Tuesday, August 26, 2008

தமிழ்-பதிவர்களின் வெறியாட்டம்

சாதாரணமாவே நம்ம மக்களுக்கு தமிழார்வம் அதிகமுங்க. அதுவும் அப்பால் தமிழ்னு சொல்லிக்கிற தமிழ்நாட்டை விட்டு வெளியே இருக்கிற தமிழனுக்கு தமிழ் மேல பற்று கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். blogs எனப்படும் பதிவுகள் நிறைய மக்களோட கருத்து பிரதி பலிப்பா இருக்காம்.

விசயகாந்த் கணக்கா ஒரு கணக்கு சொல்றேன் பாருங்க. அதாவது போன மாசத்துல (ஜூலை-2008) கணக்குப்படி இந்திய மொழிகளில் அதிகம் எந்த மொழிக்கு பதிவுகள் வருதுன்னு கணக்கெடுக்கலாம்னு நினைச்சேன். அதன் படி மொழி மற்றும் பதிவுகளின் எண்ணிக்கைய பாருங்க.

(Thanks BLOGKUT.COM)

Tamil-12384
Telugu-2396
Malayalam-5003
Kannada - 2416
Hindi-11649.

இதிலென்ன கொடுமைன்னா இந்தியாவுல அதிகம் பேர் பேசுற மொழியான ஹிந்தில தமிழைவிடக் குறைவான பதிவுகள் வருது. அதிகமா ஆங்கிலத்துலதான் எழுதுறாங்க போல. கணக்குப்படி நம்ம மக்களின் வெறிய பார்த்தீங்களா? இதுக்கு எல்லாம் யாரு காரணம்? பதிவர்களும், திரட்டிங்களும்தானுங்களே..

Disc: This is upto my knowledge and calculations are as per Google-Blog search-Language based-Rss.

தமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்து 3 வருசம் ஆகிருச்சு அப்படிங்கிறதை சுருக்கமா சொல்லிக்கிறேனுங்க. 4 வது வருசத்துல அடியெடுத்து வைக்கிறேங்க.

57 comments:

  1. எப்பவுமே நம்ம மக்களுக்கு உணர்வுகள் கொஞ்சம் அதிகம்தான்...

    ReplyDelete
  2. 4 வருஷம் ஆயிருச்சா!! சபாஷ்!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அண்ணாச்சி! :))

    ReplyDelete
  4. //தமிழன்... said...
    வாழ்த்துக்கள் அண்ணன்...
    //


    இப்படியும் கூட சொல்லலாம் தமிழா!


    வாழ்த்துக்கள் பெரியண்ணேன்!

    நாலுவருசம்ண்ணா சும்மாவா!!!

    ReplyDelete
  5. இங்கே கும்மி அலவ்டா?

    ஏன்னா அ லவ்டா ஒரு சவுண்டு விடத்தான் ! :))

    ReplyDelete
  6. கூகுளில் தமிழ்மொக்கைப் பதிவுகளைக்கு ஓடை இருந்தா, பாருங்கோ 10000 பதிவுகள் என்று காட்டும்....

    ReplyDelete
  7. நம்ம பொட்டி தொறந்துதாங்க இருக்கு. அடிச்சு ஆடுங்க யாரு கேக்கப் போறாங்க?

    ReplyDelete
  8. நன்றிங்க தமிழன், ஆயில்யன்,கொத்ஸ்

    ReplyDelete
  9. நான் தமிழ்ப் பதிவுலகத்துக்கு வர காரணமா இருந்ததும் அப்பால் தமிழார்வதானுங்க.

    ReplyDelete
  10. //Tamil-12384//

    எத்தனை பேரு உருப்படியா எழுதுறாங்க??? :)

    ReplyDelete
  11. நாலுக்கு வாழ்த்துக்கள்..... மூணு பெக் தானே குவார்டர்..... :))

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்ண்ணே! :))

    ReplyDelete
  13. இது ரொம்ப நல்ல விஷயம், தமிழர்களுக்கு மொழிப்பற்று அதிகமாக இருப்பதையே இது விளக்குகிறது.

    ReplyDelete
  14. இளா இந்த கணக்கை நீங்க எப்படி எடுத்தீங்கன்னு தெரியலை.

    இந்திக்கு இருக்கற நாரதர் திரட்டியில கடந்த 3 மணி நேரத்தில மட்டும் 40+ இடுகைகள் வந்திருக்கு. அந்த கணக்குபடி பாத்தா மாசத்துக்கு 10000+ அந்த திரட்டியில மட்டும். திரட்டியில இல்லாதவங்கள கணக்குல சேத்தா கணக்கு வேற எங்கயோ போய் நிக்கும்.

    ReplyDelete
  15. நீங்க post ஐ பதிவுகள்ன்னு குறிப்பிடுறதா நினைச்சி தான் அந்த பதில்

    ReplyDelete
  16. வாழ்த்துகள் அண்ணாச்சி :)

    ReplyDelete
  17. மாமு, நாலாவது வருசத்த செலிபரேட் பண்ண கெடா வெட்டிரலாமா?

    ReplyDelete
  18. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  19. நாலு வருசமாயிருச்சா?

    இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  20. உடுக்கை நீங்க சொன்னதுக்கப்புறம்தான் பார்த்தே.அது நம்ம தட்டச்சு கவனக்குறைவுதாங்க. சரி பண்ணிட்டேங்க. நன்றிங்க.

    ReplyDelete
  21. 4 வருடத்திற்கு வாழ்த்துகள்.

    //Hindi-11649.//

    தமிழை விட கம்மிதான். ஆனா ரொம்பா குறைச்சல்னு சொல்ல முடியாது. ஹிந்தி பேசும் மாநிலங்கள்ல படிப்பறிவு அவ்வளவா கிடையாதே.

    இதற்கு இன்னொரு சான்று, அபினவ் பிந்த்ரா (ஒலிம்பிக்ஸ் தங்க மெடல்) பதிவில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் எல்லாரும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பெயர் வைத்திருந்தார்கள். தமிழ்ப் பதிவர்கள் மட்டுமே தமிழில் பெயர் வைத்திருந்தார்கள் (மூன்று பேர்).

    ஒரு வேளை ஒரு 1 ஜாஸ்திப் போட்டுட்டீங்களோ? :-)

    ReplyDelete
  22. தமிழ்ப் பதிவுகளின் எண்ணிக்கையை உயர்த்திய பதிவர்களை இங்கு முன் மொழியலாமே...!

    திரு.கோவி.கண்ணன் பதிவுகள் நம் தமிழ்ப் பதிவுகளின் எண்ணிக்கையை உயர்த்தப் பங்காற்றி இருக்கும் என கருதி, அவரது பெயரை முன் மொழிகிறேன்.

    உங்கள் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. வாவ் வாழ்த்துக்கள் ILA அண்ணே :))

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் அண்ணாச்சி :)))

    ReplyDelete
  25. நம்ம தான் ரொம்ப பேரு வெட்டியா இருக்கமா? வட நாட்டுகாரன் தெலுங்கு காரன் எல்லாம் வியாபாரம் அது இதுனு செய்றாங்க, நாம இத செய்றோம்

    ReplyDelete
  26. வாழ்த்துகள், பதிவில் எனக்கு சீனியர் நீங்கள் !
    :)
    எனக்கு 2 1/2 ஆண்டுதான் ஆகுது !

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள்!

    வாழ்த்துக்கள்!!

    வாழ்த்துக்கள்!!!

    வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  28. நான்காவது வருஷமாமாமாமாமாமாமாமாமாமாமா கலக்குங்கோ :-)

    ReplyDelete
  29. நாலு வருசமா??

    அடேங்கப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆ....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. சுவாரசியமாக இருக்கின்றது புள்ளி விபரம். பதிவுக்கு நன்றி, நான்காம் வருடத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. இந்தியாவில் அதிகம் இந்தி பேசப்படலாம். ஆனால் தமிழ் மொழி தமிழகம் மட்டுமல்லாது இலங்கை மற்றும் உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்களால் பதிவர்களின் மொழியாகவே இருக்கிறது. இந்த ஒரு காரணத்தினால் பிராந்திய மொழிகளில் தமிழ் அதிக பதிவர்களால் எழுதப்படுகிறது. இந்த முயற்சியில் தமிழகம் மட்டுமல்லாது இலங்கை பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சீனியர் என்கிற முறையில் உங்களை வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  32. 4 வது வருஷத்திலும் அடிச்சு ஆட வாழ்த்துகள் விவ்!!!

    ReplyDelete
  33. "தமிழ்-பதிவர்களின் வெறியாட்டம்"

    இன்னும் அதிகம் ஆகட்டும் :-)

    ReplyDelete
  34. //இராம்/Raam said...
    மூணு பெக் தானே குவார்டர்..... :))//

    ராயல் ரெண்டு கட்டிங்கும் கோட்டார் தான் :-)

    ReplyDelete
  35. தமிழன் மொதல்ல நிறைய பேசிகிட்டு இருந்தான் இப்போ எழுத ஆரம்பிச்சிட்டான்!
    பரவாயில்லை விடுங்க!
    நாலு வருடம் ஆச்சுன்னு சொல்றிங்க, ஒரு கிசு கிசுவா கூட காணோமே

    ReplyDelete
  36. இது கண்டிப்ப வெறியாட்டம்தான். :)

    என்னுடைய கண்டனத்தையும் தெரியபடுத்தி கொள்கிறேன்

    என்ன தில்லு தமிழர்களுக்கு... :D

    ReplyDelete
  37. //நாலு வருடம் ஆச்சுன்னு சொல்றிங்க, ஒரு கிசு கிசுவா கூட காணோமே//

    வாலு,

    எந்த மாதிரி கிசுகிசு வேணுமின்னு சொன்னா எடுத்து கொடுக்க வசதியா இருக்கும்.... :)

    கூகிள்'லே விவாஜி'ன்னு தேடி பாருங்க... :)

    ReplyDelete
  38. //தமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்து 3 வருசம் ஆகிருச்சு அப்படிங்கிறதை சுருக்கமா சொல்லிக்கிறேனுங்க. 4 வது வருசத்துல அடியெடுத்து வைக்கிறேங்க.//

    வாழ்த்துக்கள் சாமியோவ்.. :)

    ReplyDelete
  39. நன்றி- ராம், சின்ன குட்டி, கயல்விழி, மது, வெட்டி

    ReplyDelete
  40. வாழ்த்துகள்.. இளா.!

    இந்த புள்ளிவிபர பதிவுக்கு, வைக்கப்பட்ட தலைப்பு மிக ரசனை.!

    அப்புறம் இராம் மற்றும் ஷ்யாம் கவனத்திற்கு : ஒரு பெக் என்பது 30 ml. மூன்று பெக்குகள் சேர்ந்தது 'கட்டிங்' அல்லது 'நைன்டி' எனப்படும் (இன்னும் பல பெயர்களும் உண்டு) குவார்ட்டரில் பாதியே ஆகும். 6 பெக்குகள் கொண்டதே ஒரு குவார்ட்டர். இத்தாம் பெரிய கூட்டத்தில் இவர்களைத் திருத்த ஒரு நாதியில்லையே என நினைக்கும் போது.. அவ்வ்வ்..

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் இளா!!

    ReplyDelete
  42. வெற்றிகரமான 4 வது வருடத்துக்கு வாழ்த்த்க்கள்!

    காசா பணமா ஆளாளுக்கு 2,3 ப்ளாக் வெச்சிருக்கோம்ல

    :)))

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் இளா :))

    ReplyDelete
  44. வாழ்த்துக்கள்

    //காசா பணமா ஆளாளுக்கு 2,3 ப்ளாக் வெச்சிருக்கோம்ல//

    ஓ! அதான் மேட்டரா

    ReplyDelete
  45. வாழ்த்துக்கள் விவாஜியண்ணே...

    ReplyDelete
  46. //காசா பணமா ஆளாளுக்கு 2,3 ப்ளாக் வெச்சிருக்கோம்ல//

    ரிப்பீட்டூஊஊஊஊஊஉ

    ReplyDelete
  47. //காசா பணமா ஆளாளுக்கு 2,3 ப்ளாக் வெச்சிருக்கோம்ல//

    ரிப்பீட்டூஊஊஊஊஊஉ

    ReplyDelete
  48. விவசாயியின் விவசாயம் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  49. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  50. மூத்த பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)