Thursday, June 29, 2006

இதுக்கு என்ன பேரு?

மீள் பதிவு அப்படிங்கிறது ரொம்ப சுலபம். நாம எழுதினதையே திருத்தி எழுதுவோம் இல்லைன்னா அதனோட தொடர்ச்சியை எழுதுவோம். அப்படின்னா மீதிப் பதிவுகள் மீளாப்பதிவுகளா?.

காலத்துக்கு ஏத்த மாதிரி பழைய பதிவையே திருப்பி போட்டு ஒரு புரட்சி பண்ணுவோமே அப்படின்னு நினைச்சதுதான் இந்த பதிவு போட காரணம்.
காலத்துக்கு ஏத்த மாதிரி பழைய பதிவையே திருப்பி போட்டா அதுக்கு பேர் என்னங்க?
எப்படி இருந்த நீ.......

பின் குறிப்பு:இது ஜொள்ளு இல்லங்க, விளையாட்ட பத்திதான்செய்தி:- விம்பிள்டன் டென்னிஸ் - சானியா தோல்வி

பழைய பதிவு

Wednesday, June 28, 2006

வண்ணத்துடன் என் பூச்சி


அவள் மீது
பட்டாம்பூச்சி
சிறகடித்தது
என் இதயம்!


அவள் காதோரமாக
பறந்து சென்ற பட்டாம்பூச்சி
என் காதலை
அவளிடம் சொல்லியிருக்குமோ?

Monday, June 26, 2006

ஆ(ற்)று மணல்


ஒரே நேரத்துல ராசாவும், நவீனும் நம்மள இந்த ஆத்துகுள்ள(6) தள்ளி விட்டுடாங்க. சரி, இதென்ன சச்சின் அடிக்கிற சிக்ஸரா கஷ்டப்பட. நாலு போயி, ஆறு வந்தது டும், டும், டும்.

ரசிக்கும் பொழுதுகள்
* ஆற்றுக் குளியல்
* தூறல் நேரத்தில் பயணம்
* மழை பெய்கையில் பஜ்ஜியுடன் தேநீர்
* காலை நேர நடை
* பசும் வயலின் வரப்பில் மாலை நேர தூக்கம்
* என் வாரிசின் புன்னகை

ரசிக்கும் எழுத்துகள்
* தபூ சங்கர்
* பாலகுமாரன்
* நவீன்,தேவ்,ரசிகவ்
* சாண்டில்யன்
* குறள்
* சுஜாதா

புடிச்ச 6 ஆட்டங்கள்
* ஒயிலாட்டம்
* இடுப்பாட்டம்
* சிம்ரனாட்டம்
* கும்மாங்குத்து
* தண்ணியாட்டம்
* கரகாட்டம்

6 வலைக் கனவுகள்
* கைப்புவுடன் ஒட்டக சவாரி
* ராசாவுடன் சீட்டுக் கச்சேரி
* தேவ் வீட்டில் மீன்குழம்புடன் மதிய உணவு
* பாண்டியுடன் பெசன்ட் நகர் பீச்சில் ஜொள்ளு
* சிபியை கலாய்ப்பது (இதுவரைக்கும் என்னால அவரை கலாய்க்கவே முடியல)
* பொன்ஸ்'ன் யானையை கடத்துவது

என்றும் ரசிக்கும் திரைப்படங்கள்
* தில்லு முல்லு
* சதிலீலாவதி
* மைக்கேல் மதன காம ராஜன்
* சிங்காரவேலன்
* சர்வர் சுந்தரம்
* தளபதி

அடிச்ச 6 சரக்குகள்
* KF
* மார்க்கோபோலா
* MC
* ஸ்டெல்லா (இதுவேற நாட்டுதாம்)
* ராயல் சாலஞ்ச்
* ஷிவாஷ்

6 புடிச்ச மேட்டர ஆறு ஆறா போட்டு இருக்கோம், இதெப்படி இருக்கு.

ஆறு பதிய அழைக்கிறேன்
* தேவ்
* இலக்கியன்
* தாணு
* கைப்பு
* அனுசுயா
* குமிழி

அந்தி மாலை!

பொழுதுபோக்கிலேயே அதிக செலவு வைப்பது புகைப்படம் எடுப்பது(1990களில்). வரப்பில் என்னுடைய சில அரிய(?!) புகைப்படத்தையும் போட எங்க வீட்டுல சில பேரு சொல்ல தட்ட முடியல. அதனால இனிமே சில நான் சுட்ட (திருடியது இல்லை) படத்தினயும் வரப்பில் ஆர் அமர்ந்து காணலாம்.

1993, ஐயன் பொட்டி கேமரா வாங்கிக் கொடுத்த காலம் அது. சந்தோஷ் சிவனும், பி.சி யும் நமக்குள்ள குருவா இருந்த போதுதான் இந்த படம் புடிச்சேன். எங்க மொட்ட மாடியில இருந்து எங்க ஊரு மலையை பல்லாயிரம் தடவை பார்த்து இருந்தாலும் இந்த படம் ஒரு வித்தியாசமான ஒரு பார்வையை தந்தது.

Tuesday, June 13, 2006

ஜனனம்

(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)

அலறியது என்னுடைய தொலைபேசி
அழைத்தது எனது அருமை
துணைவி-என்னவென வினவ
வலி ஆரம்பித்ததாக முனகியது
அவளது குரல்-வாழ்க செல் போன்
என வாழ்த்தி ஆயத்தமானேன்
மாமனார் ஊரிலிருக்கும் மருத்துவமனைக்கு
6 மணி நேர வண்டிப் பயணம்
மனம் போகும் வேகத்தில் செல்லவில்லை
நான் சென்ற வண்டி, கண்களில் நீரோட
மனம் சொல்லியது "இன்னும் அறிவியல் வளரவில்லை"

மனதில் லேசான பயம், இடையிடையே
துணைவியின் நலம் விசாரித்ததில்
நலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.
இருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;
தடுமாற்றத்துடன் மருத்துவமனையின்
வாசற்படி மிதித்தேன்: என்னை
எதிர்பார்த்தபடி பெற்றோர், நண்பர்கள்
மற்றும் உறவினர்கள்-யாரும்
தெரியவில்லை கண்ணுக்கு

துணைவி இருந்த அறைக்கு
அழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்
வேண்டினேன் "அவளுக்கு ஆறுதல் சொல்ல
என் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா"

"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்
ஆகிவிடும்" செவிலி கூறியது மட்டும்
செவியில் விழுந்தது - அறையில் அவள்
தணித்து படுத்திருக்க அவள் கண்களில்
வலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க
அறிவு அடித்தது மண்டையில்
"ஆறுதல் மட்டுமே சொல்லு"
வாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல
எல்லாம் கிடைத்தது போல
மனம் தேறினாள்
வலி இருந்தும்.

செவிலியின் பணி தொடர வெளியே
தள்ளப்பட்டேன், மனம் உள்ளேயும்
உடல் வெளியேயும் என 5 நிமிடம்;
மீண்டும் 15 நிமிட ஆறுதல்
5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.

மருத்துவர் வர புரிந்தது எனக்கு;
இன்னும் சில நிமிடமே
துணைவியோ பல்லைக்கடித்து
வலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,
மனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்
வெளியே வந்தேன் - மணி 9:30 இரவு

சுற்று பார்த்தேன், மருத்துவமனை
நிறைந்து எங்கெங்கும் உறவினர்கள்
ஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த
பிரசவ அறை பூட்டப்பட,
வாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,
நிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;
பிரசவ அறையிலிருந்து
சிறு ஒலியாவது கேட்குமா என
ஏங்கியது மனம்

அக்கணமே கேட்டது
துணைவியின் அலறல்
என் ஆணவம், கெளரவம் தொலைத்து
உற்றார் உறவினர் நினைப்பேயில்லாமல்
கண்ணீர் பெருக்கெடுத்தது
ஆறுதல் கூற அருகில் யாருமில்லை
இருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை
பத்து நிமிடம் விட்டு விட்டு
அலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்
கழன்று விழுவது போல
கணத்தது என் இதயம்.

நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி
சுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்
பிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா?
வலி குறைந்த திருப்தியா?
எதுவும் தோணவில்லை
கை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்
முகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு

செவிலியின் கையில் புது மொட்டு
அப்பா ஜாடையா? அம்மா ஜாடைய?
பட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்
முகம் காண ஏக்கம்
இடையே என் வாரிசையும்;
பாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி
காட்டினார் "ஆனந்தம், பேரானந்தம்"

சில கணம்
என்னிடம் இல்லை என் மனம்
தனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்
என்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;
பாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்
அதுதானே என்னால் முடியும்
என் வாரிசை பத்து மாதம் சுமந்து
பத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு
ஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்!

மார்கழி திங்கள் கடைசி தினம்
ஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்
ஸ்தானத்திற்கு உயர்ந்தேன்
ஆயிற்று பல மாதம் கடந்தும்
மறக்க முடியவில்லை அக்கணத்தினை -
மறக்கவே முடியாது என்றும்
பொறுப்புகள் பல கூடினாலும் மனதில்
ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே
எங்கோ ஒலித்தது ஒரு பாடல்
"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"

கைப்புக்கு ஒரு வாழ்த்து

Monday, June 12, 2006

இம்சை அரசன் Vs கைப்பு


2003ல சென்னையில பிரம்மச்சாரியா சாலிகிராமத்துல இருந்த காலம். எங்க வீட்டுக்கு கீழேதான் வின்னர் பட அலுவலகம் இருந்துச்சு. அப்பப்போ மதிய சாப்பாடெல்லாம் யூனிட்லதான் இருக்கும்.

தயாரிப்பாளரோட பையன் நமக்கு கொஞ்சம் நெருக்கம். காரணம் வேற ஒண்ணும் இல்லீங்க. அப்போ அவருக்கு சென்னை புதுசு. நம்ம வீட்ல தங்கி இருந்த பசங்க எல்லாம் கோவில்பட்டிக்காரங்க, அதனால திருநெல்வேலி பாஷை நல்லா பேசுவோம். அந்த பாஷையினால எங்க ரூமுக்கு அடிக்கடி வருவாரு. படம் ரெண்டு முறை நின்னுருச்சு. தயாரிப்பாளருக்கு அது முதல் படம், சினிமாவும் புதுசு அதனால எவன் எவனோ ஏமாத்தினாங்க. ஆயிரம் தான் இருந்தாலும் பணக்கஷ்டம் இருக்கத்தானே செய்யும். கடைசியில அவுங்க வீட்டையெல்லம் அடமானம் வெச்சு, பையனோட பைக் வித்து படம் ரிலீஸ் பண்ணினாங்க. அந்த கஷ்டம் கூட இருந்த எங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும். இவ்ளோ கஷ்டப்பட்டவங்களை அதுக்கு அப்புறமா சாலிகிராமத்துல பார்க்கவே முடியல.

இப்படி ரத்தக்கண்ணீருல உருவானதுதான் அந்த காமெடி படம். இப்போ இந்த படம் போட்டாலே சிரிப்பா சிரிக்குது ஜனம்.

இம்சை அரசன் கதையோ வேற மாதிரி. சச்சின் படத்துல வடிவேலு "நமக்கு இந்த ஹீரோ வேஷமெல்லாம் வேணாம், இப்படியே இருந்துட்டு போயிருவோம்"ன்னு சொல்லுவார். அப்புறம் ஏன் இம்சை அரசன் 23ம் புலிகேசி? ஷங்கர் வந்து கேட்டா முடியாதுன்னு சொல்ல முடியுமா? செஸ் விளையாட்டுல குதிரைய வெச்சு செக் வெக்கிறதுதன் கில்லியே. ரொம்ப சுலபமா குறுக்க நெடுக்க போயி வெட்டிபுடும். இம்சை அரசன்லயும் இதே கதை தான். இதுவரைக்கு மனுஷப்பயலுகதான் வடிவேலுவுக்கு ஆப்பு வெச்சானுக. இப்போ குதிரையும் செக் வெச்சு இருக்கு.

பாவம் முறுக்கிவிட்ட மீசையும், கம்பீரமா(?!) இருக்கிற வடிவேலு குதிரையினால மனசொடிஞ்சு போய்ட்டாரு. ஹ்ம் என்ன பண்ண பட்ட இடமே படும் கெட்ட குடியே கெடுங்கிற மாதிரி ஆப்பு வாங்கினவங்களேதான் ஆப்பு வாங்குறாங்க. இப்படி குதிரை கூட ஆப்பு வெச்சா இப்படித்தான் வாயில வெரல வெச்சுகிட்டு படம் ரிலீஸ் ஆகுர வரைக்கும் காத்திருக்கனும். இம்சைய நானும் எதிர் பார்க்கிறேன் சாமிகளா..

என் காதலும் உன் வெட்கமும்


நான் காதலை சொல்லிவிடப்
போகிறேன் என நீ வெட்கித் தலைகுனிய
அதைப் பார்த்து நானும்
சொல்லாமல் வார்த்தைகளை விழுங்கிவிட்டேன் .....
இது மாதிரி ஆயிரம்முறை நீ
வெட்கப்படுவதைப் பார்த்துவிட்டேன்,
ஒருநாளாவது வெட்கப்படுவதை நிறுத்தேன்
என் காதலை சொல்லிவிடுகிறேன்!

Sunday, June 11, 2006

இடம்மாறும் இதயம்


உன் பார்வை
என் மீது கையெழுத்திட்டவுடன்
என் இதயமல்லவா
(உன்)இடம் மாறியது

Saturday, June 10, 2006

வரப்பு

உழைப்பை நிறுத்தி சற்று நேரம் ஆசுவாசப்படுத்த எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.


சொடுக்குனா என்னோட வரப்புக்கு போலாம்

முக்காலம்


இறந்த காலம்,
நிகழ் காலம்,
வருங்காலம் - எதற்குமே
வித்தியாசம் தெரியவில்லை

எல்லாவற்றிலும் நீ!

அலைகளும் தலை சாயும்

(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)சோகங்களின் கண்ணீரும்
மகிழ்வின் ஆணவமும்


காதலியின் சிணுங்கல்களும்
காதலனின் ஆளுமையும்

தனிமையாய் தனிமையும்
கூட்டத்தின் ஆரவாரமும்


மணல் வீடுகளாய் கற்பனைகளும்
கற்பனைகளாய் மணல்வீடுகளும்

பேனாக்களின் கனவுகளும்
கனவுகளோடு காகித பட்டப் படிப்புகளும்

அதி காலை ஆழ்தியானமும்
மாலையோர படகு மறைவுகளும்

இவை யெல்லாம் என்று ஓயும்
நானும் ஓய்ந்து தலை சாய!

வரப்பு

உழைப்பை நிறுத்தி சற்று நேரம் ஆசுவாசப்படுத்த எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.

வாழ்வினை திரும்பி பார்க்கையில்
மனதில் பறந்த பட்டாம் பூச்சிகள்,
சொல்ல முடியா கற்பனைகள்,
சொல்லாமல் தீண்டிய முட்கள்,
தாண்டி வந்த படுகுழிகள்,
தொண்டை வரை வந்து முழுங்கப்பட்ட வார்த்தைகள்,
கண்களில் தோன்றி மனதில் புதைந்த ஆசைகள்
எல்லாவற்றையும் அசை போட எனக்கு இந்த வரப்பு.

Friday, June 9, 2006

மீள் பதிவு

எல்லாரும் சிரிச்சாங்களேன்னு பூனை போயி பொடக்காலியில சிரிச்சுதாங்கிற கதையா, எல்லாரும் மீள் பதிவு போடறாங்களேன்னு நானும் போட்டுறேன்.


வெட்டிப்பயலா வெறும்பயலா போயி திரிஷாவ பொண்ணு பார்க்க மாட்டேன், கெட்டிப்பயலா சுட்டிபயலாதான் பொண்ணு பார்க்க போவேன். அர்னால்டு மாதிரி உடம்ப தேத்திகிட்டு இந்த அழகுக்கு மேல ஒரு அழக மெருகேத்துக்கிட்டு சினிமாவுல ஒரு பெரிய நடிகனாகி அதுக்கப்புறம் திரிஷாவ ஜோடியாக்க போறேன்.

Thursday, June 8, 2006

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்

போலி போலி அப்படிங்கிறாங்களே அதை நேரில் சந்திச்சு இருக்கீங்களா? நான் இருக்கேன்.

ரிட்ட்சி தெரு, கம்ப்யூட்டர் தெரிந்த சென்னை மக்களுக்கு இது கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ரொம்ப நாள் ஆச்சுங்க அந்த பக்கம் போயி. சென்னை வந்தே ரொம்ப நாள் அச்சுங்க போது அப்புறம் எங்கே அங்க போறது. எல்லா மிண்ணனுப் பொருட்களுமே அங்கே சலிசா கிடைக்கும். கூட்டாளிய கூட்டிகிட்டு ஒரு ரவுண்ட் வந்தேன். என்னா கூட்டம்ங்க அங்கே. ஒவ்வொருத்தனும் எவ்வளவு கமிஷன் பார்க்கலாம்னு கணக்கு போட்டு பேரம் பேசுறது, காதுல எப்பவுமே ஊக்கிய மாட்டிகிட்டு கைபோன்ல பேசறது எப்பா என்னவொரு ஆரவாரம். கடை வெச்சு இருகிறவங்க 75% வடக்கத்திய மக்கள். அப்படியும் அறைகுறை ஹிந்தியில பேசி மக்கள் வியாபாரம் பண்றது அதியசமா இருந்தது(நமக்குதான் ஹிந்தி சுத்தமா வராதே).

நின்னு ஒரு கடைய நோட்டம் விட்டேன். கம்பெனி டி.வி.டி வி.சி.டி பிளேயர் எல்லமே குறைஞ்ச விலைன்னு போர்டு போட்டு இருந்துச்சு. பிலிப்ஸ், எய்வா, சோனி எல்லாமே 2200/-, ஆத்தி இதெல்லாம் வாங்கி குமாரபாலையத்துல வித்தா செம லாபம்னு ஒரு 100 வாங்க பேரம் பேச போயிட்டேன்னே வெச்சுக்கலாம். கூட்டாளி காலை ஓங்கி மிதிச்சான். அப்படியே சைஸா திரும்பி என்னடான்னேன். மச்சான் எல்லாமே போலிடான்னான். எப்படிடான்னு கேட்டேன் அதோபாருடா SONY க்கு S0NY, AIWAக்கு AIMA, PHILIPSக்கு PHILLIPS.

இதுதான் போலிங்கிறதா. என்ன மாதிரி கிராமத்தானுங்க இப்படிதான் ஏமாந்து போறாங்களா? பார்த்து வாங்குகப்பா..

Wednesday, June 7, 2006

பில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்

கைப்புவ, வீரபாகுன்னு உருவாக்கினவர், கவுண்டருக்கு ஒரு ரீ-என்ட்ரி தந்தவர், நகைச்சுவைக்கு பஞ்சமில்லாம படம் எடுத்தவர் சுந்தர்.சி. நம்ம கொங்கு நாட்ட சேர்ந்தவர் அப்படிங்கிற ஒரு பாசம் வேற. அவர் படம்னா லாஜிக் பார்க்காம மனச விட்டு சிரிச்சுட்டு போயிட்டே இருக்கனும். சரி அவரு நடிச்ச படம், மீண்டும் வடிவேலுவோட கூட்டணி அப்படிங்கிறதால லட்சுமி தியேட்டர் பக்கம் கூட்டாளிங்களோட போனோம். கதை இதுதான்
"கத்தி எடுத்தவன் கத்தியால சாவான், ரவுடி திருந்தினாலும் இந்த சமுதாயம் அவன திருந்தவிடாதுங்கிறது"தான் கதையே. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குங்களா?

அப்ப வடிவேலுக்கு என்ன வேலை? அவரும் ரவுடிதான். இங்கே சங்கத்துல என்னாத்த எழுதுறோமோ அததான் படத்திலேயும் பண்ணியிருக்கார். "ஏய், என்ன வெச்சு ஒண்ணும் காமெடி, கீமெடி பண்ணலையே, பில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்" அப்படீங்கிற மாதிரி கொஞ்சமா காமெடி பண்ணியிருக்கார். ஐயா வடிவேலு, உங்ககிட்ட இருந்து நாங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். இப்படியே போனா விவேக் காமெடி மாதிரி போர் அடிக்க ஆரம்பிச்சுரும். "தொழிலதான் விட்டு இருக்கிறேன் தில்'ல இல்லை"ன்னு பஞ்ச் டயலாக் கூட இருக்குங்க.

படம் முடிஞ்சு வெளியே வரும்போது ஒண்ணு ஞாபகம் வந்துச்சு. விஜய் திருப்பாச்சில ஒரு வசனம் சொல்லுவார் "இது தலைநகரமாவா இருக்கு தறுதலை நகரமா இல்லை இருக்கு". சுந்தர்.சி, "ஏதோ நினைக்கிறேன்" பாட்டு தவிர வேற எதிர்பார்த்து போனா விஜய் சொன்னது மாதிரிதான் இருக்கு.

Tuesday, June 6, 2006

வருக வருக

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க. குடும்ப அரசியலப்பத்தி பேசுற இந்த காலத்துல, இலக்கியம் பேசறேன்னு சொல்லிட்டு ஒருத்தர் தமிழ் பதிவு ஆரம்பிச்சு இருக்கார். இலக்கியன்னு பேர வெச்சு இருக்கிறார். அவுங்க பெரியப்பா ஒரு தமிழ் வாத்தியார், அதனால மட்டும் இந்த பேர வெக்கலைன்னு சொல்லி ஏதோ எழுத ஆரம்பிச்சு இருக்கிறார். தமிழ்ப்பதிவு உலகத்துக்கு வருக வருக

இதோ தொடுப்பு

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)