கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். உரையாடல் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக இருந்தது. பேசிக்கொண்டு இருக்கும் போது ஒருத்தர் ஸ்ரீராம் சென்னைக்காரன் என்றார். உடனே கலிஃபோர்னியாகாரர் நான் ஹிந்தி பேசுவதைப் பற்றி ஆச்சர்யப்பட்டுவிட்டு தமிழர்கள் ஏன் ஹிந்தி கத்துக்க மாட்டேங்கறாங்க, அவங்களுக்கு என்னதான் பிரச்சனைன்னு ஒரு மாதிரியான தொனியில் கேட்டார்.
பாஸ்டனில் இன்று Zero Degree, என்னைப் பாருங்க நல்ல Thick Jacket வச்சிருக்கேன், நீங்க ஏன் இப்படி மெலிசான Jacket போட்டுக்கிட்டு நடுங்கறீங்க, நல்ல Jacket வாங்கியிருக்கலாமேன்னு கேட்டேன். அதுக்கு அவர், தானிருப்பது கலிஃபோர்னியா அந்த இடத்துக்கு மெலிதான Jacket போதும் என்றார்.
டில்லி போவதற்கு முன் தமிழ்நாட்டில் வாழ எனக்கு ஹிந்தி தேவைப்படலை அதனால கத்துக்கல, டில்லி போனதும் தேவைப்பட்டது ஹிந்தி கத்துக்கிட்டேன், நாளைக்கே ஃப்ரான்ஸில் வாழணும்னா ஃப்ரென்ச் கத்துப்பேன். எப்படி நீங்க வாழும் இடத்துக்கு ஏற்ப உடை வாங்கறீங்களோ அது போல யாருக்கு என்ன தேவையோ அதை அவரவர் கத்துக்கப் போறாங்க. எப்படி உங்களை நான் Thick Jacket வாங்கச் சொல்லி வற்புறுத்த முடியாதோ அதுபோல தேவையற்றதை கத்துக்கச் சொல்லி தமிழர்களை நீங்க வற்புறுத்த முடியாதுன்னேன்
நான் ஹிந்தி பேசுவதால் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற பொய்யை ஆதரிப்பேன்னு நினைச்சிட்டார் போல.
No comments:
Post a Comment