Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Wednesday, October 29, 2008

சொன்னதைச் செய்த பாஜக

நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு விட வேண்டிய தண்ணீர் முற்றிலும் திறந்துவிடப்பட்டு விட்டதாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.

பஞ்ச் பாலா: நியாயஸ்தனுங்கதான், மழை மட்டும் பேஞ்சுட்டா.


டெல்லி: சர்வதேச அளவிலான 'பொருளாதார சுனாமியால்' பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள் அடுத்த 10 நாட்களி்ல் 25 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்யக் கூடும் என இந்திய தொழில்-வர்த்தக சபையான அஸோசாம் தெரிவித்துள்ளது.

இரும்புத்துறை, சிமெண்ட், கட்டுமானம், ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்துத்துறை, சாப்ட்வேர் துறை, நிதித்துறைகளில் இந்த வேலைகள் பறி போகலாம் என
அஸோசாம் (Associated Chambers of Commerce and Industry of India-ASSOCHAM) தெரிவித்துள்ளது.

பஞ்ச் பாலா: பதிவர்கள் சாக்கிரதை இருந்துக்குங்கோ, நாமதான் waste land of India.


திண்டிவனம்: பிரதமர் மன்மோகன் சிங்கின் வேண்டுகோளை ஏற்று இடதுசாரிகள் மீண்டும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் சேரவேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

பஞ்ச் பாலா: அப்படியே தமிழ்நாட்டிலேயும்னு மனசுல வெச்சுக்கோங்க. வைகோ, கம்யூ, அப்படின்னு செட்டாவே மாறிடலாம்.

சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு

பஞ்ச் பாலா: எல்லாத்தையுன் உருவுனவன் கோவணத்தை மட்டும் குடுத்துட்டு போனானாம்.

என்னை கைது செய்ய தயக்கம் வேண்டாம் : திருமாவளவன்

பஞ்ச் பாலா: அதெல்லாம் அம்மா ஏதாவது சொல்லனும். அப்போதான் உளவுத்துறைக்குத் தெரியும்.

கருணாநிதி பதவி விலக தந்தி அனுப்பவும்: ஜெ.

பஞ்ச் பாலா: நானும் ரெளடி நானும் ரெளடி- வடிவேலு.




அடியே!
என்னை அடிக்கடி பார்,
தமிழகத்தின் மின்சாரப்
பஞ்சம் தீரட்டும்!
இளா

Tuesday, July 24, 2007

கவிதைக்கு அர்த்தம் போட்டாச்சு.

இந்தக் கவிதை ஒரு பதினென் இளைஞனின் நிலைமையப் பத்தி எழுதினதுங்க. ஆனா மக்கள் கடாசீட்டாங்க போங்க.

//சுருக்கமான நெளிவுகளுக்குள்
நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!//

மனுஷன் வாழ்ற வாழ்க்கை எல்லாம் நெளிந்து, வளைந்து; சமுதாயம் அப்படீங்கிற ஒரு நீள் கோட்டுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு வராங்க. ஆனா வாழ்க்கை முடியும் போது ஒரு முற்றுப்புள்ளியாத்தான் போகுது.

//இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!//
வாழ்க்கையில் விரக்தியடைஞ்சு மதுவுக்கு அடிமையாகும் போது ஏதோ அதிலிருந்து தப்பிச்சிட்டதாய் நினைச்சுக்கிறாங்க. மேலே உள்ள வரிகள், சரக்கும் & மிக்ஸிங்கும் சேர்ந்து உள்ளே போன வர மப்பும்தான்.


//நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்//

Survival! மயிர் கூச்செரியும், மனசுக்குள்ள நினைக்கிறது வேறொரு பிம்பமா நம் மூலமே வெளி வரும்.

//தேடித் தேடியே
கலைந்து போகிறேன்
வக்கிரத்தை!

புணர்வென்னும் கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்
நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!


மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா
உவமை?//

காமத்துக்காக விரக்தியில் நடப்பவைதான் இது.காமத்தை மாயைன்னு சொல்லனும்னு நெனைச்சது.

Sunday, July 8, 2007

புதிய ஏழு அதிசயங்கள்

புது ஏழு அதிசயங்கள் முடிவு அறிவிச்சுட்டாங்க. தாஜ்மஹால் எப்படியோ 7க்குள்ளே திரும்பவும் வந்துருச்சு.

முடிவுகள் ஓட்டு வாரியாக இதோ:
மேலும் விவரத்துக்கு படத்துமேல க்ளிக்குங்க

1.Chichén Itzá, Mexico










2.Christ Redeemer, Brazil










3.The Great Wall, China










4.Machu Picchu, Peru










5.Petra, Jordan










6.The Roman Colloseum, Italy










7.The Taj Mahal, India










எட்டாவதா இன்னும் ஐஸ்வர்யா இருக்காங்களா?

Friday, June 29, 2007

விசிலடிச்சான் குஞ்சுகள்!

முதல் நாள் சம்பளத்துக்காக:








மது/மங்கைக்காக-சிற்றின்பம்
(las Vegas)



நடிகருக்காக(Sivaji-Bangalore)




சாதனத்துக்காக(Queue for iPhone a day before)





ஆன்மீகத்துக்காக:


அவனவனுக்கு ஆயிரம் விருப்பம் இருக்கு. உனக்கும் மட்டும் எப்பவுமே மிஞ்சுவது வயித்து எரிச்சல். உனக்காகவே இது இருக்கு.










மதுரை மே.தொகுதி காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி

மதுரை மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் சுமார் 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ராஜேந்திரன் பெற்ற வாக்குகள் 60,933. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக 29,818 வேட்பாளர் செல்லூர் ராஜூ வாக்குகள் பெற்றார். விஜய்காந்தின் தேமுதிக சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரன் 21,272 வாக்குகளைப் பெற்றுள்ளார். இத் தொகுதிக்கு கடந்த 26ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மெயின் ஹாலில் வாக்கு எண்ணும் பணி நடந்தது. வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்த வேட்பாளர்களின் ஏஜென்டுகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இத் தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். இதில் 75 சதவீத வாக்குகள் பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது

Thanks : Thats Tamil

மதுரை மே.தொகுதி வாக்கு எண்ணிக்கை- Update

மதுரை மேற்குத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் 48,871 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ 23,952 வாக்குகளும் பெற்றுள்ளார். விஜய்காந்தின் தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரன் 16,535 வாக்குகளும் பெற்றுள்ளார்.

Update at 11:45 am(IST)
காங்-48,871
அதிமுக-23,952
தேமுதிக-16,535

Thursday, June 7, 2007

சற்றுமுன்1000 போட்டிக்காக-படச்செய்திகள்

5 வருசத்துக்கு ஒருதடவைதான் ஓட்டுப்போடுற நேரம் வருது, அதை நாங்க சரியா பண்ணலைன்னா மட்டும் கோவம் வருதே, வருஷா வருஷம் மழை வருது, உசுரு போவுது. எதையும் சரி பண்ண மாட்டேங்குறீங்களே. எங்களுக்கு எவ்வளவு கோவம் வரும். நீங்க போட்டு திங்கிற உப்பைத்தானே நாங்களும் போட்டு திங்கிறோம்.

செய்தி: தினத்தந்தி.





எங்க ஊர்லை எல்லாம் உங்களை மாதிரி பிரதம மந்திரி கிடையாதுங்க. இங்க வாரிசுகளை மந்திரியாக்கவே ஒரு பலிகடாவை ராஜினாமா பண்ண சொல்லுவாங்க. அவரும் ஏதோ தியாகி மாதிரி ராஜினாமா பண்ணிடுவாரு.

செய்தி-பிபிசி


எங்க ஊர்ல இதெல்லாம் சகஜம், பார்க்கிங் பண்ண சொல்ற எடத்துல நாங்க வண்டிய விட மாட்டோம்.

செய்தி--தினமலர்


இதுவும் ஜனநாயக உரிமை. போலிசு எங்களை ஒன்னும்சொல்லக்கூடாது.

இவண்

திம்மி முக
செய்தி தினமலர்


//சென்னை: தயாநிதி மாறனிடமிருந்து முதல்வர் கருணாநிதியை காப்பாற்றியிருக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். //

மேற்சொன்ன கருத்தே காமெடியாக இருப்பதால், நோ கமெண்ட்ஸ்


செய்தி: தட்ஸ்தமிழ்

Friday, May 19, 2006

சினுக்கு சினுக்கு சின்


வருவியா?
வரமாட்டியா?
வரலைன்னா உன்பேச்சி கா....

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)