Wednesday, March 16, 2011

பெரிய வீட்டு "கமலி" - 3 (தொடர்கதை) இறுதிப்பகுதி

“என்னங்க, விசயம் தெரியுங்களா?’ இது கோயமுத்தூர் குசும்பு செந்திலிடம்


‘என்னங்க?’

’எங்க வூட்டுக்காரர் உங்க மனைவியைக் காதலிச்சாராம்’ என்றதும்..


முதல் பகுதி  | இரண்டாம் பகுதி
சட்டென முகம் மாறியது எனக்கு. தெரியாமல் சொல்லிவிட்டோமோ என்று என் மனைவியும் செந்திலை நோக்க...

’ம்ம் சொல்லுங்க. அப்புறம் என்னாச்சு?’ ஏதோ கதை கேட்பது போல சாப்பிட்டுக்கொண்டே செந்தில் கேட்க, குழந்தைகளும் ஆர்வம் பீறிட ஒவ்வொருத்தராய், நடந்ததை கேட்க ஆரம்பித்தார்கள், இல்லை இல்லை நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.

எனக்கோ தர்ம சங்கடம், வேகமாய் சாப்பிடுவதைப் போல தலை நிமிராமல் இருந்தேன், தலை நிமிருவதைத் தவிர்த்தேன். இது கூச்சமா? குற்றவுணர்ச்சியா? வெட்கமா? தன்னுடைய மனைவியைக் காதலித்தவன் இவன்தான் என செந்தில் என்னை முறைத்துக்கொண்டிருப்பாரோ? இப்படி கூறு கெட்டத்தனமாகவா போட்டு உடைப்பாள் மனைவி? கமலி என்னைப் பற்றி என்ன நினைப்பாள், அவளுடைய குடும்பத்தில் பிரச்சினை ஆகிவிடாதா?


’என்ன அன்பு? நீங்க சொல்லுங்களேன்,நீங்கதானே காதலிச்சீங்க? நீங்க சொன்னாத்தான் அதுல ஒரு உயிர் இருக்கும்’ என்றாரே பார்க்கலாம், செந்தில்.


இப்படி ஒரு நிலை வருமென கொஞ்சமும் நான் யோசிக்கவில்லை. ஒரு தலையாய்க் காதலித்த என் முன்னாள் காதலி, அவளுடைய கணவன் அவர்களுடைய இரு வாரிசுகள், என் மனைவி, என் வாரிசுகள் இவர்களுக்கு முன்னால் என் காதலைப் பற்றி சொல்லவேண்டுமாம்? அதுவும் ஒரு சொல்லாத காதல் வேறு. 20 வருடங்களுக்கு முன்னால் பூத்த காதல் இன்னும் என் மனதில் அப்படியே இருக்குமா? சொல்ல நினைத்தால் அதே உணர்வுகளோடு சொல்ல முடியுமா? பல எண்ணங்கள், சிக்னல் இல்லாத 4 ரோட்டில் ஓடும் மோட்டார் பைக்குகளைப் போல எண்ணங்கள், குறுக்கும் நெடுக்குமாக ஓடியது.

கமலி என்னைக் காதலிப்பதாய் அவளது டைரியில் எழுதியிருந்ததை என் மனைவியிடம் மறைத்திருந்தேன்.ஏனெனத் தெரியாமல், தெரிந்தே மறைத்த விசயம் அது.

’அப்பா சொல்லுங்கப்பா’ என்றான் என் ஆண் வாரிசு.

சொல்லிவிட வேண்டியதுதான் என நினைத்து நிமிர்ந்த வேளையில் என் மனைவியே சொல்ல ஆரம்பித்தாள். அவளுக்குத் தெரியும், என் நிலைமையப் பற்றி. இந்த நேரத்தில் அவள்தான் என்னைக் காப்பாற்றினாள், காப்பாற்றவும் முடியும். நான் சொல்ல நினைத்த விசயங்கள், மறந்த விசயங்கள் எல்லாவற்றையும் ஒரு தோரணமாகக் கட்டினாள், பூச்சரம் தொடுப்பதைப் போல தொடுத்தாள், ஒரு தேர்ந்த ஓவியனைப் போல உணர்வுகளை வரைந்தாள். நான் காதலித்ததை விட அவள் சொன்ன பாங்கு என் பழைய காதல் மேலும் மெருகேறியது. அவள் சொன்னதில் ஒரு காதல் இருந்தது, என் காதலையும் சேர்த்து. ஒரு, ஒருதலைக்காதலைக்கூட இப்படிச் சொல்லமுடியுமா என வியந்தேன். என் மனைவியும் நான் காத்திருந்தது வரை, நீட்டி முழக்கி சொல்லிமுடித்தாள்.

அறையில் நிசப்தம், யாரும் சாப்பிடவில்லை. அவள்
சொன்ன கதையின் சோகம் எல்லோரையும் தாக்கியிருந்தது. இந்த நேரத்தில் ஒரு இடைவெளி தேவைப்பட்டது. கை கழுவ எல்லாரும் எழுந்திருக்க ஆரம்பித்தோம். 15 நிமிடம் கழித்து ஏதோ ஒரு காரணத்திற்காக சமையலறை சென்ற போது, கமலி தனித்து, தலை குனிந்தவாறு இருந்தாள். அவள் முதுகு மட்டுமே தெரிந்திருந்ததால் ‘என்னங்க, கொஞ்சம் தண்ணி வேண்டுமே’ என்ற போது சுதாரித்து சட்டெனத்திரும்பினாள். அவள் கண்களில் கண்ணீரும் ஏதோ ஒரு சந்தோச முடிவின் திருப்தியும் இருந்தது. இருவருமே காதலித்திருக்கிறோம், காதல் ஒன்று சேரவில்லை, காதல் பரிமாற்றமே கொள்ளாத நிலையிலும், இருவரும் காதலித்திருந்தோம் என நினைப்பே எங்கள் கண்களில் தெரிந்தது. அதுவும் ஒரு நொடி, ஒரே நொடி..

’நீங்க போங்க தண்ணீர் கொண்டு வரேன்’

‘சரிங்க’

மீண்டும் ஆரம்பித்தது செந்திலுக்கும் எனக்குமான பேச்சு. எங்கள் வீட்டம்மாவும், கமலியும் மீண்டும் பேச ஆரம்பிக்க, குழந்தைகள் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தார்கள்.

செந்தில்தான் கேட்டார் ‘ஏங்க நீங்க கமலியைத் தேடவே இல்லையா?’

’இல்லீங்க, வேலை கிடைச்ச பிறகு அதுக்கே நேரம் சரியாப்போச்சு. பிற்பாடு கல்யாணம், வாரிசுகள். மறந்துட்டேங்க’ என்ற போது இருவருமே அடக்க முடியாமல் சிரித்துவிட்டிருந்தோம்.

ஓஹ், நானும் சிரித்திருக்கேன், அப்போ அது உண்மைதான். எனக்கு இந்தக் காதல் மறந்து போச்சு, காதல் கூட மறந்து போவுமா என்ன?

‘காலம் என்னத்தையெல்லாம் மறக்க வெக்குது பார்த்தீங்களா அன்பு’, என்றார் செந்தில். பிறகு நிறைய பேசினோம். காதல் பேச்சு, அத்தோடு முடிந்து போனது. கிளம்பும் நேரம் வர இரவு சாப்பாட்டை கட்டி குடுத்தனுப்பினாள் கமலி. அடுத்த வாரம் அவளின் குடும்பம் எங்கள் வீட்டிற்கு வருவதாய் என் மனைவிடம் வாக்களித்தாள் கமலி, நான் என் வாரிகள் வண்டியில் அமர்ந்திருக்க பெண்கள் இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள் ’அடுத்த வாரம் பேசிக்கலாம்மா, இல்லாட்டி ஃபோன்ல பேசிக்குங்க. வா நேரமாச்சு’ என்ற என் குரல் கேட்டு வந்தமர்ந்தாள் மனைவி. வண்டியைக் கிளப்பினேன்.

வெகு திருப்தியுடன் அமைந்தது அந்தச் சந்திப்பு. 20 வருடம் இதற்காகவா காத்திருந்தோம். ஏன் சந்தித்தோம்? ஏன் குடும்பத்தோடு வந்தோம்? பேசினோம்? எல்லாம் கனவு போல ஓடியது. சாலையின் இரு ஓரங்களிலும் மரங்கள் வேகமாய் பின்னோக்கி வேகமாய் ஓட ஆரம்பித்தது. நிறைவேறாத ஆசை ஏதோ இன்று நிறைவேறியது போன்றதொரு நினைப்பு. மனைவியைப் பார்த்தேன், களைப்பில் தூங்க ஆரம்பித்திருந்தாள், என் குழந்தைகளும்.

எனக்கும் கமலிக்கு இடையே இருந்த காதல் ஒரு நொடிப்பொழுதில் ஆரம்பித்து அதே நொடியில் முடிந்தும் போனதுதான் விந்தையாக இருந்தது. காலையில் கிளம்பும் போது மனது முழுக்க கேள்விகள், திரும்பும் போதோ....

அங்கே மீதி இருந்தது நட்பு தோய்ந்த அன்பு மட்டுமே.

பட உதவி என் ஆதர்ச ஓவியர் இளையராஜா

5 comments:

  1. நல்லா இருக்கு... துணைக் கதாபாத்திரம் விடுபட்டு இருக்கற மாதிரி ஒரு உணர்வு!

    ReplyDelete
  2. //எனக்கும் கமலிக்கு இடையே இருந்த காதல் ஒரு நொடிப்பொழுதில் ஆரம்பித்து அதே நொடியில் முடிந்தும் போனதுதான் விந்தையாக இருந்தது. காலையில் கிளம்பும் போது மனது முழுக்க கேள்விகள், திரும்பும் போதோ....

    அங்கே மீதி இருந்தது நட்பு தோய்ந்த அன்பு மட்டுமே.//

    இளா,
    அருமையான கதை.. மிக நன்றாகக் கவிதைத்தனமான முடிவு.. அனுபவித்துப் படித்தேன் மூன்று பாகங்களையும்..

    வாழ்த்துக்கள்..

    அன்புடன்
    சீமாச்சு...

    ReplyDelete
  3. //விடுபட்டு இருக்கற மாதிரி ஒரு உணர்வு// துணைக்கதாப்பாத்திரம்னு எதைச் சொல்றீங்க? கமலி பக்கமா?

    ReplyDelete
  4. தொடர்கிறேன் இளா...

    ReplyDelete
  5. இன்னைக்கு ஒரு பதிவர் சந்திப்பு நடக்குது ஈரோட்ல..ஹா ஹா

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)