வெளிநாட்டில் வாழும்பொழுது நாம் இழப்பது எதை?
* கோலி, கபடி போன்ற விளையாட்டை டவுசர் போட்ட காலம் முதல் விளையாடி விமான நிலையத்தில் கண்ணீருடன் வழியனுப்பிய நட்பை
* பாசம் என்பதை அறிய வைத்த தாய், தந்தையரை.
* தலையணையில் அடிவாங்கி, அவள்(ன்) திருமணத்திற்காகவே வெளிநாடு வந்து அவளு(னு)டன் வாரம் இருமுறை தொலைபேசியில் பேசி, பேசி முடித்தபின் கண்ணீர் விட்டு அழும் உடன் பிறப்பை
* என்னை வளர்ந்த தெரு, ஊர் மற்றும் காலாச்சாரத்தை
* மேற்கூரிய எல்லாவற்றையும்
* எதையுமில்லை
இணையத்தில் இந்த ஓட்டெடுப்புக்கு கிடைத்த முடிவு சற்று அதிர்ச்சியாகவே கிடைத்தது.
வெளிநாட்டில் வாழும்பொழுது ஒன்றையும் இழப்பது இல்லையா? ஆமாம். இது மக்களின் தீர்ப்பு. இதில் புதைந்து கிடைக்கும் உண்மை என்ன? வெளிநாடு சென்றபின்னர் பெற்றோர்களை வெளிநாட்டுக்கே அழைத்துக்கொள்ளும் வசதி இருப்பதனாலும், திருமணம் ஆனவுடன் சகோதர சகோதரியை எப்படியும் பிரிய ஆகிய வேண்டி இருப்பதால் வெளிநாடு சற்று தூரம் என்ற எண்ணமும் இப்படியாக மக்கள் எண்ண வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு உறவுக்கும் வெவ்வேறு காரணம் இருக்கலாம் ஆனாலும் ஒரு பொதுவான உண்மைதான் இந்த முடிவுக்குக் காரணம்.
அதாவது மனிதன் வாழும் இடத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும் அடிப்படை உண்மையே இதன் மூலம். பிரிவு என்ற ஏக்கம் இருந்தாலும் வாழ்க்கைப் பயணம் அதை ஒதுக்கிவிடுகிறது. Its all just matter of Survival/ survival does matters.
அட!
ReplyDeleteஇப்படி ஒரு பார்வை இருக்கா?
இளா..ஒரு உண்மையச் சொல்றேன் கேட்டுக்கோங்க. ஒங்கப்பா பொறந்த ஊர்லேயாவா வேலை செஞ்சாரு? இல்ல எங்கப்பா? இல்லையே..அப்பயே அவங்க ஊரு விட்டு ஊரு போக ஆரம்பிச்சாச்சு. அப்பயே இந்த இழப்பு கிழப்பெல்லாம் தொடங்கியாச்சு. ஊரு விட்டு ஊருங்குறது மாநிலம் விட்டு மாநிலமாகி நாடு விட்டு நாடாகியிருக்கு. யாரு கண்டா..நம்ம கெரகம்...கெரகம் விட்டு கெரகம் போக வேண்டி வந்தாலும் வரலாம். "எம் பையன் செவ்வாய்ல இருக்கான் சார். நல்ல வேலை. நல்ல சம்பளம். விண்டர்ல போக முடியாது. சம்மர்ல டூரிஸ்ட் விசா எடுத்து நானும் வொஃய்பும் போலாம்னு இருக்கோம் சார்" பேச்சுகள் கேட்கப் படலாம். அப்ப சாயிவிவங்குற ஒருத்தர் கெரகம் விட்டு கெரகம் போவதால் எதையெல்லாம் இழக்கிறோம்னு பதிவு போடுவாரு.
ReplyDeleteமனிதர்களோடு பழகுவது குறைந்து விடுகிறது.
வேற்றுக்கிரகவாசிகளின் உணவுப்பழக்கம் ஒத்துக்கொள்வதில்லை. இங்கே பூமீ ஸ்டோர்கள் இருந்தாலும் பூமியில் கிடைக்கும் உணவே உணவு...
இப்படியெல்லாம் பதிவுகள் வரும். அப்ப சிம்மக்கல் நாபி வந்து "அட..இப்பிடி ஒரு பார்வை இருக்கான்னு கமெண்ட்டு போடுவாரு" :)
வாழ்த்து நம்பர் இரண்டு.
திரைகடலோடியும் திரவியம் தேடின்னு அன்னிக்கே வழி அனுப்பிட்டாங்களே. பிரியறோம் பிரியறோமுன்னு பார்த்தா போன இடத்தில் சந்தோஷமா இருக்க முடியுமா?
ReplyDeleteஅது மட்டுமில்லாம, ஒரு விமானம் ஏறினா அடுத்த நாள் ஊரில் இருக்கோம். அதுமட்டுமில்லாம கூட பிறந்தவங்க எல்லாரும் அதே ஊரிலேயா இருக்காங்க. மின்னரட்டையும் தொலைபேசியுமா இருக்க வேண்டிய காலம் இது. அப்படியே ஓட்ட வேண்டியதுதான்.
Testing 123456
ReplyDelete