Saturday, September 1, 2012

9/365 வேகத்திற்கு உதவிய காவல்துறை

யோசனைப் பண்ணிப்பாருங்களேன், ஒரு காரை 30 மைல் வேகத்துல ஓட்டிட்டு இருக்கீங்க. அமைதியா, ஆர்ப்பாட்டமில்லாத சாலை, மனதிற்கேற்ற இசை, கையில காபி இப்படி அழகா போயிட்டு இருக்கிற ஒரு பயணத்துல, திடீர்னு காரே வில்லனாய் மாறி, உங்க பேச்சு கேட்காம அதுபாட்டுக்கு ஓடினா என்ன ஆகும்னு நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?

போன வாரம் அப்படித்தான் ஒரு சம்பவம் ஆச்சு. அமெரிக்கா  ஐயோவா மாநிலத்துல ஒரு அம்மணி காரை 30 மைல் ஓட்டிட்டு இருக்கும் போது, வண்டி அதா வேகமெடுத்திருக்கு, அம்மணி பிரேக் போட்டு பார்த்திருக்கு , நிக்கலை. வண்டி அது பாட்டு வேகமெடுக்க 110-120 மைல்ன்னு ஓட ஆரம்பிச்சிருச்சு. அம்மணியும் இடிக்காம இருக்க போற வண்டி சந்துல எல்லாம் பூந்து ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க, உசுரு பயமாச்சுங்களே.

ன்ன பண்றதுன்னு தெரியாம காவல்துறையை கூப்பிட்டிருக்க அம்மணி. அவுங்களையும் Neutralல போடு,.. அது இதுன்னு தெரிஞ்சதை சொல்ல, அம்மணியும் முயற்சி பண்ணிட்டே இருந்திருக்காங்க. ஆனாலும் வேகம் குறையாம சுமார் (59 மைல்) போயிருச்சு. அப்புறமா காவல் துறை சொன்னாப்ல Accelerator குடுத்து  brake புடிச்சவுடனே நின்னுடுச்சு.
றங்கும்போது அம்மணியின் நிலையை காணொளியில  பாருங்க. அப்புறம் அம்மணி சொன்னது கீழே

"I knew I was going to die ... I didn't have any doubt about. I really thought I was going to die ... and no matter what I did, I couldn't slow it down."

அம்மணி ஓட்டிட்டு போன வண்டி Kia Sorento SUV. Kia தொழில் நுட்பக்காரங்களோ "இது என்னான்னு எங்களால கண்டுபுடிக்க முடியலை"ன்னு சொல்லிட்டாங்க, எப்படியும் அம்மணிக்கு பெரிய நஷ்ட ஈட்டைத் தந்துடுவாங்கல்ல.

அடுத்த முறை வண்டியை எடுக்கும் போது பிரேக் புடிக்குதான்னு பார்த்துட்டு கிளம்புங்க. 

5 comments:

 1. ஐயோ... பயம்மா இருக்குங்க...

  /// இறங்கும்போது அம்மணியின் நிலை ////

  முடிவு வரவில்லையே நண்பரே....

  ReplyDelete
 2. அஹா, அங்கயுமா? இங்கயும் ரெண்டு நாள் முன்னாடி, ஒரு Land Cruiser "cruise-control"-ல் 120கிமீ வேகத்தில் போய்க் கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் வரமறுத்து ஓடிக்கொண்டேயிருக்க, ஓட்டுநர் காவல் துறையை அழைக்க, அவர்கள் முன்னும் பின்னும் பந்தோபஸ்து கொடுத்து, பல முயற்சிகள் செய்து, இறுதியில் (இங்கு அதிகம் காணப்படும்) sand dune-ல் இடிக்க வைத்து... எல்லாம் சுபம்!!

  இப்போ ஓட்டுநர், கார் கம்பெனி மீது புகார் கொடுத்திருக்கிறார். இதுபோல இன்னொரு சம்பவமும் சென்ற ஆண்டு நடந்தது. எங்கே பிரச்னை என்று தெரியவில்லை. சிலர் காரில் alterations பண்ணுவதால் வருகிறது என்று சொல்கிறார்கள். சிலர் technical snag என்று சொல்றாங்க. என்னவோ... நாம ஓட்டிகிட்டிருக்கிற கார் நம்ம கட்டுப்பாட்டில் இல்லைன்னா... ஆண்டவா...

  http://khaleejtimes.com/kt-article-display-1.asp?section=nationgeneral&xfile=data/nationgeneral/2012/august/nationgeneral_august462.xml

  ReplyDelete
 3. தி.த --> Jammed 120 அப்படின்னு தேடிப்பாருங்களேன், வித விதமான காணொளிகள் கிடைக்கும்.

  ஹூஸைனம்மா --> நன்றி!

  ReplyDelete
 4. இளா,

  இதற்கு காரணம் என நான் நினைப்பது வெளிநாட்டுக்கார்களில் இருக்கும் "drive by wire" என "radio signal" மூலம் ஆக்சிலரேட்டர், பிரேக்குகள் இயங்குவதால் இருக்கலாம்.

  அதவாது ஆக்சிலரேட்டரில் பெடல் மட்டும் தான் இருக்கும் அது நேரடியாக காரின் எஞ்சின் த்ராட்டில் உடன் இணைக்கப்பட்டிருக்காது அதற்கு பதில் பெடலை அழுத்தவற்கு ஏற்ப வயர்லெஸ் சிக்னல் அனுப்பும்,அதனை எஞ்சின் பெற்றுக்கொண்டு வேகம் கூட்டும் குறைக்கும். பிரேக்கிற்கும் அப்படியே எல்லாம் வயர்லெஸ் சிக்னல் மூலமே.

  இதற்கான கண்ட்ரோலில் பிரச்சினை ஏற்பட்டு தானாக சிக்னல் அனுப்பி இருக்கலாம்,அப்புறம் கணினியை ஹேக் செய்வது போல யாரேனும் இந்த சிக்னலை இடைமறித்து ஹேக் செய்யவும் முடியும்,எனவே ஆக்சிலரேட்டரை அழுத்தாமல் இருக்கும் போதே ஓட வைக்கவும் முடியும்.

  2 ஃபாஸ்ட் & ஃப்ரியஸ் படத்தில் போலிஸ் கார்களை தொறத்தும் போது ஒரு எல்க்ட்ரானிக் ஆரோ போல காரின் பானட் மீது செலுத்தியதும் கார் வேகம் குறைவது போல காட்டுவார்களே, அது இதனால் தான் அது ஒரு சிக்னல் ஜாமர் கருவி. அது காரின் எஞ்சினைக்கட்டுப்படுத்தும் கணினி மற்றும் ரேடியோ சிக்னலை தடை செய்து கார் ஓட விடாமல் செய்து விடும்.

  இத்தகைய அமைப்பு எல்லா வெளிநாட்டு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட காரிலும் இருக்கு,அதுவும் புதியகாரில் கண்டிப்பாக இருக்கும்.

  கியர் அமைப்பும் அப்படித்தான் ,எனவே தான் நியுட்ரல் போட்டும் கியர் விழவில்லை.

  ஏன் அந்தம்மா எஞினை நிறுத்த முயலவில்லை,அல்லது ஹேண்ட் பிரேக் போட முயலவில்லை, ஹேண்ட் பிரேக் மெக்கானிக்கல் வகையாகவே பெரும்பாலும் இருக்கும் ஏன் எனில் பார்க்கிங் போது பயன்ப்படுத்த அப்படி வைப்பார்கள்.

  ReplyDelete
 5. என்ன கொடுமை இளா, மாடரேஷன் :-))

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)