சூனியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான். அதற்கு மொழியில்லை. இளையராஜாவின் How to Name it ல் வரும் வயலின் இசை கமழ்ந்து வரும் பொழுது இதயம் கனக்கும், கனமென்றால் அப்படியொரு கனம் இருக்கும். இதயம் அறுந்து விழுந்துவிடுமோ என்கிற ஐயம் மனதில் எழுமளவுக்கு இதயம் கனக்கும். கண்களில் கண்ணீர் வர மறுக்கும். கண்ணீர் வர மனதில் ஓரளவுக்கு
சோகமிருந்தால் போதும், கண்ணீர் வர மறுக்கும் சோகத்தின் எல்லையை இன்மை காட்டும். இன்மையின் உணர்வுக்கு அளவு கோல் வைத்து அளக்கும் அளவிற்கு யாருக்கு துணிவும் இல்லை, ஏனெனில் அந்த சோகத்தை ஏற்கும் மனநிலையை யாரும் வேண்டுவதில்லை. இன்மை, அதுவாக நம்முள் முள் வைத்து தைத்துவிட்டுப் போகும், இல்லை, தைத்துக்கொண்டே இருக்கும்.
நடு இரவில் எழும் பொழுதே மனதின் வலி உணரலோடு எழுந்தால் பிறகு அந்த வலி நாள் முழுக்க இருக்கும், கண்கள் மூடியிருக்கும், உறங்க கண்கள் இரண்டும் கெஞ்சும். கண்கள் கெஞ்சி பார்க்கும், பிறகு இதயம் கொண்ட வலியை கண்களும் ஏற்கப் பழகிக்கொள்ளும். விழலுக்கு இறைத்த நீரைப்போல கிஞ்சித்தும் உபயோகமில்லாத கண்களின் கெஞ்சலை சற்றும் பொருட்படுத்தாது இதயம் தன்னிஷ்டப்படி வலியை உணர்ந்துகொண்டே இருக்கும். அந்த வலி இரவு வரை தொடரும், சில நாட்கள் இரவு கடக்கும், மீண்டும் கண்கள் கெஞ்சும், ஆனால் இதயம் மிரட்டி கண்களை அடக்கிவிடும்.
வாழ்க்கையில் நாம் கடக்கும் இரவுகளின் தூரத்தை யாரும் அளந்து விட்டிருப்பதில்லை, தூங்கிக் கடக்கிறோம், அதனால் அதன் நீளம், வண்ணம் அறியாமலே இருப்போம். ஓர் இரவு முழுக்க இதயம் அதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கும் பொழுது, இமை மூடிய கண்கள் தூங்காமல் இருக்கையில், இரவின் நீளம் தெரியும், இரவு ஏன் அமைதியில்லாமல் இருக்கிறது என எண்ணத் தோன்றும், இரவின் வண்ணம் தெரியும், அதன் இரைச்சல் தெரியும், இரவின் ஓலமும் நமக்குக் கேட்கும்.
மீண்டும் மீண்டும் ஒரே நினைவினில் வாழ்ந்து பழக்கப்பட்ட வாழ்வில், திடீரென அதனை மாற்ற எத்தனிக்கும் தருணங்களில், தலை அறுபட்ட ஆட்டின் கதறல் போன்று ஓர் ஓலம் எழும், அந்த ஓலம், அதீத இரைச்சல் கொண்டது, நம்மைச் சுற்றிலும் பேரமைதி இருக்கும், ஆனால் மனத்திற்கு புயலடித்துக்கொண்டிருக்கும். அறிவு இதனையெல்லாம் புரிந்துகொண்டிருக்கும், ஆனால் உணர்ந்து கொண்டிருக்காது.
யார் சொன்னது இன்மை அமைதியானது என்று? அதன் பேரிரைச்சலில், உடலின் அனைத்து உறுப்புகளும் அந்த இரைச்சலை உற்று நோக்கும். இன்மைக்கான காரணத்தை மனம் அறியும், மனம் மட்டுமே அறியும், என்னைச் சுற்றி வரும் குதூகலத்தில் மனம் லயிப்பதில்லை, அனைவரும் சிரிக்கும்பொழுது நானும் சிரித்து வைப்பேன், அதனைப் பார்த்த மனம் சிரிக்கும், அது எக்காளச் சிரிப்பென்று உதடும் அறியும். மீண்டும் மீண்டும் வரும் இரவு வரும், மீண்டும் மீண்டும் வலி வரும், மீண்டும் மீண்டும் கண்கள் கெஞ்சும், இறுதியில் இதயத்தின் வலியே வெல்லும்.. அது இன்மை தரும் வலி..

No comments:
Post a Comment