Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Saturday, May 6, 2017

காலப் போக்கில் அழிந்து போகும் சில

1980களில் ராதாகிரி அண்ணன் ஊரில தட்டச்சு பயிலகம் நடத்திவந்தவர். “அண்ணே இதைவிட்டு வேற வேலைக்குப் போய்டலாமே?” என்றால் “டேய், எது அழிஞ்சாலும் இந்தத் தொழில் அழியாதுடா, காயிதமும் எழுத்தும் இருக்கிற வரைக்கும் தட்டச்சு வேணும்” என்பார்,  பிடிவாதக்காரர். பிறகு சில வருடங்களில் அவரது பயிலகத்திற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. 10 வருடங்கள் கழித்து திரும்ப ஊருக்குப்போனபோது, ராதாகிரி அண்ணன் Internet Browsing center/Xerox கடையாக மாற்றியிருந்தாரு. “என்ன அண்ணே ஆச்சு” என்றதற்கு, ”காலத்துக்கு ஏத்தாப்ல மாறினாத்தான் பொழைக்க முடியும்டா” என்றார்.

இன்றைய காலத்தில் நாம் புழங்கும், அவையெல்லாம் இல்லையென்றால் நம்மால் வாழ முடியாது என்று நாம் நினைக்கும் பல சாதனங்கள் அழிந்துவிடும். இதைச்சொன்னால் நாமும் ராதாகிரி அண்ணன் போல இல்லை என்று பிடிவாதம் பிடிப்போம்.

பிடிவாதம் பிடிக்காமல் யோசித்துப்பார்த்தால் பல விசயங்கள் நமது எண்ணத்திற்கு வரும், அதில் சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன்.




தந்தி வழி தொடர்புகள்:
இப்போது இருக்கும் தந்திவழி  Cable தொலைக்காட்சி, தொலைபேசி இரண்டுமே அழிந்து போகும்.  இவையிரண்டுமே தந்தியில்லா முறையில் புழங்க ஆரம்பிக்கும். Dialup Modem, electronic typewriting Machine என்ற சாதனங்கள் எல்லாம் நமது கண் 

முன்னேமேயே, அதிக நாள் வாழாமல் போன சாதங்கள். அதுவும் இந்த 20 வருடங்களுக்குள்தான் கண்டோமே.. இல்லத்திரையரங்க சாதனங்கள் எல்லாம் கம்பியில்லா சாதனங்களாக மாற ஆரம்பித்தாயிற்று என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.




தொலைக்காட்சி:
தொலைக்காட்சி என்ற சாதனம் இருக்கும், தொலைக்காட்சி என்று நாம் இப்பொழுது கண்டு வரும் வழிமுறை மாறிப்போகும், நினைத்த நேரத்தில் முன்னகர்த்தியோ, பின்னகர்த்தியோ நிகழ்ச்சிகளை கண்டு களித்துக்கொள்ளலாம். செய்திகள், விளையாட்டு போன்ற சில நிகழ்வுகள்  

மட்டுமே நேரலையாக இருக்க வாய்ப்பிருக்கும்.


ஓட்டுநர்:
இப்போது நாம் ஊர்த்திகளை ஓட்டிவருகிறோம், விபத்துகள் ஏற்படுத்தி வருகிறோம். சில கவனக்குறைவுகளால் எத்துணை உயிரிழப்புகள்? வருங்காலத்தில் இவயெல்லாம் இருக்காது, தானியங்கி மகிழுந்துகள், ஊர்த்திகள், கனரக வாகனங்கள், புகைவண்டி வரும். இன்றைய பயன்பாட்டில்

இருக்கும் GPSஐ ஊர்த்திலேயே ஒரு கருவியாக்கி வைத்திருப்பார்கள். அதுவுமில்லாமல் Speedlimit என்பதையும் நினைவகத்தில் வைத்து ஊர்த்திகள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால சாலைவிபத்துகள் பெருமளவு குறைந்துவிடும். என்ன? நாம் அவசரமாக செல்லவேண்டும் ஏன்று

நம் அவசரத்திற்கு வண்டிகளை வேகமாக ஓட்டிப்போவது நடக்காது, அதன் வேகத்தில்தான் போகும், நமக்கு பொறுமையும் அவசியம். அதே நேரத்தில் சரியான நேரத்தில் கிளம்பும் பழக்கம் வந்துவிடும்.


கைக்கடிகாரம்:
இது இன்னும் 20 வருடத்துக்குள் கைக்கடிகாரம் காணாமல் போய்விடும் என் கணிப்பு. இந்தத் தலைமுறை பதின்ம வயதினரே கைக்கடிகாரங்களை விரும்புவதில்லை. ”நேரம் பார்க்க கணினி, அலைபேசி என்றிருக்கையில் அது எதற்கு தேவையில்லாமல்?” என்ற சொல்லாடல் இப்பொழுதே கேட்க ஆரம்பித்துவிட்டோமே. கைக்கடிகாரம் ஸ்மார்ட் வாட்ச் என்று மாறி இன்று மணி பார்க்க மட்டுமில்லாமல் உடல் நலத்திற்காக மாறிப்போயிருச்சு..



கணினி:
மடிக்கணினி,  மேசைக்கணினி என்பதெல்லாம் பயன்பாட்டில் இல்லாமல் போய்விடும். கைக்கணினி (Smartphones) மட்டுமே பயன்பாட்டிலிருக்கும். கைக்கணினிகளுக்கு, திரைகள் வேண்டுமானால் ஒரு இணைப்பாக இருக்கலாம், ஆனால் மூலமாக கைக்கணினிகள் மட்டுமே

இருக்கும்.  கொளுவுக்கணிமை(Virtual Computing) நமது வீடு வரைக்கும் வந்துவிட்டிருக்கும். வீட்டிலிருக்கும் கணினிகளும் செயல்படுவது வேறிடமாக இருக்கும், அதாவது மேகக்கணிமை(Cloud) பெருமளவுக்கு பயன்பாட்டிலிருக்கும். எந்தவிதமான தரவுகளும்(data)

நம்மிடமில்லாமல் வேறிடத்தில் பத்திரமாக இருக்கும்.



அலுவலகங்கள்:
அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்ப்பது என்பது அரிதாகிவிடும். அவசரப்படாதீர்கள், பணி செய்வதென்பது இருக்கும், அதற்காக அலுவலகத்திற்குத்தான் சென்று வரவேண்டுமென்பதில்லை. மேசைகளில் முடியும், மக்களைச் சந்திப்பது என்பதெல்லாம் எங்கிருந்தும் செய்யக்கூடிய

வேலைகளை. Video Conferencing, teleconferencing என்பதுதான் இன்று நாம் சொல்லும் Meetingன் அடுத்த கட்டமாக இருக்கும். அவையெல்லாம் வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாமே இதனால் அலுவலக இடம் மீதம், அலுவலக செலவுகளும் மீதம். வீட்டிலிருந்து

வேலை செய்வதென்பது பிரதானமாகிவிடும். இணையமில்லா வாழ்க்கை அரை வாழ்க்கை என்ற புதுமொழி கூட வரும்.


உணவு:
ஆமாம், உணவு என்பதும் கூட இல்லாமல் போகலாம். நம் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் குளிகைகளாகி வரும். சுவைகளைக்கூட நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், வயிற்றில் சுரக்கும் அமிலத்தையும் கட்டுப்படுத்த ஏதாவது குளிகைகள் வரலாம். நம்முள்ளேயே மரபணு மாற்றங்கள் வரலாம். நேரமின்மை வயிற்று உபாதைகள் காரணமாக வரும் பிரச்சினைகள் அனைத்திற்கும் இந்தக் குளிகைகள் ஒரு அறுமருந்தாக இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துகளும் சரி விகிதத்தில் அனைத்து குழந்தைகளுக்கு குளிகைகள் மூலம் அளிக்கப்படும். ஏன் தண்ணீருக்குக்கூட மாற்றாக குளிகைகளே வரலாம். முடியாது என்பவர்கள் விண்வெளியில் பணியிலிருக்கும் சிலரின் வாழ்க்கை முறையை உதாரணமாகக் கொள்ளலாம்.


Tuesday, March 19, 2013

திமுக விலகல் - ஒரு அலசல்

காங்.  கூட்டணியிலிருந்து திமுக விலகியது.


அதிமுகவுக்கு, இது பெரும் சங்கடத்தை கொண்டு வந்து தந்திருக்கிறது. ஏற்கனவே மாணவர்கள் போராட்டம், இதில் இவர்களும் இன்னொரு பக்கம் செய்லபட, வரும் பாராளமன்ற கூட்டணியில் குழப்பத்தை தாராளமாகச் திமுக செய்யும் என்பது இன்னொரு கவலை. இது நாள் வரையில் அமைதி காத்து வந்த முதல்வரே  "இது ஒரு நாடகம்" என்று அறிக்கை விடுமளவுக்கு  மாற்றியிருக்கிறது. அதிமுகவுக்கு கையறுநிலையை கொண்டு வந்ததில் கலைஞர் மீண்டும் அரசியல் சாணக்கியன் என்று நிரூபித்திருக்கிறார்.

காங். இது பெரும் பின்னடைவே, தமிழகம் மட்டுமல்லாமல், தேசியளவிலும். ஆட்சியிலிருந்தாலும், திமுகவின் விலகல் ஒரு தர்ம சங்கடத்தை அளித்துவிட்டது.

தமிழகளவில், மக்களுக்குத் தெரியும் இந்த விலகல் எந்த விதமான பயனும் இல்லையென. சதுரங்க ஆட்டத்தில் வெட்டு நடந்துகொண்டிருக்கும் இடத்திற்கு அப்பால், சம்பந்தமேயில்லாமல் ஒரு மூவ் நடக்குமே அதுபோலத்தான் என்பது தமிழக மக்களின் பார்வை. காரணம் மாணவர்களின் முன்னெடுப்பு, டெசோவை அசாதாரணமாக கீழே தள்ளியது.

சோ, சுப்ரமணிய சாமி போன்றவர்களுக்கு வேலைக்கான நேரம் வந்துவிட்டது. டீ பார்ட்டி, அரசியல் கலந்தாலாசோனைகள், செவ்விகள் என இனி தேர்தல் வரைக்கும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பல லாபியிஸ்ட்டுகள் தமிழகம் நோக்கி வர விமானத்திற்கு சீசன் டிக்கெட் எடுத்திருப்பார்கள்.

இந்தியளவில், திமுகவிற்கு இது பெரிய வெற்றி, CNN ஆரம்பித்து விட்டது,. இன்னும் 2 நாட்களுக்கு TRP Rating இறங்காமல் திமுகவின் விலகலை வைத்து நிகழ்ச்சிகள், செவ்விகள் என ஒப்பேற்றிக்கொள்வார்கள்.


யாருக்கு எப்படியோ திமுக தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. இறுதிக்கட்ட ஈழப்போரின் போது கையறுநிலையிலிருந்தவர்கள் திமுக தொண்டர்கள்தான். இனிமேல் கொஞ்சம் சுவாசித்துக்கொள்வார்கள்.

Wednesday, October 17, 2012

33/365 "மின்"சாயம் வெளுத்துப்போச்சு

தமிழ்நாட்டுல மின்சாரம் இல்லையாம், அப்படியா?

சென்னை - இது தமிழ்நாட்டின் பால்கனி டிக்கெட். மீதியெல்லாம் தரை டிக்கெட் என்று வரையறுத்திருக்கிறது இந்த ஆட்சி. அதைவிடுங்க, ஈரோட்டு சூரம்பட்டிவலசு நால்ரோட்டுல நின்னு "ஏ! அமெரிக்க ஏகாதிபத்யமே" அப்படின்னு குரலுவுடற மாதிரி நானும் கொஞ்சம் ட்விட் போட்டேன். அதை அப்படியே இங்கே தொகுத்து தாரேன்




  • ஈரோட்டுக்காரனுக்கு கரண்ட்டே இல்லையாம், சென்னைக்காரனுக்கு ஏசி போடமுடியலைன்னு வருத்தமாம். ஜனநாயக நாடாயிது? 

  • சம்சாரம் அது மின்சாரம் - சம்சாரம் என்பது கடுப்படிக்கும் அப்படின்னு விசு சரியாத்தானே சொல்லிவெச்சாரு. 

  • பெட்ரோமேக்ஸ் லைட்டேத்தான் வேணுமான்னு கேட்கிறவங்களுக்கு "இருட்டுலயே எம்புட்டு நேரம்தான் இருக்கிறது?" #தநா #மின்சாரம் 

  • கேப்டன் அப்பவே பாட்டுப் பாடி வெச்சிட்டாரு "புன்னகையில் மின்சாரம்".. நாம சிரிச்சாலும் இந்தப் பெண்கள் சிரிக்கவே மாட்டேங்குறாங்கப்பா.. 

[இந்தப் பாட்டுக்கு நடனம் அமைச்சு சொன்ன போது என்ன நினைச்சிருப்பாரு நம்ம கேப்டன்னு நினைச்சிப்பாருங்க. இது நடனம் அமைச்சது யாராய் இருக்கும்?]

  • 2018 : மின்சாரம் - என்ற வார்த்தை கேட்டவுடன் ஷாக்கடித்துப்போனேன் நான். யாரது, பழையகாலத்தை நினைவூட்டுவது என..

  • வீட்டுல மின்சார தயாரிப்பது எப்படி? தெரியவேண்டுமா? எங்களிடம் வாங்க. ரூ. 19,999ல் ஒரு வார பயிற்சின்னு இன்னுமா ஆரம்பிக்கலை?

  • கருவறை இருட்டிலே உருவானோம், தமிழக இருட்டிலே வளர்ந்தோம், புதைகுழியின் இருட்டிலே அடங்குவோம். இதுக்கு நடுவுல எதுக்குடா மின்சாரம்?  

  • இயக்குனர்: தமிழ்நாட்டுல ஒரு ஊரு, 24 மணிநேரமும் மின்சாரம் இருக்கும். தயாரிப்பாளர்: செம கதை சார், மேலே சொல்லுங்க 

  • சென்னையிலிருக்கிறவனுக்கு மட்டும் என்ன ரெண்டாயிருக்கு? - இப்படித்தான் என் கிராமத்து நண்பன் கேட்டான் #மின்சாரம் 

  • ராஜீவ்மேனன் ஒரு தீர்க்கதரிசி, 1997லேயே "மின்சார கனவு" அப்படின்னு படம் எடுத்திருக்காரே.. 

Thursday, October 11, 2012

31/365 பண்ணையம் அக்-11

இந்தவாரம் வெளியான இன்னொரு டீசர்.. ஆமாங்க, போடா போடி, நீர்ப்பறவை, மற்றும் துப்பாக்கி.. 3 டீசர்கள் வெளிவந்துச்சு. அதுல செல்ஃப் எடுக்காம போன டீசர் இதுதான். மீது ரெண்டு அருமை. அதுவும் துப்பாக்கி டாப்-கிளாஸ் மாஸ் டீசர்


==00oo00==
போன வாரம் Ben & Jerry Icecream தயாரிக்கிற இடத்துக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம். அங்கே ஒரு படம் சிரிக்க வெச்சது. நமக்கு சங்கி மங்கி தெரியும், இது என்னமோ புதுசா சங்க்கி மங்க்கின்னு ஒரு Icecreamமாம்



==00oo00==
நான் விரும்பிய என்னுடைய ட்விட்டுகளில் சில
  • கலைஞர் சட்டையை மாத்தினார். இணையம் முழுக்கா அதே பேச்சு. Now you know who the Trend Setter is


  • ''அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல; இருவரும் தி.மு.க-தான்!'' #இந்த வசனம், ஃபெவிக்கால் விளம்பரத்துக்கா தலைவா?

  • நானெல்லாம் எதுவும் கலக்காமலே, தண்ணியை ஒரு ஆஃப் அளவுக்கு அடிக்கிறவன் #குடிக்காதவர்களின் பஞ்ச்


  • அதிமுகவுல சேர்ந்துட்டா, ஒரு முறையாவது.. ஒரு வாரமாவது அமைச்சாராகிடலாம்


  • அரசியல் இன்னும் முழுச்சாக்கடையாகவில்லை. நல்லகண்ணு, வை.கோ மாதிரி இன்னும் நல்ல தலைவர்கள், சிலர் இருக்கிறார்கள்

  • கெளதம் ஒரு படத்தைத்தான் காப்பியடிச்சாரு. ALவிஜய் எல்லாப் படமுமே அப்படித்தான் பண்றாரு. ஆனா மதிக்கவே மாட்டேங்குறாங்க


  •  வெளியாகும் பாதி குறும்படங்களில் சரக்கடிப்பதே முக்கிய நிகழ்வாக காட்டப்படுகிறது. அப்படி மாறிப்போச்சு நம்மோட சமுதாயம்.


  • பனியன் போட்டு, சட்டையை அதுக்கு மேல போட்டு "டக் இன்" பண்ணிட்டுப் போறதுக்கு எதுக்கு 6 பேக்? #முடியாதவன்பேச்சு


  • குவாட்டருக்கும், ட்விட்டருக்கு ஒரு நெருங்கிய சம்பந்தமுண்டு. ரெண்டுலேயும் உள்ளே இறங்கிட்டா உளறல் அதிகமா இருக்கும்


  • சோகமான தருணங்களில் தேநீர் அருந்துவது, கொஞ்சம் கொஞ்சமாய் கவலைகளைப் விழுங்கிக்கொண்டிருப்பதாய் தோன்ற வைக்கிறது.


  • இப்போதெல்லாம், சன் / கே டிவிக்களில் ஒளிபரப்பாகும் படங்களை பார்க்கவைப்பதில் இளையராஜாவே முக்கிய பங்குவகிக்கிறார்.



==00oo00== 

இந்த வாரம் நான்கு படங்களின் பாடல்கள் வெளியாகியிருக்கு

  • ஆதிபகவன் - இயக்கம் - அமீர் / இசை - யுவன் / ஜெயம் ரவி, நீத்து சந்திரா
  • துப்பாக்கி - இயக்கம் - முருகதாஸ் / இசை - ஹாரிஸ்/  விஜய், காஜல் அகர்வால்
  • நீர்ப்பறவை -  இயக்கம் - சீனு ராமசாமி - /இசை- ரகுநந்தன் / விஷ்ணு, சுனைனா
  • போடா போடி - இயக்கம் - விக்னேஷ் சிவா/இசை - தரன்/ STR, வரலட்சுமி

==00oo00==  

அம்மணிதான் தினமும் என்னை வேலையிடத்துக்கு கொண்டு வந்து விடறதும், திரும்ப கூட்டிட்டுப் போறதும்.  வழக்கமா வர்ற கேள்விதான், இன்னிக்கும் வந்துச்சு " வேலை முடிஞ்சதா? வரலாமா?"

ஆனா, வழக்கமாயில்லாம நான் சொன்ன பதில்

தலையை லைட்டா ஆட்டி "I am waiting" அப்படின்னு சொன்னேன் #துப்பாக்கி

காரணம்???



==00oo00==

இந்த வாரம் மாற்றான் வெளியாகுது, பார்ப்போம். அது Stuck On youவா இல்லையான்னு.

Tuesday, September 18, 2012

23/365 சென்னையில் துணை-தூதரக ஆர்ப்பாட்டம்

அமெரிக்க குறும்படத்திற்கு(Innocence of Muslims) எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதுல கலந்துகிட்டவங்க 5000க்கும் மேலேயே இருக்குமாம். அதனையொட்டி நானிட்ட ட்விட்டுகள்


  • நேத்துதான் கடவுளே இல்லைன்னு பெரியார் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. இன்னைக்கு ஒரு இறைதூதரை கேவலப்படுத்திட்டாங்கன்னு அடிச்சிக்கிறாங்க. #நடுசென்ட்ர்ஸ் பாவமில்லையா? #ட்விட்டர் புலம்பல்
     
  • Most of them never saw the Videos Yet, but they are in Mount Road Now. [அந்தக் குறும்படத்தின் Trailerஐ பார்த்தவர்கள் எத்தனை பேரு இருக்கும்?]

  • நாம எல்லாம் தான் படிச்சவங்க #இன்னொசன்ஸ் ஆஃப்...  

  • ஒன்னு ரெண்டு விசா கிடைச்சிட்டு இருந்துச்சு. இனிமே சலிச்சி எடுப்பாங்க. ஹ்ம்ம்..  


  • சென்னை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். கண்டிப்பா அடிதடியாய் முடியப்போவுது.. வெளங்கும் #முஸ்LIM

  • நாளைக்கு விநாயகர் சதுர்த்தி வேற,. எந்த கடவுள் வந்தாவது கலவரம் இல்லாம பார்த்துக்கனும், கடவுளே!

  • தடியடியில் ஆரம்பித்து, வாகனங்களைச் சேதப்படுத்துவதில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வன் ரகுவரன் மாதிரி அம்மா உட்காந்திருக்க வேண்டிய கட்டாயம்.  

  • KFC, McDonald, MNC மேலேயெல்லாம் கல்லை விட்டெறிஞ்சிருந்திருந்தா சமநிலையாய் ஆகியிருக்குமே 
  • உண்மையாகவே போராடும் குணமிருந்தால், KFC, McDonaldல் சாப்பிடுவதையும் அமெரிக்க - MNCக்களில் வேலை செய்வதையும் தவிர்க்கலாமே 
  • இப்ப உடைச்ச கண்ணாடிக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம். சாலையில பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் எல்லாம் அமெரிக்கர்களா? 
  • தமிழ்நாட்டுல இருந்து என்னை யாராவது திட்டினா, தமிழர்களை எதிர்த்து போராடனுமா இல்லை தமிழக அரசை எதிர்த்தா #கன்பீசன்
Pic Courtesy/Thanks: IBN Live

Tuesday, September 11, 2012

19/365 செப்டம்பர் 11ல் இன்னொரு சம்பவம்

த்தட் த்தட் த்தட்..

வேகமாக கதவு தட்டப்பட்டது.

”இந்நேரத்துக்கு யாரா இருக்கும்? இப்பத்தானே வேலைக்குப் போனாரு, அதுக்குள்ளேவா வந்துட்டாரு?” என்றபடி கதவைத் திறந்த நவீனாவுக்கு ஆச்சர்யம். ஒருவர் நின்றிருந்தார், முன்னே பின்னே பார்த்திராத ஆசாமி. அஃப்சலை பார்க்க வந்திருப்பாரோ என நவீனா எண்ணியபோது...

 “குட்மார்னிங் மேடம். எப்படி இருக்கீங்க? அக்பர் இருக்காரா?”

“ஆமா, அவருடைய அறையில தூங்கிட்டு இருக்காரு, எதுக்காக கேட்குறீங்க?”

”நாங்க ****லிருந்து வந்திருக்கோம். தொந்தரவுக்கு மன்னிக்கவும், வழி விடறீங்களா?” என அடையாள அட்டையைக் காண்பித்தபோது தெருவிலிருந்து  நிறைய Cops, Bullet Proof Jacket அணிந்த படி திமு திமுவென வீட்டினுள் நுழைந்தார்கள்.

”எங்கே இருக்காரு?” என ஒருவர் கேட்க

“மேலே வலது பக்கம் மூன்றாவது அறை”

அனைவரும், கையில் துப்பாக்கி எடுத்துக்கொண்டார்கள், நவீனாவுக்கு ஏதோ விபரீதம் என்று அப்பொழுதுதான் புரிந்தது. அதே நேரத்தில் “அக்பர் நாங்க உங்களை கைது செய்ய வந்திருக்கோம். ஒத்துழையுங்கள். கதவைத் திறங்க”

....

சத்தமே இல்லாமல் ஒரு நிமிடம்.

”அக்பர்! மீண்டும் சொல்றோம், தேவையான அனைத்து ஆதாரங்களும் இப்ப எங்ககிட்ட இருக்கு. நீங்க ஒத்துழைங்க, ப்ளீஸ்”

.....

அடுத்த நிமிடம், அனைவரும்ம் துப்பாக்கியை தயாராக்க ஆரம்பித்தனர். unlock சத்தம் பட், பட் என வராந்தா முழுதும் எதிரொலித்தது”

டமார்.. கதவை உடைக்க ஆரம்பித்தனர்.. மூன்றாவது உதையில் கதவின் தாழ்ப்பாள் உடைந்து கதவு திறந்தது.  
அக்பர் கையில் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்று எண்ணியவர்களுக்கு வியப்பு. அமைதியாக கட்டிலில் கலக்கத்தோடும், குழப்பத்தோடும் உட்காந்திருந்தார்.  இரவு உடையிலிருந்து ஏற்கனவே வேறு உடைக்கு மாறியிருந்தார். இந்தக் கோலத்தை எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.

கைது செய்ய ஏதுவாக அவரே முன்வர, அவரின் கைது படலம் எந்தவித அசம்பாவிதமுமில்லாமல் நடந்தேறியது.




வழக்கு பற்றிய விவரங்களுக்கு  


ஒரு காலத்துல மேயர் குடியிருந்த, அரசுக்குச் சொந்தமான வீடு, அரண்மனை மாதிரி. இப்படித்தான் அந்த வீட்டைப் பத்தி நான் முதலில் கேள்விப்பட்டது. 6 படுக்கையறைகள், 1000 சதுர அடிக்கும் குறையாத Dinning Hall, அதே  அளவில் Living Room, Kitchen. பிரமாண்டத்தை அங்கேதான் பார்த்தேன். 

நான் நியூஜெர்சிக்கு வந்தவுடன் நான் குடியிருக்க வீடு தேடியதில் குறைந்த வாடகைக்கு கிடைத்த வீடு அதுதான். இருங்க, தப்பா கணக்குப் போடாதீங்க. வீட்டுக்குச் சொந்தக்காரர்(அக்பர்) இந்த வீட்டைப் பார்த்துக்கொள்ள ஆள் தேடிய போது, நான் வீடு தேடியதும் ஒரே நேரத்தில் நடந்ததால் குறைந்த வாடகைக்கு ஒரு அறையில் தங்கிக்கொள்ள அனுமதியளித்தார். அத்தனை வசதிகளும் அந்த வீட்டில் உண்டு. Fully Furnished, Yes.

அவர் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. நாங்கள் 1st Floor(இந்தியவில் Ground Floor) தங்கிக்கொள்ளலாம். Fully Furnished Basement உபயோகப்படுத்திக்கொள்ளலாம். கூடைப்பந்து, தோட்டம் எல்லாம் அனுபவித்துக்கொள்ளலாம். அவர் எப்பவாவது வருவார், மாடியறையில் தங்கிக்கொள்வார். அவர் கேட்டுக்கொண்டது இந்த ஒன்றே ஒன்றைத்தான். நாங்களும் குடிவந்தோம், 13 கார்கள் நிறுத்த இடமிருந்து கார் இல்லாமல் இருந்தேன். காரணம், தேவைப்படவில்லை. தேவைப்பட்டால் தெய்வம் போல உதவ கே.ஆர். எஸ் இருந்தார்.

அரண்மனையில் குடியிருக்க ஆரம்பித்தவுடன், Basement மற்றும் மேலேயிருந்த படுக்கையறைகளை வாடகைக்கு விட ஆரம்பித்தார், அதுவும் நாங்கள் வந்து 6 மாதம் கழித்து. சமையலறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம். பொறுத்துக்கொண்டோம், காரணம்? எங்களுக்கும் அவ்வளவு பெரிய வீட்டில தனியா இருக்க சற்றே பயம் இருந்ததும்தான் காரணம்.


செப்-11-2008: நான் அலுவலகம் வந்து வேலைகள், சந்திப்புகள் முடிந்து 11:30 மணி வாக்கில் வீட்டிலிருந்து ஒரு அழைப்பு. "வாங்களேன், காப்ஸ் வந்திருக்காங்க. சோஷியல் கேட்டிருக்காங்க, உங்க கிட்ட பேசனுமாம்" என்று பதட்டமான குரலுடன் அம்மணி அழைத்தவுடன் அடித்துப் பிடித்து வீட்டுக்குச் சென்றேன்.


ஒரு பெரிய காவல்துறைப் பட்டாளமே அங்கே இருந்தது. தன்னை இந்தக் குழுவிற்கு முதன்மையானவர் என்று தன்னை தன் அடையாள அட்டையுடன் அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு அதிகாரி, வழக்கின் காரணங்களை கூறிவிட்டு எனக்கு இதில் எந்தளவுக்கு பங்களிப்பு இருக்கலாம், அதற்கான கேள்விகளைக் கேட்கப்போவதாக கூறிவிட்டு  5/6 கேள்விகள் கேட்டார். பதில்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், "உங்களுக்கான விசாரணை அவ்வளவுதான், இனி இந்த வீட்டில தங்குவது உங்களிஷ்டம் என்றும், அதனால் காவல்துறையினரால் எந்தப் பிரச்சினையும் வராதென்றும் உறுதிசெய்துவிட்டுச் சென்றார்.

அடுத்த நாள் அக்பரின் மகள் வந்தபோது, அழுகையினூடாக அவர் சொன்னது. ”எங்கப்பா எந்தத் தப்பும் பண்ணலை , அவர்னால உங்களுக்குத் தொல்லை ஏற்பட்டிருந்தா மன்னிக்கவும்” என்று முடிக்கும் போது மாலை மாலையாகக் கண்ணீர். பாவம், பள்ளிக்கூட பெண்ணுக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும். அம்மாவும் சிறையில், அப்பாவும் சிறையில். 5 பெண்கள், ஒரு சின்னப் பையன். இதுதான் அவர்களது குடும்பம்.

பிறகு 20 நாட்கள் அந்த வீட்டில் குடியிருந்தோம், இல்லை,, இல்லை அடுத்த நாளே வீடு தேட ஆரம்பித்தோம். காரணம், அக்பருக்கு அப்புறம் அந்த வீட்டுக்கு உரிமை எடுத்துக்கொண்ட வந்த ஒரு அம்மாவின் அடாவடித்தனமே எங்களை காலி செய்ய வைத்தது.

பி.கு: அக்பரும், அவரது மனைவியும் இரு மாதங்களில் விடுவிக்கப்பட்டனர். இன்றும் செப்-11 என்றால் அக்பருக்கு ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது

Monday, September 10, 2012

18/365 கூ"DUNG"குளம்

இந்த ஒரு படமே போதும்,

மக்களின் வாழ்வாதாரத்தை கொன்றுவிட்டு, வேறு மக்களுக்கு வசதி வாய்ப்பளிக்கும் அரசுக்கு வந்தனங்கள்

Friday, September 7, 2012

15/365 அமெரிக்காவின் ஹோலி

இப்போ http://thecolorrun.com அமெரிக்காவுல ரொம்ப பிரபலமாகிட்டு வர்ற ஓட்டம். மாராத்தானுக்கு எல்லாம் 3 மாசம் தவமிருக்கனும், இது அப்படியில்லை,  அதுவுமில்லாம.. இருங்க அதை கடைசியில சொல்றேன்.




இதுல என்ன பண்ணனும்.  மொத்தம் 5 கிமீ ஓடனும். (என்னடா இது அமெரிக்காவுல மைல் கணக்குத்தானே, கிமீ கிடையாதே) முதல் கிமீட்டருக்கு எல்லாரும் மஞ்சத்தண்ணி ஊத்துவாங்க. அதாங்க. வண்ணத்தை பொடியிலும் Squirt Pipeலேயும், அவுங்களே குடுப்பாங்க. அதை வாங்கி நாம மத்தவங்க மேல அடிக்கனும். அதான் விளையாட்டே. (பொடி சாப்புடறளவுக்கும் இருக்காம்).  ரெண்டாவது கிமீ போனவுடனே பச்சை வண்ணம். மூனுல நீலம், நாலாவது ஊதாவும், கடைசி மற்றும் அஞ்சாவதுல இளஞ்சிவப்பும் குடுப்பாங்க. வண்ணத்தை எல்லாம் நம்ம ஊர்ல ஹோலி கொண்டாடும் போது என்ன பண்ணுவோமோ அதையேதான் செய்யனும்.




ஆக மொத்தம் அஞ்சாவது கி.மீ முடிக்கையில வண்ணமயமா வரனும். இதான் இந்த விளையாட்டோட அடிப்படை. Fat Nation அப்படின்னு சொல்ற அமெரிக்காவுக்கு இது மாதிரி நிறைய ஓட்டங்கள் தேவைப்படுது. அதுவுமில்லாம இந்தியர்கள் அதிகம் பங்குபெறுகிற ஹோலியில இருந்து இதை உருட்டினதால வட-இந்தியர்களின் பங்கெடுப்பும் அதிகமா இருக்காம்.
இருக்காதா பின்னே?



நம்மூர்ல மஞ்சத்தண்ணி ஊத்துறது, அப்படின்னு ஒரு விளையாட்டு இருந்துச்சே தெரியுங்களா? நம்ம ஊர்ல இருந்த ஹோலியை, அமெரிக்காவுக்காக ஓட்டம்னு  மாத்தி கொண்ட்டாட்டமா மாத்தி ஓடறாங்க. நாம் தீவாளி, பொங்கல்னு இருக்கிற கொண்டாட்டத்தையே மறந்துட்டு , வெளியில கொண்டாடுவதை விட்டுவிட்டு வீட்டுக்குள்ள அடைய ஆரம்பிச்சிருக்கோம், அமெரிக்காவோ உள்ளேயிருந்து வெளியே வர முயற்சிக்கிறாங்க. இதுல இருந்து என்ன தெரியுது? உலகம் உருண்டைங்கிறதுதான்.



[படங்கள் and Info from : http://thecolorrun.com]

Thursday, September 6, 2012

13/365 பிரியும் பிஞ்சு மனசுகள்

நண்பனின் மகனுக்கு 6 வயது. இன்னொரு நண்பனின் மகனுக்கு 5 வயது. இருவரும் உற்ற தோழர்கள். அமெரிக்காவில் ஒரு குடும்பமே நட்பாய் இருப்பது என்பது அபூர்வம். அதாவது அப்பா- அப்பா, அம்மா-அம்மா, மகன் - மகன்.

மகன்கள் இருவருமே விட்டுக்குடுக்க மாட்டார்கள், அப்பா என்ன சொன்னாலும் “இல்லேப்பா, அவன் சொன்னான் சரியாத்தான் இருக்கும்” என்று சின்ன வயசே ஆனாலும் இருவருக்குமான நட்பு அப்படியாகத்தான் இருந்தது. போன வாரம் வரையில். ஆமாம், ஒரு குடும்பம் For Good இந்தியா கிளம்ப, பசங்களுக்கும் ஒரு குடும்பம் இந்தியா போவதாகச் சொன்னாங்க. பசங்க ரெண்டு பேருக்குமே அதனோட விபரீதம் புரியல, ஊருக்கு போயிட்டு வந்துடற மாதிரி நினைச்சிகிட்டே இருக்காங்க.

போனவாரம், பிரிஞ்சுப் போற குடும்பத்துக்காக, ஒரு Get toghether நடந்துச்சு. எல்லார் முகத்துலையும் கவலை தாண்டவமாடுது. பல வருடங்கள் பழகிய நட்பு, பிரியப் போவுதேங்கிற கவலை. பரிசுப் பொருட்கள் கை மாறுது. ஆனாலும் பசங்க எப்பவும் போல விளையாடுறாங்க, அடிச்சுக்கிறாங்க.

கிளம்புற நேரத்துல, எல்லாருக்கும் கண்ணுல தண்ணீர் வராத குறை, பசங்களுக்கு அது புரியவே இல்லை. “எப்போப்பா அவன் வீட்டுத் திரும்ப வருவோம்?” அப்படின்னு ஒரு பையன் கேட்க பதில் சொல்ல முடியாம அப்பா முழிக்கிறாரு. ரெண்டு பசங்களும், வழக்கம் போல, ”அப்புறம் வரேன், உன்னோட இந்த பொம்மை எடுத்துட்டுப் போறேன், அப்புறம் தந்துடறேன்” இப்படியே பேசிட்டு கிளம்பிட்டாங்க. அவுங்களுக்குத் தெரியலை, பசங்க சந்திக்கப்போறது இதுதான் கடைசின்னு.

நான், இந்தப் பசங்களைப் பார்த்துதான் ரொம்ப சோகமானேன். விவரம் தெரியாத வயசுல, ஒருத்தன் பிரிஞ்சு போறான்னு தெரியாம, விளையாண்டு, பை பை சொல்லிட்டுப் போறாங்க. வாழ்வுக்காக எத்தனையோ பேரை பிரியறோம். ஆனா பிரிச்சும் வைக்கிறோம்ங்கிறது எத்தனைப் பேருக்குத் தெரியுது?

நம்மோட வாழ்க்கைக்காக பிரியும் இந்த பிஞ்சு மனசுகளோட பாவத்துக்கு யார் பொறுப்பு?

Sunday, September 2, 2012

10/365 கிறுக்கியது யாரு? சினிமா Quiz

இன்று தினமலரில் வந்த செய்தி.

ஈரோடு : விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.ஓ., விவசாயிகள் பிரச்னை என்னவென்று கேட்காமல் மெய்மறந்து அருகில் இருந்த தாளில் படம் வரைந்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்த விவரம வருமாறு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஈமு கோழி பிரச்னை, கரும்புக்கு நிலுவை பணம் பாக்கி, பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு... என, விவசாயிகள் தங்கள் தரப்பு குறைகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்தவர், டி.ஆர்.ஓ., கணேஷ். இவர் மும்முரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார்; விவசாயிகள் பேசுவதைத்தான் டி.ஆர்.ஓ., குறிப்பு எடுக்கிறார் என நினைத்து, அருகில் போய்ப் பார்த்தால், பச்சை மை பேனாவால், அவர் மும்முரமாக படம் வரைந்து கொண்டிருந்தார் !

நன்றி: தினமலர் 

இருங்க, இது மாதிரி அடுத்தவங்க ஏதாவது பேசும் போது படம் பக்கத்துல இருக்கிற காகிதத்துல படம் வரையறதை ஏதோ தப்பு போல செய்தி வெளியிட்டுருக்கும் தினமலருக்கு எதிரான பதிவு இல்லை  இது..

பதிவு என்னான்னா, இதே மாதிரி ஒரு சினிமாவுல ஒரு வில்லன் இதைப் போலவே செய்வார். அது ஒரு துப்பா மாறி வில்லனைக் காட்டிக்குடுத்துடும். கேள்விகள்
1. அது என்ன படம்?
2. படத்துல வில்லனாய் கிறுக்கி மாட்டிக்கொள்வது யார்?
3. படத்தின் கதாநாயகன் யார்?

Saturday, September 1, 2012

9/365 வேகத்திற்கு உதவிய காவல்துறை

யோசனைப் பண்ணிப்பாருங்களேன், ஒரு காரை 30 மைல் வேகத்துல ஓட்டிட்டு இருக்கீங்க. அமைதியா, ஆர்ப்பாட்டமில்லாத சாலை, மனதிற்கேற்ற இசை, கையில காபி இப்படி அழகா போயிட்டு இருக்கிற ஒரு பயணத்துல, திடீர்னு காரே வில்லனாய் மாறி, உங்க பேச்சு கேட்காம அதுபாட்டுக்கு ஓடினா என்ன ஆகும்னு நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?

போன வாரம் அப்படித்தான் ஒரு சம்பவம் ஆச்சு. அமெரிக்கா  ஐயோவா மாநிலத்துல ஒரு அம்மணி காரை 30 மைல் ஓட்டிட்டு இருக்கும் போது, வண்டி அதா வேகமெடுத்திருக்கு, அம்மணி பிரேக் போட்டு பார்த்திருக்கு , நிக்கலை. வண்டி அது பாட்டு வேகமெடுக்க 110-120 மைல்ன்னு ஓட ஆரம்பிச்சிருச்சு. அம்மணியும் இடிக்காம இருக்க போற வண்டி சந்துல எல்லாம் பூந்து ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க, உசுரு பயமாச்சுங்களே.

என்ன பண்றதுன்னு தெரியாம காவல்துறையை கூப்பிட்டிருக்க அம்மணி. அவுங்களையும் Neutralல போடு,.. அது இதுன்னு தெரிஞ்சதை சொல்ல, அம்மணியும் முயற்சி பண்ணிட்டே இருந்திருக்காங்க. ஆனாலும் வேகம் குறையாம சுமார் (59 மைல்) போயிருச்சு. அப்புறமா காவல் துறை சொன்னாப்ல Accelerator குடுத்து  brake புடிச்சவுடனே நின்னுடுச்சு.
இறங்கும்போது அம்மணியின் நிலையை காணொளியில  பாருங்க. அப்புறம் அம்மணி சொன்னது கீழே

"I knew I was going to die ... I didn't have any doubt about. I really thought I was going to die ... and no matter what I did, I couldn't slow it down."

அம்மணி ஓட்டிட்டு போன வண்டி Kia Sorento SUV. Kia தொழில் நுட்பக்காரங்களோ "இது என்னான்னு எங்களால கண்டுபுடிக்க முடியலை"ன்னு சொல்லிட்டாங்க, எப்படியும் அம்மணிக்கு பெரிய நஷ்ட ஈட்டைத் தந்துடுவாங்கல்ல.

அடுத்த முறை வண்டியை எடுக்கும் போது பிரேக் புடிக்குதான்னு பார்த்துட்டு கிளம்புங்க. 

Tuesday, August 28, 2012

5/365 பள்ளிக்கூடம் போகலாமா? அதுக்கு..

என்னோட பள்ளிக்கூடத்து முதல்நாள் எப்படி இருந்துச்சுன்னு இன்னிக்குத் தெரியல(நாளைக்குள்ள எப்படியும் வீட்டுல கேட்டுருவேன்னு வைங்க). ஆனா, பல பொடுசுங்களைப் பார்த்திருக்கேன், முதல் நாள் பள்ளிக்கூடம் அனுப்புறதுக்குப் பெரிய போரே நடக்கும். அம்மாவும் அப்பாவும் பள்ளிக்கூடம் வரைக்கு கூட்டிட்டுப் போய் விட்டுட்டு, அப்புறமா வாசல்லையே நின்னு கொஞ்சம் நேரம் பார்த்துட்டு இருப்பாங்க. ஆசிரியர் வந்து "நீங்க போங்க, அப்பத்தான் பசங்க அடம் புடிக்காம இருப்பாங்க" அப்படின்னு சொல்ல அப்பா சோகமாவும், அம்மா கண்ணை கசக்கிட்டுப் போவாங்க. இந்தக் காட்சியை பள்ளிக்கூடத்து முதல் நாளுல தவறாம பார்க்கலாம்.   




அமெரிக்காவுல, இது பள்ளிதொடங்கும் நேரம். பொதுவா Labour Day(செப்-4-2012) முடிஞ்சோ, இல்லைன்னா ஒன்னு ரெண்டு நாள் முன்னாடியோ ஆரம்பிக்கும். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பசங்களை வரவழைக்க இப்படி ஒரு வழி செஞ்சிருக்காங்க செல்சி வில்லியம்ஸ் பள்ளிக்கூடத்துக்காரங்க(இது அரசு பள்ளிதான், தனியார் இல்லை).அதுக்குப் பேரு Back-toSchool Celebration.



 
காசுக்கு? விளம்பரதாரர்களைப் பிடிச்சிருக்காங்க. செம கூட்டம் வேற. கொஞ்சம் கறித்துண்டு, நொறுக்கு (Grill, Snacks) விளையாட்டு, போட்டிகள்னு நம்ம ஊர் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் மாதிரியே செஞ்சிருந்தாங்க. அருமையான யோசனை இல்லீங்களா?. பசங்களும், பள்ளிக்கூடத்தை ஒரு எட்டு வந்துட்டு பார்த்தாப்ல இருக்கும், "விடுமுறை முடிஞ்சிருச்சி கண்ணுங்களா சீக்கிரம் வாங்க" அப்படின்னு அழைக்கிறாப்லயும் இருக்கும், புதுசா வர குழந்தைகளுக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தினாப்லயும் இருக்கும். ஒரே கல்லுல ரெண்டு/மூனு மாங்கா.





  • ஆமா, நம்ம ஊர்ல மாதிரி முதல் நாள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற "காட்சிகள்"  அமெரிக்காவுல பார்க்க முடிவதில்லையே, ஏன்?

அப்புறம், பொடுசுங்க பாடுறாப்ல இருக்கவேண்டிய "பள்ளிக்கூடம் போகலாமா?" பாட்டை கேப்டன், கனகாவோட சேர்ந்து எப்படி கெடுத்துவெச்சிருக்காரு பாருங்க.. சே :(
(காணொளி எங்கேயா? இது குழந்தைகள் நிகழ்ச்சிங்க, மிட்நைட் மசாலா இல்லை)

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)