Monday, July 16, 2007

ஜி டாக் அழிச்சாட்டியங்கள்

கிண்டல் அடிக்கப்படும் சில ஜி டாக் Status Messageகள்


//மழையில் நனைவது சுகம்,
அது போல் உன் நட்பு//-வரவனையன்


நனைந்த பின் வருவது ஜலதோசம்
அது போல் பின்வரும் உன் காதல்



//சென்னையில் பேய் மழை//-Mahir

அப்போ சென்னைக்கே நான் வரலை. பேய்ன்னா எனக்கு ரொம்ப பயம்.



//சம்பந்தி வீட்டு பிரியாணி சூப்பர்//- மஹி

ஓசி சோறு சாப்பிட்ட நன்றி கடனோ


//நானாக நானில்லை தாயே//- மோஹன் தாஸ்

நோ கமெண்ட்ஸ்.



//நாளை என் பேரை சரித்திரம் சொல்லும்//-ஜிரா
இன்னிக்கு எது புவியியல் சொல்லுமா?


இதுபோல இன்னும் நிறைய வரலாம்..

25 comments:

  1. நானாவது பரவாயில்லை, எங்க மாம்ஸ் பாலா ஸ்டேடஸ் மெசேஜ் கவிஜ போடுவாரு பாருங்க, அரைநாள் லீவு எடுத்து டாஸ்மாக் போற மாதிரி இருக்கும். அதெல்லா ஒரு நாளைக்கு பாகச சார்பில் வெளியிடப்படும்

    ReplyDelete
  2. இதல்லாம் பரவாயில்ல இந்த மகி/சிபி/தேவ்/ராம் கூத்தல்லாம் கூட ஒத்துகலாம்யா ஆனா அய்யனார் அழிச்சாட்டியும் தாங்கலை!

    ReplyDelete
  3. விவ்,

    இதேமாதிரி நம்ம கவிஞ்ஞர் கப்பி நிலவர் ஒரு வருசத்துக்கு முன்னாடியே பதிவு போட்டுட்டாரு....

    ReplyDelete
  4. //Status vechu vilaiyaada koodathu, appuram unga statusyum ezutha vendi varum//-Anusuya

    ஹிஹிஹி..

    ReplyDelete
  5. //படித்ததில் பிடித்தது - எதைப் பார்த்தாலும் உன் ஞாபகம்.. உன்னைப் பார்க்கும்போதோ தொலைகிறது என் ஞாபகம்!//-G3

    கிஃப்ட் வாங்கி தர முடியாதுன்னு நேரா சொல்ல வேண்டியதுதானே

    ReplyDelete
  6. // மோகன்தாஸ் வருகை - பெண்கள் தெறித்து ஓட்டம் - பெங்களூர் வலைபதிவர் சந்திப்பு வினோதங்கள் - விரைவில்//
    இந்த ஆள் விவகாரமா ஈயம் பூசுவாரு. அதனால NO COMMENTS

    ReplyDelete
  7. ///சின்னக்குளத்தில் விடுமுறையில் என்ன நடந்துச்சுன்னா //-தேவ்

    ஆடு,மாடு, மனுசன்.. நடக்குறது எல்லாம் நடக்கும். அதுக்கு என்ன இப்போ?

    ReplyDelete
  8. //CVR பெண் ரசிகர்கள் KRS மேல் கொலை வெறி//

    இது நம்ம வெட்டி பாலாஜி! ஏன் பாலாஜி எதுக்கு பாலாஜி!

    ReplyDelete
  9. ஹா ஹா ஹா...நல்லாருக்கு. இதுவாச்சும் ஒரு பாட்டுத்தேன். போன வாரம் வரைக்கும்....FM ரேடியோ மாதிரி வரிசையா கேக்குற பாட்டெல்லாம் போட்டுக்கிட்டிருந்தேன். அப்ப என்ன செய்வீங்க? அப்ப என்ன செய்வீங்க?

    ReplyDelete
  10. //கொஞ்சம் சமையல் கொஞ்சம் சாட்டிங்!!//-Shylajan

    கொஞ்சம் வாந்தி, கொஞ்சம் ஆசுபத்திரி

    ReplyDelete
  11. //ingu wholesaleil mokkai kidaikum*//கப்பி

    நாங்க கொஞ்சம் கொஞ்சமா சில்லறையா அள்ளி அள்ளிதருவோம்,

    ReplyDelete
  12. :))))

    //Raam: போயி விவசாயத்தை பார்க்காமே... கஸ்டம் மெஜசை ஆராய்ச்சி பண்ணுறாராம்.... அவனவன் கஷ்டத்தை சொல்லி அழதுட்டு இருக்கான்.. அதை எடுத்து போட்டு கமெண்ட் வேற... :(//

    இதுக்கு எதுவும் சொல்ல மாட்டீங்களா? :))

    ReplyDelete
  13. //போயி விவசாயத்தை பார்க்காமே... கஸ்டம் மெஜசை ஆராய்ச்சி பண்ணுறாராம்.... அவனவன் கஷ்டத்தை சொல்லி அழதுட்டு இருக்கான்.. அதை எடுத்து போட்டு கமெண்ட் வேற... :(// -ராம்

    இதெல்லாம் பசங்களுக்கு மெசேஜ் தர மாதிரி தெரியலையே. வேற எங்கேயோ ரூட் போகுற மாதிரி தெரியுதே.

    ReplyDelete
  14. //வேல் வெச்சிருக்கவர் வேலன்னா வில் வெச்சிருக்கவர் வில்லன் தானே - KRS பதில் சொல்லுங்கள்!!!//- வெட்டி

    அப்போ கால் இருக்கிறவங்க எல்லாம் காலனா? ball வெச்சு இருக்கிறவங்க எல்லாம் பாலனா? ..

    ReplyDelete
  15. //Busy!//

    தெரியுது இல்லே அப்புறம் என்ன ....க்கு சேட்ல இருக்கனும். வேலைய பார்க்க வேண்டியதுதானே

    ReplyDelete
  16. //Tolet//-Raam
    No comments, getting too personal :)

    ReplyDelete
  17. //நொடிதோறும் நொடிகளை சேமித்துக் கொண்டிருக்கிறேன்.... பின்னாட்களில் உனக்கு பரிசளிக்க.. நீ என் வாழ்வின் கடை நொடிவரை வருவதற்கு நித்தமும் பூஜிக்கிறேனடா!//

    ஆமா, அந்த பையன் பர்ஸ காலி பண்ணிட்டு நீங்க நொடிகளை சேமிங்க. பசங்க இப்படிதான் மொக்கையாகிறாங்க.

    ReplyDelete
  18. //வாழ்வின் எல்லை வரை என்னுடன் இருக்க வேண்டும் நீ.. உன் மீதான என் அன்பை சொல்ல ஒரு வருடம் அல்ல.. ஒரு வாழ்க்கை தேவைப்படுகிறது எனக்கு!!//-G3

    கடேசி வரைக்கு சொல்லாமையே அந்த பயனை பாவம் அலைவிடப்போறதுக்கு ஒரு மெஸேஜ் வேற

    ReplyDelete
  19. //சூழ்நிலையின் காரணங்களால் என்னை தவறாக நினைத்துவிட்டாயோ என்று தவிப்புடன் பார்க்கையில், உன் கண்ணில் மின்னும் குறும்பு பார்வை சொல்லுமடா... நீ என்னை புரிந்துகொண்டதை !!!//

    வெங்காயம், இளிச்சவாயனுங்க, என்ன சொன்னாலும் இப்படிதான் மண்டைய ஆட்டுவாங்க.

    ReplyDelete
  20. //பார்த்துகொண்டே இருக்கிறேன். பறக்கிறது காலம்!//
    //பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்//
    //Watch பாக்கலைன்னாலும் டைம் ஆவுதே//
    இந்த மாதிரி ஸ்டேடஸ் ரேஸில் சில வாண்டுகள்

    ReplyDelete
  21. //கேட்காத குயிலின் ஒசை கேட்குதே உன் வார்த்தையில்//
    // காது இரண்டையும் நன்கு விரித்து கேட்டு பார்த்தேன். காகத்தின் கரையலை தவிர வேறொன்றும் கேட்கவில்லை//
    //கழுதை கத்துறதும் இசையா கேக்குதே - ஒரு கழுதைக் காதலன்//
    மீண்டும் வாண்டுகள்.

    ReplyDelete
  22. //வாய் பேசவே வாய்ப்பில்லையே.. வலி தீர வழி என்னவோ??//
    டாக்டரை பார்க்கவும், இல்லைன்னா வலி மாத்திரை ஒன்னும் போட்டுக்கவும்

    ReplyDelete
  23. //அழியாமலே ஒரு ஞாபகம்.. அலைபாயுதே என்ன காரணம்?? //
    Permenant Marker வெச்சு எழுதி இருப்பாங்களோ?

    ReplyDelete
  24. @ஜிரா//அப்ப என்ன செய்வீங்க? அப்ப என்ன செய்வீங்க?//\
    மீள் பதிவா போடுவேன்..

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)