Tuesday, December 12, 2006

Blog'க்கு டாட்டா


ரஜினிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு ஒரு விஷயம் சொல்றேங்க. கைப்புள்ளை மாதிரி சொல்லனும்னா "நிறுத்திக்குவோம்! இத்தோட நிறுத்திக்குவோம்".

எதை? Blog எழுதறதைதான். அப்படியே என்னைத்திட்டி, வாழ்த்தி, தொலைஞ்சு போனா போவுதுன்னு பின்னூட்டம் போட்ட அனைத்து மக்களுக்கும் ஒரு பெரிய நன்றிங்க. என்னைச் சந்திச்சு, நான் போட்ட மொக்கையை சகிச்சுகிட்ட அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் இன்னொரு நன்றிங்க.

டாட்டா, போயிட்டு வரேன். See You Again(Hope so). I will be continuing my english blog as usual.

Thursday, November 30, 2006

யார் அது? யார் அது?பொது அறிவுக்கேள்விங்களை கேட்டு வெச்சு ஒரு பதிவு போட்டுடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டே இருந்தேன். இன்னிக்குதான் அதுக்கு வேளை வந்து இருக்கு.


1. பொட்டி தட்டுற மக்கள் ஒரு நாளைக்கு ஒருதடைவையாவது பார்க்குறது கூகிள் தேடல். அதைக் கண்டுப்பிடித்தவர் யார்?

2. ரோஜா படத்துக்காக மணிரத்தினம் அரவிந்தசாமிக்கு முன் படத்தில் நடிக்க அழைத்தது யாரை?

3. இளையராஜா இசையமைத்த 500வது படம் என்ன?

4. சஞ்சய் தத் நடித்த முதல் படித்தின் பெயர் என்ன?

5. மணிரத்தினம் இயக்கிய முதல் படத்தின் பெயர் என்ன?

6. ஆஸ்திரேலியாவில் விளையாடிய இவர், வேறொரு நாட்டுக்கு தலைமை ஏற்று விளையாடியவர்? யார் அது ? எந்த நாட்டுக்கு?

7. போதை மாத்திரைப்பிரச்சினையில் சிக்கிய முதல் 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் யார்? அவரது சாதனை என்ன ஆயிற்று?

8. ஒரு விவசாயிக்கு மகனாக பிறந்த இவர் வீட்டில் போன மாதம்தான் தொலைக்காட்சியே வாங்கினார்களாம். காரணம் இவர் விளையாடும் விளையாட்டைப்பார்க்க ஆவல். இவர் ஒரு கிரிக்கெட் வீரர்? யார் இவர்?

9. இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இவர் இயக்கிய முதல் ஹாலிவுட் படம் சரியாக போணியாகவில்லை. அப்புறம் வந்த படங்கள் எல்லாம் சரி போடு போட்டது. இந்த இயக்குனர் யார்?

10. அஸின் நடித்த முதல் விளம்பரப்படம் எது? அதை இயக்கியவர் யார்?

11 இந்தக்கேள்விகளில் ஒரு ஒற்றுமை/தொடர்பும் இருக்கு. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம். அது கேள்வி எண் 11

Thursday, November 23, 2006

வெங்காயம் உரிச்சா ஏன் கண்ணீர் வருது?

விக்கிப்பசங்களுக்கு போட்டியா நாமும் ஏதாவது பண்ணுவோம்னு யோசிச்சு, How it Works website'க்கு எல்லாம் போயி ஒன்னும் புரியாம இருக்கும் போதுதான் இப்படி ஒரு பதிவு போட பளங்குன்னு மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சது(அது என்னா புதுசா ஒரு ஐடியா வந்தாமட்டும் பல்பு போட்டு காட்டுறது? இதுக்கு விக்கிப்பசங்க விளக்கம் தருவாங்களா?)

இப்போ கதைக்கு வருவோம்.

ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.

ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.

தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.

வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.

உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி "ஐஸ் கிரீம் செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா"ன்னு கேட்டுச்சாம்..

அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!

அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி வருதுன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்குமே?

நன்றி - பதிவு போடவே சோம்பேறித்தனமா இருக்கும் போது இப்படி ஒரு மயிலு அனுப்பிய மனதின் ஓசைக்கு.

Friday, November 17, 2006

டேய் காதலா-1

என்னை நேசித்த காதலிக்காக
அவள் பார்வையிலேயே
ஒர்
கவிதை!

என்னைப் பார்த்து
கண்சிமிட்டியபடி தெரு விளக்கு
விரல் நீட்டி மிரட்டிச்சென்றாய்
கோளாறு விளக்கிலா? உன்னிலா?

உன் காதுக்கும் இதழுக்கும்
இடையே பாலமாய் அலைபேசி,
யாரோ ஒரு சக்களத்திதான்
மறுமுனையில் சிரித்து,
கொஞ்சி,
பேசிக்கொண்டிருக்கிறாள்
கோவம்தான் - ஆனால்
நீ கொஞ்சுவதை
நான் எப்போதுதான் பார்ப்பதாம்
நீ என்னைக்
கொஞ்சும் போதுதான்
என் கண்கள்
திறக்கவே மாட்டேன் என்று
அடம்பிடித்து
தொலைக்கிறதே.
பூவைத்து
என்னை அழகு பார்த்தபின்,
பூவோடு
என்னையும் சேர்த்து
கசக்கி போடுவதே
உனக்கு
வழக்கமாகிவிட்டது.
நீ என்ன குரங்கா? இல்லை
நான்தான் பூமாலையா?

உன் தீவிரவாதப்பார்வையால்
பார்த்தும் கொல்கிறாய்,
வேண்டாமென்றாலும்
அஹிம்சாவாதியைப்போல்
பார்க்காமலேயும் கொல்கிறாய்
இரண்டுமல்லாமல்
மூன்றாவதுக்கு
எங்கே போவேன்?காதலிக்கும்போது
மனைவியாகச்சொன்னாய்,
மனைவியான போது
காதலியாகச் சொன்னாய்,
போடா லூசு,
உனக்கு ஒரே மாதிரியான புத்தி இல்லையா?
(தொடரும்)
டேய் காதலா- 2

Wednesday, November 15, 2006

ஆரியமா உவ்வே

நம்ம ஊரப்பொருத்த வரைக்கும் 3 வேளையும் நெல்லுச்சோறு திங்க ஆரம்பிச்சது 1960களில்தான். இதுல சாதி பார்க்கிறதுக்கு ஒன்னுமே இல்லீங்க, வேலை செஞ்சா சோறு அப்படின்னு இருந்த காலம்தான் அதிகம். நான் பொறந்த காலத்துல நெல்லுச்சோறுக்குப் பஞ்சமில்லைன்னாலும் கூழோ, கம்பஞ்சோறோ வாரம் ஒரு முறையாவது செஞ்சுருவாங்க. நெல்லுச்சோறு சக்கை, கூழோ கம்பஞ்சோறோ தின்னாதான் சத்து அப்படின்னு இன்னும் கூட சொல்லுவாரு எங்க அப்பச்சி. அப்பச்சியும், அம்மாயியும் வாரம் ஒரு முறையாவது களி சாப்பிட்டிருவாங்க.

அதனால நமக்கு ஆரியம், கம்பு எல்லாம் பழகிப்போச்சுங்க. ஆரியத்துல பண்ற களி, கூழு, கம்பஞ்சோறு ருசி எதுலயும் வரது இல்லே. இப்போ என்னமோ ஒரு தட்டுல 4 பன்னீர் பக்கோடா வெச்சுக்கிட்டு 3 மணி நேரம் கொறிச்சுக்கிட்டு இருக்கோம். அது எல்லாம் தோட்டத்துல முடியுமா? வேலைய பார்க்க வேணாம்?

போன மாசம் மருத்துவர்கிட்டே வாரிச கூட்டிகிட்டு போன போது, அவர் சொன்னாரு ஆரியத்துல பண்ணினது குடுங்க பையன் கொஞ்சம் சத்து பிடிப்போட இருப்பானு சொன்னார். சரின்னு, நம்ம வீட்டுல ஆரியத்தை அரைச்சு கொஞ்சம் பனை வெல்லம் போட்டு தண்ணி கலந்து குடுத்தா பையனுக்கு மூஞ்சி போற போக்கை பார்க்கனுமே.

ஈரோட்டு பேருந்து நிலையத்துல ரொம்ப அதிகமா நடக்கிற வியாபாரமே கம்பஞ்சோறுதான். தலைமுறை இடைவெளி வரலாம், சாப்பாட்டு முறை மாறலாம், ஆனா அது எல்லாம் வளர்ப்பு முறைன்னுதான் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன். 10 மாச குழந்தைக்கு தெரியுமா என்ன? அப்போ களி கம்பஞ்சோறு எல்லாம் இந்தத்தலை முறையோடு போயிருமா? பன்னீரு, ரொட்டியும்தான் திம்பாங்களா இந்தத் தலைமுறையில?

(பின் குறிப்பு: எங்க ஊர் வழக்கத்துல ஆரியம்=கேழ்வரகு=ராகி. Vaa.மணிகண்டன் இதையும் குறிச்சு வெச்சுக்கோங்க)

Sunday, November 12, 2006

தோத்துப் போன ஜி.ரா

யானைக்கும் அடி சருக்குமாம். அது மாதிரி நேத்து ஒரு யானைக்கு சருக்கிருச்சுங்க.

தேன்கூடு போன மாசம் போட்டியில ஜெயிச்சதுக்காக ஒரு சின்ன கூட்டத்துக்கு அழைத்து இருந்தார் 2ம் இடம் பெற்ற மயிலார். 3ம் இடம் பெற்ற ஓமப்பொடியும் வந்து இருந்தார். அப்பொழுது இது நம்ம ஆளு படம் பற்றி பேச ஆரம்பிக்க மயிலார்(ஜி.ரா) சொன்னாரு, அந்த படத்தை இயக்கியது பாக்கியராஜ்'ன்னு. நானும் ஆமாம் சாமி போட்டு வெச்சேன். ஏன்னா அந்த படத்துக்குதான் பாக்கியராஜ் முதல் முதலா இசை அமைச்சு பாடியும் வேற இருந்தார். அந்த நம்பிக்கையில அவர்தான் இயக்கி இருப்பாருன்னு மயிலார் ஆணித்தரமா அடிக்க, ஓமப்பொடி பந்தயம் வெக்கிற அளவுக்கு போய்ட்டார். சரின்னு படத்தை பார்த்து முடிவு பண்ணலாம் ஓட்டி பார்க்க ஆரம்பிச்சோம்.

டைட்டில்ல பார்த்தா இயக்குனர் மேற்ப்பார்வை அப்படின்னே போட்டு இருந்துச்சு. கடைசியா அந்தப் படத்தை இயக்குனது பாக்கியராஜ் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. அவர் மேற்பார்வை மட்டுமே செஞ்சு இருக்கார். அதனால் இந்திரா நகர் அண்ணாச்சில ஒரு செம புடி புடிச்சோம்.


அப்போ அந்தப் படத்தை இயக்குனது யாருங்க? ஓமப் பொடி சொன்ன மாதிரி பாலகுமாரனா? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க சாமி.

Monday, November 6, 2006

ராவணனாகும் ரஜினி


ஆப்தமித்ரா, தமிழில் அது சந்திரமுகியா வந்து சக்கை போடுபோட்ட கதை எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அதுக்குக் காரணம் கதையா? ரஜினியா?.அது எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா தமிழ் சினிமாவுல தோல்விப்படங்களே வராம போயிருக்குமே.

இந்த வாரம் கோலிவுட்டுல, பாலிவுட்டுல பேசிக்கிற பெரிய சமாச்சாரமே 'ராமாயன்'தான். சுமார் 100 கோடி ரூபாயில ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்துல வளரப்போகிற இந்த படத்துல நம்ம ரஜினி ஏத்துக்கப்போற வேஷம் ராவணன். இதெல்லாம் புரளியாக்கூட இருக்கலாம்னு தோணுது. அப்படியே இருந்துரட்டுமே, தனக்குன்னு இமேஜ் வந்த பிறகு ரஜினி பிறன் மனை நோக்காமையை தன்னோட படங்களில் கடைபிடிச்சுகிட்டு வந்துகிட்டு இருக்காரு. அந்த இமேஜ் நல்லா இருக்கும் போது வேணாமே ரஜினிசார் இந்த ராவணன் வேஷம்.

Saturday, October 14, 2006

சென்னைவாசிகளின் கவனத்திற்கு!

சூப்பர் ஸ்டார்களை அருகே இருந்து பார்க்கும் வாய்ப்பு வேண்டுமா?

"தடாலடியார்" கெளதம் அவர்கள் நடத்திய போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. இப்பரிசினை சென்னைவாசிகள் யாரேனும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டுமாறு அழைக்கிறேன். முதலில் பின்னூட்டமிடம் சென்னைவாசிக்கே இந்தப்பரிசு.


இம்சை அரசன் 23-ம் புலிகேசி சரித்திர வெற்றியாக 100 நாட்கள் கடந்து பயணிப்பதன் நினைவாக ஒரு சந்தோஷ பகிர்வு விழா..
திரு. ரஜினிகாந்த்
திரு. விஜய்
திரு.பிரபு-திரு.சத்யராஜ்
திரு.விவேக்
ஆகியோர் தலைமையில்..
அக்டோபர் 14 - கலைவாணர் அரங்கில் மாலை 6.00 மணிக்கு நடைபெறவிருக்கும் விழாவில் நீங்களும்( பரிசுக்குரிய இரண்டு பேர் மட்டும்) கலந்து கொள்ளலாம் நண்பர்களே!

Friday, October 13, 2006

தடாலடி பரிசல் போட்டி


இந்தப்படத்துக்கு தகுந்த மாதிரி ஒரு வரிக்கவிதை சொல்லுங்க பார்க்கலாம்.

பரிசு? இங்கே இருக்கிற பரிசலையே பார்சல்ல அனுப்பி வைக்கப்படும்.

Wednesday, October 11, 2006

வேலை வேலை வேலை...

இருவருக்குமே இன்று நேர்முகத்தேர்வு. இருவருமே மெத்த படித்து நல்ல மதிப்பெண் பெற்றே கல்லூரி வாழ்க்கையை முடித்தனர். இருவருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
"உங்கள் வாழ்க்கையின் லட்சியமென்ன?" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.

ரகு சொன்னான் "மாப்பிள்ளே கவலைய விடுடா, Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம்".

ஆனால் ராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.

போனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், ரகு.

பதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராம்.

வெளியே ஏமாற்றத்துடன் வந்த ரகு
"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே?"

"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராம்.

Monday, September 18, 2006

சில்லுனு ஒரு ஆட்டோகிராஃப்

கல்யாணம் முடிந்த கையோடு துணைவி சகிதம் விமானம் ஏறிய நான் 12 வருடம் கழித்து இன்றுதான் என் கிராமத்து மண் மிதிக்கிறேன்.

அழகிய என் கிராமம்


பழைய புத்தகங்களுக்கு நடுவே
சிப்பியிலிருக்கும் முத்தைப் போல
டைரியின் வடிவில்
பரண் மீது தூசியுடன்
இன்னும் இருந்தது
என் நினைவுகளும் அவள் காதலும்.


முதல் வேலையாக அவளைத்தேடி,
மளிகைக்கடை அண்ணாச்சிக்கு
வாக்கப்பட்டதாய் அம்மா சொன்னது
இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டது.

இளமை தொலைத்து,
உருவம் பெருத்து,
மளிகைக்கடையில் அவள்.

மனதுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்,
கண்களில் பழைய காதலுடன்,
பேச முடியாமல் அவளையே பார்த்தபடி
ஊமையாய் நின்று கொண்டிருந்தேன்.

"என்னங்க வேணும்?" அவள்.

"என்னைத்தெரியுதா வசந்தி?" ஊற்றெடுத்த காதலுடன் கேட்டேன்.

"தெரியலையே"

"நாந்தான் மணியாக்கவுண்டர் பையன் சண்முகம்" என்றேன் புன்னகை வழிய.

"அட ஆமா, சரியா அடையாளம் தெரியல. என்னங்க வேணும்?"
என்று கேட்டாள்

முகத்தில்
எந்த சலனமும் இல்லாமல்,
தொழிலை மனதில் வைத்த
அந்த மளிகைக்கடைக்காரி.

"ஒன்றும் வேண்டாம்" என்று நடையைக்கட்டினேன் வீட்டை நோக்கி.

விடியற்காலை,
தண்ணிக்காக மூட்டிய அடுப்பில்,
அந்த டைரியையும்,
அவள் நினைவுகளையும்

திணித்துவிட்டு
நிம்மதியாய் என் வாரிசை
அணைத்து முத்தமிட்டேன்!

Wednesday, September 6, 2006

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?


களை கட்டி இருந்தது என் அலுவலகம்.
இளம்விதவை ஒருவருக்கு புதுப்பதவியாம்,
கண்களில் இச்சையும், மனதினில் காமத்தையும்
ஒருங்கேற்றி வாசனையோடு ஆண்கள் கூட்டம்.

விட்டு விலகி வாசல் வந்தேன், கைபோனில்
நண்பனுடன் உரையாடுகையில் கடந்து போனது
சோகம் கண்ட ஒரு உருவம்,
தோன்றவில்லை திரும்பிப்பார்க்க.

அதிகாரி அறிமுகப்படுத்துகையில் கண்டேன் அவளை,
கருவளையம் கொண்ட ஒளி இழந்த கண்கள்,
பரிதாபமோ, பச்சாதாபமோ ஒன்றும் தோன்றவில்லை.
புன்னகையுடன் விலகினேன்,
புருவம் தூக்கி என் முதுகை முறைத்துவிட்டு போனாள்.

உள் நோக்கம் கொண்ட வக்கிரத்தால்
ஆண்களை வெறுத்திருந்தாள்.
கண்டும் காணாமல் அவளிடமிருந்து
ஒதுங்கியதால் என்னை ஸ்நேகித்திருந்தால்.


ஒரு நாள் பேசியது மடந்தை,
தாலி கட்டிய ஒரு மணியில்
கணவனை,
பெற்றோரை இழந்து துர்பாக்கியவதியானவள்.
சமுதாயம் ஒதுக்க,
ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையில்,
பாரதி கண்ட பெண்ணாய்,
எரித்துவிட்டு வந்திருந்தாள், தூற்றியவர்களை.

விடுதி ஒன்றில் வாசம்,
வயிற்று பிழைப்புக்காக அலுவலகம்,
இரவு தனிமையைத் தணிக்க,
வடியாக் கண்ணீர்!
தனியே மூலையில் கதறும் இதயம்,
அது மூன்றாமவருக்கு தெரியக்கூடாதென்ற கர்வம்!
இவைதான் அவள்!

முதன் முதலில் கண்ணீர் கண்டது என் இதயம்,
மாற்றத்திற்காக அந்த ஞாயிறு
வெளியே சென்றுவர ஒப்பந்தமாகியது.
கூடும் இடம் ஒரு ஐஸ்கிரீம் கடை என்றும் முடிவாகியது.
மாற்றம் அவளிடத்தா? என்னிடத்தா?
"வெத்துப்பேச்சு" என்றடக்கினேன் மனதை.


ஞாயிறு, நல்ல தூங்கிகிட்டு இருக்கேன். ஒரு மிஸ்ட் கால் என் மொபைல் போனில். என்னோட வாழ்க்கையில் வந்த முதல் மிஸ்ட்கால், அட யாருடா நமக்கு மிஸ்டு தரதுன்னு எடுத்துப்பார்த்தா அவளேதான்? ஏன்? அடப்பாவி 9:30 க்கு அவளோட வெளியே போறேன்னு சொல்லிட்டு 10 மணி வரைக்கு தூங்கிக்கிட்டு இருந்தா போன் பண்ண மாட்டாங்களா? அப்ப கூட இந்த பொண்ணுங்க மிஸ்ட் கால்தான் தருவாங்களா? சச்சின் படத்துல சந்தானம் சொன்னது அசை போட்டு முடிக்கிறதுக்குள்ள என் வண்டியை ஐஸ்கிரீம் கடை முன் நிறுத்தியிருந்தேன்.

பேருந்து கூட்ட நெரிசலில் அவள்,
கசங்கியது என் மனம்.
வார்த்தைகள் இடம் மாறியது,
கண்டேன் அவளுள் இருந்த வேறோருத்தியை,
அவள் சிரித்து அப்போதுதான் பார்த்தேன்.
அவள் விழுங்கிகொண்டே இருக்க,
கரைந்துவிட்டு இருந்தது
எனக்கான ஐஸ்கிரீமும், என் பர்ஸும்.
வெளியே வந்தபோது என்மனதும்.கடற்கரை,
மனம் முழுக்க புழுக்கத்துடன் மக்கள்,
கடல் நீரில் கால் நனைத்து விளையாடியது மடந்தை,
பிறகு, கரைமணல் நனைய கண்ணீர் விட்டழுதது,
ஒரு குழந்தையாய், ஒரு விதவையாய் இரு முகம்.

பட்டாணி, சுண்டல், சோன்பப்டி,
துப்பாக்கி எதையும் விடவில்லை அவள்,
எனக்குள் ஐயம்,
வாழ்வில் கடைசிநாளா அவளுக்கு?

சாலையில் குழிகள்,
திறமையான என் ஓட்டுனம்,
"இவன் நல்லவன், பெண்களை மதிக்கிறவன்"
சொல்லியது அவள் மனம்.
விடுதி விட்டு திரும்பிவருகயில்,
பிரிவின் துயரம்,
என் வாகனத்திற்கு.மனம் முழுக்க அவள் நினைவுடன்,
உறக்கமில்லா ஒர் இரவு,
சம்மதம் சொல்வாளா அந்த வெண்புறா?
கையில் தொலைபேசி அழைத்து கேட்டுவிடலாமா?
நம்பர் போட்டு பலமுறை வைத்தாயிற்று,
இப்படியே காலை வரை..

விடியல் வர, வண்டியுடன் அவள் விடுதி பறந்தேன்
முன்னமே போய்கொண்டிருந்தாள்,
அவள் முன் என் வண்டி நிற்க,
குழப்பதுடன் என் முகம்,
குறும்புடன் அவள் "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?" என்றாள்.
"வாழ்க்கைக்குமா?" என்றேன் மனதில் கொண்ட தைரியத்துடன்.

ஒரு நிமிட நிசப்தம்,
தவறுக்காக குறுகுறுத்தது என் மனது,
"சே, தப்பு பண்ணிட்டியேடா"
இது என் மனம்.

"இந்த நிலைமையில் எனக்கு தேவையா இது?"
இது அவள் மனம்.

அருகிலிருந்த மரத்தின் சருகு சரசரத்தது,
இருவரின் கண்களும் புவி நோக்கி,
வறண்ட தொண்டை,
தடதடத்த கைகளுடன் நான்.

புன்முறுவலுடன் பின்னமர்ந்தாள்,
மெதுவாக நகர ஆரம்பித்தது எங்கள்
"வாழ்க்கை வண்டி"

Monday, September 4, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்

குரோதம், துரோகம், இச்சை,
துவேஷம், தாபம் - எல்லாம் கடந்துவர;
இங்குமங்கும் அலைபாய்ந்தபடி
மனதினுள் கருமேகங்கள்.


நேற்று,
பொதுவழித்தடம் ஒன்றில்
காலடிப்பட்டு குற்றுயிருராய்
நான் கண்ட செடி.

இன்று,
புதிதாய்
துளிர்விட்டு நுனியில்
பனித்துளி ஏந்தி
என்னைப்பார்த்து புன்னகைத்தது.


நிமிர்ந்து பார்த்தேன்
தெளிவாய் வானம்,
என் மனமும்.

# தமிழ்ச்சங்கம் போட்டிக்காக இல்லை.

Monday, August 28, 2006

இடைவேளை

மக்களே, வேலைப்பளு காரணமாக சிறிய இடைவேளை ஒன்று தேவைப்படுகிறது. இதனைப் பற்றி ஏற்கனவே வரப்பில் ஒரு பின்னூட்டமிட்டு இருந்தேன்.
ஒரு மாதமோ இல்லை இரு மாதமோ கழித்து மீண்டும் வந்தாலும் வருவேன்.
நன்றி!

Saturday, August 26, 2006

வேட்டையாடு விளையாடு-My Take

தமிழில்,ஆங்கில படத்துக்கு இணையாய் ஒரு பிரமாண்டம். கதாநாயகன் பறப்பதில்லை, கார், பைக் எல்லாம் உருண்டோடுவதில்லை. அக்கா, தம்பி செண்டிமென்ட் இல்லை. நிறைகள் நிறைய இருக்க குறைகள் சொற்பமே.

பல மாத காலமாய் மனதில் உருண்டோடிய நான் எதிர்ப்பார்த்த "பார்த்த முதல் நாளே" பாடல் உருவாக்கிய விதம் அருமையிலும் அருமை(முதல் இரண்டு வரிகளுக்கு blue mat picturisation" தவிர்த்து இருக்கலாமே). பாடல்கள் அனைத்துமே பிரமாண்டமாய் இன்னும் கண்களில் . இன்னொரு நிறை, நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன இடங்கள் எதுவுமே இல்லை. அனைத்துமே கண்களுக்கு புதிதாய், சுகந்தமாய், வசந்தமாய் (3 இடங்கள் மட்டுமே நமக்கு தெரிந்த இடங்கள்). இதில் கெளதம் வெற்றி பெற்று இருக்கிறார். கேமரா கையாடல் ரவி வர்மா ஒரு பெரிய பாராட்டு உண்டு. Frame by Frame செதுக்கி இருக்கிறார். படத்திற்கு இன்னொரு பலம் ஹாரிஸ். எப்பா Sax, keyboard இரண்டையும் இந்தப்படத்தில் கையாண்ட விதம் Simply Superb. Hats off to these Guys. இரண்டு பெரிய பலம் இவர்கள். இராஜீவனின் கலை, கண்டிப்பாய் பாராட்டலாம்.

அடுத்தது கமல் மற்றும் ஜோ. கமலுக்கு விமர்சனம் தேவையில்லை. ஒரு இடத்தில் கமலின் நடிப்பே அதற்கு ஒரு சான்று. 2 நிமிட பழி வாங்கலுக்குப் பிறகு அவர் காட்டும் அந்த முகபாவனை He deserves for awards.Top Angle view என்பதால் அந்த பாவனை அடிப்படுகிறதே. ஜோ, வழக்கமான கெக்கேபிக்கித்தனமான நடிப்பு இல்லை. ஆரம்பம் முதலே ஒரு சோகக்கீற்றை முகத்தில் படற விட்டிருக்கிறார், பரவாயில்லை, அம்மணி நடிப்பில் ரொம்ப முன்னேறிட்டாங்க. சூர்யாவுக்கு இணையாய் ஜோவும் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி வேகம் அதிகம். தமிழில் அனைவருக்கும் சாந்தமாய் பெயர். ஹோமோ பிடிக்காத வில்லனை அதைச் சொல்லியே வெறி ஏற்றும் கமலின் தந்திரம் ஒரு நச். வில்லனை சுமோவில் துரத்தும் காட்சி கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்துகிறது.

கடைசி ஸீனை மட்டும் சொல்லி விடுகிறேன், 95% மக்களுக்கு புரியாத, என்னுடைய மண்டைக்கு மட்டும் எப்படியோ எட்டிய விதயம் இது. ஒருவரை வாய் கட்டி மண்ணுக்குள் புதைத்தால், சில மணிவரை பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை திரையரங்கில் சொல்லி புரிய வைத்த பெருமை நமக்கும் இருக்கு.

"பார்த்த நாள் முதல்" பாடல் ஒரு அழகிய காதல் கவிதை, நியுயார்க் காட்சிகள் புதுக்கவிதை. வெண்ணிலவே பாடலுக்கு ஆங்கிலேயர்கள் வாயசைத்த விதம், ஹ்ம்ம் தமிழிக்கு புதுது.அட நம்ம கெளதம் வேற ஆட்டம் போட்டு இருக்கிறார். "நெருப்பே" பாடலில் ஆங்கில நெடிக்கு தகுந்தவாரு ஆங்கில மக்களின் கவர்ச்சி ஆட்டம்.(B & C மனதில் வைத்தா சார்)தனியொரு ஆளாய் கதாநாயகன், வில்லன் ஒரு பெரிய கும்பல் என்ற வழக்கத்தை மாற்றிய படம். இந்த படத்தில் கதாநாயகனுக்கு ஒரு படைப்பட்டாளம் இருக்க, வில்லன் இருவர் என புதிதாய் ஒரு முயற்சி.

படம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளரையும் கலாய்த்து பல பதிவுகள் வரலாம். நகைப்புடன் பின்னூட்டம் இட நான் தயார்.

முதல் காட்சியிலேயே கமலின் சண்டைக்காட்சி, யூ டூ கமல்ன்னு கேட்க ஆரம்பிப்பதற்குள் கதைக்கு சென்றவிதமும், கமலின் அறிமுகமும் ஆர்ப்பாட்டமில்லாத ஆஹா. ஆனால் அந்த தலைப்பு பாடல் கமலை ஹீரோவாக்கி காட்டி இருக்கிறது.

ஹீரோயிசம் இல்லாத கெளதம், ரவி வர்மா, ஹாரிஸ், இராஜீவன், திகில் படம் இது.
திரையரங்கில் மட்டுமே பார்க்கவும்.

மக்கள் கருத்து (நன்றி-IndiaGlitz) - இந்த கருத்துல என்ன சொல்றாங்கன்னு நல்லா கவனிச்சுக்குங்க. என்னோட அடுத்தப் பதிவு இந்த கருத்துக் கணிப்புல இருந்துதான்

Friday, August 25, 2006

Blogger பற்றி தெரியுமா?

கிழுமாத்தூர்காரர், கேள்வி கேட்ட கைப்புகிட்டையே ஒரு கேள்வி கேட்டு இருந்தார். ஒரு சின்ன தகவல் தேடி கிடைச்சதே Bloggerன் வரலாறு. இங்கே சொடுக்குங்க...

கோவியின் கருத்தை ஏற்று என் ஆங்கில பதிவில் இருப்பதை இங்கேயும் .....


Pyra Labs is the company who discovered/coined/invented the word Blogger and made the service a big success. That’s why most of our time is being eaten here.

Evan Williams and Meg Hourihan the founder, and the company's first product, also named 'Pyra', was a web application which would combine a project manager, contact manager, and to-do list. In 1999, while still in beta, the rudiments of Pyra were repurposed into an in-house tool which became Blogger. The service was made available to the public in August 1999, when likely fewer than 100 web logs existed. Much of this coding was done by Paul Bausch and Matthew Haughey.

Initially, Blogger was completely free and there was no revenue model. When the company's seed money dried up, the employees continued without pay for weeks or, in some cases, months; but this could not last, and eventually Williams faced a mass walk-out by everyone including co-founder Hourihan. Williams ran the company virtually alone until he was able to secure an investment by Trellix after its founder Dan Bricklin became aware of Pyra's situation. Eventually advertising-supported blogspot and Blogger Pro emerged.

In 2002, Blogger was completely re-written in order to license it to other companies, the first of which was Brazilian mega-corp Globo. I started blogging 2003(introduced by Cogito), deleted and recreated many times due to my inexperience in XML coding.

That is the time where Google started acquiring companies at 2003. As a sweep Google acquired Blogger in 2003 and become familiar to everybody. The people at Pyra Labs at the time of acquisition were Evan Williams, Jason Shellen, Steve Jenson, Rudy Winnacker, Jason Sutter, and Jason Goldman. Still I remember the day when left Blog with tears

In 2004, Evan Williams left Google. In 2006, Jason Goldman left Google.

So guys, hope you enjoyed the history of blogging.

Thursday, August 24, 2006

ஒரு வருடமும் ஒரு மீள்பதிவும்

போன பதிவில் சுஜாதாவைப்பற்றி பேசியதற்கு ஒரு காரணம் உண்டு. இரண்டு வருடத்திற்கு முன் அவர் எழுதியது இன்றும் மனசில் இருக்கக் காரணம் அவர் கூறிய கருத்தேயல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. அவர் கூறியது உண்மைதான் என்பது என் கருத்தும் கூட.

கண்டிப்பா அங்கீகாரம் இல்லாமல் யாரும் எழுத முன் வர மாட்டார்கள். நமக்கு அங்கீகாரம் என்பது பின்னூட்டம்தான். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதற்காக நமக்கு நாமே திட்டத்தில் நாமே அனானி மூலம் பின்னூட்டம் இட்டுக்கொள்வது ..... வேணாம் விட்டுருங்க இந்த நல்ல நாள்ல அதெல்லாம் எதுக்கு. அதே சமயம் என்னை நியாயப்படுத்தவும் அவசியம் இங்கே இல்லை. ஏன்னா எனக்கு என்ன ஒரு 200 பின்னூட்டம் விழுந்து இருக்காலாம் அதுல 20 நானே போட்டுகிட்டதா இருக்கும். சரி விடுங்க. இந்த ஒரு வருசத்தில எனக்கு பதிவுலகம் மூலம் என்ன கிடைச்சு இருக்கு? பல நண்பர்கள். அதற்காகவே இன்னும் எழுதவேன் பின்னூட்டமே கிடைக்காமல் போனாலும்...

அதென்ன நல்ல நாள்? ஒரு வருடம் ஆச்சுங்க என் முதல் பதிவ போட்டு. அதாவது இந்த நாள் இரண்டாம் வருசத்துல அடியெடுத்த வைக்கிறேன்.
ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி!!!

Wednesday, August 23, 2006

வலைப்பதிவு பற்றி சுஜாதாவின் கருத்து


விகடனில் இரண்டு வருடங்களுக்கு முன் சுஜாதா வலைப்பதிவுகளை பற்றி கூறியதை படமாக இணைத்துள்ளேன். அதையே தட்டச்சும் செய்துள்ளேன்.

"இன்று வலைக்குள் போட்டுவிட்டால் அது கிபி. 2014 ஆக்ஸ்ட்டில்கூட யாரோ ஒடு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம்தான் அதன் சிறப்பு. இதனால் வலைப்பதிவுகளை நம் பழங்காலத்து கல்வெட்டுகளூகு ஒப்பிடலாம். இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயதில் நாங்கள் எல்லாரும் நாடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையின் மறுவடிவம்தான். "இதோ பார் என் கவிதை" இதோ பார் என் கருத்து" "இதோ பார் உலகுக்கு என் உபதேசம்" அன் நானும் இருக்கிறென் நண்டுவளையில் என்று. .ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து எதோ ஒரு திசையி. குரல் குடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்கள் என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்கு காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்"

இதில் அவர் கூறிய "பதினைந்து நிமிஷப் புகழுக்கு காத்திருப்பதுதான்" என்பது இப்போது நாம் எதிர்ப்பார்க்கும் பின்னூட்டங்களே. இதற்காகவா நாம் வலைப்பதிக்கிறோம்? பதிலை நீங்களே சொல்லுங்கள்.

Saturday, August 19, 2006

நட்பு

கல்லூரி ஆரம்பிக்க இருந்த முந்திய நாள்,
எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி சென்ற போதுதான்
அவனைப்பார்த்தேன்.
என் அறை நண்பன் என்ற
முறையில் ஹாய் சொன்னதோடு
எங்கள் அறிமுகம் முடிந்து தூங்கிப்போனேன்.

மூத்தோருக்கு சல்யூட் அடித்த
அந்தக் கல்லூரியின் முதல்நாளில்தான்,
எந்த பிரிவு என மூத்தோர் கேட்க,
பதில், என்னுடைய பிரிவாக இருக்கையில்
மனதுள் ஒரு சந்தோசம்.
ஆக, இருவரும் ஒன்றாக மூத்தோருக்கு
மரியாதை செலுத்தி விட்டு
கடைசி வரிசையில் ஒன்றாக அமர்ந்தோம்.

அன்றுதான் எங்களை நெருக்கியது நட்பு!

பிறகு என்னிடம் இருந்து
சிகரெட் பழக்கத்தையும்,
இருவருமே தண்ணி பழக்கத்தையும்
பழகியது வெகு சீக்கிரம்.

ஒரே தட்டில் சாப்பாடு,
இருவருக்கும் பொதுவானது
சட்டை, ஷூக்கள், ஒரே சிகரெட்,
ஒன்றாக சைட் என
முதல் செமஸ்டர் முடியும் முன்னே.

இன்னும் இருகியது எங்கள் நட்பு!

இணைபிரியா நண்பர்கள் என்று
நம்மை எல்லோரும் சொன்ன போது
காலர் தூக்கிவிட்ட படி,
நாம் விட்ட சிகரெட் புகைக்குக்கூட
ஒரு கர்வம்.

இரண்டாம் ஆண்டில்,
அப்பாக்களிடம் கெஞ்சி பணம் வாங்கி
பொதுவாக ஒரு பைக் வாங்கியதும்,
பல நேரங்களில் பெட்ரோலுக்கு பெண்களிடம்
அல்லு போட்டு ஊர் சுத்தியதும்,
குரங்கு அருவிக்கு போய்
திரும்பி வருகையில் பெட்ரோல் தீர்ந்து
விடுதி வரைக்கும்,
வண்டி தள்ளியே வேர்வையில்
மறுபடியும் குளித்துவிட்டு,
சிரித்த படி உறங்கிய போது
உடல் வலி மேலிட,
மனதுள் ஒரு திருப்தி.

விடுமுறையில்
உன் வீட்டுக்கு நான் வந்தேன்,
உன் அத்தைப்பெண்ணை
எனக்கு அறிமுகப்படுத்தி
நீ வெட்கப்பட்டாய்

"உனக்கு இதெல்லாம் கூட தெரியுமாட நண்பா"
அப்படின்னு கிண்டலடிச்சு
"நல்லா இருங்க"ன்னு சொல்லி
ஒரு சிவாஜி கணக்கா வாழ்த்தினேன்.

டீ சாப்பிட
வண்டிய எடுத்துக்கிட்டு
ஊட்டிக்கு ஓவர் ஸ்பீடுல போய்
போலீஸ் மாமாகிட்டா மாட்டினது
யாருக்குமே இன்னும் தெரியாது.

ஆச்சு 4 வருசம்,
அரியர் இல்லாம தப்பிச்சுட்டு,
இண்டஸ்ட்ரியல் விசிட்டுக்கு
வீடே இல்லாத ஒரு காட்டுக்கு
போனது நாம் தான்.

கல்லூரியின் கடைசி நாள்,
எல்லார் கண்களிலும் கண்ணீர்,
அவனையும் என்னையும் தவிர.
"எங்கேடா நண்பா போயிருவா,
ஒரு பீர் அடிச்சுட்டு ராத்திரி கோவில்பட்டியில
பஸ் ஏறினா காலையில உன்னோட ஈரோட்டில்
ஒன்னா தம் அடிக்கப்போறேன்"
அப்படின்னு என்னைத்தேற்றிவனே
அவன் தான்.

பிறகு கணினி படிக்க
அவன் சென்னை போனதும்,
எனக்கு அவ்வளவு வசதியில்லாம
ஈரோட்டிலேயே படித்தேன்,
ஆனாலும் ஒரே கோர்ஸ்.

எப்படியோ அடிச்சு புடிச்சு
பெங்களூர்ல நீ
நல்ல வேலை வாங்கிட்ட,
ஈரோட்டுல,
சொற்ப சம்பளத்துல
நானும்தான்.

எத்தனையோ தடைவ
நீ என்னை
"பெங்களூருக்கே வந்துருடா" அப்படின்னு
கெஞ்சிய போதும்
"தோட்டத்த பார்த்துக்கனும் நண்பா"
அப்படின்னு சொல்லி
தட்டி கழிச்சுட்டே வந்தேன்.

வேலைப்பளு காரணமா
கொஞ்சம் கொஞ்சமா
பிடி தளர்ந்துகிட்டே போனது
நமது நட்பு.


நீ அமெரிக்கா போனது கூட
அங்கிருந்து நீ போட்ட
மின்னஞ்சல் மூலம்தான்
தெரிய வந்தது.

கொஞ்ச காலம்,
நம்மை மறந்து ஓடிப்போனது.
நாமும் வாழ்க்கையின் சீற்றத்தில்
காலத்தினையும் மறந்து போனோம்.

நானும் டில்லியில்
நல்ல வேலையில் சேர்ந்து,
குடும்பதோட
அங்கே போனபோதுகூட
உன்னை மறக்கவே இல்லைடா.
ஒரு 2வாரம் கழிச்சு
நான் உனக்கு போட்ட
மின்னஞ்சலுக்கு பதிலே வரலை.
அப்படியே மறந்தும்,
வேலையினால் மரத்தும் போனேன்.
சில மாசம் கழிச்சு
சென்னைக்கு வந்த போது
உனக்கு போட்ட மின்னஞ்சல்,
டிஸ்க் கோட்டா ஓவர்ன்னு
எனக்கே திரும்பி வந்துச்சு.

வீட்டுக்கு போன் பண்ணி
உன்னோட தொலைபேசி
எண்ணை வாங்கி வெச்சுகிட்டு,
ISDன்னா நெறையா ஆகுமேன்னு
நினைச்சு அடுத்த மாசம் சம்பளம்
வாங்கி பேசிக்குவோம்ன்னு விட்டுட்டேன்.
இப்படியே ஒரு 2 வருசம்
சம்பளம் வாங்கிட்டேன்.

அதுக்கும் ஒரு நாள்
முடிவு வந்துச்சு.
என்னோட அலுவலகத்துலயே
எனக்கு ISD வசதியோட
தொலைபேசி தர,
நண்பனுக்குதான் முதல்ல கூப்பிட்டேன்.

இந்த எண் விளங்காம போயிருச்சுன்னு
ஒரு வெள்ளக்காரமா சொன்னப்பதான்
நம் நட்பின் தூரம்
தெரிய ஆரம்பிச்சது.

நான் ஈரோடு வீட்டுக்கு போனபோதுதான்
உன்னோட
கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்தேன்.
ஒரு வருசம் முன்னாடியே ஆன
கல்யாணத்துக்கு என்னன்னு
வாழ்த்து சொல்ல? எப்படியோ
உங்க வீட்டுக்கு போன் போட்டு
உன்னோட செல் போன் நம்பர் வாங்கி
பார்த்தா சென்னையிலேயே
இருந்து இருக்க 3 வருசமா.

பல வருசம் கழிச்சு
நான் கூப்பிட்ட முதல் போன்கால்
"என்னை கண்டுபுடின்னு" நான் சொல்ல,
நீ என் குரல் மறந்து
"எங்கையோ கேட்ட குரல் மாதிரி இருக்கே"
அப்படின்னு சொன்ன போது
நமது நட்புக்குள்
ஒரு பெரிய இடைவெளி தெரிஞ்சுது.


எதேச்சையாக,
டிராபிக் சிக்னலில் ஹாய் சொல்லும்போதும்,

தியேட்டரில அசந்தர்ப்பமாக பார்த்து
படம் ஆரம்பிச்சுருமுன்னு அவசரத்துல
"எப்படிடா இருக்கேன்னு" கேட்கும் போதும்,

யாஹூ அட்ரஸ் புக்கில
உன்னோட பிறந்து நாள்
ரிமைண்டர் வரும்போதும்,

இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது நம்முடைய நட்பு.
------------------------------------------------------------
இளவஞ்சி/நிலா, வாக்களித்து மீண்டும் எனக்கு ஆறுதல கிடைக்கச் செய்த அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிங்க!

Thursday, August 17, 2006

கனவும் ஆகஸ்டு 15ம்


விமான நிலையம்
கடக்கும் போதும்,
வானத்தில சப்தம்
எழுப்பிய படி
விமான செல்லும் போதும்,

நண்பனை வெளிநாட்டுக்கு
வழியனுப்ப அதே நிலையம்
வரும்பொழுதும்,

நண்பனிடம் நெட் சாட்டிங்கில்
பேசியபடி என்
ரெசியும்மை அவனிடம் நைசாக
தட்டிவிட்ட போதும்

டாலரும், பவுண்டும்,
ஏன் ஒரு ஆன் சைட் கூட
கிடைக்காதா என்ற ஏக்கத்தில்,
ஆதங்கத்தில், வருத்தத்தில்.....


சொல்கிறேன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

*(விவசாயி என்ற முகமூடியை கழட்டிய என் முதல் கவிதை)

Wednesday, August 16, 2006

கண்டுபுடிங்க பார்ப்போம் -2

முதலாவது போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து கண்டுபுடிங்க பார்க்கலாம் அடுத்த பகுதி இது.

எல்லாரும் சொல்ற மாதிரி நாமும் விவசாயியோட வரப்புல ஒரு நல்வாழ்த்து சொல்லி இருக்கோம், முடிஞ்சா பாருங்க.

முன்னுரை:
இந்த one liner அப்படின்னு ஆங்கிலத்துல ஒன்னு சொல்லுவோம். புரியாதவங்களுக்கு
காதலன் அப்படின்னு ஒரு படம் வந்துச்சு. அதுக்கு ONE LINER or Slogan = Take it Easy.
வலைப்பதிவுலேயும் இது உண்டு.

நமக்கு அதாங்க விவசாயிக்கு One Liner or Slogan or Description = கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி..விவசாயி

அது மாதிரி சில பேருக்கு போட்டு இருக்கேன்,யாருன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம்.
தங்கிலீசுல போட்டு இருக்கேன். இல்லைன்னா ஆட்டம் சுலபமா முடிஞ்சி போயிரும்.

1) கntaதைச் soல்கிறேN (What I see is what you get)

2) கொஞ்SAம் SIரிppu, KONJசம் கொழுPPUமாY.. MAறந்தவைKAளை நினைவுPTUத்THAவே இந்tha விTUபட்TAவை

3) ஒண்ணுME PUரியLA உLAகத்திLE... Eன்னMO நடKKUது.. MAர்MAAமாய் இRUக்குது...

4) உலGAMம் ஆச்சRIயக் குறிKAளாL ஆNAது.

5) VAAழ்க்கைs SUவDUகளுM, அதில் எZHUMம் SIந்தைYUம், PAAர்வையுMAAய், வளைYA வRUம் பTHIவு.

6) என் ப்லொக்கிற்கு வRUகை தந்THAதற்கு நNறி. ஒண்ணுM Oண்ணுM ரெண்TU எNபது நானும் eன் நண்பர்kaளும் நடTHதி வந்THA மாத பத்திரிக்கை. இப்POது WEB வடிVAம் PEற்றுள்LAது.

7) பெRIயோரை விYAத்தலும் இLAமே சிறியோRAI இகழ்THAல் அTHAனினும் இLAமே

8) யார் வேண்TUமாNAAலும் வRAலாம், எNன வேண்டுMAAனாலும் பேSAலாம்...என் மNAம் மகிழும்VAரை :-))

9) எNATHU பேNAAவின் பிரசVAத்தால், KAவிதைGAள் - குசும்PUகள் - ஞாPAகங்கள் - ellaam வார்த்தைkaளின் வDIவிலே

10) நட்PIன்றி யாRUமில்லை நண்PAர்KAளின்றி நாNIல்லை

Monday, August 14, 2006

கண்டுபுடிங்க பார்ப்போம்-1

கண்டுபுடிங்க இதெல்லாம் எந்த வலைப்பதிவாளர் என்று?

இந்த one liner அப்படின்னு ஆங்கிலத்துல ஒன்னு சொல்லுவோம். புரியாதவங்களுக்கு
காதலன் அப்படின்னு ஒரு படம் வந்துச்சு. அதுக்கு ONE LINER or Slogan = Take it Easy.
வலைப்பதிவுலேயும் இது உண்டு.

நமக்கு அதாங்க விவசாயிக்கு One Liner or Slogan or Description = கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி..விவசாயி

அது மாதிரி சில பேருக்கு போட்டு இருக்கேன்,யாருன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம்.
தங்கிலீசுல போட்டு இருக்கேன். இல்லைன்னா ஆட்டம் சுலபமா முடிஞ்சி போயிரும்.

1) free யா விடு Maame
2) சுதந்திர இந்தியாவில் Acid வீச்சும் Auto ஆட்களும் மிச்சம் இருப்பதால்

3) Cudalore காட்டானின் களத்துமேடு...

4)Ennai பாதிக்கும் நிகழ்வுகள் பற்றி Sila வார்த்தைகள்

5) அனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு ezutha ஆசைதான்.. manasuக்குள்ளே அடங்குடா மவனேன்னு kural கேக்குதே!!

6)தமிழ்ப்பாக்களோ inimai. அந்தப் பாக்களை விளக்கச் சொல்வது innum இனிமை.

7)எனக்கென oru இடம் நானாக நானிருக்க... அத்துவானக் kaattil தேன் தேடியலையும் oru சிட்டைப் போல...

8) படித்தது, paarththathu, kEட்டது, uதித்தது, உNaர்ந்தது

9) nI பார்த்துட்டு போனாலும் paarக்காம போனாlum பிதற்றிகிட்டேthaan இருப்பேன்...!

10 )எல்லாத்தயும் nakkal அடிப்பதே nam தொழில்

::இது பகுதி-1::
ஆதரவைப் பொற்த்து அடுத்த பகுதியும் வரலாம்

Sunday, August 13, 2006

புதுத் தமிழ்மணம்

ஆகஸ்ட் 13ம் தேதி முதல் "தமிழ்மணம்" நிர்வகிக்க இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எங்களது வணக்கமும் வாழ்த்துக்களும்.

உலகத்துல இருக்கிற தமிழ் மனிதர்களை ஒன்று சேர்த்து முதன் முதலில் எழுத வைத்த நுட்பத்தாருக்கு(காசி) எங்களின் கோடான கோடி நன்றி. தமிழ் படிச்சுட்டு மட்டுமே இருக்கிற பல்லாயிரம் மக்கள் இன்னைக்கு எழுதறாங்க(தட்டச்சு) என்றால் தமிழ்மணம் மட்டுமே காரணம்.
அதனை தொடர்ந்து நடத்த வந்து இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு மீண்டும் எங்களது வணக்கமும் வாழ்த்துக்களும்.

Saturday, August 12, 2006

திரவ தீவிரவாதம்

தீவிரவாதத்துக்கு அர்த்தமே இன்னும் நமக்கு விளங்க மாட்டேங்குது. ஒரு குக் கிராமதுல ரெட்டை ஜடை போட்டு இருக்கிற ஒரு 16 வயசு புள்ள பண்றது கூட தீவிரவாதம்னு அந்த பொண்ணை டாவடிக்கிற பையன் சொல்லும்போது இதுக்கெல்லாம் அர்த்தம் கண்டுபுடிக்க முடியாது.

இப்போ 2 நாளைக்கு முன்னாடி உலகமே ஹீத்ரோ விமானநிலையத்தைத்தான் தொலைக்காட்சியில பார்த்துகிட்டு இருந்துச்சு. ஏன்? எதுக்கு ? எப்படி? அப்படிங்கிற விஷயமெல்லாம் நமக்கு வேணாம். அப்போ செயப்பாட்டுவினை பார்ப்போமா? நம்ம ஊர்ல வெக்கிற செய்வினைக்கும் இதுக்கும் பெரிசா வித்தியாசமில்லை.


லண்டன் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களை திரவ வெடி பொருட்களைக் கொண்டு தகர்க்க மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியை தாம் கண்டு பிடித்துள்ளதாக லண்டன் காவல்துரை(ற) தெரிவித்துள்ளனர். அதேசமயம் திரவ வெடிபொருட்கள் என்னான்னு தெரிஞ்சிக்கலாமா?

ஒரு விமானத்தில் வெடிக்கும் உபகரணத்தினை கடத்தி செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு திரவ வடிவிலான வெடிகுண்டு ஒரு சரியான மாற்று வழியாகும்.

திரவ வடிவிலான வெடிகுண்டினை சுலபமாக மறைச்சுடலாம். பிளாஸ்டிக் வெடிப்பொருட்களை தேடுவதற்கு பயன்படும் மிக உயர் நுட்பம் கொண்ட இயந்திரத்தினால் கூட இவற்றை கண்டு பிடிக்க முடியாமல் போகலாம்.(இன்னும் தெளிவாகாத விஷயம் இது)

நன்கு தெரிந்த திரவ வடிவிலான எரிபொருள் என்றால், அது நைட்ரோகிளிசரின் ஆகும்.(இதப்பத்தி என்கிட்ட என்னான்னு கேட்காதீங்க, என்னோட வேதியியல் ஆசிரியர்க்கு எனக்கும் எப்பவுமே ஆவாது) இது ஒரு சிறு நகர்விலும் வெடிக்க கூடிய நிறமற்ற திரவம்'ன்னு சொல்லிக்கிறாங்க.

நிறமற்ற தன்மையினால், விமானங்களை அழிக்க வேண்டும் என்று நினைப்பவங்களுக்கு இது ஒரு சுலபமான் வழியா தெரிநஞ்சாலும், வெடிகுச்சிகள் இல்லாமல் இவை வெடிக்காது என அறிவியல் பெரியசாமிங்க சொல்றாங்க.

உண்மையில், பெரும்பாலான திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க, வெப்பம் அல்லது மின்சார உந்துதல் வேணும். அதனால திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க காமிராக்களில் இருக்கும் ஃபிளாஷ் அல்லது பேட்டரியினால் இயங்கும் உபகரணம் தேவை.

சாதாரண வீட்டில் பயன்படும் பெரும்பாலான பொருட்களில், உதாரணமாக நகப் பூச்சினை எடுக்க பயன்படும் திரவம், கேசத்திற்கு நிறம் கொடுக்கும் திரவங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களை கொண்டு கூட திரவ வெடிப்பொருளினை உருவாக்கலாம்.

ஆனால் இதில் கடினமான் விஷயம் என்னென்னா, இவற்றினை சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஏழாம் ஆம் திகதி தாக்குதல் நடத்திய குண்டுத்தாரிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரைஅசிடோன் ட்ரைபெராக்சைட் என்ற வெடிப்பொருளினை பயன்படுத்தியதாக லண்டனில் இருக்கும் காவல்துறையினர் நம்புகின்றனர்.

இந்த வெடிப்பொருளை கூட திரவ வடிவில் தயாரிக்க முடியும். ஆனால் சரியான விகிதத்தில் கலவையினை உருவாக்குவதற்கு நிபுணத்துவம் தேவை. இந்த பொருட்களை கொண்டு, வெடிப்பொருட்களை உருவாக்க முயலும் அனுபவம் அற்றவர்கள், பெரும்பாலும் வெடிக்குண்டு தயாரிக்கும் போது பொருட்கள் வெடித்து கொல்லப்படுகின்றனர்.

இது போன்று வெடிப்பொருளாக செயற்பட கூடிய மேலும் பல திரவங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நைட்ரோமீதேன் – இது மாதிரி விமானங்களில் எரிபொருளாக பயன்படுகின்றது. இது தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது.

அதே போன்று நைட்ரோ ஈதேன் மற்றும் மீதேல் நைட்ரேட்டும் இருக்கின்றது.

இந்த இரசாயன பொருட்களை பெறுவதற்கு கடினம் அல்ல, ஆனால் இவற்றை வெடிக்க வைக்க கூடிய சரியான பொருளினை கண்டுபிடிப்பதற்கு, அறிவும், அனுபவமும் தேவை.

முக்கியமாக, திரவப் வெடிப்பொருட்களால் மிகுந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாராவதில்லை. ஆனால் விமானங்கள் என்று பார்த்தால், சக்தி வாய்ந்த குண்டுகள் தேவை இல்லை. ஏனென்றால் சிறிய வெடித்தாக்குதல் பெரிய பாதிப்பினை ஏற்படுத்த வல்லது.

காற்றழுத்தம் செய்யப்பட்ட விமானத்தின் அறைகள், வானில் உயரமாகவும், வேகமாகவும் பறக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் போன்றவை, ஒரு சிறிய வெடித்தாக்குதலின் பாதிப்பினை கூட பூதாகரமாக்கும், அதன் விளைவாக விமானம் முற்றாக நாசம் அடையும்.

நன்றி பிபிசி:
நம்ம திரவ தீவிரவாதிய உள்ளே போட்டாதான், நாம சரியாவோம், அட தேனீரை சொல்றேங்க.

Thursday, August 10, 2006

பலி கெடா- சைவமா? அசைவமா?

இந்த பலி கெடா பலி கெடா அப்படிங்கிறதுன்னா என்னான்னு மல்லாக்க படுத்து யோசிச்சாலும் பதில் கிடைக்காதுங்க. அதெல்லாம் வாழ்க்கையில இருந்துதான் தெரிஞ்சிக்கனும். சரி பலி கெடாங்கிறது அசைவமான்னு கேட்டா சைவம்தாங்க அதிகம்ன்னு சொல்லுவேன். சச்சின் வந்த வந்தவுடனே ராபின் உத்தப்பாவை பலி கெடா ஆக்கினாங்க. இது சைவம்தான். இந்தியா- பாக் பிரச்சினைக்கு ஒரு மாநிலத்தை பலி கெடா ஆக்கினாங்க. தலைவர் பொண்டாட்டி சிலையில ஏதோ பிரச்சினை அதுக்கு பொது மக்கள் பலி கிடா ஆக்கினாங்க. இது இரண்டும் அசைவம். ஆஹா பிரச்சினையான பதிவா ஆகிரும் போல இருக்கே. வுடு ஜூட் விவசாயி.

இந்த நடிகை அம்மணிங்க முகத்தை மட்டும் மாத்திட்டு வேற ஒரு கலையம்சம் உள்ள அம்மணியோட உடம்போட இணைச்சு ரசிக்கிற சில ஜென்மங்களும் இருக்கு. அதுல யாரு பலி கெடா அந்த நடிகைதான். அவுங்க முகம் மட்டும் அழகா இருக்கும், உடம்பு கலையம்சத்தோட இருக்கும். மக்கள் ஆஹா நடிகைய நிர்வாணமா பார்த்துபுட்டேன்னு சொல்லி அத ஒரு 4 பேருக்கு ரகசியமா அனுப்பி வைப்பாங்க. இதுல குஷ்பூவ வெச்சு ஒரு பத்திரிக்கை பேர் வாங்கிருச்சு. (அப்புறம் என்னாப்பா ஆச்சு). மல்லிகா ஷெராவத், ஏஞ்சலினா, நம்ம 3ஷா எல்லாம் இதுல அடக்கம் இது சைவமா தெரிஞ்சாலும், அசைவ மேட்டரு.

இப்படி படம் அனுப்பினா என்ன ஆகும் தெரியுமா? ரசிச்சு பார்த்தோம்னு யாருப்பா சொல்றது? அது இல்லே , அப்படி இனிமே படம் அனுபிச்சா உங்க மெயில் சர்வர் நிறுத்தப்படும். யாஹூல அனுபிச்சா யாஹூ இந்தியாவுல வேலை செய்யாது, ஜி மெயில்ல அனுபிச்சா ஜிமெயில் இந்தியாவுல வேலை செய்யாது. பயந்துட்டீங்க தானே.

ஏற்கனேவே வலைப்பதிவுகளை கொஞ்ச காலமா தடுத்தாங்க இந்தியாவுல. இப்போ மின்னஞ்சல். ஏன்? கேள்வி கேட்கிறது ரொம்ப சுலபம் பதில் சொல்றதுதான் ரொம்ப கஷ்டம். இப்படி சொன்னப்புறமும் பதில் வேணுமின்னு அடம் புடிச்சா இத சொடுக்கி பார்த்துக்குங்க.


சைவம், அசைவம் எதுவேணுமின்னாலும் வரலாம் அதுக்கு நான் பொறுப்பில்லை.
இந்த மாதிரி படம் யாராவது ஒருத்தர் அனுபிச்சா யாரு பலிகெடா? அது சைவமா? அசைவமா?

Friday, August 4, 2006

ஆடி 18

கூடுதுறை

நேத்து ஆடி 18, இன்னைக்கு வரலட்சுமி விரதம்/ஆடி வெள்ளி.
நம்ம ஊரு பக்கம் ஆடி 18 ரொம்ப விஷேசம்ங்க. பள்ளிகூடத்துக்கு விடுமுறையெல்லாம் வுடுவங்கன்னா பார்த்துக்குங்க. காவேரி, இந்த சமயத்துல தான் கரை புரண்டோடுமாம். போன வருசமும், இந்த வருசமும் பரவையில்லீங்க, அதுக்கு முன்னாடி வருசத்துல கரைதான் புரண்டு புரண்டு ஆடுச்சு, தண்ணியே இல்லே.

* பாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம்,
* காவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.
* இஸ்கூலு விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.
* புதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்

சின்ன வயசுல அம்மா சொல்ற படியே தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும். தண்ணி வத்திபோச்சுன்னா, எங்க கையிலும் காசு இருக்காது, அப்போ ஆத்துல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்லிக்குவோம். வயக்காட்டுக்கு தண்ணி தர காவேரித்தாய்க்கு காணிக்கை'னும் சொல்லிக்குவோம். இப்போ கர்நாடகாதான் காவேரியவே தருது இப்போதான் புரியுது.

இந்த வருசம் தண்ணி(காவேரி ஆத்துல தாங்க) நல்லா ஓடுதுங்க. கையைக்கடிக்காம இந்த வருசமும் மகசூல் ஆச்சுன்னா அடுத்த வருசமும் தலையில காசு வெச்சு முங்குவேன் சாமி..

படம்: பவானி கூடுதுறை

Monday, July 31, 2006

கன்னத்தில முத்தமிட்டால்...

கன்னத்தில முத்தமிட்டால் படத்த சின்னத்திரையில் கண்டு சிறிலங்கவை நினைச்சு மனம் வெதும்பி, பிறகு ஏதாவது எழுத நினைச்சு படத்துல "எப்பமா இந்த போர் முடியும்? இங்கே நிம்மதியா இருப்பாங்க" அப்படின்னு கீர்த்தனா கேள்விக்கு ஒன்னுமே சொல்லாத போற நந்திதா தாஸ் மாதிரி நானும்....

கேள்வி : ஏன் இந்த மக்களால மட்டும் நிம்மதியா இருக்க முடியல?

பதில் : மார்ட்டர்ஸ்.கண்ணி வெடி, பாம் செய்றவங்களுக்கு எங்காவது ஒரு யுத்தம் நீடிப்பதில் ஒரு வியாபார நோக்கு உள்ளது. முன்னேறிய நாடுகள்.. யுத்தத்தை நிறுத்திட்டாங்க. முன்னேறாத நாடுகளை அவுங்க தயாரிக்கிற ஆயுந்தங்களை பரிசோதிக்கும் இடமாக மாத்திட்டாங்க. உலகத்திலேயே சமாதானத்தை விரும்புற நாடு ஜப்பான், ஆனா அவுங்கதான் துப்பாக்கி அதிமாக தயாரிக்கிறாங்க. இதுக்கு என்னதான் முடிவு? எல்லா ஆயுதங்களையும் மூட்ட கட்டி தூக்கி கடல்ல கொண்டு போயி போட்டாதான், இதுக்கு முடிவு.
போன தலை முறை ஆரம்பிச்ச இந்த யுத்தத்தை இந்த தலைமுறையிலாவது ஒரு முடிவுக்கு கொண்டுவருவாங்களா?

கண்ணீருடன்
விவசாயி

Friday, July 28, 2006

தேன்கூடு-மரணம்-முன்னுரை

வரப்புல ஒரு கவிதையை எழுதிவெச்சு இருந்தேங்க. அப்போதான் "கைப்பு" மோகன் கூப்பிட்டு "கவிதை நல்லா இருக்கு இளா, என்ன சொல்றதுன்னே தெரியல. போட்டியில இது கண்டிப்பா பரிசு வாங்கும்" அப்படின்னு சொன்னாரு. தமிழ்மணம், தேன்கூடு எதையுமே என்னுடைய இடத்துல பார்க்க முடியாது (இன்னும்தான்). அதனால மரணம் போட்டியைப் பத்தி அந்த சமயம் எனக்கு தெரியாதுங்க.

அப்போதான் ஜூன் மாத போட்டி ஞாபகம் வந்துச்சு (வராதே பின்னே, நம்ம மக்களான இளவஞ்சி, ராசா கலந்துகிட்டு பரிசு வாங்கினவங்க ஆச்சே). தேன்கூடு போட்டி பத்தின விவரம் தெரிஞ்சிக்கிட்ட போதுதான் வாத்தியாரு எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரிஞ்சது (வாத்தியாரு'ங்கிறது இளவஞ்சியின் செல்ல பேருங்க). பின்ன "மரணம்"ல தலைப்பு சொல்லியிருக்காரு. சோகம், எழவு, ரத்தம் அப்படின்னு எதையுமே எழுத கூடாதுன்னு முடிவு பண்ணிட்டுதான் அந்த கவிதைய மாத்தினேன். ஆச்சு கவிதை தலைப்புக்கு ஏத்தமாதிரி சாராம்சம் குறையாமல் மாத்தி போட்டியில கலந்துகிட்டேன்.


நம்ம சக விவசாயி "கொங்கு" ராசா கூப்பிட்டு "இளா என்ன சொல்றதுன்னே தெரியல, ஆனா கவிதை நல்லா இருக்கு" அப்படின்னு சொன்னாரு. அப்பதான் ஒரு பெருமூச்சு விட்டேன். அப்படியே 3 நாள் தோட்டத்துல வேலை அதிகமா இருந்ததினால வலைப் பக்கமா வர முடியல. அப்புறம், பின்னூட்ட மட்டுறத்தல் பக்கம் பார்த்தா, நிறைய பேரு பின்னூட்டம் போட்டு இருந்தது தெரிஞ்சது. அட நம்ம கவிதையை கூட ரசிச்சு, பாராட்டிதான் பின்னூட்ட போட்டு இருக்காங்கன்னு நினைச்சு படிச்சு பார்த்தா தலை சுத்திருச்சு. போட்ட பின்னூட்டம் எல்லாத்திலேயும் ஒரே மாதிரி "என்ன சொல்றதுன்னு தெரியல" அப்படின்னே எழுதியிருந்தாங்க. சரி, நம்ம கவிதைக்கு அவ்ளோதான் மதிப்பு அப்படின்னு நினைச்சுகிட்டேன்.

அப்போதான் ஒரு யோசனை வந்துச்சு. அனுசுயாகிட்ட கேப்போம், அவுங்க ஒரு நடுவர் மாதிரின்னு நினைச்சு "என்னங்க சொல்ல ஒண்ணுமேயில்லயா கவிதையில" அப்படின்னு ஒரு தனி மடல்ல கேட்க அவுங்க போட்ட பதில் தான் என்னை சமாதானப் படுத்திச்சு. இதோ அவுங்க போட்ட பதில்
"இளா, நீங்க வேற நிஜமா சூப்பராயிருக்குங்க. இந்த கவிதைய படிச்சுட்டு யாரும் கருத்து சொல்ல முடியாது. அனுபவிக்கனும். ஒவ்வொரு வரியும் அனுபவிக்கறா மாதிரி எழுதியிருக்கீங்க. படிச்சவுடனே அவங்கவங்க நினைவுகள்ள முழுகற மாதிரியிருக்கு அப்புறம் எப்டி கருத்த சொல்லறது. ஆட்டோக்ராப் மாதிரி அவங்கவங்க வாழ்க்கை நினைவுகள்ள முழ்கடிக்குது. இதபோயி யாராவது நல்லாயில்லனு சொல்ல முடியுமா? நிஜமா வெற்றி பெறும் கவிதையிது. அப்புறம் நம்ம கிட்டயும் கருத்து கேட்டதுக்கு நன்றிங்கோ :)". நன்றிங்க அனுசுயா


"கொடுமையிலே பெரிய கொடுமை இளமையில் வறுமை, ஆனா அதை விட கொடுமை முதுமையில் தனிமை". இதை நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட ஒரு பாடம். முதுமையில் தனிமை தவிர்க்க முடியாதது. ஆனா அதை மறந்து வாழ என்ன பண்றதுன்னு பெரியவர் ஒரு முறை என்கிட்ட கேட்டபோது, ஒண்ணும் பேசாம எழுந்திருச்சு வந்துட்டேன். இந்த கேள்வி ரொம்ப நாள் பாரமா இருந்துச்சு. "முதுமையில் தனிமை, மரணத்துக்கே முன்னே வரும் ஒரு பெரிய மரணம்"ன்னு அப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதன் பிரதிபலிப்பே இந்த கவிதை. ஒரு முற்றுபுள்ளி மட்டுமே நம் வாழ்க்கையை முடிவு செய்துவிட கூடாது. நாம் அனுபவித்து, ரசித்த வாழ்வின் 50 வருடம் ஒருவரின் மரணத்திற்கு பிறகு வெறுமையாய் ஆகிவிட்டால், நாம் வாழ்ந்த முற்பகுதி வீண் என்று அர்த்தமாகிவிடாதா? வாழ்வில் சுகம், துக்கம் இரண்டும் உண்டு. மனிதனின் பிற்பகுதியில் அவன் கண்ட சுகங்கள் நிலைக்க சுகத்தை அசை போட்டால், வெறுமையும் இல்லை தற்கொலையும் இல்லை. நான் சொல்ல வந்த கருத்து இதுதான் "முற்பகுதி சுகத்தினை அசை போடு, பிற்பகுதியும் சுகமாக இருக்கும்.

நம்ம வாழ்க்கை, பாசம், நேசம், காதல், காமம், குடும்பம், வாரிசு அப்படிங்கிற எல்லாம் நிறைஞ்ச ஒண்ணு. அதை போலதான் எனது கவிதையிலும் சொல்லியிருக்கேன்.

அந்த பெரியவர் சொல்ற மாதிரியே கவிதை எழுதினேன். எழுதி முடிச்ச உடனே அவர்கிட்ட படிச்சு காண்பிச்ச போது எல்லோரையும் போல அவரும் ஒண்ணும் சொல்லல. கண்ணீர் மட்டும் பதிலா வந்துச்சு. எனக்கு மனசுல ஒரு கனம், அதையும் மீறி கவிதையில ஏதோ சொல்லியிருக்கோம்ன்னு ஒரு திருப்தி.
இந்தக் கவிதை ஜூலை மாத தேன்கூடு-தமிழ்ஓவியம் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது இன்னும் மகிழ்ச்சியே - படிக்க - ரசிக்க- சொடுக்கவும்

நன்றி!

மரணம்!

சிலருக்கு சோகத்தையும்,
பலருக்கு வெறுமையும் தரும்,
எனக்கோ அந்த மரணம்
ஆறுதல் தந்து இருக்கிறது.

தலைப்பிட்ட வாத்தியாருக்கும்,
இந்த இடத்தை அடைய
வழிவிட்ட அனைவருக்கும் நன்றி!

தளம் அமைத்த
தேன்கூட்டிற்கும்,
பரிசளிக்கும்
தமிழோவியத்துக்கும் நன்றி!

வாக்கு தந்து ஏமாற்றும்
அரசியல்வியாதி போலல்லாமல்
நான் கேட்காமலே
வாக்களித்து எனக்கும்
ஒரு இடம் கிடைக்க செய்த
அத்துனை மக்களுக்கும்
என் நன்றி!


இதன் முன்னுரை

வாக்களித்த அந்த 30 பேருக்கும் என் இதயபூர்வமான நன்றிங்க!

Wednesday, July 19, 2006

தடையாவது, வெங்காயமாவது

யாரு தடை செஞ்சா என்னா இது கில்லி மாதிரி வேலை செய்யும்.
http://www.pkblogs.com

Monday, July 17, 2006

தேங்காய் சுடுற நோன்பி

இன்னைக்கு ஆடி-1.

அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். "எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. இதையெல்லாம் பார்த்தா ஆடி மாசம் ஒரு பெரிய வில்லத்தனமான் மாசம்'ன்னு தான் நமக்கு தோணுதுங்க.

சரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா? தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம். ஹ்ம்ம். சனிக்கிழமையே எல்லா கூட்டாளிங்களுக்கு சொல்லிவிட்டோம். திங்கள் காலையில தேங்காய் சுடறதா. இப்ப பசங்க கழுதமாதிரி ஆகி, தொப்பைய வெச்சுக்கிட்டு வந்துட்டாங்க. கையில ஒண்ணு, ரெண்டுன்னு குழந்தைங்க வேற. என்ன பண்ண காலம் வேகமா உருண்டு ஓடுது.

அட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.

Camp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா? அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு தேங்காயால இருக்கிற அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க

Tuesday, July 11, 2006

மீள்பதிவு

ஒருத்தர் போட்ட பதிவுக்கு இன்னொருத்தர் மீள்பதிவு போட்டு இருக்காங்களா?

இல்லைன்னா, விவசாயிதான் முதல்'ன்னு வரலாறு சொல்லட்டும்.

அது சொன்னா சொல்லிட்டு போகுது, என்ன விஷயமுன்னு யாருங்க அது சொல்றது?


கொங்கு ராசாவோட பதிவுக்குதான் இங்க மீள்பதிவு. அதனால ராசாவோட பதிவ முதல்ல படிச்சுட்டு வந்துருங்க.அப்படியே சொடுக்கி பாருங்க

#
#
#
#
#
#
#
#
#
வந்தாச்சா. இனிமே படம் போட்டு கதை சொல்றதுதான்.

இந்தியன் - லஞ்சம் வாங்குறவங்களை கொலை செஞ்சாரு.

அந்நியன் - அலட்சியம் செய்றவங்களை கொலை செஞ்சாரு.
சந்திரமுகி - மனசுல இருக்கிற பேயை கொலை செஞ்சாரு.
மன்மதன் - துரோகம் செய்றவங்களை கொலை செஞ்சாரு.


அஜித் - அவர் படங்களை பார்க்க வரவங்களை கொலை செஞ்சாரு.நன்றி- ராசா & மயிலு அனுப்பிய பிரேம்.

Wednesday, July 5, 2006

காலதேவனை வேண்டியபடி

தேன்கூடு "மரணம்" போட்டிக்காகவும்

சிறாராக,
பள்ளி முடிந்து திரும்புகையில்
யார் முதலில்
நம் தெருமுனை தொடுவது
என்றொரு போட்டி,
கன மழை,
இருவரின் கையிலும் குடை,
ஆனாலும் நனைந்த படி
முதலில் தெருமுனை தொட்டேன்.

கண்ணீருடன் நீ
உன் வீடு சென்றாய்,
அன்று முதல் உன்னிடம்
தோற்க ஆரம்பித்தேன்.தோற்ற என்னை
சில நேரங்களில்
எள்ளி நகையாண்டாலும்,
என்றுமே
ஜெயிக்க விட்டதில்லை
மழை நீரில்
நீ விட்ட கண்ணீர்.

நீ
பெரிய மனுஷியாகிவிட்ட
போது வெட்கப்பட்டதை
சேமித்து வைத்திருக்கிறேன்
அடுத்த ஜென்மத்திற்கும் சேர்த்து
நம் திருமணத்தன்று இரவு
யாருக்கும் தெரியாமல்
உன் அறையில்
நான் நுழைந்து முத்தமிட்டு,
முன் வைத்த
பந்தயத்தில் ஜெயித்தேன்,
உனக்கும் பிடிக்கும் என்பதால்!

திருமண நாள் அதிகாலை,
எல்லோரும் முழிக்கும் முன்
யாருக்கும் தெரியாமல்
நாம் இருவரும்
சமையல் அறையில்
முத்தத்துடன் காபி பருகியது
யாருக்கு தெரியும்?
அந்த காபியின்
கடைசி சொட்டு ருசி
இன்றுவரை
எங்கேயும் கிடைக்கவில்லை!

தாலி கட்டிய போது
ஏன் அழுதாய்
என்று கேட்டதற்கு
உதடு சுழித்து தெரியாதென்றாய்,
எனக்கு
பதில் கிடைக்காவிடினும்
நீ உதடு சுழித்தது
பிடித்துப் போனது
முதலிரவு அன்று
நமக்குள் ஓடிய
குதிரைகள் அடங்கிய பின்
நீ கொடுத்த முத்தம் சொன்னது
காதலையா காமத்தையா?

வியர்வை துடைத்து விட்ட போது
காதில் கேட்டாய்
"இன்னுமொருமுறை இந்த
வியர்வை வேண்டுமா
இல்லை நான் வேண்டுமா?"
எதை எடுப்பது, எதை விடுப்பது?

நமக்குள் கூடல்கள் அதிகம்,
ஊடல்களை விட!
மழலையின் புன்னகை பார்த்து
நாம் மறந்த ஊடல்கள்
அதை விட அதிகம்.
மகளை பள்ளிக்கு
அனுப்பிய அந்த
முதல் நாளில்,
சிரித்தபடி டாட்டா சொன்னது
என் செல்ல மகள்,
கண்ணீருடன் நீ,
எனக்குள் ஐயம்
இருவரில் யார் குழந்தை?

மகளுக்கு
முதலில் தாவணி அணிய
சொல்லித் தருகையில்,
நீ வெட்கப்பட்டதை பார்த்து
மகள் திட்டியதும்,
அதற்காக என்னிடம் நீ முறையிட்டபோது
நான் சிரித்ததையும்
நம் முற்றத்து விநாயகரைத்
தவிர வேறு யாருக்குத் தெரியும்?செல்ல மகள் திருமணம்,
கண்ணீருடன் நான்,
விசும்பலுடன் நீ,
இவ்வளவு நாள் மகள்
அணைத்து உறங்கிய
டெடி கரடி
அனைத்தும் அன்றுதான்
தனிமையாய்!

பேரனுடன் கொஞ்சிய நாட்களில்
நாம் கண்ட பேரின்பம்
நாம் வணங்கிய
தெய்வங்கள் தந்ததில்ல!என்னை விட்டு
நீ இறைவனிடம்
சென்ற பிறகும் பல
இரவுகள் இப்படித்தான்
இந்த கவிதைகளை
படித்து சுகம் காண்கிறேன்.
இன்னும் குறையவில்லை
நீ கொடுத்த சுகங்கள்!


இன்று
தனியறையில் நான்,
உன் நினைவுகளோடு
வாழ்ந்தபடி.
ஒரு முற்றுபுள்ளியா
நம் சுகதுக்கத்தை
முடிவு செய்யப்போகிறது?

என்னுள் இருக்கும்
இந்த நினைவுகளை
உனக்கு வந்த
மரணத்தால்
அழிக்கமுடியவில்லை.

உன்னிடம் வந்துவிட
காலதேவனை வேண்டியபடி
கண்ணீரையும்,
உன் நினைவுகளையும் சுமந்தபடி,
இன்னும் நான்!

Tuesday, July 4, 2006

மானூத்து மந்தையிலமானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி - அவன்
தங்க கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சுமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமச்சி
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
வெல்லக் கொடல் வலிச்சா வெல்லப்பூண்டு உரிச்சி
வெல்ல கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
பிள்ளைக்கு தாய்ப்பாலத் தூக்கிக் குடுக்கச்சொல்லு
மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு


ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்
வெள்ளிச்சங்கு செஞ்சா வெளக்கி வெக்க வேணுமுன்னு
தஙத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

கச்சேரி மச்சானுக்கு வாழ்த்துக்கள்

Thursday, June 29, 2006

இதுக்கு என்ன பேரு?

மீள் பதிவு அப்படிங்கிறது ரொம்ப சுலபம். நாம எழுதினதையே திருத்தி எழுதுவோம் இல்லைன்னா அதனோட தொடர்ச்சியை எழுதுவோம். அப்படின்னா மீதிப் பதிவுகள் மீளாப்பதிவுகளா?.

காலத்துக்கு ஏத்த மாதிரி பழைய பதிவையே திருப்பி போட்டு ஒரு புரட்சி பண்ணுவோமே அப்படின்னு நினைச்சதுதான் இந்த பதிவு போட காரணம்.
காலத்துக்கு ஏத்த மாதிரி பழைய பதிவையே திருப்பி போட்டா அதுக்கு பேர் என்னங்க?
எப்படி இருந்த நீ.......

பின் குறிப்பு:இது ஜொள்ளு இல்லங்க, விளையாட்ட பத்திதான்செய்தி:- விம்பிள்டன் டென்னிஸ் - சானியா தோல்வி

பழைய பதிவு

Wednesday, June 28, 2006

வண்ணத்துடன் என் பூச்சி


அவள் மீது
பட்டாம்பூச்சி
சிறகடித்தது
என் இதயம்!


அவள் காதோரமாக
பறந்து சென்ற பட்டாம்பூச்சி
என் காதலை
அவளிடம் சொல்லியிருக்குமோ?

Monday, June 26, 2006

ஆ(ற்)று மணல்


ஒரே நேரத்துல ராசாவும், நவீனும் நம்மள இந்த ஆத்துகுள்ள(6) தள்ளி விட்டுடாங்க. சரி, இதென்ன சச்சின் அடிக்கிற சிக்ஸரா கஷ்டப்பட. நாலு போயி, ஆறு வந்தது டும், டும், டும்.

ரசிக்கும் பொழுதுகள்
* ஆற்றுக் குளியல்
* தூறல் நேரத்தில் பயணம்
* மழை பெய்கையில் பஜ்ஜியுடன் தேநீர்
* காலை நேர நடை
* பசும் வயலின் வரப்பில் மாலை நேர தூக்கம்
* என் வாரிசின் புன்னகை

ரசிக்கும் எழுத்துகள்
* தபூ சங்கர்
* பாலகுமாரன்
* நவீன்,தேவ்,ரசிகவ்
* சாண்டில்யன்
* குறள்
* சுஜாதா

புடிச்ச 6 ஆட்டங்கள்
* ஒயிலாட்டம்
* இடுப்பாட்டம்
* சிம்ரனாட்டம்
* கும்மாங்குத்து
* தண்ணியாட்டம்
* கரகாட்டம்

6 வலைக் கனவுகள்
* கைப்புவுடன் ஒட்டக சவாரி
* ராசாவுடன் சீட்டுக் கச்சேரி
* தேவ் வீட்டில் மீன்குழம்புடன் மதிய உணவு
* பாண்டியுடன் பெசன்ட் நகர் பீச்சில் ஜொள்ளு
* சிபியை கலாய்ப்பது (இதுவரைக்கும் என்னால அவரை கலாய்க்கவே முடியல)
* பொன்ஸ்'ன் யானையை கடத்துவது

என்றும் ரசிக்கும் திரைப்படங்கள்
* தில்லு முல்லு
* சதிலீலாவதி
* மைக்கேல் மதன காம ராஜன்
* சிங்காரவேலன்
* சர்வர் சுந்தரம்
* தளபதி

அடிச்ச 6 சரக்குகள்
* KF
* மார்க்கோபோலா
* MC
* ஸ்டெல்லா (இதுவேற நாட்டுதாம்)
* ராயல் சாலஞ்ச்
* ஷிவாஷ்

6 புடிச்ச மேட்டர ஆறு ஆறா போட்டு இருக்கோம், இதெப்படி இருக்கு.

ஆறு பதிய அழைக்கிறேன்
* தேவ்
* இலக்கியன்
* தாணு
* கைப்பு
* அனுசுயா
* குமிழி

அந்தி மாலை!

பொழுதுபோக்கிலேயே அதிக செலவு வைப்பது புகைப்படம் எடுப்பது(1990களில்). வரப்பில் என்னுடைய சில அரிய(?!) புகைப்படத்தையும் போட எங்க வீட்டுல சில பேரு சொல்ல தட்ட முடியல. அதனால இனிமே சில நான் சுட்ட (திருடியது இல்லை) படத்தினயும் வரப்பில் ஆர் அமர்ந்து காணலாம்.

1993, ஐயன் பொட்டி கேமரா வாங்கிக் கொடுத்த காலம் அது. சந்தோஷ் சிவனும், பி.சி யும் நமக்குள்ள குருவா இருந்த போதுதான் இந்த படம் புடிச்சேன். எங்க மொட்ட மாடியில இருந்து எங்க ஊரு மலையை பல்லாயிரம் தடவை பார்த்து இருந்தாலும் இந்த படம் ஒரு வித்தியாசமான ஒரு பார்வையை தந்தது.

Tuesday, June 13, 2006

ஜனனம்

(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)

அலறியது என்னுடைய தொலைபேசி
அழைத்தது எனது அருமை
துணைவி-என்னவென வினவ
வலி ஆரம்பித்ததாக முனகியது
அவளது குரல்-வாழ்க செல் போன்
என வாழ்த்தி ஆயத்தமானேன்
மாமனார் ஊரிலிருக்கும் மருத்துவமனைக்கு
6 மணி நேர வண்டிப் பயணம்
மனம் போகும் வேகத்தில் செல்லவில்லை
நான் சென்ற வண்டி, கண்களில் நீரோட
மனம் சொல்லியது "இன்னும் அறிவியல் வளரவில்லை"

மனதில் லேசான பயம், இடையிடையே
துணைவியின் நலம் விசாரித்ததில்
நலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.
இருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;
தடுமாற்றத்துடன் மருத்துவமனையின்
வாசற்படி மிதித்தேன்: என்னை
எதிர்பார்த்தபடி பெற்றோர், நண்பர்கள்
மற்றும் உறவினர்கள்-யாரும்
தெரியவில்லை கண்ணுக்கு

துணைவி இருந்த அறைக்கு
அழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்
வேண்டினேன் "அவளுக்கு ஆறுதல் சொல்ல
என் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா"

"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்
ஆகிவிடும்" செவிலி கூறியது மட்டும்
செவியில் விழுந்தது - அறையில் அவள்
தணித்து படுத்திருக்க அவள் கண்களில்
வலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க
அறிவு அடித்தது மண்டையில்
"ஆறுதல் மட்டுமே சொல்லு"
வாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல
எல்லாம் கிடைத்தது போல
மனம் தேறினாள்
வலி இருந்தும்.

செவிலியின் பணி தொடர வெளியே
தள்ளப்பட்டேன், மனம் உள்ளேயும்
உடல் வெளியேயும் என 5 நிமிடம்;
மீண்டும் 15 நிமிட ஆறுதல்
5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.

மருத்துவர் வர புரிந்தது எனக்கு;
இன்னும் சில நிமிடமே
துணைவியோ பல்லைக்கடித்து
வலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,
மனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்
வெளியே வந்தேன் - மணி 9:30 இரவு

சுற்று பார்த்தேன், மருத்துவமனை
நிறைந்து எங்கெங்கும் உறவினர்கள்
ஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த
பிரசவ அறை பூட்டப்பட,
வாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,
நிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;
பிரசவ அறையிலிருந்து
சிறு ஒலியாவது கேட்குமா என
ஏங்கியது மனம்

அக்கணமே கேட்டது
துணைவியின் அலறல்
என் ஆணவம், கெளரவம் தொலைத்து
உற்றார் உறவினர் நினைப்பேயில்லாமல்
கண்ணீர் பெருக்கெடுத்தது
ஆறுதல் கூற அருகில் யாருமில்லை
இருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை
பத்து நிமிடம் விட்டு விட்டு
அலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்
கழன்று விழுவது போல
கணத்தது என் இதயம்.

நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி
சுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்
பிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா?
வலி குறைந்த திருப்தியா?
எதுவும் தோணவில்லை
கை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்
முகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு

செவிலியின் கையில் புது மொட்டு
அப்பா ஜாடையா? அம்மா ஜாடைய?
பட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்
முகம் காண ஏக்கம்
இடையே என் வாரிசையும்;
பாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி
காட்டினார் "ஆனந்தம், பேரானந்தம்"

சில கணம்
என்னிடம் இல்லை என் மனம்
தனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்
என்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;
பாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்
அதுதானே என்னால் முடியும்
என் வாரிசை பத்து மாதம் சுமந்து
பத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு
ஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்!

மார்கழி திங்கள் கடைசி தினம்
ஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்
ஸ்தானத்திற்கு உயர்ந்தேன்
ஆயிற்று பல மாதம் கடந்தும்
மறக்க முடியவில்லை அக்கணத்தினை -
மறக்கவே முடியாது என்றும்
பொறுப்புகள் பல கூடினாலும் மனதில்
ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே
எங்கோ ஒலித்தது ஒரு பாடல்
"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"

கைப்புக்கு ஒரு வாழ்த்து

Monday, June 12, 2006

இம்சை அரசன் Vs கைப்பு


2003ல சென்னையில பிரம்மச்சாரியா சாலிகிராமத்துல இருந்த காலம். எங்க வீட்டுக்கு கீழேதான் வின்னர் பட அலுவலகம் இருந்துச்சு. அப்பப்போ மதிய சாப்பாடெல்லாம் யூனிட்லதான் இருக்கும்.

தயாரிப்பாளரோட பையன் நமக்கு கொஞ்சம் நெருக்கம். காரணம் வேற ஒண்ணும் இல்லீங்க. அப்போ அவருக்கு சென்னை புதுசு. நம்ம வீட்ல தங்கி இருந்த பசங்க எல்லாம் கோவில்பட்டிக்காரங்க, அதனால திருநெல்வேலி பாஷை நல்லா பேசுவோம். அந்த பாஷையினால எங்க ரூமுக்கு அடிக்கடி வருவாரு. படம் ரெண்டு முறை நின்னுருச்சு. தயாரிப்பாளருக்கு அது முதல் படம், சினிமாவும் புதுசு அதனால எவன் எவனோ ஏமாத்தினாங்க. ஆயிரம் தான் இருந்தாலும் பணக்கஷ்டம் இருக்கத்தானே செய்யும். கடைசியில அவுங்க வீட்டையெல்லம் அடமானம் வெச்சு, பையனோட பைக் வித்து படம் ரிலீஸ் பண்ணினாங்க. அந்த கஷ்டம் கூட இருந்த எங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும். இவ்ளோ கஷ்டப்பட்டவங்களை அதுக்கு அப்புறமா சாலிகிராமத்துல பார்க்கவே முடியல.

இப்படி ரத்தக்கண்ணீருல உருவானதுதான் அந்த காமெடி படம். இப்போ இந்த படம் போட்டாலே சிரிப்பா சிரிக்குது ஜனம்.

இம்சை அரசன் கதையோ வேற மாதிரி. சச்சின் படத்துல வடிவேலு "நமக்கு இந்த ஹீரோ வேஷமெல்லாம் வேணாம், இப்படியே இருந்துட்டு போயிருவோம்"ன்னு சொல்லுவார். அப்புறம் ஏன் இம்சை அரசன் 23ம் புலிகேசி? ஷங்கர் வந்து கேட்டா முடியாதுன்னு சொல்ல முடியுமா? செஸ் விளையாட்டுல குதிரைய வெச்சு செக் வெக்கிறதுதன் கில்லியே. ரொம்ப சுலபமா குறுக்க நெடுக்க போயி வெட்டிபுடும். இம்சை அரசன்லயும் இதே கதை தான். இதுவரைக்கு மனுஷப்பயலுகதான் வடிவேலுவுக்கு ஆப்பு வெச்சானுக. இப்போ குதிரையும் செக் வெச்சு இருக்கு.

பாவம் முறுக்கிவிட்ட மீசையும், கம்பீரமா(?!) இருக்கிற வடிவேலு குதிரையினால மனசொடிஞ்சு போய்ட்டாரு. ஹ்ம் என்ன பண்ண பட்ட இடமே படும் கெட்ட குடியே கெடுங்கிற மாதிரி ஆப்பு வாங்கினவங்களேதான் ஆப்பு வாங்குறாங்க. இப்படி குதிரை கூட ஆப்பு வெச்சா இப்படித்தான் வாயில வெரல வெச்சுகிட்டு படம் ரிலீஸ் ஆகுர வரைக்கும் காத்திருக்கனும். இம்சைய நானும் எதிர் பார்க்கிறேன் சாமிகளா..

என் காதலும் உன் வெட்கமும்


நான் காதலை சொல்லிவிடப்
போகிறேன் என நீ வெட்கித் தலைகுனிய
அதைப் பார்த்து நானும்
சொல்லாமல் வார்த்தைகளை விழுங்கிவிட்டேன் .....
இது மாதிரி ஆயிரம்முறை நீ
வெட்கப்படுவதைப் பார்த்துவிட்டேன்,
ஒருநாளாவது வெட்கப்படுவதை நிறுத்தேன்
என் காதலை சொல்லிவிடுகிறேன்!

Sunday, June 11, 2006

இடம்மாறும் இதயம்


உன் பார்வை
என் மீது கையெழுத்திட்டவுடன்
என் இதயமல்லவா
(உன்)இடம் மாறியது

Saturday, June 10, 2006

வரப்பு

உழைப்பை நிறுத்தி சற்று நேரம் ஆசுவாசப்படுத்த எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.


சொடுக்குனா என்னோட வரப்புக்கு போலாம்

முக்காலம்


இறந்த காலம்,
நிகழ் காலம்,
வருங்காலம் - எதற்குமே
வித்தியாசம் தெரியவில்லை

எல்லாவற்றிலும் நீ!

அலைகளும் தலை சாயும்

(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)சோகங்களின் கண்ணீரும்
மகிழ்வின் ஆணவமும்


காதலியின் சிணுங்கல்களும்
காதலனின் ஆளுமையும்

தனிமையாய் தனிமையும்
கூட்டத்தின் ஆரவாரமும்


மணல் வீடுகளாய் கற்பனைகளும்
கற்பனைகளாய் மணல்வீடுகளும்

பேனாக்களின் கனவுகளும்
கனவுகளோடு காகித பட்டப் படிப்புகளும்

அதி காலை ஆழ்தியானமும்
மாலையோர படகு மறைவுகளும்

இவை யெல்லாம் என்று ஓயும்
நானும் ஓய்ந்து தலை சாய!

வரப்பு

உழைப்பை நிறுத்தி சற்று நேரம் ஆசுவாசப்படுத்த எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.

வாழ்வினை திரும்பி பார்க்கையில்
மனதில் பறந்த பட்டாம் பூச்சிகள்,
சொல்ல முடியா கற்பனைகள்,
சொல்லாமல் தீண்டிய முட்கள்,
தாண்டி வந்த படுகுழிகள்,
தொண்டை வரை வந்து முழுங்கப்பட்ட வார்த்தைகள்,
கண்களில் தோன்றி மனதில் புதைந்த ஆசைகள்
எல்லாவற்றையும் அசை போட எனக்கு இந்த வரப்பு.

Friday, June 9, 2006

மீள் பதிவு

எல்லாரும் சிரிச்சாங்களேன்னு பூனை போயி பொடக்காலியில சிரிச்சுதாங்கிற கதையா, எல்லாரும் மீள் பதிவு போடறாங்களேன்னு நானும் போட்டுறேன்.


வெட்டிப்பயலா வெறும்பயலா போயி திரிஷாவ பொண்ணு பார்க்க மாட்டேன், கெட்டிப்பயலா சுட்டிபயலாதான் பொண்ணு பார்க்க போவேன். அர்னால்டு மாதிரி உடம்ப தேத்திகிட்டு இந்த அழகுக்கு மேல ஒரு அழக மெருகேத்துக்கிட்டு சினிமாவுல ஒரு பெரிய நடிகனாகி அதுக்கப்புறம் திரிஷாவ ஜோடியாக்க போறேன்.

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)