Monday, October 31, 2011

சவால் சிறுகதை-2011

  • மொட்டை மாடியின் தொட்டியின் சின்ன இடுக்கில் ஒளிந்திருந்தான் கிருஷ்.
  • மாடிப்படிக்கட்டின் அடியில் ஒளிந்திருந்தான் கோ.
  • மொட்டை மாடியின் இன்னொரு மூலையில் கீற்றுகளை அடுக்கி வைத்திருந்தார்கள், சுவற்றிக்கும் கீற்றுக்கும் இடையில் ஒளிந்திருந்தான் ராஜ். சத்தமே இல்லாமல் தன்னுடைய படுக்கையின் அடியில் ஒளிந்திருந்தாள் ராஜி.

கண்டிப்பாக இந்த மூவரும் மாட்டிக்கொள்வார்கள், காரணம் வி (எ) விஷ்ணு. அவந்தான் இப்போழுது போலிஸிடம் மாட்டிக்கொண்டவன்.(இனிமேல் போலீஸ்=போ) informerஆக மாறிவிடுகிறேன் என்று கெஞ்சியதின் அடிப்படையில் விஷ்ணுவை போ, தன்னுடைய இடத்திற்கு கொண்டு சென்றது. விசாரணையில் அவர்கள் ஒளிந்திருந்த இடத்தை சொல்லிவிட்டான் விஷ்ணு. விஷ்ணு சொன்னது உண்மைதானா என அறிய முதலில் தேடலைத் தொடங்கியது போ.

ஒவ்வொரு அடியையும் மெதுவாக எடுத்துவைத்து ராஜி இந்த அறைக்கு வந்தது, கூடவே விஷ்ணுவும். ராஜி கொரில்லா தாக்குதல் நடத்தக் கூடுமென முதலே அறிந்திருந்த போ, எதற்கும் தயாராகவும் அதே சமயம் அவள் தப்பித்துக்கொள்ளாதவாறு முன்னேற்பாடும் செய்யப்பட்டது. அதிக எதிர்ப்பு எதுவுமில்லாமலும், சத்தமே போடாமலும் போ’விடம் தஞ்சமடைந்தாள் ராஜி. தன்னுடைய அணியிலிருந்தே காட்டிக்கொடுத்த வி மீது கடும் கோபம் கொண்டாள்.


அடுத்து யார் எனக் கேட்டபோது, விஷ்ணு மொட்டை மாடியில் இருக்கும் மூவரையும் சைகயாலே சொல்ல ஆரம்பிக்கும் போதே, தாக்க ஆரம்பித்தாள் ராஜி. இதனை சற்றும் எதிர்பாராத வி, நிலை தடுமாறி கீழே விழுந்தான் “காட்டிக்கொடுக்கிறியே நீ எல்லாம் மனுசனா? உன்னை நாங்க எவ்ளோ நம்பினோம். என்னிக்குடா உன்னை விட்டுட்டு நாங்க சாப்பிட்டு இருக்கோம்? சொல்லுடா? மனசாட்சியே இல்லாம காட்டிக்கொடுத்திட்டியே? போலீஸ் தேடிட்டு வரது புதுசா என்ன? மத்தவங்களை விடுடா கிருஷை எப்படிடா காட்டிக்கொடுக்க மனசு வந்துச்சு” என கடும் சீற்றத்துடன் வந்து விழுந்த வார்த்தைகள்.

தலை குனிந்தபடியே யார் யார் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என சொன்னபோதே ஊகித்துவிட்டாள், வி'ன் விளையாட்டை. மனசுக்குள் சிரித்தபடியே, அவர்களுடன் நடக்க ஆரம்பித்தாள்.

மொட்டை மாடி,
மாலை 5:48. சூரியன் இறங்குமுகமாய் இருந்தாலும் இலைகள் சடசடவென படபடக்க ஆரம்பித்ததாலும், வெக்கை மட்டும் சிறிதும் குறையவில்லை. கால அட்டவணையின் படி பார்த்தால் சரியாக இன்னும் 12 நிமிடங்கள் தப்பித்து விட்டால் போதும். ஆனால் இந்த 12 நிமிடத்தை எப்படி சமாளிப்பது, போ’வோ வேகமாய் தேட ஆரம்பித்தது. தேடலின் அடுத்த கட்டமாய் கோ. மாடிப்படிக்கட்டின் அடியில் ஒளிந்திருக்கிறான் என்பதை சரியான கணக்குப் போட்டு, அவன் தப்பிக்காதவாறு, தகுந்த நேரத்தில் வளைக்கப்பட்டான். முடிந்தது, ராஜிக்கு கவலை எல்லாம் கிருஷ் மீதுதான். அவன் தப்பித்தாலோ, மாட்டினாலோ போதும்.

அதே சமயம்
கிருஷ், எப்பொழுதும் தன்னுடைய ESP மூலம் நடப்பதை அறிந்து கொண்டு இந்த மாதிரி சிக்கலிலிருந்து தப்பிவிடும் ஆற்றல் பெற்றவன். அப்பொழுதுதான் வி’ விளையாடிய விளையாட்டு அவனுக்குத் தெரிந்தது, தப்பான குறியீடு அது-SWH26F. அதனால கண்டிப்பாய் ராஜ் தப்பிவிடுவான் என புரிந்துகொண்டான். எந்நேரமும் விஷ்ணு தன்னை அழைக்கலாம் என அவன் பாக்கெட்டில் இருந்த போனை தொட்டு உறுதி செய்து கொண்டான். சபதம் வராமிலிருக்க Silent mode ஆக்கிக்கொண்டான்.

அதே சமயம்,
மொட்டை மாடியின் இன்னொரு மூலையில் கீற்றுகளை அடுக்கி வைத்திருந்தார்கள், சுவற்றிக்கும் கீற்றுக்கும் இடையில் ஒளிந்திருந்தான் ராஜ். கீற்றுக்குள் 5அடி நீளத்தில் நெளிந்து கொண்டிருந்தது கருநாகப்பாம்பு. நேற்று தின்ற எலி இன்னும் ஜீரணமாகாமல் பாடாய் படுத்தியது. இது தெரியாமல் மூச்சைக்கூட சப்தமில்லாமல் விட்டுக்கொண்டிருந்தான் ராஜ்.

அதே சமயம்,
கிருஷ் மெதுவாக நகர்ந்து கட்டிடத்தின் மேலேறி முன்பக்கமாய் ஜன்னலுக்கு மேலே இருக்கும் தடுப்புக்கு வந்தான்.கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த ஜன்னலோ எந்த நேரத்திலும் இடியலாம் என்ற நிலையில் இருந்தது. சிமெண்ட் கூட இன்னும் காயவில்லை.



இன்னும் 3 நிமிடமே, போ’ வேகமாய் தேட ஆரம்பித்தான். கிருஷ் மொட்டை மாடியின் தொட்டியின் இடுக்கில் இல்லாதது கண்டு அனைவரும் திடுக்கிட்டார்கள்.

டேய், ”கிருஷ் எங்கே?” என போ கேட்க, வி’ற்கு ஒன்றும் புரியவில்லை. ராஜி பதட்டமானாள். இப்படித்தான் இவன் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று செய்து தப்பிக்கும் நோக்கில் மாட்டிக்கொள்வான். இது ஒன்றும் புதுசில்லை.

அதே சமயம்,
கீற்றுக்குள்ளிருந்த பாம்பு ஆள் அரவம் கேட்டு நெளிய ஆரம்பித்தது. மனித வாடை கண்டு எச்சரிக்கையாய் தன்னை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது.

அதே சமயம்,
விஷ்ணுவிடமிருந்து போன் வர, ஜோப்பிலிருந்து போன் எடுத்து பார்த்தான்.

டன் டன் டன் டன் டன் டன் டன் டன் டன்..

மணி அடித்தது.

பிராத்தனைக்கு நேரமாச்சு என்று சொல்ல அனைவரும் கூடம் நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.

பிராத்தனைக்கு ஓடியவர்களின் போலீஸ்(விக்கி), வி(விஷ்ணு), ராஜ் அகியோருக்கு வயது முறையே 12,8,6. SP.கோகுலுக்கும் வயது 8தான். வயது அதிகமானதால் விக்கியை அது, இது எனவே அழைப்பார்கள் இந்த நண்பர்கள்.


கற்பனை வியாதியில் உள்ள கிருஷ்க்கு மட்டும் இது கேட்கவே இல்லை. பாம்பு மீண்டும் தூங்க ஆரம்பித்தது.

கட்டப்பட்ட செங்கல் ஒவ்வொன்றாக தன்னுடைய பிடிப்பை விட ஆரம்பிக்கும் போது பிராத்தனை ஆரம்பித்தது.
கோகுல் இன்னும் பிராத்தனை கூடத்திற்கு வராததை அறிந்த விஷ்ணு, விக்கி, ராஜ், ராஜி அனைவருமே. ”சார்” என ஒரே நேரத்தில் அலறினார்கள்.

அந்த ஆதவற்றோர் இல்லத்திருலிருந்த அனைவரும் ஒன்று கூடி தேட ஆரம்பித்தார்கள். இவனுக்கு இதே பொழப்பாப் போச்சு என வார்டன் கூறிக்கொண்டே மாடிப்படிக்கட்டில் தாவி ஏறிலானார். மற்ற இரு வார்டன்களும் கிணற்றுள் எட்டிப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டார்கள்.

போன் வருமா எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருந்த கிருஷை லாவகமாய் தூக்கிக்கொண்டு போனார் வார்டன்.
பிராத்தனை ஆரம்பித்தது.

கிருஷ் ஏன் அப்படி கற்பனை செய்து கொண்டிருந்தான் எனவும், Day Dreaming பற்றியும் அறிய

பட உதவி: இந்த அட்டவணையை ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து  படமாக எடுத்தது @VickyTamil.  ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு 7:30 மணி நேரமே தூங்க அனுமதிக்கப்படுகிறது.

Wednesday, October 26, 2011

திவாளியாம். என்ன ம** தீவாளி


மனதளவில், இன்னும் இந்தியனாய் வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு  இந்தியனுக்கும் சமர்ப்பணம்





Dedicating to All Non Resident Indians(Still Considering them as Indians)

போன வருசமும் இதே போல புலம்பியது

Thursday, October 13, 2011

காதல் ஜூரம் - 2

காதல் ஜூரம் - பாகம் 1 படிக்க

Onsite வந்துட்டா மட்டும் நமக்கு எங்கிருந்தோ மொழி மேல அப்படி ஒரு வெறி வந்துரும். காரணம் வேற ஒன்னும் இல்லீங், வெள்ளையும் கருப்பையும் பார்த்து பார்த்து, அவங்க என்ன பேசறாங்கன்னு தெரியாம உதட்டையே உத்து உத்து பார்த்து, பாதி அர்த்தம் புரிஞ்சி, மீதிக்கு நாமே fill in the blanks பண்ணினா வரத்தானே செய்யும். ரகுவுக்கும் அப்படித்தான் வந்துச்சு. தமிழார்வம். அதனாலயே நெறைய படிச்சு, blogs எழுத ஆரம்பிச்சான்.

வாரக் கடேசிக்கு எங்கே போலாம்னு யோசனை பண்ணினான். ஒரு பட்டியலே போட்டான் ரகு.

  • பாலா வீட்டுக்கு போயி அவனுக்கு ஒரு சலாம் போட்டு ”பகுன்னாரா?” அப்படின்னு அவன் வூட்டுக்காரம்மாகிட்ட கேட்டாவே உச்சில முடி நிக்கிற மாதிரி காரமா கோழிச் சாப்பாடு கிடைக்கும்.
  • விஜிய இங்கே கூப்பிட்டு ரெண்டு படத்த பார்த்துட்டே, கரோனாவை(பீர்) தள்ளி flat ஆகலாம்.
  • வடக்கத்து ஜிகிட்டுக்கு போனப் போட்டு “அயாம் ஃபைன் யார்? யூ கம் ஹியர்னா” அப்படின்னு குச் குச் ஹோத்தா பண்ணலாம். ஆனா ரெண்டு நாளைக்கு வழிய முடியாதே... அதுக்காக ஞாயித்துக்கிழமை செம தூக்கம் போடனும்.
ப்படி பட்டியல வெவரமா வேகமா போட்டுட்டு இருக்கும் போது “டொங்க்”. எவனோ ஜிடாக்ல கூப்பிடறான்னு நினைச்சுகிட்டே போனா பூ படம் போட்டு தெரியாத பேர்ல சேட்ல ஒரு ஆளு. ஒரு வேளை பேர மாத்தி விளையாடுற வ.வா.ச மக்களா இருப்பாங்களான்னு கூட நினைச்சான்.

"Hi, How are You?" அப்படின்னு முதல் வரி.
ID பார்த்தான் ”traehteews_sruoy”. என்ன எழவுடா இது. ஏதோ ஒன்ன விக்க வர பொம்பளைங்க ID மாதிரியே இருக்கு. சரி நமக்கும் நேரம் போவலை என்ன நடக்கும்னு பார்க்கலாம்.

“I am fine, whatzup"

"This is my New ID, whn is your next blog" ஆஹா அதுவா இது. தூள்டா.
"In a day. What is your name? where are you from? how did u get my blog? do you like it? ho..."

"ஹல்லோ நிறுத்துங்க, எதுக்கு இத்தனை கேள்வி? என் பேரு ராஜி, உங்க பாஷையில் சொன்னா புதரகம்தான். உங்களை மாதிரி Onsite எல்லாம் வரலை. இந்தியாவுல பொறந்து, இங்கே படிக்க வந்தேன். அப்படியே வேலை தேடி, செட்டிலாகிட்டு இருக்கேன். இப்போ உங்க ஊருக்குப் பக்கம்தான். போதுமா? உங்களைப் பத்தி நானும் விசாரிச்சுட்டேன். Tamil ப்லொக் எழுதறவங்களை விசாரிக்கிறது கஷ்டமா என்ன? உங்கள பத்தி விவரத்தை நாஞ்சொல்லவா?”
”ஆஹா. இவ்வளவு தூரம் ஆகிப்போயிருச்சா? சரிங்க உங்க நம்பர் கொடுங்க. கூப்பிடறேன்”.

“அதுக்குள்ளேயே சந்தேகமா? நான் பொண்ணுதான். கலாய்க்க எல்லாம் இல்லீங்க. உங்க புரொபல் பார்த்தேன், பக்கத்து ஊர்தான்னு தெரிஞ்சு போயிருச்சு. அதான் சேட்டிங். எப்படியும் வாரக் கடேசி சும்மாதானே இருப்பீங்க. மொக்கைப் போட ஆள் இல்லைன்னு கவலைப்பட வேணாம். நான் சேட்டுவேன், நாள் முழுக்க”
“சரி நீங்க பதிவ படிக்கிறீங்களே. நீங்க பதிவெல்லாம் எழுதுவீங்களா?”

“ஓ எழுதுவேனே. ஆனா வேற பேர்ல. உங்களால கண்டுபிடிக்க முடியாது”
“அடச்சொல்லுங்க”

“நீங்க கண்டிப்பா படிச்சிருப்பீங்க”

“அப்படியா. அப்போ தெரிஞ்ச முகம்தான்னு சொல்லுங்க”

“படிச்சா அதிர்ச்சியாகிர மாட்டீங்களே”
இருதயத்துடிப்பு அதிகமாக ஆச்சு “என்னாங்க, நக்கலா. பதிவச் சொல்லுங்க, நான் நீங்க யாருன்னு சொல்லுறேன். பதிவெல்லாம் கம்மியாத்தான் போட்டிருக்கேன். ஆனா எல்லாப் பதிவர்களையும் தெரியும். 80 பேர்க்குமேல சேட்டுல சேர்த்து வெச்சிருக்கேன். தெரியுங்களா?”

”பதிவோட பேர அப்புறம் சொல்றேன். இப்போ கூப்பிடுங்க” எண் திரையில வந்து விழுந்துச்சு.

“9 மணிக்கு மேல கூப்பிடறேனே, இன்னும் 45 நிமிஷம்தானே இருக்கு”

“ஓஹ், free minutesக்காகவா? சரி கூப்பிடுங்க”

மனசு 45 நிமிசத்துக்கெல்லாம் காத்திருக்க மாட்டேன்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சது. தொடர்ச்சியான 3 வது தம்ம அடிக்கும் போதுதான் ஒரு கேள்வி வந்துச்சு.

”லவ்வு வந்துருச்சா?” பொண்ணு சேட் பண்ணினாவே லவ்வுன்னு நினைக்கிற அளவுக்கு இருக்கிற சாதாரண பையன் நம்ம ரகு இல்லேன்னா கூட, அவனும் பையந்தானே.

9 மணி ஆனவுடன் எண்ணைத் தட்டினான். ஒரு ரிங்லேயே ”சொல்லுங்க ரகு”ன்னு ஒரு வீணை பேசிச்சு. அசடு வழிஞ்சே 30 நிமிஷம் பேசினான் ரகு. வழக்கமான விசாரிப்பு முடிஞ்சு, வழக்கமான குடும்ப கதை முடிஞ்சு, என்ன சமைக்கத்தெரியும் பேசி, லத்திகா, வேலாயுதம், 7ம் அறிவு, எங்கேயும் எப்போதும் ஆரம்பிச்சி ஒரு படம் விடாம, புடிச்ச சீன், புடிக்காத பாட்டு அப்படின்னு அபூர்வ சகோதரர்கள் வரும் போது மணி 3:20.

ரெண்டு பேருக்கும் மனசே இல்லாம தூங்கப் போனாங்க. ஆனா ரகு தூங்கல.

காலையில 6:10 மணிக்கு மணி அடிச்சது.

“தூக்கமே வரலேடா. நீ தூங்குனியா?” முதன் முறையா டா போட்டு பேசினாள். போன்ல பேசிகிட்டே காபி முடிஞ்சு, உச்சா போயி, ஆயி போயி 9 மணி வரைக்கும் போச்சு. அன்னிக்கு நல்லா தூங்கல ஆனா ராத்திரி 10 மணிக்கே போன் பேசுறத நிறுத்திட்டாங்க. இப்படியே சனிக்கிழமை, போனும்,. சேட்டும்னு ஓடிப்போக, ஏதோ ஒன்னு ரெண்டு பேர் மனசிலேயும் ஓடி வந்து உக்காந்துகிச்சு.

ஞாயிறு, காலை 7:20 மணிக்கு.

”டொங்க்”

“ஹேய் உன்னோட பதிவென்னென்னு சொல்லவே இல்லியே”

”சொன்னா சிரிப்பேடா. வேணாம்”

“அடச்சொல்லுன்னா”

“உன்ன மாதிரி எல்லாம் கவிதை எல்லாம் எனக்கு வராது”
”அப்போ என்னோடது எல்லாம் கவிதங்கிறியா?”

”பின்னே? நீ கவிஜன். நான் மனசில பட்டத எழுதறவ”, ஆர்வத்தைத் தூண்டிக்கிட்டே போனா.

“சொல்றியா? இல்லாட்டி போவட்டுமா?”

”சொல்றேன், சொல்றேன்”


”டொங்க்” பதிவோட முகவரி வந்துச்சு.


“பகுத்தறிவாளர்கள் வாழ்க” அப்படின்னு பெரியாரைப் புகழ்ந்தும், பிராமிணர்களைச்சாடியும், அதேசமயம் செம நாகரிகமா எழுற ஒரு ஆம்பளைப் பதிவரின் பதிவு அது.

“எதுக்குடி இதத்தர்றே. இத நான் படிக்கிறது இல்லே”

“நாந்தான் இத எழுதறேன், நம்பலைன்னா ஒரு பின்னூட்டம் போடு. நான் வெளியிடறேன்.”

ஒரு பதிவுக்கு “நல்ல பதிவு" அப்படின்னு பின்னூட்டம் போட்டான். “போட்டாச்சு”

“இப்போ பாருடா” பின்னூட்டம் வெளியாகிருந்தது.

மனசுக்குள்ளே ஏதோ இனம் புரியாத கிலி வந்துச்சு. எப்போ பார்த்தாலும், தினமலர், பாஜக, பிராமிணர்கள்ன்னு தாக்கு தாக்குன்னு தாக்கி, எப்பவுமே சூடா இருக்கிற பதிவு அது. பாதி பேருக்கு மேல அந்தப் பதிவர் மேல செம காண்டுல இருந்தாங்க. எல்லாரும் ஆம்பிளைன்னு நினைச்சு இருக்க ”இது ஒரு பொண்ணா?”.

“என்னடா சத்தத்தையே காணோம்”
“அதிர்ச்சியா இருக்கு”

“ஏன்?இந்தப் பதிவ எழுதறது ஒரு பொண்ணான்னுதானேன்னா? நாந்தான் எழுதறேன். ஏன் எழுதக்கூடாதா?”
“எழுதலாம். தப்பே இல்லே”

“அப்புறம்?”

“ “

“என்ன சத்தத்தையே காணோம்”

“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்”

”என்னத்தைப் பேசச்சொல்றே” என்றான் பூணூலை அழுத்தி பிடித்தப்படி...

விதி: காதலுக்கு, அவா வீடு, பெரியவா வீடுன்னெல்லாம் தெரியாது.

ஒரு முகம் தெரியா பெண்ணின் அனானி மறுமொழி கிடைச்சதும் சந்தோசம் தாங்கல. அப்புறம் ஒரு சந்தேகம் வந்துருச்சு ஒரு வேலை ராயலை சிங்கமெல்லாம் சேர்ந்து ரவுண்ட் கட்டின கதை மாதிரி ஆகிருமோன்னு ஒரு 'பல்பு'ம் எரிஞ்சது. எதுக்கும் இருக்கட்டும்னு அந்த ID ஜிடாக்ல சேர்த்துட்டு........
எல்லாரும் கண்டிப்பா மொத பகுதிய மறந்திருப்பீங்க, அதனால ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்துருங்க.(Click here)

Wednesday, October 12, 2011

விவாஜி Updates- Oct12

Vivaji ன்னா என்னான்னு தெரியாதவங்களுக்கு . Twitterல் என்னோட ID @vivaji http://twitter.com/vivaji





  • கோவிலுக்குப் போனேன். முருகன், விநாயகர், லஷ்மி, ஐயப்பன், பெருமாள் எல்லார் கூடவும் பேசினேன். அவுங்கதான் யாருமே என்கிட்ட பேசலை.

  • ஜொள் விடுவது தப்பில்லை. அது அடுத்தவர்களுக்கு தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும்

  • அழகான பொம்மைகள் வைத்து ஆராதிப்பதுதான் கொலு என்றால், அவள் இருக்கும் என் வீட்டில் வருடம் முழுவதும் கொலுதான்

  • நான் எப்பொழுதும் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். என் கம்பீரம் தொலையும் இடத்திலேயே, என்னையும் கொன்றுவிடு

  • சில பேரோடு கொண்டாடும்போது, கொண்டாட்டங்கள் கொண்dotங்களா மாறிவிடுகிறது. அப்புறம் அவர்களைப் பார்க்கவே பிடிப்பதில்லை

  • மணிக்கணக்குல நான் நல்லவன்னு பில்டப் குடுத்தாலும், நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சரியா கண்டுபுடிச்சிடறாங்க. கேர்ள்ஸ் ஆர் கிரேட்

  • அங்கிள்ஸ் அங்கிள்ஸாவே பேசிக்கிறாங்க. ஆனா இந்த auntiesதான் teenAgeல இருக்கிறா மாதிரி பேசிக்கிறாங்க.

  • பெண் தப்பாவே பாடினாலும் ரசிக்க முடிஞ்சது "என் இனிய பொன் இளாவே"

  • ஒவ்வொருவரின் வாழ்விலும் "சங்கீத ஸ்வரங்கள்"-அழகன் போன்றதொரு நிகழ்வு கண்டிப்பாய் நடந்தேறியிருக்கும். Atleast team conf call

  • வாடி போடின்னா திட்டுறாங்க. அம்மா'டி'ன்னேன் ஒன்னும் சொல்லலை(என்ன உலகம்டா இது?)

  • உலகில் இரண்டே வகையான பெண்கள்தான் உள்ளனர் 1)அழகாயிருக்கும் பெண்கள் 2)தான் அழகு என நினைக்கும் பெண்கள்

  • @paval குழுமம் -->பதிவுகள்  --> ஆர்குட் --> பேஸ்புக்   --> டிவிட்டர்   --> பஸ்  -->ப்ளஸ்    --> குழுமம்
#வாழ்க்கைஒருவட்டம்டா

  • இந்திய உணவை அனுப்புங்கள் இந்திய இங்கிலிஷை அனுப்பாதீர்கள் # தமிழ் வளர்க்கும் கனேடிய வெள்ளைக்கார ஆசிரியைகள் @calgarysiva :
  • @calgarysiva : ஆங்கிலத்தையும் கொன்று தமிழையும் இனி மெள்ள சாகடிக்கும் டமிளர்களுக்கு சவுக்கடி# தமிழ் வளர்க்கும் கனேடிய வெள்ளைக்கார ஆசிரியைகள் உங்கள் குழந்தைகளிடம் உங்கள் தாய் மொழியில் பேசுங்கள், ஆங்கிலத்தை நாங்கள் கற்று தருகிறோம். தமிழ் வளர்க்கும் கனேடிய வெள்ளைக்கார ஆசிரியைகள் @calgarysiva :

  • மீட்டிங்ல கொட்டாவி வராம தடுக்க ஏதாவது மருந்து மாத்திரை இருக்கா?

  • நாம சொல்றதுக்கெல்லாம் Rofl,LoL போடுறவங்க மூஞ்சியில சிறுபுன்னகை கூட வந்திருக்காது #onliners
கடைசியா கேபிள் சங்கருக்காக
நானும் யூத்துன்னு சொல்ற யாருமே யூத் இல்லே. யூத் எவனும் நான் யூத்துன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லே



....

Tuesday, October 11, 2011

காதல் ஜூரம்-1

(தமிழ் பதிவுலகத்தில் காதல்)

இவன் எழுதும் பதிவுக்கு பின்னூட்டம் விழுந்தது இதுதான் முதன் முறை. இதுவரைக்கு 26 எழுதியாச்சு. யாரும் கண்டுக்கலே. பிராமணீயம், பெரியாரீயம், வெங்காயம், டவுசர் கிழிஞ்சதுன்னு எழுதத் தெரியாதவனுக்கு எவன் பின்னூட்டம் போடுவான். இதையெல்லாம் எழுதனும்னு இவனுக்கு தெரியல.

Anonymous Said..
I like your writing style and your kavithai's. I dunno how to write in tamil. Or else I would have written in Tamil. I have added your blog to my fav. Eagerly waiting for your next poem.


சொந்தப்பேரில் எழுத, இவன் படம் போட்டுக்க விருப்பமில்லாமல், எழுதும் பதிவர்களில் இவனும் ஒருவன். Onsite வந்ததுல இருந்து தமிழ் மேல இவனுக்கு இருக்கிற பற்று அதிகமாக.. அதிகமாக எழுத ஆரம்பிச்ச போதுதான் கவிதை எழுத ஆரம்பிச்சான். அப்புறம் பிலாக் பண்ண ஆரம்பிச்சு உருப்படாத போனவன் இவன். தமிழ் ஆரவாரமே இல்லாத இடம், பணி புரியும் இடத்திலும் ஹிந்தி இப்படி தமிழுக்கு அப்பால் இருக்கிறவங்களுக்குத்தானே தமிழ் மேல இனம்புரியா ஆர்வம் வரும்.

இவன் எழுதும் கவிதையை யாரும் படிப்பதே இல்லை. இதற்கும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி, பிலாக் குட்டு எல்லா இடத்திலேயும் பதிவை கூட்டி வெச்சு, எல்லா பட்டையயும் போட்டு ஒரு பின்னூட்டமும் வராத நிலையில இப்படி வந்த பின்னூட்டம் வந்ததே பெரிய சந்தோசமா இருந்துச்சு,. பின்னே வந்த மொத பின்னூட்டமே அனானி. ஹ்ம்ம், நடத்துவோம்னு உங்க பின்னூட்டத்துக்கு நன்றின்னு ஒரு பின்னூட்டம் போட்டு எண்ணிக்கையில் இன்னொன்னையும் சேர்த்து தமிழ்மணம் வந்து பார்த்தான். சோத்தாங்கை பக்கம் அவன் இடுகை தெரிஞ்சது. அடுத்த நிமிஷம் இன்னும் பின்னூட்டங்கள் வந்ததா ஜிமெயில் அறிவிப்பான் வந்து சொல்லிட்டு போனார்.

Anonymous Said
You are welcome.


Anonymous Said
"DONT PUBLISH"


Please add my mail id so that we can chat in this weekend. "digitalwaves@********.com".
அட, நமக்கும் ஒரு ரசிகப் பட்டாளம் போல இருக்கேன்னு நினைச்சுகிட்டு weekend எப்படி என்ஜாய் பண்றதுன்னு பட்டியல் போட ஆரம்பிச்சான் ரகு.

விதி சொன்னது: அடப் பாவி இனிமே உனக்கு வீக் எண்ட் எல்லாமே பதிவுலகம் தான், அதனால கடேசி வாரம் என்ஜாய்!

தொடரும்

Monday, October 10, 2011

மகசூல்- Oct-10-2011

Facebook, twitter எல்லாவிடத்திலேயும்
தேடிவிட்டேன்.
எனக்கானவள் மட்டும் இன்னும்
கிடைக்கவேயில்லை..

கிராமத்தில்
காத்துக்கொண்டிருக்கிறாள்
என் அத்தை மகள்!

--00--



நாள் தோறும்
 என் தேவதை
 என் கண்ணில்!
வாசல் கடக்கையில் சென்ற
கோதுமை குதிரையைப்பார்த்தப்பிறகு
தேவதை முகம் மட்டும்
 நினைவிற்கு
வந்துத்தொலையமாட்டேன்
என்கிறது!

--00--

னக்கும் எனக்குமான தொகுதிகள்
உடன்பாடு ஏற்படுவதேயில்லை.
கூட்டணி ஆட்சிதான் என்றாலும்,
அதிகார வர்க்கமெல்லாம் உன்னிடமே,
சட்டசபையிலே உன் குரல் மட்டுமே
என்றுமே கேட்கிறது,
எதிர்கட்சியாகவே உணர்கிறேன் என்றும்,
எனக்காக தருணம் வருவதேயில்லை.
வந்தாலும் இடைமறுப்பு செய்துவிடுகிறாய்,
என்ன ஆனாலும் ஆட்சி மட்டும்
சிறப்பாகவே நடக்கிறதாம்
நம் இல்லமெனும் அரசியலில்!

----00----

ல்லா ஏத்திவிட்டுட்டு போற பொண்ணும்,
பேருந்துலயிருந்து இறக்கிவிடற
கண்டக்டரும்
நல்லா இருந்ததே
சரித்திரமே இல்லை!

--------------------------------------------

யிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. ஒரு நாள் கங்கை நதியில் பயணிகள் படகில் சென்றுகொண்டிருந்தனர். இரவு நேரம். திடீரென்று மற்றொரு படகில் வந்த கொள்ளையர்கள், பயணிகளின் படகில் ஏறினார்கள். அந்தப் பயணிகளின் விலையுயர்ந்த ஆடைகளையெல்லாம் கொள்ளையர்கள் கவர்ந்துகொண்டார்கள். யாராவது எதிர்த்தால் அவர்களைக் கொல்லக்கூடத் தயங்காதவர்கள் அவர்கள்.


கொள்ளையடித்த பிறகு கொள்ளையர்கள், தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் பயணிகளின் முகங்களைக் கூர்ந்து பார்த்தார்கள்.இதைப் பார்த்த பயணிகளில் ஒருவர், மற்ற பயணியிடம் சொன்னார்:

""துர்க்கையை வழிபடுகின்ற கொள்ளையர்கள் இவர்கள். எல்லா வருடமும் இவர்கள் ஒரு இளைஞனை துர்க்கைக்குப் பலிகொடுப்பார்கள்!''

மற்றொரு பயணி சொன்னார்:
""இந்த முறை பலிகொடுப்பதற்கான ஒரு ஆளைத்தான் நம்மிடையே தேடுகிறார்கள்!''

இந்த நேரத்தில், படகின் ஒரு புறத்தில் இருந்த அழகான ஒரு இளைஞனைக் கொள்ளையர்கள் தேர்வு செய்தார்கள். அவன் வெளி நாட்டுக்காரன்.

கொள்ளையர்களில் ஒருவன், ""ம்...இவன்தான் பலி கொடுப்பதற்கு ஏற்றவன்!'' என்று சொல்லி அந்த இளைஞனைப் பிடித்து நிற்க வைத்தான். அப்போது இளைஞன் சொன்னான்:

""நீங்கள் என்னைக் கொல்லலாம். ஆனால் உங்களின் இந்தச் செயலால் உங்களுக்குத் துர்க்கையின் அருள் கிடைக்காது. ஏனென்றால் மிகவும் தொலை தூரத்தில் உள்ள நாட்டிலிருந்து, புத்தரைப் பற்றி நேரடியாக அறிந்து கொள்வதற்காக வந்த பயணி நான். என் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை!''

இதைக் கேட்ட மற்ற பயணிகளுக்கு அந்த இளைஞனின் மீது அன்பும் இரக்கமும் ஏற்பட்டது. இளைஞனைச் சும்மா விட்டுவிட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகத் தங்களில் ஒருவரைப் பலி கொடுப்பதற்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படியும் அவர்கள் கொள்ளையர்களிடம் சொன்னார்கள். ஆனால் கொள்ளையர்கள் அதைக் கேட்கவில்லை. அந்த இளைஞனையே பலி கொடுப்பது என்று முடிவு செய்தார்கள்.

"நான் பலியாகத் தயாராக இருக்கிறேன்! ஆனால் நான் பிரார்த்தனை செய்வதற்கு எனக்குச் சற்று நேரம் அவகாசம் தரவேண்டும்'' என்று இளைஞன் சொன்னான்.

கொள்ளையர்கள் சம்மதித்தார்கள்.

இளைஞன் பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். ஆச்சரியம்! அப்போது ஒரு பயங்கரமான புயல் காற்று வீசியது. கங்கை நதி கொந்தளித்தது. அலையில் படகு ஆடியது.

பயணிகளும் கொள்ளையர்களும் பயந்துவிட்டார்கள். துர்க்கா தேவி தங்கள் மீது கோபம் கொண்டுவிட்டாள்போலிருக்கிறது என்று நினைத்த கொள்ளையர்கள் இளைஞனை விடுதலை செய்தார்கள். பிறகு பயணிகள் தங்கள் படகை கரைக்குச் செலுத்தி தப்பினார்கள்.

அந்த நேரத்தில் அப்படியொரு புயல் வீசவில்லையென்றால் "யுவான் சுவாங்' என்ற பெயருடைய அந்த இளைஞனின் வாழ்க்கை முடிந்திருக்கும். ஆமாம், உலகப் புகழ் பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங்தான் அந்த இளைஞன்.

யுவான் சுவாங் (602 - 664)

இந்தியாவில் 14 வருடங்கள் பயணம் செய்தவர் யுவான் சுவாங். இவர் சீன நூலாசிரியர். 1300 வருடங்களுக்கு முன்பு 5000 கிலோ மீட்டர் நடந்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்தார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் படித்தார். கி. பி. 645 - ஆம் ஆண்டு சீனாவிற்குத் திரும்பினார்.

----00-----

Monday, October 3, 2011

Indli- இண்ட்லி-சொந்த செலவில் சூன்யம்

இண்ட்லியின் புதிய அம்சம் என்ன தெரியுங்களா? மேலே இருக்கிற படம்தான். இண்ட்லியில் நான் யாரையும் பின்தொடர்வது இல்லை. அதன் காரணமாக இனிமே எனக்கு எந்த பிரபலமான இடுகைகளும் தெரியாது. என்னாங்கடா டகால்டியா இருக்கு. எத்தனை இடத்துலதான் தொடர்வதாம், Buzz, reader, Twitter, Facebook. இப்படி பல இடங்களில் தொடர்ந்து தொடர்ட்ந்தே சலிச்சுப்போவுது.
(இதுக்கும் எந்த பொண்ணையும் வாழ்க்கையில பின்தொடர்ந்து போனது கிடையாதென்பது இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத சுய அறிமுகம்) 

 இதற்கு என்னுடைய கண்டங்கள். இந்த புதிய வசதி பலரை தன்னுடைய பயணர் பகுதியில் இருந்து இழக்க நேரிடும். ஏற்கனவே போட்டி பலமா இருக்குற நேரத்துல சொந்த செலவுல சூன்யம் வெச்சிட்டிருக்காங்க. நான் யாரையும் பின் தொடர போவதில்லை என்பதே என் நிலைப்பாடு.

நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்? பின்னூட்டத்துல சொல்லிட்டுப்போங்க. இதையே ஒரு கண்டனப்பதிவாவும் நீங்க நினைக்கலாம் இல்லாட்டி இந்த வசதிக்கு ஆதரவாகவும் நீங்க நினைக்கலாம். இதற்காக நீங்க பண்றது எல்லாம் ஒன்னே ஒண்ணுதான். சோத்தாங்கை பக்கம் பாருங்க ஒரு வாக்குப்பட்டை இருக்கும். அதுல உங்க பொன்னான வாக்குகளை செலுத்திட்டு போங்க பாஸூ.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)