இத்தாலியில்
இருக்கும் Bologna என்ற ஊரில் உள்ள கடைவீதி ஒன்றில்
நடந்துபோய்க்கொண்டிருந்த ஒருவன், கடையில் இருந்து ஒலித்த ஒரு பாடலைக்
கேட்கிறான். கேட்டதும் அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. ஆனால் எந்தக்
கடையிலிருந்து பாடல் வந்தது என்று அவனுக
்குத்
தெரியவில்லை. ஒவ்வொரு கடையாக விசாரிக்கிறான். ஒரு வழியாகக் கடையைக்
கண்டுபிடித்து, ”ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் ஒரு பாடலைப் போட்டீர்களே?
அந்தப் பாடலை மறுபடியும் கேட்கவேண்டும்” என்று சொல்லி தேடித் தேடி
ஒருவழியாகப் பாடலையும் கண்டுபிடிக்கிறான். ‘இது எந்த ஊர் பாடல்?
எங்கிருந்து வந்தது இந்த இசை?’ என்று கடைக்காரரிடம் விசாரிக்கிறான். ‘இது
சென்னையில் இருந்து வந்தது’ என்கிறார் கடைக்காரர்.
விமானம் ஏறுகிறான். வந்திறங்குகிறான் சென்னையில். அந்தப் பாடலை உருவாக்கியவரைச் சந்தித்தே தீருவது’ என்று எண்ணி அவர் வீட்டு வாசலில் தவம் கிடந்து, ஒரு வழியாய் சந்திக்கிறான். Bologna’வில் வருடா வருடம் தான் நடத்தும் Angelica Music Festival’க்கு அவரை அழைக்கிறான். அவரும் அவன் வேண்டுகோளை ஏற்று, Italyல் Concert நடத்தித் தந்தார்.
ஏதோ ஒரு தேசத்தில் எதற்காகவோ சுற்றிக்கொண்டிருந்த ஒருவனை அப்படிச் சுண்டி இழுத்து இங்குக் கூட்டி வந்த அந்தப் பாடல் ‘புத்தம் புது காலை பொன்னிற வேளை”.
- ”யூகியுடன் யூகியுங்கள்” நிகழ்ச்சியில் திரு. யூகிசேது கூறியது.
நன்றி: FB: இசைஞானி பக்தர்கள் (The Maestro’s Devotees)

ஒட்டி- வெட்டுதலை பெரும்பாலும் தவிர்க்கிறேன். ஆனாலும் ராஜாவுக்காக மீறுவதில் தப்பே இல்லைன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநல்ல பாடல்,
ReplyDeleteநல்ல பாடல்தான்(ஆனால் படத்தில் இடம்பெறவில்லை)இருந்தும் இந்த பாடல் ஒரு இத்தாலியரை நம் நாட்டுக்கு அழைத்து வந்ததைதான் நம்ப முடியவில்லை.இது போன்று பிரபல்யமானவர்களை பற்றி நிறைய வாய்மொழி கதைகள் உண்டு.நான் கூட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தமிழ் நாட்டுக்கு வந்து ரகசியமாக மசாலா தோசை சாப்பிட்டுவிட்டு போனார் என்று சொன்னால் அதை கூட சிலர் அப்படியா என்று கேட்கலாம்.
ReplyDeleteகாரிகன் மாதிரி ஆட்களை எல்லாம் ஓரங்கட்டுங்கள். பிரபலமானவர்களை கேவலமாக விமர்சிப்பதே வேலை என்று அலைபவர்கள் . இளையராஜா போன்ற இசை வல்லுனர்களை ஏற்று கொள்ளும் மனப்பான்மை இல்லாதவர்கள் . இத்தாலிக்காரன் ரசிக்கக் கூட அவர் தகுதி இல்லாதவர் போல அவர் விமர்சித்திருக்கிறார் . இவர்கள் கட்டு கதைகளை நம்புபவர்கள் . உண்மைகளை உணரத் தெரியாதவர்கள் . இந்தியர்களை அவமானப்படுத்துவதில் முன்னிலை வகிப்பவர்கள் .
ReplyDeletehttp://www.aaa-angelica.com/aaa/disco-ilaiyaraaja-music-journey
ReplyDeleteயூகிசேது பேசிய வீடியோவை நானும் பார்த்தேன். ராஜா மீது அபிமானம் கொண்ட வட இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை நான் பெர்சனலாக அறிவேன். ராஜா அதற்கு முழு தகுதி கொண்டவர் என்பதில் சந்தேகம் உள்ளவர்கள் காது இருக்கும் இடத்தில கல் உள்ளவர்களாகத் தான் இருப்பர்..
ReplyDelete