Wednesday, March 16, 2011

பெரிய வீட்டு "கமலி" - 2 (தொடர்கதை)

முதல் பாகம்



"அன்பு!
எனக்கு மட்டும்"

கமலி எழுதி இருக்கிறாள்.

கடிதத்தை மூடி புத்தகத்துக்குள் வைத்துவிட்டு, காருக்குள் போய் உக்காந்து கொண்டேன்.

"அன்பு. இருப்பா, என்ன சொல்ற வீட்ட பார்த்தியே புடிச்சு இருந்துச்சா? முடிச்சுடலாமா?"

"இல்ல மாமா, வேணாம். விட்டுருங்க. எனக்கு இஷ்டம் இல்லே" வாழ்நாள் முடியர வரைக்கும் இனிமேல் இந்தத் தெரு பக்கம் வரவே கூடாது என நினைத்தபடி என்றபடி ஆக்ஸிலேடரை மிதித்தேன்.


வீட்டைப் பார்த்து வந்தவுடன் ஒரு வாரம் அதே ஞாபகமாய் இருந்து, பிறகு எப்போவாவது நினைத்து, அப்புறம் நினைக்க மறந்தும் போய் இரண்டு வருசமாச்சு. புது வருசம் அன்னிக்கு கண்டிப்பாக கோவிலுக்கு போவது பழக்கம். இது சின்ன வயசுல இருந்தே இருந்தாலும், அமெரிக்கா வந்தும் தொடருது.

”டொயிங்க்”


சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன், சிரித்தபடி ஒருவர் அருகில் வந்தார். எங்கேயோ இவரை.. இல்லை இவனை.. அட சுப்பு. பள்ளித்தோழன். நான் முதல் பெஞ்ச் என்றால் இவன் மூன்றாவது பெஞ்ச். ’என்னடா அன்பு? எப்படி இருக்க? இந்த மாநிலம்னு தெரியும், ஆனா இந்தக் கோயிலுக்கு வருவேன்னு தெரியாதேடா’ ஏதோ ஒரு வாரம் பழக்கம் விட்டுப்போனது போல பேசினான். பிறகு அளவளாவியதில், அவன் என்னோட முகவரி கூட தெரிந்து வைத்திருக்கிறான், ஆனால் பேச மட்டும் செய்யவில்லே. நானும் காரணம்
கேட்கவில்லை. 10 நிமிசம் பேசியதில் பல வருடம் விட்டுப் போன விசயங்கள் பரிமாறிகிட்டோம். இப்பொழுதுதான் இந்த மாநிலம் வந்திருக்கிறானாம். ‘கமலிகூட இங்கேதாண்டா? தெரியுமா?’ என்றபோது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏன் அவளைப் பற்றி விசாரிக்கவில்லை என்றும் கேட்டான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ங்கேயிருந்து 60 மைல்தாண்டா, ஒரு எட்டு போய் பார்த்துட்டு வா. ஒரு பொண்ணு, ஒரு பையன், இஞ்சினியர் மாப்பிள்ளை, 5 படுக்கையறை கொண்ட வீடுன்னு ஜம்முன்னு இருக்கிறாடா. பெரிய வீடாச்சே, சும்மாவா பொண்ண குடுத்திருப்பாங்க?’ ‘ம்ம்’ என்று மட்டும் சொன்னேன். அவளுடைய விவரம் எல்லாம் அலைபேசியிலேயே மாறியதற்கும் என் குடும்பம் நவகிரகம் சுற்றி வரவும் சரியா இருந்தது.

அடுத்த வாரமே சுப்புவின் வீட்டிற்கு போனோம், பழைய விசயங்களை எல்லாம் பேசியபோது சுப்பு ‘என்னடா கமலி விசயம் வீட்டிற்கு தெரியுமா?’ என்று காதில் குசுகுசுத்தான். என் வீட்டுக்காரம்மாவோ இந்த மாதிரி விசயத்தில் கெட்டி. ‘என்னண்ணே? பெரிய வீட்டுப் பொண்ணப் பத்தி
கேட்குறீங்களா?’ என சுப்புவை கேட்கவும், மீதியிருந்த சரக்கை ஒரே கல்பில் அடித்து முடித்தான் சுப்பு. ‘அடுத்த வாரம் போலாம்னு இருக்கோம்ணே’ என்றதும், மீதியிருந்த சரக்கை ஒரே கல்பில் அடித்து முடித்தேன். ’என்னைக் கேட்காமல் எப்படி முடிவெடுக்கலாம், அதுவும்..’ ஆமா, உங்களைக்கேட்டுத்தான் எல்லாம் முடிவெடுக்கிறோமாம்’ இது சுப்புவின் விட்டம்மா. இப்படிச் சொல்வதில் வீட்டம்மாக்களுக்கு என்றுமே குஷிதான், கும்மாளம்தான்.


வீட்டிற்கு வரும் வழியில்தான் வீட்டம்மாவைக் கேட்டேன் ‘என்ன நெசமாத்தான் சொல்றியா? நான் இன்னும் அவகிட்ட பேசக்கூட இல்லே. அப்புறம் எப்படி அடுத்த வாரம் போறது’ ’அட பேசுங்க, கேளுங்க, இதெல்லாம் ஒரு விசயம்னு. மண்டையில முடி கொட்டினதக்கப்புறம் என்ன வெட்கம்?’ சரிதான். எனக்கும் இன்னும் ஒருவித தயக்கம் இருந்திகிட்டே இருக்கு. எங்கே ஆரம்பிக்கன்னு தெரியல. அடுத்த நாள் அலுவலகம் கிளம்புகையில், வீட்டம்மா ‘அடுத்த வாரம் அங்கே போறோம்தானே?’.

’உனக்கு ஏன் இவ்வளவு வேகம்?’

‘அட நீங்க பார்த்து ஜொள்ளுவிட்ட பார்ட்டி, எப்படித்தான் இருக்கும்னு பார்க்கவேணாமா’.


இந்த மனைவிமார்களுக்கு மட்டும் புருசன் சைட் அடிச்சாலோ, காதலிச்சாலோ பொறாமையவிட அவுங்க எப்படி இருப்பாங்கன்னு பார்கிறதுல ஆர்வம் அதிகம். மதியம் 2 மணிக்கு அலைபேசியில் Mrs. Kamali Senthil என்ற எண் பார்த்து அழைக்கும் போது கை நடுங்கியது. ரெண்டாவது மணியில்,

“ஹலோ” அமெரிக்க உச்சரிப்பில் ஒரு பெண்மணி பேச,

நானும் கமலிகிட்ட பேச முடியுமா என்று கேட்டேன்.

‘நீங்க?

’ நான் ’அன்பு’,

’எந்த அன்பு.... சின்னாயக்கா மகனா?’ என்றதும்.

’ஆமா. ஞாபகம் இருக்குங்களா. நான் உங்க ஊருக்குப் பக்கமாத்தான் இருக்கேன். சுப்பு சொன்னான்’

’ஓஹ் அப்படியா, சந்தோசம்ங்க. எவ்வளவு வருசம் இருக்கும்? 20 இருக்குமா?’


பிறகு இரு குடும்பங்களைப் பற்றி பேசி, அடுத்தவார இறுதிக்கு கமலி வீட்டுக்கு போவதென்று தீர்மானம் ஆச்சு. கடைசி வரைக்கும் அந்த டைரி மேட்டரைப் பத்தி நானும் பேசலை. அவுங்களும் பேசலை.

000000000000000000000000000
வெள்ளிக்கிழமை என்னிக்கு வருமென்று காத்திருந்தேன் நான். வீட்டுக்காரரிடம் அன்று இரவே சொல்ல்விட்டேன் ‘எங்க ஊர்க்காரங்க
வராங்க. சனிக்கிழமை எங்கேயும் போயிரக் கூடாது, ஆமா.’ அவரும் சரியென தலையாட்டிவிட்டு போய்விட்டார். என்ன சமைப்பது என அன்றே பட்டியல் போட ஆரம்பித்தேன். என்றுமில்லாத அதியசமாக அன்று மளிகை கடைக்கு அவரை வற்புறுத்தாமல் நானே போய் வந்தேன்.

என்ன துணி போட்டுக்கலாம்? புடவை? சுடிதார்? ஜீன்ஸ் டீ சர்ட் ? குழப்பம் அதிமாகிக்கொண்டே இருந்தது. கடைசியாக ஒரு கேள்வி என்னைத் தாக்கியது “அந்தக் கடிதத்தை யாரும் படிச்சிருக்க மாட்டாங்கதானே? அது அந்தப் புஸ்தகத்துக்கு உள்ளேதானே இருக்கும்?”

00000000000000000000000000000000

வெள்ளிவரை வேலை கழுத்தை நெறித்தது. இடையிடையே கமலி ஞாபகம் வந்துவிட்டுப் போனது. என் காதல் தெரிந்த மாதிரி அவளுடைய வீட்டுக்காரருக்கும் அவள் சொல்லியிருப்பாளா? ஆமா, அவ என்கிட்டயே சொல்லலை என்ற நினைப்பு வந்த போது சிரித்துவிட்டேன்.

சனிக்கிழமை,

பத்து மணி. எங்கேம்மா போறோம் என்று இரு குழந்தைகளும் கேட்டபோது ‘என்னங்க சொல்லிரலாமா’ என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தாள் வீட்டம்மா. குசும்பு புடிச்ச கோயமுத்தூர்காரங்க என மனசுக்குள் நினைத்துக்கொண்டே ‘ஒரு அங்கிள் வீட்டுக்கு போறோம்பா. அவுங்க எங்க ஊரு’ என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னேன். குழந்தைங்க (13,16 வயசு ஆனாலும் குழந்தைங்க தானே) சலிப்போடு உக்காந்தார்கள், பாவம் அவர்களுக்கு என்ன முக்கியமா இருக்கோ? எங்க ஊரு, ஒரே பள்ளிக்கூடம், கல்லூரி, விமான நிலையத்துல பார்த்தது, வேலை செய்ததுன்னு மாசம் ஒரு முறை யாராவது ஒரு வீட்டிற்கு இப்படி கூட்டிப் போவது பழக்கமாகிவிட்டிருந்தது. போகும் 1 மணிநேரத்தில் வீட்டின் மூவரும் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்துவிட்டார்கள். சரியாக மதியம் சாப்பாட்டு போன மாதிரி வீட்டிற்கு முன்னால் வண்டி நின்றது.


பெரிய வீடு,
கண்டிப்பாய் ஊரிலிருந்த பெரிய வீட்டில் பாதி கூட இல்லை, இருந்தாலும் அந்தத் தெருவிலேயே பெரிய வீடாய் இருந்தது. சுப்பு சொன்ன “ஜம்முன்னு இருக்கிறாடா” ஞாபகத்துக்கு வந்தது. அழைப்பு மணி அழுத்துமுன்னேன் செந்தில்(கமலியின் வீட்டுக்காரர்) கதவைத் திறந்தார். என்னைப் போலில்லாமல், சின்னத் தொப்பையுடன், முன் விழுந்த முடியுமாக இருந்தார். சிரித்த படியே வரவேற்றார்.

‘கமலி, வந்துட்டாங்க. சீக்கிரம் வா’ என்ற போது மனசுக்குள் புகைவண்டி ஓடுவது போல தடதடத்தது. அவள் முகம் காணும் பொழுதை மட்டுமே எதிர்பார்த்திருந்தேன். ’வாங்க.. வாங்க’ என்றபடியே மாடியில் இருந்து வந்தாள் கமலி. ரெட்டை ஜடை, வெள்ளை ஜாக்கெட், பச்சை தாவணி என பள்ளிக்கூட கமலியை எதிர்பார்த்து வந்திருந்தது எவ்வளவு தப்பென்று இருந்தது. உருவம் பெருத்து, முடி நரைத்து, கண்ணாடி போட்டு ... காலம் மாறுவதை மனம் மறுத்தே வந்தது புரிந்தது.

சிநேகத்துடன், ‘நல்லா இருக்கீங்களா?’ என்று மட்டும் முடித்துக்கொண்டேன். பிறகு நானும் செந்திலும் வரவேற்பறையில் பேச ஆரம்பித்தோம். குழந்தைகள் நால்வரும் ஏதோ அறையில் பேசிக்கொண்டிப்பது கேட்டது. வீட்டம்மாவும், கமலியும் சமயலறையில்.

என்ன ஒரு 45 நிமிடம் ஆகியிருக்குமா? ’என்னங்க சாப்பிடலாமா?’ என்றபடியே கமலி அழைக்க, குழந்தைகளும் சேர்ந்துகொள்ள, உணவருந்தும் இடம், கலகலப்பாகியது.

“என்னங்க, விசயம் தெரியுங்களா?’ இது கோயமுத்தூர் குசும்பு செந்திலிடம்

‘என்னங்க?’

’எங்க வூட்டுக்காரர் உங்க மனைவியைக் காதலிச்சாராம்’ என்றதும்..

(தொடரும்)

இறுதிப்பகுதி இங்கே

8 comments:

  1. அட.. ரொம்ப இண்டஸ்ட்ரிங்கா போய்க்கிட்டு இருந்த கதையை இப்படி தொடரும்-ன்னு போட்டு, ஷாக் குடுத்திட்டீங்களே?

    அதுக்கு கமலியோட ரியாக்‌ஷன் என்ன? சீக்கிரம் சொல்லுங்க..

    ReplyDelete
  2. கத நல்லா போகுது.ரெம்ப வேகமா..

    ஆனா அடுத்த பகுதி 2013-ல வருமோனு பயமா இருக்கு :-)

    ReplyDelete
  3. கவலைப்படாதீங்க மக்கா. அடுத்த வாரமே மூன்றாவது பகுதியும் வந்துரும். பதிவு பெரிசா போச்சேன்னு நாந்தான் கடைசி 6 பாராவை நீக்கி பதிவா போட்டுட்டேன். இல்லாட்டி இந்தப் பதிவே நீஈஈஈளமாப் போயிருக்கும்

    ReplyDelete
  4. நல்லா இருக்கு இளா...

    ReplyDelete
  5. arul, Senthil, PremaMagal -வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  6. //ILA(@)இளா said...
    கவலைப்படாதீங்க மக்கா. அடுத்த வாரமே மூன்றாவது பகுதியும் வந்துரும். பதிவு பெரிசா போச்சேன்னு நாந்தான் கடைசி 6 பாராவை நீக்கி பதிவா போட்டுட்டேன். இல்லாட்டி இந்தப் பதிவே நீஈஈஈளமாப் போயிருக்கும்

    Friday, July 9, 2010 8:14:00 PM EDT//

    தேர்தல் வாக்குறுதியாக்கும் ....!!!

    அடுத்த தேர்தல் கூட வந்திடும் போலருக்கு..

    ReplyDelete
  7. //அடுத்த தேர்தல் கூட வந்திடும் போலருக்கு/
    மன்னாப்பு அண்ணே. இந்த வாரமே, ட்ராப்ட்ல இன்னும் இருக்கு,வெளியிடறதுதான் பாக்கி :)

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)