Thursday, September 6, 2012

13/365 பிரியும் பிஞ்சு மனசுகள்

நண்பனின் மகனுக்கு 6 வயது. இன்னொரு நண்பனின் மகனுக்கு 5 வயது. இருவரும் உற்ற தோழர்கள். அமெரிக்காவில் ஒரு குடும்பமே நட்பாய் இருப்பது என்பது அபூர்வம். அதாவது அப்பா- அப்பா, அம்மா-அம்மா, மகன் - மகன்.

மகன்கள் இருவருமே விட்டுக்குடுக்க மாட்டார்கள், அப்பா என்ன சொன்னாலும் “இல்லேப்பா, அவன் சொன்னான் சரியாத்தான் இருக்கும்” என்று சின்ன வயசே ஆனாலும் இருவருக்குமான நட்பு அப்படியாகத்தான் இருந்தது. போன வாரம் வரையில். ஆமாம், ஒரு குடும்பம் For Good இந்தியா கிளம்ப, பசங்களுக்கும் ஒரு குடும்பம் இந்தியா போவதாகச் சொன்னாங்க. பசங்க ரெண்டு பேருக்குமே அதனோட விபரீதம் புரியல, ஊருக்கு போயிட்டு வந்துடற மாதிரி நினைச்சிகிட்டே இருக்காங்க.

போனவாரம், பிரிஞ்சுப் போற குடும்பத்துக்காக, ஒரு Get toghether நடந்துச்சு. எல்லார் முகத்துலையும் கவலை தாண்டவமாடுது. பல வருடங்கள் பழகிய நட்பு, பிரியப் போவுதேங்கிற கவலை. பரிசுப் பொருட்கள் கை மாறுது. ஆனாலும் பசங்க எப்பவும் போல விளையாடுறாங்க, அடிச்சுக்கிறாங்க.

கிளம்புற நேரத்துல, எல்லாருக்கும் கண்ணுல தண்ணீர் வராத குறை, பசங்களுக்கு அது புரியவே இல்லை. “எப்போப்பா அவன் வீட்டுத் திரும்ப வருவோம்?” அப்படின்னு ஒரு பையன் கேட்க பதில் சொல்ல முடியாம அப்பா முழிக்கிறாரு. ரெண்டு பசங்களும், வழக்கம் போல, ”அப்புறம் வரேன், உன்னோட இந்த பொம்மை எடுத்துட்டுப் போறேன், அப்புறம் தந்துடறேன்” இப்படியே பேசிட்டு கிளம்பிட்டாங்க. அவுங்களுக்குத் தெரியலை, பசங்க சந்திக்கப்போறது இதுதான் கடைசின்னு.

நான், இந்தப் பசங்களைப் பார்த்துதான் ரொம்ப சோகமானேன். விவரம் தெரியாத வயசுல, ஒருத்தன் பிரிஞ்சு போறான்னு தெரியாம, விளையாண்டு, பை பை சொல்லிட்டுப் போறாங்க. வாழ்வுக்காக எத்தனையோ பேரை பிரியறோம். ஆனா பிரிச்சும் வைக்கிறோம்ங்கிறது எத்தனைப் பேருக்குத் தெரியுது?

நம்மோட வாழ்க்கைக்காக பிரியும் இந்த பிஞ்சு மனசுகளோட பாவத்துக்கு யார் பொறுப்பு?

10 comments:

 1. கஷ்டம் தான்...

  மறதி... மனிதனுக்கு சிறந்த மருந்தல்லவா...?

  ReplyDelete
 2. கண்டிப்பா, இந்தியா போற பையனுக்கு மறந்துடும். ஆனா அமெரிக்காவிலிக்கிற பையனுக்கு மறக்க கொஞ்சம் நாள் ஆகலாம்

  ReplyDelete
 3. பிரிவே வேதனைதான்! விவரம் தெரியாத வயதில் பிரிவுகள் கொஞ்சம் மறந்து போகலாம்! பகிர்வுக்கு நன்றி!

  இன்று என் தளத்தில்
  வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

  ReplyDelete
 4. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
 5. ***அப்புறம் தந்துடறேன்” இப்படியே பேசிட்டு கிளம்பிட்டாங்க. அவுங்களுக்குத் தெரியலை, பசங்க சந்திக்கப்போறது இதுதான் கடைச்சின்னு.***\\

  என்ன இளா, முகநூல், வானேஜ் (அவன் அவன் இந்தியா போகிறப்ப்போ இங்கே வச்சிருக்க வாணேஜ் பெட்டியையே தூக்கிட்டுப் போயி அங்கே வச்சுக்கிறான்)னு இருக்கு.

  ஃபார் குட் னு ஒண்ணும் இல்லை. அதெப்படி சொல்ல முடியும்? அவங்க திரும்பி வரலாம், இல்லைனா இவங்களும் இந்தியா போகலாம். கல்லூரி படிக்க இங்கே வரலாம்..

  6-year olds? They are old enough to know how is it going to be from "now on".

  Seems like parents did not tell the truth?? I dont know. These days, because of the social network we have, it is not a big deal. :)

  Everybody is alive, that is what more important, and only a small separation, right?

  ReplyDelete
 6. வருண், பொம்மை வைத்து விளையாடும் வயதுக்கு வலைதளங்களும், Skypeம் எந்தளவுக்கு உதவும்னு தெரியலைங்க.

  ReplyDelete
 7. பிரிவு என்பது வாழ்க்கையில் ஒரு மிக மோசமான ஒன்றாகும், varun சொன்னது போல அவர்கள் சிறு குழைந்தைகள் மறக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சம்பாதிப்பதற்காக குடும்பத்தை இந்தியாவில் விட்டுவிட்டு வளைகுடா நாடுகளில் வாழும் எங்களைபோன்றவர்களுக்கு ஒவ்வொரு
  விடுமுறை முடிந்து கிளம்பும் ஒரு வாரம் முன்பும் இங்கு வந்த பிறகும்
  மனம் குழந்தைகளை நினைத்து படும் பாடு சொல்லி மாளாது.
  நம் அடுத்த தலைமுறையாவது சந்தோஷமாக அவரவர் குடும்பத்துடன் வாழ ஆசைப்படுவோம்.

  ReplyDelete
 8. en friend family colombo vittu kilambi ponapa en pasanga
  lum avanga pasangalum feelings of colombova irunthanga. ippa varaikum ivangaluku best frienda antha natpu
  kkal than

  (sorry to tamil fonts)

  ReplyDelete
 9. Believe me. Kids get over it.
  Seven years back, when I came back from abroad to settle down in India, my son, 7 years then, cried once and told he wanted to talk to his friend in Singapore.

  He did talk, but then, he does not remember his friend now, seven years later.

  //நம்மோட வாழ்க்கைக்காக பிரியும் இந்த பிஞ்சு மனசுகளோட பாவத்துக்கு யார் பொறுப்பு?//

  I dont see a reason to be sorry for this. It happens to everybody, everywhere. Enakennavo intha varikal konjam overa theriyuthu.

  ReplyDelete

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)