Friday, June 29, 2007

விசிலடிச்சான் குஞ்சுகள்!

முதல் நாள் சம்பளத்துக்காக:
மது/மங்கைக்காக-சிற்றின்பம்
(las Vegas)நடிகருக்காக(Sivaji-Bangalore)
சாதனத்துக்காக(Queue for iPhone a day before)

ஆன்மீகத்துக்காக:


அவனவனுக்கு ஆயிரம் விருப்பம் இருக்கு. உனக்கும் மட்டும் எப்பவுமே மிஞ்சுவது வயித்து எரிச்சல். உனக்காகவே இது இருக்கு.


மதுரை மே.தொகுதி காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி

மதுரை மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் சுமார் 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ராஜேந்திரன் பெற்ற வாக்குகள் 60,933. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக 29,818 வேட்பாளர் செல்லூர் ராஜூ வாக்குகள் பெற்றார். விஜய்காந்தின் தேமுதிக சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரன் 21,272 வாக்குகளைப் பெற்றுள்ளார். இத் தொகுதிக்கு கடந்த 26ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மெயின் ஹாலில் வாக்கு எண்ணும் பணி நடந்தது. வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்த வேட்பாளர்களின் ஏஜென்டுகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இத் தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். இதில் 75 சதவீத வாக்குகள் பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது

Thanks : Thats Tamil

மதுரை மே.தொகுதி வாக்கு எண்ணிக்கை- Update

மதுரை மேற்குத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் 48,871 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ 23,952 வாக்குகளும் பெற்றுள்ளார். விஜய்காந்தின் தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரன் 16,535 வாக்குகளும் பெற்றுள்ளார்.

Update at 11:45 am(IST)
காங்-48,871
அதிமுக-23,952
தேமுதிக-16,535

Thursday, June 28, 2007

கவர்ச்சீ படங்கள்- Friday Spl

மோஹன் தாஸு விடுற ஜொள்ளு வரவர தாங்கவே முடியலைங்க. அதான் அவருக்கு போட்டியா நானும் படங்களை போட்டே "கவர்" பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்னதான் ராமனா இருந்தாலும் இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது மனசுல ஒரு சின்ன ஜெர்க் வரத்தானே செய்யும். என்ன செய்ய நாமளும் மனுசப்பயலுக தானே.எவ்வளவு நாள்தான் நல்லவன் மாதிரியே நடிப்பீங்க? இந்தப் பதிவு படிச்சு முடிக்கும்போது எல்லாரும் நல்லவர்களா ஆகிருவீங்க மக்களே.. என்சாய் பண்ணிக்குங்க.
இது கவர்இது C.
ஆக மொத்தம் கவர்C...

Wednesday, June 27, 2007

Making of Sivaji-oru Koodai Sun Light Song

சிவாஜியின் ஒரு கூடை சன்லைட் பாடல் உருவான விதம் பற்றிய ஒரு சின்ன ஆராய்ச்சி முடிவு

Shanker started his CG (Computer Graphics) adventure from his first film itself, the Cartoon type of Dance which suited to Prabhu Deva's choreography in the song Chikku bukku was a super dooper hit all over India. He continued with Prabhu for next film Kadhalan and brought the technology from the Hollywood film Invisible man to Mukkabla Song. He the person who pulled the DTS technology to his tamil film Indian, with the help of his Friend H Sridhar. Both running a successful sound recording theater called Panchathan. Skeleton dance from MJ in Jeans, used morphing technology from MJ again for Maaya Machindra Indian-Tamil(Hindustani in Hindi), technically headed by "Maayavi" Venki.


Before getting to Sivaji making, Lets start with company who done the miracle ever in the world. The company name is Indian Artists from Vadapalani.


Indian Artists was the first to start and use digital Ink and Painting for 2D Cel Animation in South India. They foray into filmdom with the film INDIAN (Tamil). Until date, worked on the following films – Sivaji (Tamil), Anniyan (Tamil), Krish (Hindi), Gajani (Tamil), Imsai Arasan 23m Pulikesi (Tamil), Veyil (Tamil), Sivakasi (Tamil), Dishyum (Tamil), Bangaram (Telugu), Gilli (Tamil), Boys (Tamil), Dhool (Tamil), Runway (Malayalam), Enakku 20 Unakku 18 (Tamil), Anji (Telugu), Magic Magic 3D, Mizhirendilum (Malayalam), Kunjikunnan (Malayalam), Ramana (Tamil), Run (Tamil), Kushi (Tamil), Kadalar Dinam (Tamil), Hindustan (Telugu), Yuvakudu (Telugu) and Palayathamman (Tamil) and list continues. They were awarded the National Award for Magic Magic 3D in 2003 produced by Navodaya Films.About Sivaji: Director Shanker wanted to change Rajini's wheatish complexion to a white European complexion. It was Directors brilliance and peak of his imagination. Indian Artists took this as a challenging task, because nobody has executed this type of concept in the world. To begin with, Indian artists did an in-depth study of the European complexion. They found that white skin reflects more light and has less shadow when compared to dark skin and is translucent in some areas. Therefore a simple color correction of the hero's skin would not achieve the desired effect.


For the shoot a London based young white lady with a fresh complexion and flushed cheeks was chosen and with the help of Cinematographer Mr. K.V.Anand every single shot of the hero was repeated with her because lighting conditions change in every shot. After the final edit all the 630 hero shots and 630 girl shots were scanned in 4K resolution. Each of the 9000 scanned frames ware rotoscoped to separate the body parts (face, hands, legs etc.). The white lady's skin was mapped onto the Super Star's image using Eyeon “Digital Fusion” software. Thus the Super Star got his glowing white complexion. There were two difficult aspects in this project. One was matching the girl's action with the hero's action and the second was matching both of their body proportions during mapping. Technology is skin-grafting-technology-compositing.

Though it sounds simple, the work involved was laborious and painstaking. Great attention was paid to detail right from the shoot until the final print. It has taken 25 dedicated CG technicians almost a year to achieve this 6 ½ min. feat.
Thanks for Info and Movies Indian Artists.

Tuesday, June 26, 2007

சிவாஜி வெற்றிக்கு காரணம் 8ஆ?

தமிழ்மணத்துல ஆளாளுக்கு 8 போட்டு லைசன்ஸ் வாங்குறாங்க. ஏன் சிவாஜிக்கு அப்புறம் 8 பதிவா ஓடுதுன்னு மல்லாக்க படுத்து யோசிச்சப்பதான் இந்த 6வது அறிவுக்கு தோணிச்சு.
(கொஞ்சம் இருக்கு, நம்பனும் ஆமா)


இயக்குனர் சங்கர்ருக்கு ராசியான எண் 8. இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். அதனால ரஜினிக்கு என்ன சம்பந்தம்னு நீங்க கேக்குறது புரியுது. அதாவது கீபோர்டல் 8க்கு மேல என்ன இருக்கு. அட U-I மேல இருக்குற 8ங்க. ஆங், ஸ்டாரு(*). அதாவது நம்ம சூப்பர் ஸ்டாரு. அதாவது உங்களுக்கும் (U), எனக்கும் (I) மேல சங்கர் ராசி இருக்கு அதனால நாம் அண்ணாந்து பார்க்கிற நிலைமையில் இருக்கோம். ஆனா ரஜினி டாப்ல இருக்காரு.

இதனாலதான் சிவாஜி படம் பொருளாதார ரீதியிலும், மக்களிடமும் வெற்றி அடைஞ்சாலும் தமிழ்மணத்துல தோல்வி அடைஞ்சுருச்சு.

அதுக்கு பரிகாரமாதான் சங்கருக்கு புடிச்ச 8 பதிவ போடுறோம். அதே மாதிரி எட்டுக்குளே உலகம், அதாவது பதிவுலகம் இருக்குன்னு சொன்னதும் ரஜினிதான். அதே மாதிரி ரஜினி சொல்ற COOLலயும் ஒரு விஷயம் இருக்கு. படுத்தா மாதிரி இருக்கிற அந்த ரெண்டு "O" யும் நிறுத்தி பாருங்க 8 வரும்

"என்ன மாப்ளே, வர வர ரொம்ப சீரியஸா எழுதறே"ன்னு கேட்ட அந்த ஸ்பைடர் கார்காரருக்கும், ப்ளைட் ஓட்டுறதுக்கு லைசன்ஸ் வாங்க போன ஆட்டுத்தாடிக்காரருக்கும், இப்படி ஒரு ஞானதோயம் வர காரணமா இருந்த ரயிலோட்டிக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்

Monday, June 25, 2007

புணர்வென்னும் கலவையில்

சுருக்கமான நெளிவுகளுக்குள்
நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!

இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!

நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்,
தேடித் தேடியே
கலைந்து போகிறேன்
வக்கிரத்தை!

புணர்வென்னும் கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்
நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!

மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா
உவமை?

Thursday, June 21, 2007

எட்டும் எட்டும் குட்டிச்செவுரு

மேலே சொன்ன பழமொழி மாதிரி எனக்கு புடிக்காத சமாச்சாரத்தை சொல்லப்போறேன், வேற எதைப் பதிவுலகத்தைப் பத்திதான். நம்மளப் பத்தி எல்லாருக்கும் தெரியுமே, சொல்லி என்ன ஆவப்போவுது. விதிமுறை மீறல் சகஜந்தானுங்களே.

1. எதுக்கு எடுத்தாலும், பதிவுலகத்தை விட்டுப்போறேன்னு சொல்றதும், போறதும். நின்னு ஆடினாதாங்க சச்சின். வந்தோம் திட்டினாங்க, அதனால மட்டைய தோள் மேல போட்டுகிட்டு பெவிலியன் போனா சும்மாவா இருப்பீங்க? ஆடி செஞ்சுரி அடிங்க இல்லைன்னா கட்டைய போடுங்க. பெவிலியன் போய்ட்டா யாரும் கண்டுக்க மாட்டாங்க.

(நாமே ஒரு முறை அப்படி சொல்லி இருக்கோம். ஆபிஸுல அவ்ளோ ஆணி, அதுவுமில்லாம ஆபீசுல புளாகரையும் புடுங்கிட்டாங்க. ஆபிசுல ஆணின்னா சரி. கொளுகை ஈரவெங்காயம்னு சொல்றதெல்லாம் பயந்துகிட்டு போற மாதிரிதான்)

2. கேடுகெட்ட கெட்ட வார்த்தைங்க. இல்லாத கெட்ட வார்த்தையெல்லாம் பதிவுலகத்துல எழுதிட்டா திருந்திடுவாங்கன்னு நம்பிக்கையில எங்கள மாதிரி மக்களையெல்லாம் முகம் சுழிக்க வெக்கிறது. இதனால எங்களை மாதிரி மக்கள் எல்லாம் திரும்பி அந்தப் பதிவுக்கே போவ மாட்டாங்க. அப்புறம் என்ன, நீங்களும் உங்க எதிர் கட்சியும்தான் அதை படிச்சிக்கனும். நாம வழக்கமா, பாசமா கும்மி அடிக்க போயிருவோம்.

3. கும்மி அடிக்கிறது. ஒன்னியுமே இல்லாத பதிவுக்கு 100, 200 கும்மி அடிக்கிறது. இது கும்மி அடிக்கிறவுங்களுக்கு சந்தோசமா இருந்தாலும் அடுத்தவங்களுக்கு கடுப்பு ஆவுது.

4. வித்தியாசமா சிந்திக்கிறது. எல்லாருக்குமே ஒரு விஷயம் புடிச்சு எழுதினா,எல்லாரும் ஒரே மாதிரி எழுதுறாங்களேன்னு கடுப்புல எதிர்மறையா எழுதுறது. இதுக்கு பொறாமைன்னும் சொல்லலாம். போறாமைன்னும் சொல்லலாம். மனசுக்கு புடிக்கலைன்னாலும் போட்டி போட பயந்துகிட்டு எதிர்மறையா எழுதிட்டுப் போயிறது. இது போட்டி நிறைந்த உலகம் சாமிகளா.

5. இனவெறி. இவுங்க போட்டுக்கிற சண்டையில நம்ம தலைதான் உருளுது. ஒரு பக்கத்துக்கு மாங்கு மாங்குன்னு பதிவை அடிச்சுட்டு திரும்ப படிச்சு பார்த்தா இவங்க திட்டுவாங்கன்னு 2 வரி, அவுங்க திட்டிவானங்கன்னு 2 வரி அழிச்சுட்டு கடைசியா பார்த்தா பதிவையே அழிச்சு இருப்போம். அப்புறம் ஒரு வாரம் கம்னு உக்காந்துட்டு வேற யோசனை பண்றது. ஒன்னும் தோணாம பின்னூட்டம் மட்டும் போட வேண்டியதுதான்.

6.முகமிலி. பதிவு போடும் போது நல்லவங்க மாதிரி பதிவு போட வேண்டியது. அப்புறமா அனானியா வந்து ஆட்டம் போடுறது. அதுவும் கெட்ட வார்த்தையில.

7. பதிவுலகமே மொத்த உலகம்னு உக்காந்து இருக்கிறது. வேற பொழப்பையும் பாருங்களேன். நண்பர்களைப் பார்க்கப் போங்க, நல்ல புஸ்தகம் படிங்க, மொக்கை போடுற படம் பாருங்க, ஊர் சுத்துங்க, படம் வரைங்க, பைக் எடுத்துட்டு அதிரடிக்காரன் மாதிரி தூள் கிளப்புங்க.(நன்றி: பூர்ணா)

8. இப்போ தலைப்புக்கு ஏத்தா மாதிரி குட்டி சுவரான விஷயம். பதிவுலகத்தால தமிழ் நண்பர்கள் நிறைய கிடைச்சுட்டாங்க. எந்த ஊர்லையும் தமிழ் மக்கள் இருக்கிறதானால. மத்த மாநிலமோ, மத்த நாட்டு மக்களோடயோ பழகுற வாய்ப்பு குறையுது. இதனால ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழ ஆரம்பிச்சுடோமோன்னு ஒரு பயம். இது குறையா நிறையா?


அழைக்க விரும்புவது,
(நாம கூப்பிட்டு மத்தவங்க கோட்டாவுல கை வெக்கக் கூடாது பாருங்க).

அதனால நம்ம ஸ்டைலுல
1. இடுப்ப ஆட்டியே நம்ம மனச அள்ளும் ஷகீரா(சரியாத்தான் தட்டி இருக்கோம்)
2. அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் ஒசாமா
3. பாவப்பட்ட மைக்கேல் ஜாக்சன்
4. ஹ்ம்ம்ம், ஜெனிலியா டி ஸொசா
5. ஜெயிலில் களி தின்னும் பாரிஸ் ஹில்டன்
6. ஜெயிக்கப்போற ஹிலாரி கிளிண்டன்
7.ஹிலாரிக்கே தண்ணி காட்டும் ஒபாமா
சரித்திரத்துல முதல் முறையா செத்து போனவரை கூப்பிடுறேன். அதுவும் இப்போ அதிகம் பேர் இவுர பேரைதான் சொல்லிக்கிட்டு இருக்கிறோம், அது
8. சிவாஜி(அதிருதா..)

இந்தப் 8 விளையாட்டுக்கு கூப்பிட்ட கப்பி, சிறில்,

ராயல் கூப்பிட்ட வியர்டுக்கும்(பதிவுலக வியர்டுகள்)

முத(லி)ல் மரியாதை

No Comments! Dont Comment! Be friends Always! Its all in the Game!

Dont get messed up

Tuesday, June 19, 2007

காணாமல் போனவர்கள்-தாணு, ஜிஜி

1) நட்புக்காகன்னு நல்லாதான் எழுதிகிட்டு இருந்தாங்க. மேட்டூர் அணை நிரம்பி வழிஞ்ச போது எழுதின பதிவென்ன? நட்சத்திரத்துல கலக்குன கலக்கலென்ன? ஒரு ஆடு குட்டி போட்டப்ப அழுத அழுவாச்சி என்ன? சிசுக் கொலையைப் பத்தி கிழிச்ச கிழிச்சல் என்ன? என்ன? என்ன?என்ன?என்ன?என்ன? என்ன?...
அப்புறம் காணாம போயிட்டாங்க. எங்கே போனாங்கன்னே தெரியல. கண்டுபுடிச்சு குடுத்தா அவுங்க ஆசுபத்திரிலேயே இலவசமா ஆப்ரேசன் பண்ணிக்கலாம். பலருக்கு தெரியாத அந்த பதிவர் இவுங்கதான்

2) தடாலடியார் ஜிஜி, பேர் சொன்னாவே பலரும் போட்டிக்கு தயாராகிடுவீங்களே. அவரையும் கண்டுபுடிங்க. அவரை கண்டுபுடிக்க அவர் தொலைக்காட்சிலேயே ஒரு வெளம்பரம் குடுத்துடலாமா?

இவுங்களையெல்லாம் பதிவுலகத்துக்கு இழுக்கிற வழியை ப.க.ச மேற்கொள்ளுமா?இல்லே அமுக மேற்கொள்ளுமா? இல்லே பாசக்கார குடும்பம்? எனி ஒன் ஓஃப் தி சங்கம்? சற்றுமுன் குழு?

Monday, June 18, 2007

அதிரும் தமிழ்மணம்

கடந்த 2 மாதமாக் தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் வியக்க வைக்குதுங்க. 40 பின்னூட்ட ஊயரெல்லையை உயர்த்தி 40+,அனைத்து பின்னூட்டங்களும் மற்றும் நட்சத்திரம்ன்னு டேப்(Tab) Browsing நுட்பத்தை கொண்டு வந்தாங்க. அதுதான் முதல், அப்புறம் சூடான இடுகைகளும், பரண் போன்ற நல்ல விஷயங்களும் கொண்டு வந்து இருக்காங்க. மறுமொழிதிரட்டியும் அருமை. ஆனால் அது எந்த அளவுக்கு பயன்படுதுன்னு தெரியலைங்க.


அதுவுமில்லாம இப்போ தமிழ்விழி-விழியத்திரட்டி என்னும் அடுத்த தலைமுறைக்கான நுட்பமான ஓடும் படங்களுக்கான திரட்டியும் கொண்டு வந்து இருக்காங்க. திரட்டி போட்டியும் பலமா இருக்குற இந்த காலத்துல இப்படி அசத்துறாங்களே. வாழ்த்துக்கள்! குழும பதிவுல சமீபமா பதிவு போட்டவங்க பேர் மட்டும் வந்துகிட்டு இருந்தது, அதுவும் இப்போ சரியாகிருச்சு. யாரோ பலமான ஒரு நுட்பர் பிஸ்து கிளப்புறாரு. அவருக்கு Hats Off!

அதேமாதிரி தமிழ்மணத்தின் வேகம் இப்போ ரொம்ப நல்லா இருக்கு. புது சர்வருல ஓட்டுறாங்களோ இல்லை அகலப்பாட்டை அதிகப்படுத்துனாங்களோ தெரியல. ஆனா வேகம்.
எனக்கும் சில விஷயங்களை தமிழ்மணத்துக்கு சொல்லனும் நினைக்கிறது உண்டு. அவை


1) Tab Browsing க்கு ஏத்தா மாதிரி வடிவமைத்தல். IE 7 மற்றும் இதர browerகளில் ஒரு Browser மட்டும் திறந்து மற்ற வலை தளங்களை இன்னொரு Browser திறக்காமையே பார்க்க முடியும். தமிழ்மணத்துல இருக்கிற ஒரு இடுகையை திறந்தால் இன்னொரு browser திறக்கும். படித்து விட்டு அந்த browserஐ மூடாமல் இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லையெனில் மறுபடியும் அதேகதைதான். இல்லையெனில் வலது பட்டனை தட்டி Open in New Tab தட்ட வேண்டி இருக்கிறது. Tab Browsing ல் பிரச்சினை தமிழ்மணத்தில் மட்டும் இல்லை தனியாக browser திறக்கும் அனைத்து தளங்களிலுமே இந்த பிரச்சினை இருக்குதுங்க.


2) 1024 x 768-Best with 1024 x 768 resolution அப்படின்னு முகப்புல போட்டு இருக்கிறது தெரிஞ்சே இந்தக் கேள்வி. இப்போ வர பொட்டி எல்லாம் குறைந்தபட்சம் 1280 x 800ல் தான் வருது.அதாவது 256 MB Display Memory. இந்த resolutionல் தமிழ்மணத்தை திறந்தால் பின்னூட்டப் பக்கம் சற்றே கலைஞ்ச மாதிரி இருக்குது.

3) குறிச்சொல் குறிப்பிட்டு இப்போ பதிவுகளை தெரிவிக்கிறது இல்லே, (நினைக்கிறேன்) அப்புறம் "அனைத்து குறிச்சொற்களும்..." அப்படின்னு ஒரு கட்டம் வருதே அது எப்படி? அதுல பதிவுகளும் வருதே. பதில் தெரியாமதாங்க கேட்கிறேன். வழி இருந்தா சொல்லுங்க, ப்ளீஸ்


இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களைத் தவிர தமிழ்மணம் எங்கள் மனசுகளை அதிர வைக்குதுங்கோவ்வ்.

Sunday, June 17, 2007

சிவாஜியும் பகுத்தறிவாளனும்

பொத்துக்கிட்டு வருதுங்க கோவம். இவுங்க பகுத்தறிவும், பொருளாதார விளக்கமும், சமுதாய பார்வையும் அருமைங்க. 60 வயசு தாத்தாவுக்கு 20 வயசு சோடியான்னு உள்குத்து பதிவுகள் போடுறீங்களே, கிளிண்ட் ஈஸ்ட் வுட் ஜே.லோவோட நடிக்க ஆசைன்னு சொன்னா ரசிப்பீங்களோ?

நீங்க சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் படத்துக்கு குடும்ப சகிதமா போறது இல்லியா? அங்கே அவுங்க அடிக்காத அடியா, பறக்காததையா ரஜினி பண்ணிட்டாரு? ஸ்பைடர் மேன் உதட்டோட முத்தம் குடுத்தா சரியா?

லாஜிக் இல்லாதது ரஜினி படத்துல மட்டும் இல்லீங்க எல்லாம் மொழியிலும் இருக்கு. அப்படி பார்த்தா தமிழ் சினிமாவுல பாட்டே இருக்கக்கூடாது. பாட்டு பாடியா உங்க காதலை தெரிவிக்கிறீங்க. எத்தனை பேருங்க பாட்டுப்பாடி காதலை தெரிவிச்சு இருக்கீங்க.சொல்லுங்க,தமிழ்சினிமா பகுத்தறிவு பாதையில் போகுதுன்னு ஒத்துக்கிறேன்.

ரஜினி சொல்ற அம்மா, அப்பா, குடும்ப பாசம் தப்பா?

ஏன்? வேட்டையாடு விளையாடு படத்துல கமல் என்ன 52 வயசு பொண்ணோடையா நடிச்சாரு? கமலினி முகர்ஜிக்கும், ஜோதிக்காவுக்கும் அவ்வளவு வயசு ஆகிடலையே? எம்.ஜி.ஆரு கூட நடிச்ச பொண்ணுங்களுக்கு அவரு வயசா என்ன?

ரஜினி படத்தை பாக்கனுமின்னா உங்க ஈகோவை எல்லாம் விட்டுட்டு போய் பாருங்க, ரசிப்பீங்க."அப்படிதான் நாங்க ஈகோவோட இருப்போம்"னா அவரு படத்தை ஏன் பார்க்க போறீங்க? பார்க்காம இருந்துட வேண்டியதுதானே?

என்னமோ போங்க, சிவாஜி படத்தை நானும் பார்த்துட்டேன். பால பாரதி சொன்னதைத் தவிர மத்தவங்க சொன்ன விதமோ, கருத்தோ சரியா இல்லே(இது சிவாஜி படத்துக்கு எதிர்மறையா பதிவிட்டவங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

டிஸ்கி:
1) நானும் ஒரு கமல் ரசிகன்
2) நானும் திராவிட நாட்டுல பொறந்த திராவிடன்தான்.
3) சாதி/மதம், பில்லி, சூன்யம் பார்க்காதவன்தான்
4) பெரியார் பொறந்த ஊரில் பொறந்து வளர்ந்து அவர் கொள்கைகளை பின்பற்றுபவன்தான்.
5) இயக்குனர் சீமானின் தமிழும் கருத்தும் என்னை கவர்ந்த படியால் அந்த கருத்துகள் வழி வாழ விரும்பும் ஒருவன் நான்.

Thursday, June 14, 2007

திராவிடர்களுக்கு ஏன் ரஜினியை பிடிப்பதில்லை?

திராவிடர்களுக்கு ஏன் ரஜினியை பிடிப்பதில்லை?
அப்போ, கமல் பிடிக்குமென்றால், ஏன்?
பதில்கள் பின்னூட்டலினால் மட்டுமே கிடைக்கும்.

Monday, June 11, 2007

ரஜினிய புடிக்காதவங்களுக்காக

சும்மா அதிருதுல்ல- ஏன் காசு குடுத்தா அதிராதா?

Rich get Richer, poor get Poor-
bloggers get comments, cookers get boiled rice.

Bachelor of Social Service- Bachelor of Somberi Service.

பணம் போனா வரும் உயிர் வருமாங்க?-
நகம் வெட்டினா வளரும், பல் வளருமாங்க?

சாகற நாள் தெரிஞ்சி போச்சுன்னா, வாழ்ற நாள் நரகமாகிடும் - ரிசைன் பண்ற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வேலை செய்யுற நாள் நரகமாகிடும்.

ஏம்மா என்னை கருப்பா பெத்தே? -
வெள்ளையா பெக்க தெரியாமதான்.


Saturday, June 9, 2007

மனிதம்

தாகம் தணிக்க
அடைத்து வைத்த மாசு நீர்!
ஏழைகளுக்கு நிலமில்லை,
உழுதவனுக்கும் சொந்தமில்லை!

ஒற்றையறையில் காற்றடைத்து
குளிரூட்டி நிதமும் நித்திரை!

ஆகாயத்தை ஓட்டை போட்டு
அண்ணாந்து வேடிக்கை!

ஒற்றைக் குச்சியில் நெருப்படைத்து
புகைவழியே சுகம் தேடி
அலையும் மானிடா!

(ஐம்)பூதங்களையும் சித்திரவதை செய்ய
எப்போதிருந்து பழகினாய்?பனிமலைஎல்லாம்
கரையும் நேரத்தில்
பனி உறைய வீட்டுக்கு வீடு
குளிர்சாதன பெட்டி!


மரக்காட்டை எரித்து
கான்கிரீட் தோட்டத்தில
துளசி விதைக்கிறாய்!

இயற்கையிலிருந்து விலகி நின்று
விசித்திரத்தை பழகி
பெட்டிதட்டினால்
எல்லாம் வரும் என்று
பகுத்தறிவு பேச
வெட்கமாயில்லை?
பக்கத்துவீட்டு எழவு
தெரியாமல்
வலை அரட்டை நண்பனின்
ஜலதோஷத்திற்காக
கண்ணீரா?


நடுச்சாலையில்
உயிர் துடிக்கும் நேரத்தில்,
வெறுப்பாய் ரத்தம் பார்த்து
செவி அடைத்து
அலுவலகம் போக
கைக்கடிகாரம் பார்க்கிறாயே,


நாளையே நீ துடிக்க
இன்னொருவன்
கடிகாரம் பார்ப்பானே!

உன்னால்,
மனிதனுக்கு சிரச்சேதம்!
இயற்கைக்கு உயிர்ச்சேதம்!

மரித்துப்போனமனிதத்திற்கு
பூச்செண்டு தர
மனதில் மனிதம் விதை,

விருட்சம்கொண்டே
பல விழுதுகள் தாங்கி
நாளைய உலகுக்கு
நீயே ஒரு நல்பாதை!


அன்புடன் குழுமம் நடத்திய இரண்டாம் ஆண்டு இயல் கவிதை போட்டியில் திசைகள் ஆசிரியர் மாலனின் ஊக்கப்பரிசு பெற்ற கவிதை இது

Thursday, June 7, 2007

செருப்பால் அடித்த படம் சொல்லும் ஈயங்கள்

இந்தப் படத்தை பார்த்தவுடனே எனக்கு தோணின ஈயங்கள்தாங்க இது.

  • பெண்ணீயம்
  • ஆணீயம்
  • வெங்காயம்
  • அச்சமின்மை
  • அரசியல் நாகரீகம்
  • ஜனநாயகம்
  • காவல்
  • வெட்கம்
  • மானம்
  • தூ....

ஏதாவது விட்டு போயிருக்கா?

Info/Pic: Dinamalar

சற்றுமுன்1000 போட்டிக்காக-படச்செய்திகள்

5 வருசத்துக்கு ஒருதடவைதான் ஓட்டுப்போடுற நேரம் வருது, அதை நாங்க சரியா பண்ணலைன்னா மட்டும் கோவம் வருதே, வருஷா வருஷம் மழை வருது, உசுரு போவுது. எதையும் சரி பண்ண மாட்டேங்குறீங்களே. எங்களுக்கு எவ்வளவு கோவம் வரும். நீங்க போட்டு திங்கிற உப்பைத்தானே நாங்களும் போட்டு திங்கிறோம்.

செய்தி: தினத்தந்தி.

எங்க ஊர்லை எல்லாம் உங்களை மாதிரி பிரதம மந்திரி கிடையாதுங்க. இங்க வாரிசுகளை மந்திரியாக்கவே ஒரு பலிகடாவை ராஜினாமா பண்ண சொல்லுவாங்க. அவரும் ஏதோ தியாகி மாதிரி ராஜினாமா பண்ணிடுவாரு.

செய்தி-பிபிசி


எங்க ஊர்ல இதெல்லாம் சகஜம், பார்க்கிங் பண்ண சொல்ற எடத்துல நாங்க வண்டிய விட மாட்டோம்.

செய்தி--தினமலர்


இதுவும் ஜனநாயக உரிமை. போலிசு எங்களை ஒன்னும்சொல்லக்கூடாது.

இவண்

திம்மி முக
செய்தி தினமலர்


//சென்னை: தயாநிதி மாறனிடமிருந்து முதல்வர் கருணாநிதியை காப்பாற்றியிருக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். //

மேற்சொன்ன கருத்தே காமெடியாக இருப்பதால், நோ கமெண்ட்ஸ்


செய்தி: தட்ஸ்தமிழ்

Tuesday, June 5, 2007

தசாவதாரம்: ஏன் சிவாஜி அளவுக்கு எதிர்பார்க்கப்படவில்லை?

சிவாஜி சிவாஜின்னு பேசுற நேரத்துல கமுக்கமா ஒரு பெரிய படம் ரெடி ஆகிட்டே இருக்கு. அது தசாவதாரம். இசைக்கு ஹிமேஷ், நடிப்புக்கு(?!) மல்லிகா ஷெராவத்.. இன்னும் இப்படி பெரிய பட்டாளமே தமிழுக்கு வர இருக்காங்க. கே.எஸ். ரவிக்குமாருக்கு வரலாறு, கமலுக்கு வேட்டையாடு விளையாடுன்னு பெரிய வெற்றிக்கு பின்னாடி இப்படி ஒரு படம் வருது. ஆனா விளம்பரமோ பரபரப்போ கூட இல்லை. அதுக்குதான் இப்படி ஒரு வோட்டெடுப்பு.

கொசுறு சேதி:

ஆகஸ்டு 18 உலகமெங்கும் அவதாரம்.
Monday, June 4, 2007

சிவாஜி- தி மொட்டை பாஸ்

எவ்வளவு வேணுமின்னாலும் பேசிக்குங்க, ஜஸ்ட் பத்து நாள் தான், அதுக்கு அப்புறம் நான் தான் பாஸ்.

சிவாஜி பேரை சொன்னாவே பூமி அதிரும்டா.

உலகம் பெரிசுதான், உன் கைய விரிச்சு அணைச்சுப் பாரு, உனக்குள்ளே இருக்கும் இந்த உலகம்.


இது சும்மா ட்ரெயிலர் தான் கண்ணு, தியேட்டருக்கு வந்து பாரு. ஹாஹா ஹா

Disclaimer: Behindwoods.com does not hold the copyrights nor is it responsible for the above content. These images have been forwarded by one of the fans. It is being published on his request. If you are the copyright owner or an agent thereof and believe that the user submission infringes upon your copyrights, you may submit a notification pursuant to the Digital Millennium Copyright Act ("DMCA") by providing our Copyright Agent at behindw@behindwoods.com with the following information in writing (see U.S.C 512(c)(3) http://www.copyright.gov/title17/92chap5.html#512 for further detail). You can also call us at 1-201-774-7947.

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)