Wednesday, March 16, 2011

பெரிய வீட்டு "கமலி" - 3 (தொடர்கதை) இறுதிப்பகுதி

“என்னங்க, விசயம் தெரியுங்களா?’ இது கோயமுத்தூர் குசும்பு செந்திலிடம்


‘என்னங்க?’

’எங்க வூட்டுக்காரர் உங்க மனைவியைக் காதலிச்சாராம்’ என்றதும்..


முதல் பகுதி  | இரண்டாம் பகுதி
சட்டென முகம் மாறியது எனக்கு. தெரியாமல் சொல்லிவிட்டோமோ என்று என் மனைவியும் செந்திலை நோக்க...

’ம்ம் சொல்லுங்க. அப்புறம் என்னாச்சு?’ ஏதோ கதை கேட்பது போல சாப்பிட்டுக்கொண்டே செந்தில் கேட்க, குழந்தைகளும் ஆர்வம் பீறிட ஒவ்வொருத்தராய், நடந்ததை கேட்க ஆரம்பித்தார்கள், இல்லை இல்லை நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.

எனக்கோ தர்ம சங்கடம், வேகமாய் சாப்பிடுவதைப் போல தலை நிமிராமல் இருந்தேன், தலை நிமிருவதைத் தவிர்த்தேன். இது கூச்சமா? குற்றவுணர்ச்சியா? வெட்கமா? தன்னுடைய மனைவியைக் காதலித்தவன் இவன்தான் என செந்தில் என்னை முறைத்துக்கொண்டிருப்பாரோ? இப்படி கூறு கெட்டத்தனமாகவா போட்டு உடைப்பாள் மனைவி? கமலி என்னைப் பற்றி என்ன நினைப்பாள், அவளுடைய குடும்பத்தில் பிரச்சினை ஆகிவிடாதா?


’என்ன அன்பு? நீங்க சொல்லுங்களேன்,நீங்கதானே காதலிச்சீங்க? நீங்க சொன்னாத்தான் அதுல ஒரு உயிர் இருக்கும்’ என்றாரே பார்க்கலாம், செந்தில்.


இப்படி ஒரு நிலை வருமென கொஞ்சமும் நான் யோசிக்கவில்லை. ஒரு தலையாய்க் காதலித்த என் முன்னாள் காதலி, அவளுடைய கணவன் அவர்களுடைய இரு வாரிசுகள், என் மனைவி, என் வாரிசுகள் இவர்களுக்கு முன்னால் என் காதலைப் பற்றி சொல்லவேண்டுமாம்? அதுவும் ஒரு சொல்லாத காதல் வேறு. 20 வருடங்களுக்கு முன்னால் பூத்த காதல் இன்னும் என் மனதில் அப்படியே இருக்குமா? சொல்ல நினைத்தால் அதே உணர்வுகளோடு சொல்ல முடியுமா? பல எண்ணங்கள், சிக்னல் இல்லாத 4 ரோட்டில் ஓடும் மோட்டார் பைக்குகளைப் போல எண்ணங்கள், குறுக்கும் நெடுக்குமாக ஓடியது.

கமலி என்னைக் காதலிப்பதாய் அவளது டைரியில் எழுதியிருந்ததை என் மனைவியிடம் மறைத்திருந்தேன்.ஏனெனத் தெரியாமல், தெரிந்தே மறைத்த விசயம் அது.

’அப்பா சொல்லுங்கப்பா’ என்றான் என் ஆண் வாரிசு.

சொல்லிவிட வேண்டியதுதான் என நினைத்து நிமிர்ந்த வேளையில் என் மனைவியே சொல்ல ஆரம்பித்தாள். அவளுக்குத் தெரியும், என் நிலைமையப் பற்றி. இந்த நேரத்தில் அவள்தான் என்னைக் காப்பாற்றினாள், காப்பாற்றவும் முடியும். நான் சொல்ல நினைத்த விசயங்கள், மறந்த விசயங்கள் எல்லாவற்றையும் ஒரு தோரணமாகக் கட்டினாள், பூச்சரம் தொடுப்பதைப் போல தொடுத்தாள், ஒரு தேர்ந்த ஓவியனைப் போல உணர்வுகளை வரைந்தாள். நான் காதலித்ததை விட அவள் சொன்ன பாங்கு என் பழைய காதல் மேலும் மெருகேறியது. அவள் சொன்னதில் ஒரு காதல் இருந்தது, என் காதலையும் சேர்த்து. ஒரு, ஒருதலைக்காதலைக்கூட இப்படிச் சொல்லமுடியுமா என வியந்தேன். என் மனைவியும் நான் காத்திருந்தது வரை, நீட்டி முழக்கி சொல்லிமுடித்தாள்.

அறையில் நிசப்தம், யாரும் சாப்பிடவில்லை. அவள்
சொன்ன கதையின் சோகம் எல்லோரையும் தாக்கியிருந்தது. இந்த நேரத்தில் ஒரு இடைவெளி தேவைப்பட்டது. கை கழுவ எல்லாரும் எழுந்திருக்க ஆரம்பித்தோம். 15 நிமிடம் கழித்து ஏதோ ஒரு காரணத்திற்காக சமையலறை சென்ற போது, கமலி தனித்து, தலை குனிந்தவாறு இருந்தாள். அவள் முதுகு மட்டுமே தெரிந்திருந்ததால் ‘என்னங்க, கொஞ்சம் தண்ணி வேண்டுமே’ என்ற போது சுதாரித்து சட்டெனத்திரும்பினாள். அவள் கண்களில் கண்ணீரும் ஏதோ ஒரு சந்தோச முடிவின் திருப்தியும் இருந்தது. இருவருமே காதலித்திருக்கிறோம், காதல் ஒன்று சேரவில்லை, காதல் பரிமாற்றமே கொள்ளாத நிலையிலும், இருவரும் காதலித்திருந்தோம் என நினைப்பே எங்கள் கண்களில் தெரிந்தது. அதுவும் ஒரு நொடி, ஒரே நொடி..

’நீங்க போங்க தண்ணீர் கொண்டு வரேன்’

‘சரிங்க’

மீண்டும் ஆரம்பித்தது செந்திலுக்கும் எனக்குமான பேச்சு. எங்கள் வீட்டம்மாவும், கமலியும் மீண்டும் பேச ஆரம்பிக்க, குழந்தைகள் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தார்கள்.

செந்தில்தான் கேட்டார் ‘ஏங்க நீங்க கமலியைத் தேடவே இல்லையா?’

’இல்லீங்க, வேலை கிடைச்ச பிறகு அதுக்கே நேரம் சரியாப்போச்சு. பிற்பாடு கல்யாணம், வாரிசுகள். மறந்துட்டேங்க’ என்ற போது இருவருமே அடக்க முடியாமல் சிரித்துவிட்டிருந்தோம்.

ஓஹ், நானும் சிரித்திருக்கேன், அப்போ அது உண்மைதான். எனக்கு இந்தக் காதல் மறந்து போச்சு, காதல் கூட மறந்து போவுமா என்ன?

‘காலம் என்னத்தையெல்லாம் மறக்க வெக்குது பார்த்தீங்களா அன்பு’, என்றார் செந்தில். பிறகு நிறைய பேசினோம். காதல் பேச்சு, அத்தோடு முடிந்து போனது. கிளம்பும் நேரம் வர இரவு சாப்பாட்டை கட்டி குடுத்தனுப்பினாள் கமலி. அடுத்த வாரம் அவளின் குடும்பம் எங்கள் வீட்டிற்கு வருவதாய் என் மனைவிடம் வாக்களித்தாள் கமலி, நான் என் வாரிகள் வண்டியில் அமர்ந்திருக்க பெண்கள் இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள் ’அடுத்த வாரம் பேசிக்கலாம்மா, இல்லாட்டி ஃபோன்ல பேசிக்குங்க. வா நேரமாச்சு’ என்ற என் குரல் கேட்டு வந்தமர்ந்தாள் மனைவி. வண்டியைக் கிளப்பினேன்.

வெகு திருப்தியுடன் அமைந்தது அந்தச் சந்திப்பு. 20 வருடம் இதற்காகவா காத்திருந்தோம். ஏன் சந்தித்தோம்? ஏன் குடும்பத்தோடு வந்தோம்? பேசினோம்? எல்லாம் கனவு போல ஓடியது. சாலையின் இரு ஓரங்களிலும் மரங்கள் வேகமாய் பின்னோக்கி வேகமாய் ஓட ஆரம்பித்தது. நிறைவேறாத ஆசை ஏதோ இன்று நிறைவேறியது போன்றதொரு நினைப்பு. மனைவியைப் பார்த்தேன், களைப்பில் தூங்க ஆரம்பித்திருந்தாள், என் குழந்தைகளும்.

எனக்கும் கமலிக்கு இடையே இருந்த காதல் ஒரு நொடிப்பொழுதில் ஆரம்பித்து அதே நொடியில் முடிந்தும் போனதுதான் விந்தையாக இருந்தது. காலையில் கிளம்பும் போது மனது முழுக்க கேள்விகள், திரும்பும் போதோ....

அங்கே மீதி இருந்தது நட்பு தோய்ந்த அன்பு மட்டுமே.

பட உதவி என் ஆதர்ச ஓவியர் இளையராஜா

பெரிய வீட்டு "கமலி" - 2 (தொடர்கதை)

முதல் பாகம்



"அன்பு!
எனக்கு மட்டும்"

கமலி எழுதி இருக்கிறாள்.

கடிதத்தை மூடி புத்தகத்துக்குள் வைத்துவிட்டு, காருக்குள் போய் உக்காந்து கொண்டேன்.

"அன்பு. இருப்பா, என்ன சொல்ற வீட்ட பார்த்தியே புடிச்சு இருந்துச்சா? முடிச்சுடலாமா?"

"இல்ல மாமா, வேணாம். விட்டுருங்க. எனக்கு இஷ்டம் இல்லே" வாழ்நாள் முடியர வரைக்கும் இனிமேல் இந்தத் தெரு பக்கம் வரவே கூடாது என நினைத்தபடி என்றபடி ஆக்ஸிலேடரை மிதித்தேன்.


வீட்டைப் பார்த்து வந்தவுடன் ஒரு வாரம் அதே ஞாபகமாய் இருந்து, பிறகு எப்போவாவது நினைத்து, அப்புறம் நினைக்க மறந்தும் போய் இரண்டு வருசமாச்சு. புது வருசம் அன்னிக்கு கண்டிப்பாக கோவிலுக்கு போவது பழக்கம். இது சின்ன வயசுல இருந்தே இருந்தாலும், அமெரிக்கா வந்தும் தொடருது.

”டொயிங்க்”


சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன், சிரித்தபடி ஒருவர் அருகில் வந்தார். எங்கேயோ இவரை.. இல்லை இவனை.. அட சுப்பு. பள்ளித்தோழன். நான் முதல் பெஞ்ச் என்றால் இவன் மூன்றாவது பெஞ்ச். ’என்னடா அன்பு? எப்படி இருக்க? இந்த மாநிலம்னு தெரியும், ஆனா இந்தக் கோயிலுக்கு வருவேன்னு தெரியாதேடா’ ஏதோ ஒரு வாரம் பழக்கம் விட்டுப்போனது போல பேசினான். பிறகு அளவளாவியதில், அவன் என்னோட முகவரி கூட தெரிந்து வைத்திருக்கிறான், ஆனால் பேச மட்டும் செய்யவில்லே. நானும் காரணம்
கேட்கவில்லை. 10 நிமிசம் பேசியதில் பல வருடம் விட்டுப் போன விசயங்கள் பரிமாறிகிட்டோம். இப்பொழுதுதான் இந்த மாநிலம் வந்திருக்கிறானாம். ‘கமலிகூட இங்கேதாண்டா? தெரியுமா?’ என்றபோது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏன் அவளைப் பற்றி விசாரிக்கவில்லை என்றும் கேட்டான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ங்கேயிருந்து 60 மைல்தாண்டா, ஒரு எட்டு போய் பார்த்துட்டு வா. ஒரு பொண்ணு, ஒரு பையன், இஞ்சினியர் மாப்பிள்ளை, 5 படுக்கையறை கொண்ட வீடுன்னு ஜம்முன்னு இருக்கிறாடா. பெரிய வீடாச்சே, சும்மாவா பொண்ண குடுத்திருப்பாங்க?’ ‘ம்ம்’ என்று மட்டும் சொன்னேன். அவளுடைய விவரம் எல்லாம் அலைபேசியிலேயே மாறியதற்கும் என் குடும்பம் நவகிரகம் சுற்றி வரவும் சரியா இருந்தது.

அடுத்த வாரமே சுப்புவின் வீட்டிற்கு போனோம், பழைய விசயங்களை எல்லாம் பேசியபோது சுப்பு ‘என்னடா கமலி விசயம் வீட்டிற்கு தெரியுமா?’ என்று காதில் குசுகுசுத்தான். என் வீட்டுக்காரம்மாவோ இந்த மாதிரி விசயத்தில் கெட்டி. ‘என்னண்ணே? பெரிய வீட்டுப் பொண்ணப் பத்தி
கேட்குறீங்களா?’ என சுப்புவை கேட்கவும், மீதியிருந்த சரக்கை ஒரே கல்பில் அடித்து முடித்தான் சுப்பு. ‘அடுத்த வாரம் போலாம்னு இருக்கோம்ணே’ என்றதும், மீதியிருந்த சரக்கை ஒரே கல்பில் அடித்து முடித்தேன். ’என்னைக் கேட்காமல் எப்படி முடிவெடுக்கலாம், அதுவும்..’ ஆமா, உங்களைக்கேட்டுத்தான் எல்லாம் முடிவெடுக்கிறோமாம்’ இது சுப்புவின் விட்டம்மா. இப்படிச் சொல்வதில் வீட்டம்மாக்களுக்கு என்றுமே குஷிதான், கும்மாளம்தான்.


வீட்டிற்கு வரும் வழியில்தான் வீட்டம்மாவைக் கேட்டேன் ‘என்ன நெசமாத்தான் சொல்றியா? நான் இன்னும் அவகிட்ட பேசக்கூட இல்லே. அப்புறம் எப்படி அடுத்த வாரம் போறது’ ’அட பேசுங்க, கேளுங்க, இதெல்லாம் ஒரு விசயம்னு. மண்டையில முடி கொட்டினதக்கப்புறம் என்ன வெட்கம்?’ சரிதான். எனக்கும் இன்னும் ஒருவித தயக்கம் இருந்திகிட்டே இருக்கு. எங்கே ஆரம்பிக்கன்னு தெரியல. அடுத்த நாள் அலுவலகம் கிளம்புகையில், வீட்டம்மா ‘அடுத்த வாரம் அங்கே போறோம்தானே?’.

’உனக்கு ஏன் இவ்வளவு வேகம்?’

‘அட நீங்க பார்த்து ஜொள்ளுவிட்ட பார்ட்டி, எப்படித்தான் இருக்கும்னு பார்க்கவேணாமா’.


இந்த மனைவிமார்களுக்கு மட்டும் புருசன் சைட் அடிச்சாலோ, காதலிச்சாலோ பொறாமையவிட அவுங்க எப்படி இருப்பாங்கன்னு பார்கிறதுல ஆர்வம் அதிகம். மதியம் 2 மணிக்கு அலைபேசியில் Mrs. Kamali Senthil என்ற எண் பார்த்து அழைக்கும் போது கை நடுங்கியது. ரெண்டாவது மணியில்,

“ஹலோ” அமெரிக்க உச்சரிப்பில் ஒரு பெண்மணி பேச,

நானும் கமலிகிட்ட பேச முடியுமா என்று கேட்டேன்.

‘நீங்க?

’ நான் ’அன்பு’,

’எந்த அன்பு.... சின்னாயக்கா மகனா?’ என்றதும்.

’ஆமா. ஞாபகம் இருக்குங்களா. நான் உங்க ஊருக்குப் பக்கமாத்தான் இருக்கேன். சுப்பு சொன்னான்’

’ஓஹ் அப்படியா, சந்தோசம்ங்க. எவ்வளவு வருசம் இருக்கும்? 20 இருக்குமா?’


பிறகு இரு குடும்பங்களைப் பற்றி பேசி, அடுத்தவார இறுதிக்கு கமலி வீட்டுக்கு போவதென்று தீர்மானம் ஆச்சு. கடைசி வரைக்கும் அந்த டைரி மேட்டரைப் பத்தி நானும் பேசலை. அவுங்களும் பேசலை.

000000000000000000000000000
வெள்ளிக்கிழமை என்னிக்கு வருமென்று காத்திருந்தேன் நான். வீட்டுக்காரரிடம் அன்று இரவே சொல்ல்விட்டேன் ‘எங்க ஊர்க்காரங்க
வராங்க. சனிக்கிழமை எங்கேயும் போயிரக் கூடாது, ஆமா.’ அவரும் சரியென தலையாட்டிவிட்டு போய்விட்டார். என்ன சமைப்பது என அன்றே பட்டியல் போட ஆரம்பித்தேன். என்றுமில்லாத அதியசமாக அன்று மளிகை கடைக்கு அவரை வற்புறுத்தாமல் நானே போய் வந்தேன்.

என்ன துணி போட்டுக்கலாம்? புடவை? சுடிதார்? ஜீன்ஸ் டீ சர்ட் ? குழப்பம் அதிமாகிக்கொண்டே இருந்தது. கடைசியாக ஒரு கேள்வி என்னைத் தாக்கியது “அந்தக் கடிதத்தை யாரும் படிச்சிருக்க மாட்டாங்கதானே? அது அந்தப் புஸ்தகத்துக்கு உள்ளேதானே இருக்கும்?”

00000000000000000000000000000000

வெள்ளிவரை வேலை கழுத்தை நெறித்தது. இடையிடையே கமலி ஞாபகம் வந்துவிட்டுப் போனது. என் காதல் தெரிந்த மாதிரி அவளுடைய வீட்டுக்காரருக்கும் அவள் சொல்லியிருப்பாளா? ஆமா, அவ என்கிட்டயே சொல்லலை என்ற நினைப்பு வந்த போது சிரித்துவிட்டேன்.

சனிக்கிழமை,

பத்து மணி. எங்கேம்மா போறோம் என்று இரு குழந்தைகளும் கேட்டபோது ‘என்னங்க சொல்லிரலாமா’ என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தாள் வீட்டம்மா. குசும்பு புடிச்ச கோயமுத்தூர்காரங்க என மனசுக்குள் நினைத்துக்கொண்டே ‘ஒரு அங்கிள் வீட்டுக்கு போறோம்பா. அவுங்க எங்க ஊரு’ என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னேன். குழந்தைங்க (13,16 வயசு ஆனாலும் குழந்தைங்க தானே) சலிப்போடு உக்காந்தார்கள், பாவம் அவர்களுக்கு என்ன முக்கியமா இருக்கோ? எங்க ஊரு, ஒரே பள்ளிக்கூடம், கல்லூரி, விமான நிலையத்துல பார்த்தது, வேலை செய்ததுன்னு மாசம் ஒரு முறை யாராவது ஒரு வீட்டிற்கு இப்படி கூட்டிப் போவது பழக்கமாகிவிட்டிருந்தது. போகும் 1 மணிநேரத்தில் வீட்டின் மூவரும் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்துவிட்டார்கள். சரியாக மதியம் சாப்பாட்டு போன மாதிரி வீட்டிற்கு முன்னால் வண்டி நின்றது.


பெரிய வீடு,
கண்டிப்பாய் ஊரிலிருந்த பெரிய வீட்டில் பாதி கூட இல்லை, இருந்தாலும் அந்தத் தெருவிலேயே பெரிய வீடாய் இருந்தது. சுப்பு சொன்ன “ஜம்முன்னு இருக்கிறாடா” ஞாபகத்துக்கு வந்தது. அழைப்பு மணி அழுத்துமுன்னேன் செந்தில்(கமலியின் வீட்டுக்காரர்) கதவைத் திறந்தார். என்னைப் போலில்லாமல், சின்னத் தொப்பையுடன், முன் விழுந்த முடியுமாக இருந்தார். சிரித்த படியே வரவேற்றார்.

‘கமலி, வந்துட்டாங்க. சீக்கிரம் வா’ என்ற போது மனசுக்குள் புகைவண்டி ஓடுவது போல தடதடத்தது. அவள் முகம் காணும் பொழுதை மட்டுமே எதிர்பார்த்திருந்தேன். ’வாங்க.. வாங்க’ என்றபடியே மாடியில் இருந்து வந்தாள் கமலி. ரெட்டை ஜடை, வெள்ளை ஜாக்கெட், பச்சை தாவணி என பள்ளிக்கூட கமலியை எதிர்பார்த்து வந்திருந்தது எவ்வளவு தப்பென்று இருந்தது. உருவம் பெருத்து, முடி நரைத்து, கண்ணாடி போட்டு ... காலம் மாறுவதை மனம் மறுத்தே வந்தது புரிந்தது.

சிநேகத்துடன், ‘நல்லா இருக்கீங்களா?’ என்று மட்டும் முடித்துக்கொண்டேன். பிறகு நானும் செந்திலும் வரவேற்பறையில் பேச ஆரம்பித்தோம். குழந்தைகள் நால்வரும் ஏதோ அறையில் பேசிக்கொண்டிப்பது கேட்டது. வீட்டம்மாவும், கமலியும் சமயலறையில்.

என்ன ஒரு 45 நிமிடம் ஆகியிருக்குமா? ’என்னங்க சாப்பிடலாமா?’ என்றபடியே கமலி அழைக்க, குழந்தைகளும் சேர்ந்துகொள்ள, உணவருந்தும் இடம், கலகலப்பாகியது.

“என்னங்க, விசயம் தெரியுங்களா?’ இது கோயமுத்தூர் குசும்பு செந்திலிடம்

‘என்னங்க?’

’எங்க வூட்டுக்காரர் உங்க மனைவியைக் காதலிச்சாராம்’ என்றதும்..

(தொடரும்)

இறுதிப்பகுதி இங்கே

பெரிய வீட்டு "கமலி" -1 (தொடர் கதை)

"கமலி"

அவள் பேரை நினைக்கும் போதே மனசுக்குள் ஒரு பேரானந்தம். "கமலி என் லவ்க்கு ஓக்கேன்னு சொல்லிடனும்" மனசுக்குள் வேண்டிக்கொண்டேன்.

"அடடா, சொல்ல மறந்துட்டேனே. என் பேரு அன்பு, இப்போதான் BTech முடிச்சேன், கேம்பஸ்ல வேலை கிடைச்சது. ஆனா மேல் படிப்பு படிக்கனும்னு காத்துட்டு இருக்கேன். MITல அட்மிஷனும் ரெடி, அமெரிக்காவுல வேலையும் ரெடி. ஆண்டவன் அந்த அளவுக்கு எனக்கு கருணை காட்டி இருக்காரு. எதை எடுத்துக்கிறதுங்கிறது கமலி சொல்ற வார்த்தையில்தான் இருக்கு. கமலிய சின்ன வயசுல இருந்தே காதலிக்கிறேன். ஆனா, நல்ல நிலைமைக்கு வந்த பின்னாடிதான் அவகிட்டே என் காதலை சொல்லனும்னு ஒரு பிடிவாதம். கமலி சரின்னுசொல்லிட்டா ஏதோ ஒரு ஆஃபர் லெட்டரை எடுத்துகிட்டே வேலையில் சேர்ந்துடலாம். அவளிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் மனசெல்லாம் பாரம் குறைஞ்ச மாதிரி ஆகிடும். காதலை சுமக்கிறத விட பெரிய பாரம் ஒன்னும் இல்லீங்க. சட் புட்டுனு அதை அவகிட்ட இறக்கி வெச்சுட்டா, அப்புறம் அவள் பாடு. ஊர்ல பெரிய வீடு அவுங்களது, பெரிய குடும்பம் ஒரே பொண்ணு. அவுங்க வீட்டை சுத்தி பார்க்கவே அரை மணிநேரம் ஆகும். என் வீடோ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சு போயிரும். என் காதலை சொல்லாத்ததுக்கு இதுவும் ஒரு காரணம்."


லெட்டரை பிரித்தேன்

"கணக்கு போட Tally,
படம் எடுக்க Trolly,
கல்கத்தாவுல் காளி,
கண்ணீர் விட்டா நீலி,
பாட்டு எழுதறாரு வாலி,
எப்பவுமே என் மனசுல கமலி,
நீ பார்த்தா நான் காலி"

காதல் சொட்டிக்கொண்டிருந்த கடிதத்தை மூடி வைத்தேன்.


"கமலி, என்னை உனக்குத் தெரியும். வேலையும் இருக்கு, நல்ல சம்பளம் கிடைக்கும், உனக்கும் படிப்பு முடியப் போவுது. உன்னை நல்லா வெச்சு காப்பாத்துவேன். உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். சரின்னு சொல்ல தோணிச்சுன்னா நாளைக்கு காலையில கோயிலுக்கு வந்து சொல்லிட்டு போயிடு. நான் வேலையில் சேர்ந்துட்டு பெரியவங்ககிட்டே பேசுறேன். இல்லைன்னு சொல்லமாட்டேன்னு சொல்றதுன்னா இப்பவே சொல்லிரு, இல்லாட்டி கோயிலுக்கு வராத. சரியா" எப்படி பேசனும்னு மனசுக்குள் ஒரு ஒத்திகை நடத்தினேன்.

கமலி வரவும் சடாரென்று அவள் முன்னாடி நின்று கடிதத்தை நீட்டினேன். ஒத்திகை பார்த்த வார்த்தையெல்லாம் சொல்ல நினைச்சப்போ எதுவுமே ஞாபகத்துக்கு வரலை. சே, சொதப்பிருச்சே. என்ன என்பது மாதிரி பார்த்தாள். படிச்சு பாரு என்பது மாதிரி ஒரு கண்ணசைச்சுட்டு இடத்தை காலி பண்ணிட்டேன். இதுக்கு பேர்தான் காதல் பயமா?

எப்பவுமே 6 மணிக்குதான் எனக்கு முழிப்பு வரும், ஆனா அன்னிக்கு மட்டும் 5 மணிக்கே முழிப்பு வந்துருச்சு. சீக்கிரமே குளிச்சுட்டு சாமி கும்பிட்டுட்டு(கோயிலுக்குதான் போறேங்கிறது கூட மறந்து போயிருச்சு) ஓட்டமா ஓடிப்போயி சாமிக்கு ஒரு சலாம் போட்டுட்டு சன்னதியில் உக்காந்துட்டேன். உச்சிகால பூஜையும் நடந்து முடிஞ்சிருச்சு. கமலி மட்டும் வரவே இல்லே. கோயிலை பூட்டுற நேரமும் வந்தாச்சு, எழுந்தரிச்சு வேட்டியிலிருந்த தூசியையும், மனசிலிருந்த கமலியயும் தட்டிவிட்டு சைக்கிள் எடுத்து வீட்டுக்கு கிளம்பினேன். வர வழியே பெரிய வீட்டைப் பார்த்தேன். ஜன்னலில் கமலி தெரிந்தாள், ஆனால் என்னைப் பார்க்கவில்லை, சத்தமில்லாமல் என் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

காலச் சக்கரம் சுழல ஆரம்பிச்சது, PG முடிச்சுட்டு நான் அமெரிக்கா வந்துட்டேன் அப்பப்போ ஊருக்கு போகும்போது எல்லாம் அந்த பெரிய வீட்டு வழி போறதைத் தவிர்த்தேன். 17 வருஷம் ஆச்சு மறுபடியும் ஊருக்கு வந்தபோதுதான் புரோக்கர் பொன்னுசாமி என்னைப் பார்க்க வந்தாரு.

"அன்பு, பெரிய வீடு விலைக்கு வருது, உன்னை விட்டா வாங்குறதுக்கு இந்த ஊர்ல யாரும் இல்லே. சொல்லு முடிச்சுரலாம். எனக்கு கமிஷனா நீ என்ன குடுத்தாலும் சரி"

"என்ன மாமா சொல்றீங்க. பெரிய வீட்டுக்கு காசு பிரச்சினையா என்ன? அவுங்க எதுக்கு விக்கனுங்கிறாங்க"

"இல்லே அன்பு, பையனையும், பொண்ணையும் கட்டி குடுத்தாட்டாங்க. பொண்னை கூட அமெரிக்காவுலதான் கட்டி குடுத்து இருக்காங்களாம், பெரியவரு சொன்னாரு. பெரிய வீட்டம்மா காலமான பின்னாடி எவ்ளோ நாள்தான் பெரியவரு அவ்ளோ பெரிய வீட்ல தனியா இருப்பாரு? அவ்ளோ பெரிய வீட்டை பெரியவராலையும் பார்த்துக்க முடியல. அதான் மெட்ராஸ் போயி அவுங்க தங்கச்சி வீட்ல தங்கிக்கிறேன்னு சொல்றாரு"

"சரி மாமா. வீட்டை ஒரு தடவை பார்த்துட்டு சொல்றேனே, சரியா?"

பெரிய வீட்டு தெருவுக்குள்ள என் கார் நுழைஞ்சப்ப மனசுக்குள்ள் ஏதோ ஒரு பெரிய பாரம் வந்து அழுத்த ஆரம்பிச்சது. இதே தெருவுல நான் சைக்கிள்ல போய்ட்டு இருக்கும்போது ரொம்ப சாதாரணமானவனா இருந்தேன். அதே வீட்டுக்கு டி.வி பார்க்க போவேன். தீபாவளி, பொங்கல் இனாம் வாங்க போவேன். இன்னிக்கு, நல்ல நிலைமைக்கு வந்து அதே வீட்டை வாங்குற அளவுக்கு வந்துட்டேன். பெரிய வீட்டுக்கு முன்னாடி காரை நிறுத்திட்டு வீட்டைப் பார்த்தேன்.

ஒரு சதவீதம் கூட குறியாத கம்பீரம் ஆனா வெள்ளையடிச்சு பல வருஷம் இருக்கலாம்னு தோணிச்சு. கமலி இருந்த அறையின் ஜன்னல் பார்த்தேன், அன்று பார்த்த கமலி அங்கே இல்லை, ஆனால் எனக்கு இன்னும் அதே காதல் இருந்தது, எதிர்பார்ப்பு இருந்தது.

நமக்காக கமலி காத்துட்டு இருக்க மாட்டாளா என்ற கற்பனை. இந்த வீட்டை வாங்க இன்னிக்கு ஆண்டவன் கட்டளை குடுத்து இருக்கான். அன்னிக்கே குடுத்து இருந்தா கமலியையும் சேர்த்து இந்த வீட்டையும் காப்பாத்தி இருப்பேனே. மனசுக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்க வர பெரியவர் வந்தார். தனிமை அவரை வாட்டி இருக்க வேண்டும், கம்பீரம் அந்தளவுக்கு கலைந்து இருந்தது.

"வாப்பா, அன்பு. எப்படி இருக்கிற. கமலிகூட அமெரிக்காதான்பா. முடிஞ்சா ஒரு எட்டு போயி பார்த்துட்டு வா."

"நல்லா இருக்கேன் ஐயா" காலம் மாறினாலும் என் மரியாதை மட்டும் மாறாதது எனக்கே ஆச்சர்யத்தை குடுத்தது.

"வீட்டை ஒரு தடவை பார்த்துக்கிறேங்க ஐயா"

"சரிப்பா"

புரோக்கர் பொன்னுசாமி கூடவே ஒவ்வொரு அறையாய் பார்த்துட்டே வந்தோம். கமலி அறைக்கு சீக்கிரம் போக மனசு அவசரப்பட்டது.

"பார்த்துட்டு வா அன்பு. நான் ஐயாகிட்ட பேசிட்டு இருக்கேன்"

அவர் போனது கமலி அறையில் நுழைந்தேன். பல கற்பனைகள், பல வருசங்கள் போனாலும், இருவருக்குமே கல்யாணம் ஆகியிருந்தாலும் அந்த காதல் மட்டும் கொஞ்சமும் குறையாமல் ஞாபகத்தில் இருந்தது. அவள் பீரோ திறந்து பார்த்தேன். பழைய துணிமணிகள், பட்டு குஞ்சங்கள், பழைய புத்தகங்கள். நான் பரிசளித்த பாலகுமாரணின் "மெர்குரிப்பூக்களும்" இருந்தது. செல்லரித்த நிலைமையில் இன்னும் என் ஞாபகத்தை சொல்லும் ஒரு சுவடு. பிரித்தேன், மங்கலாய் தெரிந்தது என் கையெழுத்து. "என் உயிர் கமலிக்கு". நடுப்பக்கத்தில் அதே காதல் கடிதம், இன்னும் அதே காதலோடு என்னைப்பார்த்து சிரித்தது. மடித்து வைக்கப்பட்டு இருந்த கடித்ததைப் பிரித்தேன். நைந்து போன நிலைமையில் இருந்தாலும் என் எழுத்துக்கள் மட்டும் அப்படியே, கடிதத்தின் பின்னால் பார்த்தேன்

"அன்பு!
எனக்கு மட்டும்"

கமலி எழுதி இருக்கிறாள்.

கடிதத்தை மூடி புத்தகத்துக்குள் வைத்துவிட்டு, காருக்குள் போய் உக்காந்து கொண்டேன்.

"அன்பு. இருப்பா, என்ன சொல்ற வீட்ட பார்த்தியே புடிச்சு இருந்துச்சா? முடிச்சுடலாமா?"

"இல்ல மாமா, வேணாம். விட்டுருங்க. எனக்கு இஷ்டம் இல்லே" வாழ்நாள் முடியர வரைக்கும் இனிமேல் இந்தத் தெரு பக்கம் வரவே கூடாது என நினைத்தபடி என்றபடி ஆக்ஸிலேடரை மிதித்தேன்.

<இது ஒரு உணமைச்சம்பவம்>

Friday, March 4, 2011

The Babysitters 2008 (18+)

எதையுமே நேர்த்தியாக அடுக்கி வைக்கும் பெண் ஷெர்லி என்கிற மாதிரிதான் ஆரம்பிக்கிறது படம். ஷெர்லி ஒரு பதின்ம வயதுப்பெண் அதுவும் Under18. அமெரிக்காவுல Under18னை தொட்டவங்க கெட்டாங்க, கண்டிப்பா சிறைவாசம் கிடைக்கும். அதுக்காக 18க்கு கீழ் வயதுப்பொண்ணுங்க எல்லாம் மேட்டர் பண்ணாம இருக்காங்களான்னு கேட்காதீங்க. 18க்கு கீழே இருக்கிறவங்க, 18 க்கு கீழே இருக்கிறவங்களை____. தெரிஞ்சாதான் தப்புங்கிறதுதான் அமெரிக்காவிலும் நடைமுறை.ஷெர்லி ஒரு பள்ளியில படிக்கிறாள். தன் படிப்பு செலவுக்காக part-time Baby sitting செய்கிறாள், அதாவது குழைந்தைகளை பார்த்துக்கொள்ளும் வேலை, அதுவும் பள்ளி முடிந்ததும் பகுதிநேரமாய். இது அமெரிக்காவில் சகஜம். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போறாங்கன்னா 6 மணி வரைக்கும் daycareல விட்டுருவாங்க. அப்புறம் 2/3 மணிநேரத்துக்கு இப்படியாப்பட்ட baby sitterஐ வெச்சு குழந்தைகளை சமாளிப்பாங்க.

சரி, படத்துக்கு வருவோம். இப்படியாப்பட்ட ஷெர்லி ஒரு வீட்டுல baby sitting செய்கிறாள். ஒரு நாள் அந்த வீட்டு எஜமானன் மைக்கேல், ஷெர்லியை வீட்டில் விட ஆரம்பிக்கிறது ரவுசு
. பசியோட ஷெர்லி இருக்கிறத தெரிஞ்சிகிட்ட மைக்கேல், அவளுக்கு சாப்பாடு வாங்கி தருகிறான்(ர்). அப்படியே அந்த ஊரிலிருக்கும் உடைந்த ரயிலைப் பார்த்துட்டு வரலாம்னு சொல்லி அழைச்சுட்டுப் போறார். அங்கே எக்குத் தப்பான இடத்துல முத்தம் குடுத்துடறாரு. baby sitting க்கு காசு $20ன்னா மைக்கேல் அன்னிக்குன்னு பார்த்து ஷெர்லிக்கு $200 தர்றாரு. அதாவது முத்தத்தை வெளியே சொல்லவேணாம்னு சொல்லி. அடுத்த நாளோ மைக்கேலுக்கும் ஷெர்லிக்கும் கசமுசா ஆகிருது, காசும் $200தர.. அத்தோட முடிஞ்சிருந்தா பரவாயில்லை.

கல்யாணமான மைக்கேலுக்கோ குற்ற உணர்ச்சி கொப்பளிக்க, கூட வேலை செய்யுற ஜெர்ரிகிட்ட நடந்த மேட்டரை எல்லாம் சொல்லி மனசோட பாரத்தை குறைக்கிறான். ஜெர்ரியோ வேற மாதிரி கணக்குப்போட, மைக்கேலும் ஷெர்லிகிட்டே ஜெர்ரி வீட்டுலயும் "baby sitting" செய்யமுடியாம்னுன்னு கேட்கிறான். கேட்கிற அந்த இடத்தில வசனம் கொஞ்சம் ‘நச்’, ”baby sitting" அப்படிங்கிற வார்த்தைய அழுத்திச் சொல்றான். ஷெர்லியும் ஒத்துக்கிடறா.

அடுத்த நாள், ஜெர்ரி வீட்டிலிருந்து கிளம்பி ஷெர்லியை விட்டுட்டு வர்ற கார்ல கிளம்புறாங்க. அப்போ ஜெர்ரி ஷெர்லிகிட்ட ’உனக்கு என்ன பிடிக்கும்?’னு பொதுவா கேட்க ஷெர்லி நேரா மேட்டருக்கு போயிடறா. இந்த இடத்தில்யே நாமளும் கடுப்பாகிருவோம், இப்படியா ஒரு பொண்ணான்னு, ஜெர்ரிக்கும் ஆச்சர்யம். ஆனா இதை எதிர்பார்த்துதானே கூட்டிகிட்டு வந்தேங்கிற மாதிரி நடந்துக்கிறா ஷெர்லி. ஷெர்லியும் பள்ளிக்கூடத்துல இதைப் பத்திப் பேச ஒரு குழுவே தயாராகிடுது. கிட்டதட்ட ஒரு மாமி ரேஞ்சுக்கு மாறிடறா ஷெர்லி. யார் “போனாலும்” இவளுக்கு வர வேண்டியது 20%. இதுல மட்டும் ஷெர்லி ரொம்ப கண்டிப்பு. timetable போட்டு schedule பண்ணி, ஒரு பெரிய லெவல்ல project managementஏ செய்ய ஆரம்பிக்கிறா ஷெர்லி.

அப்பத்தான், குழுவுல இணைஞ்ச ப்ரெண்டாங்கிற பொண்ணோட உறவுக்கார பொண்ணு நடினே டபுள் கிராஸ் செய்ய ஆரம்பிக்கிறா.  வாடிக்கையாளர்கிட்டே பணத்தைக் குறைச்சு கேட்கிறது, ஷெர்லிக்கு தெரியாம போயிட்டு வரது, கமிசன் தராம டபாய்க்கிறது, இப்படி நெறைய கோக்கு மாக்கு பண்றா. இப்படி. இதைப் பார்த்துட்டு ஷெர்லி, கண்ணகி ரேஞ்சுக்கு கலாட்ட செய்றா. அப்பத்திக்கு மட்டும் அடங்கிட்டு போயிடறா நடினே. இப்படி நாளொரு ’மேனி’யும் பொழுதொரு ‘வண்ணமா’ கழியுது.

மைக்கேல் சைடுல நண்பர்கள் ஒரு 6 பேரும், ஷெர்லி சைடுல 6 பேரும் ஒரு குழுவா ஒரு சுற்றுலா போறாங்க. அங்கே போதைப் பொருளை எல்லாப் பொண்ணுங்களுக்கும் கட்டாயப்படுத்தி குடுத்து சல்லாபிக்கிறாங்க. போதைப் பொருளால பிரண்டாவுக்கு மட்டும் ஞானோதயம் வந்திட, மாறிடறா. சுத்தமா குழுவுல இருந்தே கழண்டுக்கிறா. ஷெர்லியும் மறுபடியும் பிரண்டாவை குழுவுக்குள்ள இணைச்சிக்க முயற்சி பண்றா, முடியாதுன்னு தெரிஞ்சவுடனே விட்டுடறா.

மறுபடியும் நடினே டபுள் கிராஸ் பண்ண மைக்கேல் துணையோட ஷெர்லி  ஒரு காருலேயே ‘வேலை’ விசயமா இருந்த நடினேவை பொண்ணுங்க இழுத்துப்போட்டு அடிக்க, காருல இருந்த ஆளை மைக்கேல் அடிச்சுப் பின்றான். சண்டையோட முடிவுல பார்த்தா காருல இருந்த புது வாடிக்கையாளர் ஷெர்லியோட அப்பா. அம்புட்டுத்தான் ஷெர்லி அங்கேயே அழுது, திருந்திடறதா. படம் முடியும் போது துள்ளுவதோ இளமையில தனுசு வர மாதிரி, ஷெர்லி ஒரு கார்ல மைக்கேல் வீட்டுக்கு முன்னாடி வந்து, தான் திருந்திட்டதாகவும், நல்ல நிலைமையில இருப்பாதாவும் சொல்லி கதையை முடிக்கிறாங்க/

கண்டிப்பா இது வயசுக்கு வந்தவங்க மட்டுமே பார்க்க வேண்டிய படம். XX சீன்கள் கொஞ்சம் உண்டு. படம் முழுக்க மேட்டர், மேட்டர் சம்பந்தப் பட்ட காட்சிகளே வந்துட்டு இருக்கும். ஷெர்லியா நடிச்ச Katherine Waterstonம், மைக்கேலா நடிச்ச John Leguizamoம் நல்லா நடிச்சிருக்காங்க. அதுவும் john ஒரு குற்றவுணர்வோடையும் கொஞ்சம் possessivenessஆவும் நடிச்சிருக்கிறது அபாரம்.

இந்தப் படத்துக்கு பயங்கர critics இருந்துச்சு. இந்தக் இடுகையப் பாருங்க தெரியும். படத்தை ஒரு முறை கில்மாவா பார்க்கலாம், 18+



Starring
  • Katherine Waterston
  • John Leguizamo
  • Cynthia Nixon
  • Andy Comeau

Music - Chad Fischer

Cinematography - Michael McDonough

Editing - Zene Baker

Written & Directed - David Ross  

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)