Thursday, November 30, 2006

யார் அது? யார் அது?பொது அறிவுக்கேள்விங்களை கேட்டு வெச்சு ஒரு பதிவு போட்டுடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டே இருந்தேன். இன்னிக்குதான் அதுக்கு வேளை வந்து இருக்கு.


1. பொட்டி தட்டுற மக்கள் ஒரு நாளைக்கு ஒருதடைவையாவது பார்க்குறது கூகிள் தேடல். அதைக் கண்டுப்பிடித்தவர் யார்?

2. ரோஜா படத்துக்காக மணிரத்தினம் அரவிந்தசாமிக்கு முன் படத்தில் நடிக்க அழைத்தது யாரை?

3. இளையராஜா இசையமைத்த 500வது படம் என்ன?

4. சஞ்சய் தத் நடித்த முதல் படித்தின் பெயர் என்ன?

5. மணிரத்தினம் இயக்கிய முதல் படத்தின் பெயர் என்ன?

6. ஆஸ்திரேலியாவில் விளையாடிய இவர், வேறொரு நாட்டுக்கு தலைமை ஏற்று விளையாடியவர்? யார் அது ? எந்த நாட்டுக்கு?

7. போதை மாத்திரைப்பிரச்சினையில் சிக்கிய முதல் 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் யார்? அவரது சாதனை என்ன ஆயிற்று?

8. ஒரு விவசாயிக்கு மகனாக பிறந்த இவர் வீட்டில் போன மாதம்தான் தொலைக்காட்சியே வாங்கினார்களாம். காரணம் இவர் விளையாடும் விளையாட்டைப்பார்க்க ஆவல். இவர் ஒரு கிரிக்கெட் வீரர்? யார் இவர்?

9. இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இவர் இயக்கிய முதல் ஹாலிவுட் படம் சரியாக போணியாகவில்லை. அப்புறம் வந்த படங்கள் எல்லாம் சரி போடு போட்டது. இந்த இயக்குனர் யார்?

10. அஸின் நடித்த முதல் விளம்பரப்படம் எது? அதை இயக்கியவர் யார்?

11 இந்தக்கேள்விகளில் ஒரு ஒற்றுமை/தொடர்பும் இருக்கு. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம். அது கேள்வி எண் 11

Thursday, November 23, 2006

வெங்காயம் உரிச்சா ஏன் கண்ணீர் வருது?

விக்கிப்பசங்களுக்கு போட்டியா நாமும் ஏதாவது பண்ணுவோம்னு யோசிச்சு, How it Works website'க்கு எல்லாம் போயி ஒன்னும் புரியாம இருக்கும் போதுதான் இப்படி ஒரு பதிவு போட பளங்குன்னு மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சது(அது என்னா புதுசா ஒரு ஐடியா வந்தாமட்டும் பல்பு போட்டு காட்டுறது? இதுக்கு விக்கிப்பசங்க விளக்கம் தருவாங்களா?)

இப்போ கதைக்கு வருவோம்.

ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.

ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.

தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.

வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.

உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி "ஐஸ் கிரீம் செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா"ன்னு கேட்டுச்சாம்..

அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!

அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி வருதுன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்குமே?

நன்றி - பதிவு போடவே சோம்பேறித்தனமா இருக்கும் போது இப்படி ஒரு மயிலு அனுப்பிய மனதின் ஓசைக்கு.

Friday, November 17, 2006

டேய் காதலா-1

என்னை நேசித்த காதலிக்காக
அவள் பார்வையிலேயே
ஒர்
கவிதை!

என்னைப் பார்த்து
கண்சிமிட்டியபடி தெரு விளக்கு
விரல் நீட்டி மிரட்டிச்சென்றாய்
கோளாறு விளக்கிலா? உன்னிலா?

உன் காதுக்கும் இதழுக்கும்
இடையே பாலமாய் அலைபேசி,
யாரோ ஒரு சக்களத்திதான்
மறுமுனையில் சிரித்து,
கொஞ்சி,
பேசிக்கொண்டிருக்கிறாள்
கோவம்தான் - ஆனால்
நீ கொஞ்சுவதை
நான் எப்போதுதான் பார்ப்பதாம்
நீ என்னைக்
கொஞ்சும் போதுதான்
என் கண்கள்
திறக்கவே மாட்டேன் என்று
அடம்பிடித்து
தொலைக்கிறதே.
பூவைத்து
என்னை அழகு பார்த்தபின்,
பூவோடு
என்னையும் சேர்த்து
கசக்கி போடுவதே
உனக்கு
வழக்கமாகிவிட்டது.
நீ என்ன குரங்கா? இல்லை
நான்தான் பூமாலையா?

உன் தீவிரவாதப்பார்வையால்
பார்த்தும் கொல்கிறாய்,
வேண்டாமென்றாலும்
அஹிம்சாவாதியைப்போல்
பார்க்காமலேயும் கொல்கிறாய்
இரண்டுமல்லாமல்
மூன்றாவதுக்கு
எங்கே போவேன்?காதலிக்கும்போது
மனைவியாகச்சொன்னாய்,
மனைவியான போது
காதலியாகச் சொன்னாய்,
போடா லூசு,
உனக்கு ஒரே மாதிரியான புத்தி இல்லையா?
(தொடரும்)
டேய் காதலா- 2

Wednesday, November 15, 2006

ஆரியமா உவ்வே

நம்ம ஊரப்பொருத்த வரைக்கும் 3 வேளையும் நெல்லுச்சோறு திங்க ஆரம்பிச்சது 1960களில்தான். இதுல சாதி பார்க்கிறதுக்கு ஒன்னுமே இல்லீங்க, வேலை செஞ்சா சோறு அப்படின்னு இருந்த காலம்தான் அதிகம். நான் பொறந்த காலத்துல நெல்லுச்சோறுக்குப் பஞ்சமில்லைன்னாலும் கூழோ, கம்பஞ்சோறோ வாரம் ஒரு முறையாவது செஞ்சுருவாங்க. நெல்லுச்சோறு சக்கை, கூழோ கம்பஞ்சோறோ தின்னாதான் சத்து அப்படின்னு இன்னும் கூட சொல்லுவாரு எங்க அப்பச்சி. அப்பச்சியும், அம்மாயியும் வாரம் ஒரு முறையாவது களி சாப்பிட்டிருவாங்க.

அதனால நமக்கு ஆரியம், கம்பு எல்லாம் பழகிப்போச்சுங்க. ஆரியத்துல பண்ற களி, கூழு, கம்பஞ்சோறு ருசி எதுலயும் வரது இல்லே. இப்போ என்னமோ ஒரு தட்டுல 4 பன்னீர் பக்கோடா வெச்சுக்கிட்டு 3 மணி நேரம் கொறிச்சுக்கிட்டு இருக்கோம். அது எல்லாம் தோட்டத்துல முடியுமா? வேலைய பார்க்க வேணாம்?

போன மாசம் மருத்துவர்கிட்டே வாரிச கூட்டிகிட்டு போன போது, அவர் சொன்னாரு ஆரியத்துல பண்ணினது குடுங்க பையன் கொஞ்சம் சத்து பிடிப்போட இருப்பானு சொன்னார். சரின்னு, நம்ம வீட்டுல ஆரியத்தை அரைச்சு கொஞ்சம் பனை வெல்லம் போட்டு தண்ணி கலந்து குடுத்தா பையனுக்கு மூஞ்சி போற போக்கை பார்க்கனுமே.

ஈரோட்டு பேருந்து நிலையத்துல ரொம்ப அதிகமா நடக்கிற வியாபாரமே கம்பஞ்சோறுதான். தலைமுறை இடைவெளி வரலாம், சாப்பாட்டு முறை மாறலாம், ஆனா அது எல்லாம் வளர்ப்பு முறைன்னுதான் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன். 10 மாச குழந்தைக்கு தெரியுமா என்ன? அப்போ களி கம்பஞ்சோறு எல்லாம் இந்தத்தலை முறையோடு போயிருமா? பன்னீரு, ரொட்டியும்தான் திம்பாங்களா இந்தத் தலைமுறையில?

(பின் குறிப்பு: எங்க ஊர் வழக்கத்துல ஆரியம்=கேழ்வரகு=ராகி. Vaa.மணிகண்டன் இதையும் குறிச்சு வெச்சுக்கோங்க)

Sunday, November 12, 2006

தோத்துப் போன ஜி.ரா

யானைக்கும் அடி சருக்குமாம். அது மாதிரி நேத்து ஒரு யானைக்கு சருக்கிருச்சுங்க.

தேன்கூடு போன மாசம் போட்டியில ஜெயிச்சதுக்காக ஒரு சின்ன கூட்டத்துக்கு அழைத்து இருந்தார் 2ம் இடம் பெற்ற மயிலார். 3ம் இடம் பெற்ற ஓமப்பொடியும் வந்து இருந்தார். அப்பொழுது இது நம்ம ஆளு படம் பற்றி பேச ஆரம்பிக்க மயிலார்(ஜி.ரா) சொன்னாரு, அந்த படத்தை இயக்கியது பாக்கியராஜ்'ன்னு. நானும் ஆமாம் சாமி போட்டு வெச்சேன். ஏன்னா அந்த படத்துக்குதான் பாக்கியராஜ் முதல் முதலா இசை அமைச்சு பாடியும் வேற இருந்தார். அந்த நம்பிக்கையில அவர்தான் இயக்கி இருப்பாருன்னு மயிலார் ஆணித்தரமா அடிக்க, ஓமப்பொடி பந்தயம் வெக்கிற அளவுக்கு போய்ட்டார். சரின்னு படத்தை பார்த்து முடிவு பண்ணலாம் ஓட்டி பார்க்க ஆரம்பிச்சோம்.

டைட்டில்ல பார்த்தா இயக்குனர் மேற்ப்பார்வை அப்படின்னே போட்டு இருந்துச்சு. கடைசியா அந்தப் படத்தை இயக்குனது பாக்கியராஜ் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. அவர் மேற்பார்வை மட்டுமே செஞ்சு இருக்கார். அதனால் இந்திரா நகர் அண்ணாச்சில ஒரு செம புடி புடிச்சோம்.


அப்போ அந்தப் படத்தை இயக்குனது யாருங்க? ஓமப் பொடி சொன்ன மாதிரி பாலகுமாரனா? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க சாமி.

Monday, November 6, 2006

ராவணனாகும் ரஜினி


ஆப்தமித்ரா, தமிழில் அது சந்திரமுகியா வந்து சக்கை போடுபோட்ட கதை எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அதுக்குக் காரணம் கதையா? ரஜினியா?.அது எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா தமிழ் சினிமாவுல தோல்விப்படங்களே வராம போயிருக்குமே.

இந்த வாரம் கோலிவுட்டுல, பாலிவுட்டுல பேசிக்கிற பெரிய சமாச்சாரமே 'ராமாயன்'தான். சுமார் 100 கோடி ரூபாயில ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்துல வளரப்போகிற இந்த படத்துல நம்ம ரஜினி ஏத்துக்கப்போற வேஷம் ராவணன். இதெல்லாம் புரளியாக்கூட இருக்கலாம்னு தோணுது. அப்படியே இருந்துரட்டுமே, தனக்குன்னு இமேஜ் வந்த பிறகு ரஜினி பிறன் மனை நோக்காமையை தன்னோட படங்களில் கடைபிடிச்சுகிட்டு வந்துகிட்டு இருக்காரு. அந்த இமேஜ் நல்லா இருக்கும் போது வேணாமே ரஜினிசார் இந்த ராவணன் வேஷம்.

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)