Friday, May 30, 2008

நான் கலங்கிய ஒரு தருணம்- Living Smile VidhyaBut நானும் ஒரு Human Being தானேன்னு வித்யா சொல்லும் போதும், 10 மணிநேரமாவது துக்கமாவே இருப்போம்னு தேவி சொல்லும்போதும்- கண்ணீர் விட வெச்ச சில தருணங்கள்.

பல வருஷம் ஆச்சு இப்படி ஒரு வெட்கத்தைப் பார்த்து- வாழ்த்துக்கள் வித்யா.

வித்யா என்கிற ஒரு பொண்ணுக்குள்ள இப்படி ஒரு தைரியமா? தெளிவா? இப்படியுமா ஒரு மனசு கல்லு மாதிரி... மன்னிக்கனும் ஒரு அற்புத சிலை மாதிரி இருக்கும். Hats Off வித்யா.

ஹேமா மாதிரி எல்லாருக்குமே ஒரு நல்ல வாழ்க்கை கெடைச்சிற கூடாதா ஆண்டவா..

Wednesday, May 28, 2008

எடியூரப்பா, கலைஞர், ஒகேனக்கல், ஆப்பு

முதன் முறையாக தென்னிந்தியாவில் கோலேச்சி உள்ளது பாஜக. வாழ்த்துக்கள்!
பெங்களூர் உள்ளூர் முன்னேற்றத்துல குமாரசாமி ஒரு வேகத்தை கொண்டுவந்தாரு. முடிஞ்ச வரைக்கும் அவர் கட்சியால தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்காரங்களுக்கு பிரச்சினை வராம பார்த்துட்டு இருந்தாரு. அப்பவும் வேதிகே, காட்டாளு, ரேணுகா எல்லாம் வந்துட்டு இருந்தாலும் கொஞ்சம் நாம மூச்சு விடற மாதிரி வெச்சு இருந்தாரு. இதை பாஜக காப்பாத்துமா?

இனி நம்ம மேட்டருக்கு வருவோம்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒத்திப்போட்டு தனது சாணக்கியத் தனத்தை மறுபடியும் நிலைநாட்டினார் தலைவர். காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டபடியால் கூட இருக்கலாம். ஆனால் வாட்டாள், காட்டாள் மாதிரி ஆளுங்ககிட்டே எல்லாம் மோதி மக்களை காயப் படுத்த வேணாம்னு நினைச்சு இந்தத் திட்டத்தோட செயலாக்கத்தை ஒத்தி வெச்சாரு. ஆனா கர்நாடக மக்கள் வாட்டாளுக்கும்,, காங்கிரஸுக்கும் சேர்த்தே ஆப்படிச்சுட்டாங்க. இதுல மண்டை காயறது வழக்கம் போல தமிழனுங்கதான். குறிப்பா தர்மபுரி மாவட்ட மக்கள். இனி கலைஞர் என்ன செய்வாரு?? விகடனுக்கு எடியூரப்பா சொன்ன விஷயம் கலைஞர் வயித்துல புளிய கரைச்சு இருக்கலாம்.

விகடன் கேள்வி: 'நிலையானஅரசு கர்நாடகத்தில் வரட் டும் என்றுதான் திட் டத்தை ஒத்தி வைத்தார் எங்கள் முதல்வர்.தர்மபுரி-கிருஷ்ணகிரி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?''

எடியூரப்பா: (கூர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டே) 'இந்தக் கேள்வியைத்தான் முதல்ல

கேட்பீங்கனு நினைச்சேன். ஒகேனக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை நான் அன்றைக்கு சொன்னதுதான் இன்றைக்கும்..! தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காகத் தண்ணீரை உறிஞ்சினால் கர்நாடகாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை வரும்னு இங்குள்ள மக்கள் நினைக்கிறாங்க. அதனால நானும் அந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எதிர்ப்பு காட்டிட்டு வர்றேன். எலெக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக ஒகேனக்கல் பிரச்னையை வச்சு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்காரங்களும் ஏதேதோ டிராமா போட்டுப் பார்த்தாங்க. எதுவும் மக்கள்கிட்ட எடுபடல.

தமிழ்நாட்டுக்காரங்களோ,மகாராஷ்டிரா காரங்களோ எனக்கு எதிராளிகள் கிடையாது. எந்த மொழிக்கும் நான் எதிரானவன் கிடையாது. இன்னும் சொல்லணும்னா தமிழர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்னு நினைக்கிறவன் நான். கர்நாடகா என்னுடைய வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் குடும்பத் தலைவன். என்னோட வீட்ல இருக்கறவங்களோட பிரச்னையை முதல்ல நான் தீர்த்து வச்சாகணும். அதுக்குப் பிறகுதான் பக்கத்து வீட்டைப் பத்தி யோசிக்க முடியும். அதனால காவிரி பிரச்னையிலும் சரி, ஒகேனக்கல் விவகாரத்திலும் சரி... எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. பேசி முடிவு பண்ணலாம். ஆனா, அந்த முடிவு நிச்சயமா எங்க மாநிலத்து மக்களோட நலனுக்கு பாதகமா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டேன்.''ஆக மொத்தத்துல அம்மாவுக்கு அடுத்த தேர்தல்ல பேச அவல் கிடைச்சாச்சு, எப்படியும் கூட்டு வெச்சுக்குவாங்க. அப்புறம் என்ன? இந்த முறை நாடாள(!)மன்ற தேர்தலுக்கு ஒரு செம ட்ரம்ப் கார்ட் கிடைச்சாச்சே. அதுக்குள்ள இந்தப் பிரச்சினைய முடிக்க தலைவர் பார்ப்பாரு. பஸ் எரியாம, ரத்தம் பார்க்காம விடமாட்டாங்க போல இருக்கு. இந்த விளையாட்டுல வழக்கம் போல தோத்து போயி காய்ஞ்சு கருவாடா போறவங்க நாமதானுங்களே. ஒழுக்கமா வாழ விடுங்கப்பா..

Saturday, May 24, 2008

Google Readerல் பின்னூட்டங்கள் திரட்டல்

இந்தப் பதிவை படிக்கிறதுக்கு முன்னாடி எல்லாப் பதிவுகளையும் திரட்டி இல்லாம எப்படி படிக்கிறதுன்னு படிச்சுட்டு வந்துருங்க

முதல்ல ஒன்னு சொல்றேங்க. மாங்கு மாங்குன்னு பொட்டியத் தட்டி, விடிய விடிய கண்ணு முழிச்சி உருவாக்கின திரட்டியில இருக்கிற வசதிகளை எல்லாம் சுலபமா ரெண்டு நிமிஷத்துல பண்ணிட முடியாதுங்க. அதுக்கான வசதி இன்னும் வரலை. பிற்காலத்துல வரலாம்.

எல்லாருடைய பின்னூட்டங்களையும் படிப்பீங்க அப்படிங்கிறதுல எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்குன்னு சில பதிவர்களை பிடிச்சு இருக்கும். அவுங்க பின்னூட்டங்களை தொடர்ந்து படிச்சுட்டு வருவீங்க. அவுங்க பதிவுகளின் ஓடைகளை எடுத்து திரட்டலாம். உதாரணத்துக்கு நீங்க தொடர்ந்து 10 பதிவர்களின் பதிவுகளை படிச்சுட்டு வர்றீங்கன்னு வெச்சுக்கலாம். அவுங்க பின்னூட்ட ஓடையை சேர்த்துக்குங்க.

உதாரணத்துக்கு http://vivasaayi.blogspot.com/feeds/comments/default. இது என்னோட பின்னூட்ட ஓடை. http://*********.blogspot.com/feeds/comments/default இப்படி எந்த blogspotக்கும் பின்னூட்ட ஓடை இருக்கும். இதுல என்ன ஒரு வசதின்னா பின்னூட்டம் முழுசாவே படிச்சுக்கலாம்.

wordpressக்கு http://*******.wordpress.com/comments/feed/. திரட்டிகளை அலுவலகத்துல தடுத்து இருந்தாலும் ரீடர் மூலமாவே படிச்சுக்கலாம்.

Saturday, May 17, 2008

அவியல் - 1

 1. அரிசி விலை எல்லாம் கன்னாபின்னான்னு ஏறிப்போயிருச்சு. இதுக்கு எல்லாம் காரணம் வெளிநாட்டுச்சதிதான்(இந்தியா). ஏன்?
 2. மிதிவண்டி வாங்கப் போறேன். வாழ்க்கை எங்க ஆரம்பிச்சதோ அங்கேயே இருக்கேன். ஆமாங்க மிதிவண்டிதான் எனக்கு அப்பா குடுத்த முதல் வண்டி. அதையே நானே இங்கே வாங்கப்போறேன். முன்னேத்தம் தானுங்களே.
 3. தனியா இருப்பது கொடுமைங்க, எப்படித்தான் எல்லாரும் தனியா இருக்காங்களோ? நண்பர்கள் சூழ வாழ்த்து வந்த எனக்கு இது ரொம்பவும் புதுசு. ரொம்பக் கஷ்டங்க.
 4. எல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தாச்சு. techsatishல இருந்து இப்போ TubeTamilக்கு மாறியாச்சு. இடையில aarampamம்.
 5. புதரகத்துல வெயில் காலத்துல கூட குளிருது, இந்த லட்சணத்துல மழை வேற. நம்ம ஊர்ல மழை எப்படா வரும்னு இருக்கு, இங்கேயோ தலைகீழ்.
 6. யாராவது பதிவுகள்பத்தி பேசினா கடுப்பா இருக்கு. பதிவர்கள் என்கிட்ட வேற என்னத்தை பேசுவாங்க. ஏன்?
 7. ஆஹா FM கேட்க ஆரம்பிச்சிருக்கேன். அதுல அடிக்கடி நமீதா நர்ஸரி ஸ்கூல்னு ஒரு வெளம்பரம் வருதே, அது என்னங்க?
 8. குருவி பார்த்துட்டு சேட்ல கிடைக்கிறவங்களை எல்லாம் திட்டிட்டு இருந்தேன்.
 9. புதுசா வந்த எந்தப் பாட்டையுமே கேட்கத் தோணலை, தசாவதாரம் உட்பட. தாம் தூம் பரவாயில்லை. வாரணம் ஆயிரம் பாதி பாட்டுகளும்கூட கடுப்பாவே இருக்கு.
 10. சன் தொலைக்காட்சியில் தமிழ் வெள்ளித்திரை 75வது வருசத்தை முன்னிட்டு போடுற பழைய படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா நடு ராத்தி ஆகிறதனால பாதியிலேயே தூங்கிடறேன்.
 11. எப்படா இந்தியா போலாம்னு இருக்கு. ஏன்?
 12. IPL வெளங்குமா? DIGITALipl.comதான் பார்க்கிறேன்.
 13. ரொம்ப நாளாச்சு ஊர் சுத்தி, அதுதான் கடுப்பா இருக்கு.
 14. பதிவுகளை விட டுவிட்டு பைத்தியம் சீக்கிரம் புடிச்சிருச்சு. பதிவுகளேயே கட்டிட்டி மாறடிக்க முடியல இது டுவிட்டும். அங்கேயும் பதிவர்கள்தான் விதை போட்டு தமிழ் வளர்த்துட்டு இருக்காங்க. வாழ்க தமிழ்!

அவியல் தொடரும்...

Wednesday, May 14, 2008

மூர்த்தி- உங்க போலி பேருதான் என்னங்க?

ஒருத்தர் நல்ல பேரு எடுக்கிறதுக்காக நல்ல உழைப்பாங்க. ஆனா நம்ம நடிகர் நடிகைகளுக்கு அந்தப் பேர்தான் ஆரம்பமே. ஒரு நல்ல பேர் கிடைச்சுட்டா உடனே போட்டுருவாங்க, அட படத்தோட டைட்டில்லதாங்க. அப்புறம் புரட்சி வாழக்காய், இளைய சாம்பிராணின்னு எல்லாம் போ(ட்)டுவாங்க. பாரதிராஜா "ர"வுலதான் நடிகைகளுக்கு அதிகமா பேர் வெப்பாராம்.

ரஜினியோட உண்மையான பேரு சிவாஜி ராவ். ஆனா சிவாஜி ராவ்னு கூப்பிட்டா திரும்பிப் பார்ப்பாராங்கிறது சந்தேகம்தான். ஆனா சொந்தப் பேர் வெச்சு கூப்பிட்டதால தன்னோட எதிர்த்த வீட்டுக்காரருக்கு ஒரு மதிய உணவு அளிச்சு சந்தோசப்பட்டாங்க ரம்பா. (சாப்பிட்டது ஜீரணமாகிருச்சுங்க). அப்போ அவுங்க சொன்னதுதான் இந்தப் பதிவோட சாராம்சமே. என்னதான் ரம்பான்னு லட்ச கணக்குல சொன்னாலும் ஒருத்தர் உண்மையான பேர் சொல்லிக் கூப்பிடும்போது ஒரு இனம்புரியா பாசம் வரும்னாங்க. சாப்பிட்டுகிட்டே ஆமாம்னு சொல்லி வெச்சேன்.

ஒரு புதிர் இவுங்க எல்லாம் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.

உதாரணம்:
சரவணன்=சூர்யா

சிவாஜி ராவ்= ரஜினி காந்த்


 1. மேரி=?
 2. ரேவதி
 3. சுகாசினி
 4. ரிஷி பாலா
 5. டயானா மரியம்
 6. பைரவி
 7. ரங்கராஜ்
 8. வெங்கட் பிரபு
 9. மூர்த்தி
 10. ஸ்வேதா கொன்னூர்
 11. உமா சங்கரி
 12. நக்மா கான்
 13. நக்கத்
 14. ஜோசப்
 15. கருணாநிதி

Sunday, May 11, 2008

சோடி போடலாமா சோடி

முள்ளை முள்ளால் கூட எடுக்கலாம்,
புகையை புகை வைத்து அணைக்க முடியுமா?
இரண்டு வெண்குழல் வத்திகளை வெச்சு புகைத்தல் தப்புன்னு சொல்ல நினைச்சேன்.


எத்தனை நாளைக்குத்தான் வூட்டுக்காரர் நிழலுல நிக்கிறது. அதான் வேலைக்குப் போலாம்னு இருக்கேன்.
காட்சி-1:

பெண்ணீயம்- பாரதி, இதுக்குத்தானா ஆசைப்பட்டாய்.

நீங்க சாண்ட்ரோ வெச்சு இருக்கீங்க, எனக்கு வேகன் ஆர் வாங்கி குடுங்க. அதுதான் சமத்துவம். இல்லாட்டி என்னை அடிமையா வெச்சு இருக்கீங்கன்னு எழுதிடுவேன், ஜாக்கிரதை. வாடி, போடான்னு சொன்னா புகார் குடுத்துருவேன், ஆமா.

காட்சி-2

சமத்துவம்- பாரதியும் காணாத பெண்ணீயம்.

ஏண்டி, கூலிய குடுத்தேனே, அதுலதான பலசரக்கு வாங்கின?


இல்ல மச்சான், உன்னோட சம்பளத்துல உனக்கு வேட்டி எடுத்துட்டேன். எத்தினி நாளிக்கு அத்தையே கட்டுவே? என்னோட கூலில கருவாடு வாங்கி குழம்பு வெச்சிருக்கேன். வந்து துன்னுடா மச்சான்.

ஜோடியில் ஆண் பாதணியில் ஊக்கு போட்டு இருப்பது- ஆண் எவ்வளவோ சிரமத்துக்கு இடையில் பொருளீட்டுகிறான். தன்னை அலங்காரம் செஞ்சுக்க மறந்துட்டு குடும்பத்துக்காக உழைக்கிறாங்க. ஆனால் சில பொண்ணுங்க அதைப் புரிஞ்சிக்காம டாம்பீக வாழ்வு வாழ நினைக்கிறாங்க. இது வரட்டு கெளரவம்தானுங்களே. அதுக்கு அர்த்தம் வர மாதிரி பெண் பாதணி விலையுயர்ந்ததா பக்கத்துல வெச்சேன். அதாவது புது பாதணி, குதி
(high heel) பெரிசா. இது ஆணுக்கும் பொருந்தும், பொண்ணுக்கும் பொருந்தும். அதே போல இந்த ஜோடிய ஆணோ, பெண்ணோ போட்டுக்க முடியாது. இந்தமாதிரி சமமில்லாத ஜோடி உபயோகப்படாது அப்படிங்கிற அர்த்தம் தான் அந்தப் படத்துக்கு. இது என் மனசுல பட்டது. வேற அர்த்தம் கூட இருக்கலாமா?

Monday, May 5, 2008

OPMLம் ஈரவெங்காயமும்

Tamil OPEN OPML குழு - என்ன செஞ்சது? ஒன்னும் கிழிக்கவில்லை. எல்லாப் பதிவுகளையும் முக்கி முக்கித் தேடி எல்லாத்தையும் ஒட்டவெச்சு ஒரு OPMLஆ குடுத்தோம். சிலர் மூக்கைச் சுத்தி சாப்பிடுவாங்க இல்லே, அதுமாதிரிதான் இதுவும்.

நான் தொழில்நுட்பத்தை புரிஞ்சிகிட்டது OPML வெளியிட்ட ஒரு வாரத்துக்குப் பின்னாடிதாங்க. 4000 ஓடையயும் ரீடர்ல போட்டா சாவுது, தொங்குது,அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிட்டு இருந்த நேரத்துல ரவிசங்கர் ஒரு பிட்டை போட்டுட்டு போனாரு. அதாவது எல்லாத் தமிழ்ப் பதிவுகளையும் படிக்க ஒரே ஓடை இருந்தாப் போதும்னு. OPML, 4000 ஓடை எதுவுமே தேவை இல்லை. Google Readerல இந்த ஓடையச் சேர்த்துட்டா எந்தத் திரட்டிக்குமே வரத் தேவை இல்லைங்க. அந்த ஓடை இதோ...

http://www.google.com/blogsearch_feeds?as_q=.&lr=lang_ta&safe=active&q=.&ie=utf-8&output=rss

அடுத்தப் பதிவுல Google readerல எப்படி பின்னூட்டத்தையும் திரட்டுறதுன்னும் சொல்லிடறேன். திரட்டி செய்ய எந்த வழங்கியுமே தேவை இல்லை.. Google Readerஏ போதும்.

கூகில் ரீடர் இல்லாம கூட பதிவ படிக்கலாங்க, அதாவது ஒரு திரட்டி மாதிரி. அதுவும்கூட முடியும் எப்படின்னும் அடுத்தப் பதிவுலேயே சொல்றேன்..

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)