங்க அளவுக்கு யாரும் கில்லாடி இல்லீங்க.எழுத்துருக்களை பெரிசு பண்ணியாச்சு.

    //உங்களுடைய நட்சத்திர வாரத்தில் குவிஸ் பதிவுகளையும் போட்டுத் தாக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்... //
    கண்டிப்பா, அது இல்லாம நாம எப்படி?

    //ஆமா இது என்ன பஞ்ச தந்திரத்தில் சிம்ரன் புள்ளைக்கிட்ட கதை சொல்லுவது போல!//
    அட ஆமாங்க அதுதான் கான்செப்ட்டே.

    // அந்த படத்தில் வரும் ஹீரோவை போலவேவா?
    (அழகில் கேட்டேன் இளா?)//
    உம்ம பேருக்கும் நடத்தைக்கும் சரியா இருக்கு.

    ReplyDelete
  45. உங்கள் குழுவில் நண்பர் சுரேஷ் அவர்களுக்குத்தான் முதலில் திருமணம் நிகழ்ந்ததா என்று அறிய ஆவல்.
    :-)))

    ReplyDelete
  46. //உங்கள் குழுவில் நண்பர் சுரேஷ் அவர்களுக்குத்தான் முதலில் திருமணம் நிகழ்ந்ததா என்று அறிய ஆவல்//
    சரவணனுக்குதாங்க முதல்ல கல்யாணம் ஆச்சு. அதுவும் வாய விட்டு மாட்டிக்கிட்ட கதை. எங்க குரூப் கைப்புள்ளை சரவணன்தான்.

    ReplyDelete
  47. //அட..அடா...ஆரம்பத்திலேயே கதைவுடத் தொடங்கியாச்சா//
    ஆமாங்க்கா இப்போ கதைவுட ஆரம்பிச்சாதான் ஒரு வாரத்துல முடியும், இல்லைன்னா மாசக்கணக்காயிருமே
    //எனக்கென்னமோ பஞ்சதந்திரம் ஞாபகத்துக்கு வருதுங்கோ !! //
    அதே அதே
    //ஆனா ஒன்னு நீங்க உருப்புட்டா மாதிரி இருக்கே இதெப்டிங்கோ வெவசாயி :)))) //
    ஆண்டவன் புண்ணியத்துல எல்லாரும் ஓரளவுக்கு இருக்கோம்பா
    //சொல்லவே இல்ல ///
    //போய் வீட்ட மாத்துய்யா கோகுலத்தில் சீதையாம் லவ் டுடேவாம் அப்றம் லாட்ஜில் லட்சுமின்னு ஒன் கத வரப் போகுது //
    உன் கஷ்டத்தை நண்பன்கிட்டே சொல்லு. சந்தோசத்தை அவுங்களே தெரிஞ்சுக்குவாங்கன்னு சொல்லுவாங்க. வீடு காலி பண்ற கஷ்டம் உங்களுக்கே தெரியும். "அட விஷயம் தெரியாம தமிழ்மணம் வந்து பார்த்தா நீங்க டிராக்டரை முதல் பக்கத்துல பார்க் பண்ணி வச்சுட்டு அலம்பல் பண்ண் ஆரம்பிச்சுட்டீங்க" நாம் மொதல்லே சொல்லி இருந்தா இப்படி ஒரு கமெண்ட் கிடைக்காம போயிருக்குமே!

    சதங்கா, கோபி, சிவபாலன்-நன்றிங்க.

    ReplyDelete
  48. கொத்ஸ் - நமக்காகவும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கினதுக்கு ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  49. //நிலாக்கதைகளுக்கு மத்தியில் ஒரு நட்சத்திரம் கதை சொல்லுகிறது பூமியைப்பார்த்து... //
    ரசிகவ், கவிதையாலே அசத்துறீங்க போங்க. நன்றிங்க.
    //இளவரசன் கதை படா ஜோர்.. //
    வாங்க பொன்ஸ், நன்றியும் கூட. என்ன ஒரு ஆச்சர்யம், வலைச்சரம் இந்த வார ஆசிரியர் பாலபாரதி, நம்ம பதிவுலயும் வரப்போறார். ஆனா வேற மாதிரி.

    மின்னல் -நன்றிங்க
    //உங்க பையன விவசாயி ஜூனியர்ணு ஒரு பதிவ துவங்கச் சொல்லுங்க//
    சிறிலு, நல்லா இரும்யா, இது என்ன சாபமா?

    //வெள்ளாமை வெளுத்து வாங்குதே//
    பாண்டி, வேணாம், அதிகமா பதிவு எழுதாத மக்கள் எல்லாம் நம்ம பதிவுக்கு வர மாதிரி தெரியுதே.
    //நட்சத்திர வாழ்த்துக்கள் இளா. அனுபவக் கதை சூப்பர் :)//
    நன்றிங்க கதிரவன்.

    ReplyDelete
  50. நட்சத்திர வாழ்த்துக்கள்! உங்கள் பதிவை ரீடரில் வாசித்து வருகிறேன். தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  51. நட்சத்திர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. நடச்சதிர வாழ்த்துக்கள் இளா...
    அருமை..அருமை

    ReplyDelete
  53. //நட்சத்திர வாழ்த்துக்கள் இளா!/// KRS- thanks

    //நம்ம பூமி. இப்போதைக்கு நியூயார்க் நகரம் பக்கத்துல இருக்கும் சிக்காகஸ் அப்படிங்கிற கிராமம்.
    வேற?//

    யோவ் இதெல்லாம் ஓவரு!
    சிக்காகஸ் சந்திப்பு-ன்னு போட்டுருக்கே பாக்கலையா?
    எல்லாத் திசையில ஓடற ரயிலும் அங்கிட்டு நின்னு தான் போகுது!
    நாலு விழுப்புரத்துக்கு சமானம்! அதப் போயி கிராமம்-னு சொல்ல எப்படியா உனக்கு மனசு வந்துச்சு?
    செல்லிகாட்டுக்கு மேல கூடதான் எல்லா நாட்டு பிளைட்டும் போவுது அதுக்கு செல்லிகாடு என்ன சிட்டியா? இங்கே ஒரு தக்காளிகூட கிடைக்க மாட்டேங்குதுன்னு கடுப்பா இருக்கான், அப்புறம் விழுப்புறம்னுகிட்டு.

    /பட்டேல் கடையில உனக்கு ரொட்டி கிடைக்காமப் போக! :-)))////
    வெவரமா, இன்னிக்கு தோசை குடிசையில சாப்ட்டுட்டு, ரொட்டி வாங்கிட்டுதானே வந்தேன். சாபம் பலிக்கிலியே:))

    ReplyDelete
  54. இளா,
    நட்சத்திர வாழ்த்துக்கள். மெழுகுவத்தி சுத்தி நல்லாவே ஆரம்பிச்சிருக்கிங்க.. கலக்குங்க..
    சூர்யாக்கு ஒரு ஹாய் சொல்லிடுங்க.

    மனதின் ஓசை

    ReplyDelete
  55. நட்சத்திர வாழ்த்துகள். உண்மை சம்பவம் அருமை. தொடர் போட்டு வாரம் முழுக்க உங்க கதைய சொல்லிடுங்க :-)

    ReplyDelete
  56. தலைவரே ! சரவணன் இப்ப நம்ம கூட்டணி....உங்க கதைகளை நிறையவே சொல்லியிருக்காரு.....
    நட்சத்திர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  57. //நட்சத்திர வாழ்த்துகள். உண்மை சம்பவம் அருமை//
    நன்றீங்க ஜெஸிலா.

    ReplyDelete
  58. இந்த வாரம் நீங்க தான் தமிழ்மணத்தில் நட்சத்திரமா உழுதுட்டிருக்கீங்களா :-) வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  59. கதையெல்லாம் பலமா இருக்கு :) வாழ்த்துக்கள்!!!

    இப்போதான் இந்த வாரப் பதிவுகள் எல்லாம் ஒன்னாப் படிக்கப் போறேன்...

    ஒன்னொன்னா வர்றேன்...

    ReplyDelete
  60. //நட்சத்திர வாழ்த்துக்கள்! உங்கள் பதிவை ரீடரில் வாசித்து வருகிறேன். தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்!//
    காட்டாறு- நல்ல பேறுங்க, காட்டாறை யாரும் அணை போட்டு நிறுத்த முடியாதாம். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    சின்னகுட்டி-நட்சத்திர வாழ்த்துக்கள
    நன்றிங்க சின்ன குட்டி. உங்க பதிவை ஒன்னு விடாம பார்க்கிறேன். அது உங்களுக்கு தெரியாம இருக்கலாம், சில வற்றுக்குதான் பின்னூட்டி இருக்கேன்.
    வாழ்த்துக்கு நன்றிங்க-மனதின் ஓசை, மங்கை, சேதுக்கரசி, அருட்பெருங்கோ

    சண் ஷிவாsaid... // தலைவரே ! சரவணன் இப்ப நம்ம கூட்டணி....உங்க கதைகளை நிறையவே சொல்லியிருக்காரு.....
    நட்சத்திர வாழ்த்துக்கள்!!//
    அட இது எல்லாம் ஒரு டிரையிலர் மாதிரிங்க. எங்க கதை சொல்ல ஆரம்பிச்சா வருஷ கணக்குல சொல்லிட்டு இருக்கலாம். அவ்ளோ லூட்டீஸ் அண்ட் ஜாலீஸ்

    ReplyDelete
  61. மறு நட்சத்திர வாழ்த்துக்கள் இளா! :)

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)