Tuesday, January 31, 2006

தினமலருக்கு நன்றி

ஒரு படைப்பாளிக்கு எது முக்கியம் தெரியுங்களா?

ஒண்ணு அங்கீகாரம், இரண்டாவது பாராட்டு. நாம வேலை(?!) முடிஞ்சு இளைப்பார நேரத்துல ஏதாவது எழுதலாம்னுதான் இந்த வலை ஆரம்பிச்சேன். அது சில பேர்க்கு பிடிச்சு போய் பாராட்ட உச்சி குளிர்ந்துட்டேன், இப்போ அந்த வரிசையில் தினமலரில் என்னுடைய வலையை அங்கீகரித்து வலையின் பெயரினை வெளியிட்டு இருந்தனர். தொடரும் எமது வலை விவசாயம்.

இதை சொடுக்கி பார்த்துகோங்க

Wednesday, January 25, 2006

ரஜினியின் புது படம்

எங்க தமிழ் வாத்தியார் ரொம்ப நல்லவர்ங்க, சின்ன விஷயம்னாகூட ரொம்ப யோசிச்சு சரியா பதில் சொல்லுவார். அவர் துக்ளக் படிக்கிற ஆளுன்னா பார்த்துகோங்க. நம்ம ஊர்ல ஒரு வரையறை இருக்கு என்னான்னா தினத்தந்தி படிச்சா சாதாரண மனுஷன், தினமலர் படிச்சா குடும்பத்தனமான மனுஷன், தினபூமி படிச்சா அம்மா, தினகரன் படிச்சா சூரியன், இண்டியன் எக்ஸ்ப்ரஸ் படிச்சா மேதாவி, துக்ளக் படிச்சா அதிமேதாவி. எங்க வாத்தியார் அதிமேதாவி அப்படின்னு எங்களுக்குள்ள ஒரு நெனப்பு.

கட்டுறை எழுதினாதான் பசங்க அறிவு வளரும் அப்படிங்கிறதுல ரொம்ப நம்பிக்கை உள்ளவர். அதனால வாரத்துல 5 வகுப்பு அவருதுன்னா 3 வகுப்பு கட்டுறையா எழுத வெச்சுருவார். கட்டுறை எழுதுறதுல நாம கொஞ்சம் பிஸ்து வேறயா அதனால வத்தியாருக்கு என்ன ரொம்ப பிடிக்கும். பள்ளிகூடத்துல நாம அவருக்கு செல்ல பிள்ளை மாதிரி. ஒரு நாள் ஒரு தலைப்பு கொடுத்து கட்டுறை எழுதுன்னார். அன்னிக்கு ஆரம்பிச்சார் என்ன அடிக்க, 10வது முடிக்கிற வரைக்கும் தர்ம அடிதான். அப்படி என்ன தலைப்புன்னு கேட்கறீங்களா? தலைப்பு இதுதான்.

சினிமா உருப்பட நீ செய்வது என்ன? நான் என்ன எழுதினேன் தெரியுங்களா? சிலுக்கை எல்லா படத்திலையும் கதாநாயகி ஆக்கிடுவேன்னு எழுதிட்டேன். நான் என்ன நெச்சேன்னா சிலுக்கை கதாநாயகி ஆக்கிட்டா பொம்பளைங்க யாரும் சினிமா பார்க்க போக மாட்டங்க அதனால நாடு உருப்படும்ன்னு நெனச்சேன். எங்க வாத்தியார் என்ன நெனச்சார்னு சாமிக்கே வெளிச்சம்.


சும்மா இருந்தா தான் பொழப்பையும் கெடுத்து அடுத்தவன் பொழைப்பையும் கெடுத்துடுவான்னு சொல்லுவாங்க. அது உண்மைதான் போல இருக்கு, இன்னைக்கு சுத்தமா வேலையே இல்லை. சரி, புதுசா ஏதாவது எழுதலாம்ன்னு நினைச்சேன். அப்ப கூகில் படங்களில் ஒரு படம் கெடைச்சுது. அப்ப எங்க வாத்தியார் போட்டோவையும் பார்த்தேன். அப்போ சரி இன்னைக்கு எழுத சரக்கே வேணாம் வாத்தியார் சொன்னதையே பில்டப் பண்ணிட்டேன். அந்த படத்துக்கு நானே தலைப்பையும் கொடுத்து இருக்கேன். ஆனா ஒரு விஷயம் ஏதோ ஒரு புண்ணியவான் தான் இந்த படத்த போட்டு இருந்தார். அவருக்கு நன்றி.


தலைப்பு இதுதான் "ரஜினி டைட்டானிக் படத்தில் நடித்து இருந்தால்". நீங்களும் பார்த்து பரவசம் அடைஞ்சுக்கோங்க. (-படம் கீழே)

அதுக்கு முன்னாடி, எல்லாரும் சொல்ற மாதிரி எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#

#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#

Thursday, January 19, 2006

முதலையை தின்னும் முதலைகள்


சின்ன முதலை பெரிய முதலை பற்றிய இரண்டு கதைகளை பார்ப்போம். முதலில் பெரிய முதலை சின்ன முதலையை விழுங்கும் கதை இது.

முதன் முதலில் 1 ரூபாய்க்கு விமான சேவையை ஆரம்பித்து தன்னுடைய வியாபாரத்தை பெருக்க மற்ற விமான சேவை நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கறைத்தது ஏர் சஹாரா. அப்புறம் டெக்கான், ஸ்பைஸ் போன்ற நிறுவனங்கள் ஏர் சஹாராவின் புளியை திருப்பி கறைத்தது என்பதோ வேற கதை. அப்போ ஏர் சஹாரா பெரிய முதலையாக இருந்தது. அதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். போன மாதம் ஜெட் 400millionனுக்கு பேரம் ஆரம்பிச்சு 500millionனுக்கு முடிஞ்சு இருக்கு. ஏற்கனவே சஹாராவில் நிறுவனம் பணப்பிரச்சினை இருப்பதாக ஒரு பேச்சு செய்தித்தாள்கள் வெளியிட்டு இருந்தது நினைவிருக்கலாம்.

ஆக மொத்தம் பெரிய முதலைகள் மட்டுமே வியாபாரம் நடத்தும் சூழ்நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இதில் Dishnet, BPL, Aircell எல்லாம் அடக்கம். இது நல்ல ஒரு நடை முறை இல்லையென்றாலும் வேறு சாத்தியமும் இதில் இல்லை. இன்னும் சில வருடங்களில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே வியாபாரம் நடத்தும்.

அப்போ சிறிய நிறுவங்களின் கதி?

இப்போ சின்ன முதலை பெரிய முதலையை விழுங்கும் கதை. இதில் கொஞ்சம் குடும்ப அரசியலும் கூட இருக்கு. கர்நாடகாவில் நடக்கிற கூத்த பத்திதான் சொல்றேன்னு இந்நேரம் புரிஞ்சு இருக்குமே. இதுல கலாட்டாவே தந்தை-மகன் விளையாட்டுதான். நடந்தது இது தான். கர்நாடகாவில் தரம்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி நடத்துகிறது. பா.ஜ.க எதிர் கட்சியாக இருக்கிறது(ந்தது). முன்னால் பிரதம மந்திரி தேவகெளடா (அதாங்க முக்கியமான நிகழ்ச்சி ஒன்றில் குறட்டை விட்டு தூங்கினவர் தான் இவர்). நேற்றைய நிலவரப்படி சுமார் 45 Mளாக்களுடன் தேவகெளடாவின் மூத்த மகன் குமாரசாமி பா.ஜ.க. வின் ஒத்துழைப்புடன் (?!) கவர்னரிடம் தானே ஆட்சி அமைக்க போவதாகவும் அதற்கு பெரும்பான்மை இருப்பதகவும் மனு கொடுத்திருக்கிறார். எல்லாருக்கும் வந்த அதே கேள்வி தான் எனக்கும் தோணிச்சு "அது எப்படி அப்பாவை எதிர்த்து இப்படி பேச முடியுதுன்னு". ஆனா மேட்டர் அது இல்லை சாமி. ஒரு பெரிய பிண்ணனி இருக்கு இதுல.

நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் அமோக ஆதரவு பெற்று வெற்றி பெற்றது. அதனால ஜனதா தளத்திற்க்கு அடி வயிறு கலங்போச்சு. அப்போதே காங்கிரஸை ஓரம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க ஜ,த. இப்போ குமாரசாமி பா.ஜ.க வுடன் சேர்ந்து ஆட்சி செய்தால் காங்கிரஸை ஓரம் கட்டி விடலாம் என்பது கெளடாவின் நினைப்பு.

இதுக்கு முன்னால் கெளடாவின் குடும்பத்தை தெரிந்து கொள்ளுங்கள். நம்மை எல்லாம் குடும்பத்தொழில் என்னவென்று கேட்டால் விவசாயம், நெசவுன்னு சொல்லுவீங்க. ஆனா அவர் அரசியல்ன்னு சொல்வார்(விவசாயம் தான் அவருடைய குலத்தொழில்), ஏன்னா அவரும் அவருடைய நாலு மகன்களும் அரசியல்தான் இருக்காங்க வேற எந்த தொழிலும் இப்போதைக்கு இல்லை. சரி விஷயத்துக்கு வருவோம் இப்போ பா.ஜ.க வுடன் சேர்ந்து காங்கிரஸை ஒழிச்சுட்டு மீண்டும் அப்பாவும் பிள்ளையும் ஒண்ணு சேர்ந்துப்பாங்க. இதுல இன்னொரு ஆதாயமும் இருக்கு மகனும் அரசியலுக்கு வந்துருவான் தரம் சிங்கையும் ஓரம் கட்டிலாம்.


அப்ப மக்கள் என்ன இ. வாயன்களான்னு அடுத்த தேர்தல் வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கனும், இங்கே சின்ன முதலை பெரிசை சாப்பிட்டுச்சா இல்லையான்னு நீங்கதான் சொல்லனும்.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)