"கமலி"
அவள் பேரை நினைக்கும் போதே மனசுக்குள் ஒரு பேரானந்தம். "கமலி என் லவ்க்கு ஓக்கேன்னு சொல்லிடனும்" மனசுக்குள் வேண்டிக்கொண்டேன்.
"அடடா, சொல்ல மறந்துட்டேனே. என் பேரு அன்பு, இப்போதான் BTech முடிச்சேன், கேம்பஸ்ல வேலை கிடைச்சது. ஆனா மேல் படிப்பு படிக்கனும்னு காத்துட்டு இருக்கேன். MITல அட்மிஷனும் ரெடி, அமெரிக்காவுல வேலையும் ரெடி. ஆண்டவன் அந்த அளவுக்கு எனக்கு கருணை காட்டி இருக்காரு. எதை எடுத்துக்கிறதுங்கிறது கமலி சொல்ற வார்த்தையில்தான் இருக்கு. கமலிய சின்ன வயசுல இருந்தே காதலிக்கிறேன். ஆனா, நல்ல நிலைமைக்கு வந்த பின்னாடிதான் அவகிட்டே என் காதலை சொல்லனும்னு ஒரு பிடிவாதம். கமலி சரின்னுசொல்லிட்டா ஏதோ ஒரு ஆஃபர் லெட்டரை எடுத்துகிட்டே வேலையில் சேர்ந்துடலாம். அவளிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் மனசெல்லாம் பாரம் குறைஞ்ச மாதிரி ஆகிடும். காதலை சுமக்கிறத விட பெரிய பாரம் ஒன்னும் இல்லீங்க. சட் புட்டுனு அதை அவகிட்ட இறக்கி வெச்சுட்டா, அப்புறம் அவள் பாடு. ஊர்ல பெரிய வீடு அவுங்களது, பெரிய குடும்பம் ஒரே பொண்ணு. அவுங்க வீட்டை சுத்தி பார்க்கவே அரை மணிநேரம் ஆகும். என் வீடோ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சு போயிரும். என் காதலை சொல்லாத்ததுக்கு இதுவும் ஒரு காரணம்."
"கணக்கு போட Tally,
படம் எடுக்க Trolly,
கல்கத்தாவுல் காளி,
கண்ணீர் விட்டா நீலி,
பாட்டு எழுதறாரு வாலி,
எப்பவுமே என் மனசுல கமலி,
நீ பார்த்தா நான் காலி"
காதல் சொட்டிக்கொண்டிருந்த கடிதத்தை மூடி வைத்தேன்.
"கமலி, என்னை உனக்குத் தெரியும். வேலையும் இருக்கு, நல்ல சம்பளம் கிடைக்கும், உனக்கும் படிப்பு முடியப் போவுது. உன்னை நல்லா வெச்சு காப்பாத்துவேன். உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். சரின்னு சொல்ல தோணிச்சுன்னா நாளைக்கு காலையில கோயிலுக்கு வந்து சொல்லிட்டு போயிடு. நான் வேலையில் சேர்ந்துட்டு பெரியவங்ககிட்டே பேசுறேன். இல்லைன்னு சொல்லமாட்டேன்னு சொல்றதுன்னா இப்பவே சொல்லிரு, இல்லாட்டி கோயிலுக்கு வராத. சரியா" எப்படி பேசனும்னு மனசுக்குள் ஒரு ஒத்திகை நடத்தினேன்.
கமலி வரவும் சடாரென்று அவள் முன்னாடி நின்று கடிதத்தை நீட்டினேன். ஒத்திகை பார்த்த வார்த்தையெல்லாம் சொல்ல நினைச்சப்போ எதுவுமே ஞாபகத்துக்கு வரலை. சே, சொதப்பிருச்சே. என்ன என்பது மாதிரி பார்த்தாள். படிச்சு பாரு என்பது மாதிரி ஒரு கண்ணசைச்சுட்டு இடத்தை காலி பண்ணிட்டேன். இதுக்கு பேர்தான் காதல் பயமா?
எப்பவுமே 6 மணிக்குதான் எனக்கு முழிப்பு வரும், ஆனா அன்னிக்கு மட்டும் 5 மணிக்கே முழிப்பு வந்துருச்சு. சீக்கிரமே குளிச்சுட்டு சாமி கும்பிட்டுட்டு(கோயிலுக்குதான் போறேங்கிறது கூட மறந்து போயிருச்சு) ஓட்டமா ஓடிப்போயி சாமிக்கு ஒரு சலாம் போட்டுட்டு சன்னதியில் உக்காந்துட்டேன். உச்சிகால பூஜையும் நடந்து முடிஞ்சிருச்சு. கமலி மட்டும் வரவே இல்லே. கோயிலை பூட்டுற நேரமும் வந்தாச்சு, எழுந்தரிச்சு வேட்டியிலிருந்த தூசியையும், மனசிலிருந்த கமலியயும் தட்டிவிட்டு சைக்கிள் எடுத்து வீட்டுக்கு கிளம்பினேன். வர வழியே பெரிய வீட்டைப் பார்த்தேன். ஜன்னலில் கமலி தெரிந்தாள், ஆனால் என்னைப் பார்க்கவில்லை, சத்தமில்லாமல் என் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
காலச் சக்கரம் சுழல ஆரம்பிச்சது, PG முடிச்சுட்டு நான் அமெரிக்கா வந்துட்டேன் அப்பப்போ ஊருக்கு போகும்போது எல்லாம் அந்த பெரிய வீட்டு வழி போறதைத் தவிர்த்தேன். 17 வருஷம் ஆச்சு மறுபடியும் ஊருக்கு வந்தபோதுதான் புரோக்கர் பொன்னுசாமி என்னைப் பார்க்க வந்தாரு.
"அன்பு, பெரிய வீடு விலைக்கு வருது, உன்னை விட்டா வாங்குறதுக்கு இந்த ஊர்ல யாரும் இல்லே. சொல்லு முடிச்சுரலாம். எனக்கு கமிஷனா நீ என்ன குடுத்தாலும் சரி"
"என்ன மாமா சொல்றீங்க. பெரிய வீட்டுக்கு காசு பிரச்சினையா என்ன? அவுங்க எதுக்கு விக்கனுங்கிறாங்க"
"இல்லே அன்பு, பையனையும், பொண்ணையும் கட்டி குடுத்தாட்டாங்க. பொண்னை கூட அமெரிக்காவுலதான் கட்டி குடுத்து இருக்காங்களாம், பெரியவரு சொன்னாரு. பெரிய வீட்டம்மா காலமான பின்னாடி எவ்ளோ நாள்தான் பெரியவரு அவ்ளோ பெரிய வீட்ல தனியா இருப்பாரு? அவ்ளோ பெரிய வீட்டை பெரியவராலையும் பார்த்துக்க முடியல. அதான் மெட்ராஸ் போயி அவுங்க தங்கச்சி வீட்ல தங்கிக்கிறேன்னு சொல்றாரு"
"சரி மாமா. வீட்டை ஒரு தடவை பார்த்துட்டு சொல்றேனே, சரியா?"
பெரிய வீட்டு தெருவுக்குள்ள என் கார் நுழைஞ்சப்ப மனசுக்குள்ள் ஏதோ ஒரு பெரிய பாரம் வந்து அழுத்த ஆரம்பிச்சது. இதே தெருவுல நான் சைக்கிள்ல போய்ட்டு இருக்கும்போது ரொம்ப சாதாரணமானவனா இருந்தேன். அதே வீட்டுக்கு டி.வி பார்க்க போவேன். தீபாவளி, பொங்கல் இனாம் வாங்க போவேன். இன்னிக்கு, நல்ல நிலைமைக்கு வந்து அதே வீட்டை வாங்குற அளவுக்கு வந்துட்டேன். பெரிய வீட்டுக்கு முன்னாடி காரை நிறுத்திட்டு வீட்டைப் பார்த்தேன்.
ஒரு சதவீதம் கூட குறியாத கம்பீரம் ஆனா வெள்ளையடிச்சு பல வருஷம் இருக்கலாம்னு தோணிச்சு. கமலி இருந்த அறையின் ஜன்னல் பார்த்தேன், அன்று பார்த்த கமலி அங்கே இல்லை, ஆனால் எனக்கு இன்னும் அதே காதல் இருந்தது, எதிர்பார்ப்பு இருந்தது.
நமக்காக கமலி காத்துட்டு இருக்க மாட்டாளா என்ற கற்பனை. இந்த வீட்டை வாங்க இன்னிக்கு ஆண்டவன் கட்டளை குடுத்து இருக்கான். அன்னிக்கே குடுத்து இருந்தா கமலியையும் சேர்த்து இந்த வீட்டையும் காப்பாத்தி இருப்பேனே. மனசுக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்க வர பெரியவர் வந்தார். தனிமை அவரை வாட்டி இருக்க வேண்டும், கம்பீரம் அந்தளவுக்கு கலைந்து இருந்தது.
"வாப்பா, அன்பு. எப்படி இருக்கிற. கமலிகூட அமெரிக்காதான்பா. முடிஞ்சா ஒரு எட்டு போயி பார்த்துட்டு வா."
"நல்லா இருக்கேன் ஐயா" காலம் மாறினாலும் என் மரியாதை மட்டும் மாறாதது எனக்கே ஆச்சர்யத்தை குடுத்தது.
"வீட்டை ஒரு தடவை பார்த்துக்கிறேங்க ஐயா"
"சரிப்பா"
புரோக்கர் பொன்னுசாமி கூடவே ஒவ்வொரு அறையாய் பார்த்துட்டே வந்தோம். கமலி அறைக்கு சீக்கிரம் போக மனசு அவசரப்பட்டது.
"பார்த்துட்டு வா அன்பு. நான் ஐயாகிட்ட பேசிட்டு இருக்கேன்"
அவர் போனது கமலி அறையில் நுழைந்தேன். பல கற்பனைகள், பல வருசங்கள் போனாலும், இருவருக்குமே கல்யாணம் ஆகியிருந்தாலும் அந்த காதல் மட்டும் கொஞ்சமும் குறையாமல் ஞாபகத்தில் இருந்தது. அவள் பீரோ திறந்து பார்த்தேன். பழைய துணிமணிகள், பட்டு குஞ்சங்கள், பழைய புத்தகங்கள். நான் பரிசளித்த பாலகுமாரணின் "மெர்குரிப்பூக்களும்" இருந்தது. செல்லரித்த நிலைமையில் இன்னும் என் ஞாபகத்தை சொல்லும் ஒரு சுவடு. பிரித்தேன், மங்கலாய் தெரிந்தது என் கையெழுத்து. "என் உயிர் கமலிக்கு". நடுப்பக்கத்தில் அதே காதல் கடிதம், இன்னும் அதே காதலோடு என்னைப்பார்த்து சிரித்தது. மடித்து வைக்கப்பட்டு இருந்த கடித்ததைப் பிரித்தேன். நைந்து போன நிலைமையில் இருந்தாலும் என் எழுத்துக்கள் மட்டும் அப்படியே, கடிதத்தின் பின்னால் பார்த்தேன்
"அன்பு!
எனக்கு மட்டும்"
கமலி எழுதி இருக்கிறாள்.
கடிதத்தை மூடி புத்தகத்துக்குள் வைத்துவிட்டு, காருக்குள் போய் உக்காந்து கொண்டேன்.
"அன்பு. இருப்பா, என்ன சொல்ற வீட்ட பார்த்தியே புடிச்சு இருந்துச்சா? முடிச்சுடலாமா?"
"இல்ல மாமா, வேணாம். விட்டுருங்க. எனக்கு இஷ்டம் இல்லே" வாழ்நாள் முடியர வரைக்கும் இனிமேல் இந்தத் தெரு பக்கம் வரவே கூடாது என நினைத்தபடி என்றபடி ஆக்ஸிலேடரை மிதித்தேன்.
<இது ஒரு உணமைச்சம்பவம்>
இப்பவெல்லாம் அடிக்கடி காதல் கதை எழுதறீங்க போல ;)
ReplyDeleteஅண்ணா, என்ன சொல்ல வறீங்க? இந்த மாதிரி எல்லாம் சொன்னா என்னை மாதிரி சின்ன பசங்களுக்குப் புரியாது.
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஏதோ புரியுது. சரியாத்தான் புரியுதுன்னு நெனைக்கிறேன். ஆனால் முடிவு ஊகிச்ச மாதிரியே இருந்தது.
ReplyDelete// இலவசக்கொத்தனார் said...
அண்ணா, என்ன சொல்ல வறீங்க? இந்த மாதிரி எல்லாம் சொன்னா என்னை மாதிரி சின்ன பசங்களுக்குப் புரியாது. //
அப்படியே என்னைப் போல கெழங்கட்டைகளுக்கும் புரியுதே! என்ன செய்றது...
கதை நல்லா இருக்கு இளா !!
ReplyDeleteபாராட்டுக்கள்.. ஜீரா சொல்றதப் பார்த்தா நெறய்ய காதல் வடுக்களை குத்தி கிழிச்சி ரத்தம் வர வெச்சிட்டீங்கன்னு தெரியுது..
அன்புடன்,
சீமாச்சு
சூப்பர்! fitst love is best love என்பதை குறிக்கும் விதமாக இருக்கிறது உங்கள் கதை. தொடர்ந்து இது போன்ற தரமான கதைகளை எழுதவும்
ReplyDeleteகாதல் கடுதாசி எல்லாம் கரெக்டுதான்.
ReplyDeleteஅந்த கவிதையினாலதான் கதை கந்தலாயிடுச்சின்னு நினைக்கிறேன்.
அண்ணே...ஒரே குழப்பமாக இருக்கு.
ReplyDeleteஇளான்னா இளமை
ReplyDeleteஇளான்னா காதல்
இளான்னா இளமைக் காதல்
நல்லாப் புரியுதுங்கண்ணா...
ஜிராவின் நினைவலைகளையே தட்டி வுடறீங்க-ன்னா...:-)
சரி...அந்த பெரிய வீட்டுப் படம், இன்னும் பல கதைகள் சொல்லும் போல தெரிகிறதே! கரெக்டு தானே சீமாச்சு? :-)
ஹும்ம்ம்ம்...
ReplyDeleteDear Vivasai,
ReplyDeleteI have not set the tamil font yet. Your story has been developed very well. Built up konjam adhigamaga ve irrukku.
Nanraagavum aarambhamum, moodivum irrundhadhu. Keep it up.
Deva
இளா,
ReplyDeleteஇதுவும் உங்க சொந்த கதை சோக கதைதானா?
அவரவர் வாழ்க்கையில் ...
ReplyDeleteஇளா, உண்மை சம்பவம்ன்னு உங்க கதையில்லையே? காரணம் நீங்க வேற சில உண்மை காதல் கதை எழுதியதாய் நினைவு :-)))
ReplyDelete//லெட்டரை பிரித்தேன்
ReplyDelete"கணக்கு போட Tally,
படம் எடுக்க Trolly,
கல்கத்தாவுல் காளி,
கண்ணீர் விட்டா நீலி,
பாட்டு எழுதறாரு வாலி,
எப்பவுமே என் மனசுல கமலி,
நீ பார்த்தா நான் காலி"
காதல் சொட்டிக்கொண்டிருந்த கடிதத்தை மூடி வைத்தேன்.//
சம்மா சொல்லக்கூடாது
எப்படிங்க இப்படி ஒரு கவிதை
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteஇப்பவெல்லாம் அடிக்கடி காதல் கதை எழுதறீங்க போல ;) //
என்ன வருதோ அதைத்தானே எழுத முடியும்.
//இலவசக்கொத்தனார் said...
அண்ணா, என்ன சொல்ல வறீங்க? இந்த மாதிரி எல்லாம் சொன்னா என்னை மாதிரி சின்ன பசங்களுக்குப் புரியாது.//
கட்டையில போற வயசுன்னு யாரோ சொன்னதா ஞாபகம். என் காதுல ஏதோ பிரச்சினையோ?
// G.Ragavan said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஏதோ புரியுது. சரியாத்தான் புரியுதுன்னு நெனைக்கிறேன். ஆனால் முடிவு ஊகிச்ச மாதிரியே இருந்தது.//
இந்த டகால்டி யெல்லாம் வேணாம். அப்புறம் எதுக்கு இப்படி ஒரு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
//கதை நல்லா இருக்கு இளா !!//
ReplyDeleteநன்றீங்க சீமாச்சு
//மருதநாயகம் said...
சூப்பர்! fitst love is best love//
ஆஹா, நான் எங்கேய்யா First Lovennu சொன்னேன். கிளப்பி விட்டுருவீங்களே.
//தொடர்ந்து இது போன்ற தரமான கதைகளை எழுதவும் //
ஹ்ம்ம், இதுக்கு எல்லாம் ரொம்ப தூரம் போக வேண்டி இருக்கே
// // G.Ragavan said...
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஏதோ புரியுது. சரியாத்தான் புரியுதுன்னு நெனைக்கிறேன். ஆனால் முடிவு ஊகிச்ச மாதிரியே இருந்தது.//
இந்த டகால்டி யெல்லாம் வேணாம். அப்புறம் எதுக்கு இப்படி ஒரு ம்ம்ம்ம்ம்ம்ம்ம். //
அது ஏன்னா....ஏன் இப்பிடி முடிச்சீங்கன்னு யோசிக்கிறேன். கதையின் மையக்கருத்து தொடங்கும் ஆதிப்புள்ளின் பாதிப்புள்ளியை இளா இன்னும் இந்தப் பெரியபுள்ளி தொலைத்த புள்ளியைத்தான் தேட வேண்டும் என்று இப்பொழுதே புள்ளி வைத்து நீங்கள் கோலம் போட வேண்டும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteசீமாச்சு, உங்க பின்னூட்டம் பதிவின் போக்கை திசை திருப்பற மாதிரி இருக்கிறதனால Deleted. (ஓவரா போய்ட்டேனோ?)
ReplyDelete//கதையின் மையக்கருத்து தொடங்கும் ஆதிப்புள்ளின் பாதிப்புள்ளியை இளா இன்னும் இந்தப் பெரியபுள்ளி தொலைத்த புள்ளியைத்தான் தேட வேண்டும்//
ReplyDeleteஜி.ரா பெரும் கரும்புள்ளியா நீரு. என்ன சொல்ல வர்றீரு?
2007 பதிவை 2011க்கு மாத்தியிருங்கிறதுக்க்கு ஒரு test comment
ReplyDelete***இந்தத் தெரு பக்கம் வரவே கூடாது என நினைத்தபடி என்றபடி ஆக்ஸிலேடரை மிதித்தேன்.***
ReplyDeleteபிரசவ வைராக்கியம்! :)
***"கணக்கு போட Tally,
ReplyDeleteபடம் எடுக்க Trolly,
கல்கத்தாவுல் காளி,
கண்ணீர் விட்டா நீலி,
பாட்டு எழுதறாரு வாலி,
எப்பவுமே என் மனசுல கமலி,
நீ பார்த்தா நான் காலி"***
யப்பா!!!! :)
//இது ஒரு உணமைச்சம்பவம்//
ReplyDeleteஇளா, இது ஆரோட உண்மைச் சம்பவம்?
கதை, உலக மகாக் கவிதை எல்லாம் ஒரு இடுகையில் - கலக்கறே இளா..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
தொடர்கதைக்கு “அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்”ன்னு கமெண்ட் போடறதுதானே சம்பரதாயம். யாருமே அப்படி போடவே இல்லையே ஏன்??
ReplyDeleteசரி நான் கமெண்ட் போடறேன்..
இளா, அடுத்த பகுதிக்கு வெய்ட்டிங், சீக்கிரம் எழுதுங்க..
(இதுக்கு நீ கமெண்ட் போடாமலே இருந்திருக்கலாமுன்னு திட்டுறது கேக்குது)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//2007 பதிவை 2011க்கு மாத்தியிருங்கிறதுக்க்கு ஒரு test கமெண்ட்//
ReplyDeleteகாலம் மாறினாலும் காதல் மாறலை என்பதற்கு இந்த கமெண்ட் சிறந்த உதாரணம் ..
ஸ்ரீராம் .. என்ன எதுன்னு கேளுங்க இளா கிட்ட
இளா, அடுத்த பகுதிக்கு வெய்ட்டிங், சீக்கிரம் எழுதுங்க..
ReplyDelete(இதுக்கு நீ கமெண்ட் போடாமலே இருந்திருக்கலாமுன்னு திட்டுறது கேக்குது)
என்றும் அன்புடன்
புளியங்குடி நசரேயன்
அடுத்த ரெண்டு பாகமும் போட்டாச்சுங்க.
ReplyDelete