Monday, July 26, 2010

சிபஎபா July 26

அப்பா நன்றாக யோசியுங்கள் by ujiladevi
என்னான்னு சொல்றதுங்க, இதுதான் நியாயம்னு மகன்கள் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கு, ஒரு குடும்பத்தோட கெளரவம், எதிர்காலம் மருமகள் கையில்தானே இருக்கு. பசங்க பாவமில்லையா?


00000000000000000000


கணவர்களைத் திருடும் நடிகைகள்..! பாலிவுட் சர்வே..! by உண்மைத் தமிழன் (15270788164745573644)

அப்பா மலைக்க வைக்குது இந்தத் தொகுப்பு, உண்மையாவே உதா அண்ணாச்சியின் ஒரு வரி கூட விடாம படிச்ச பதிவு, இதெல்லாம் தேவையான்னு கேட்க கூடாது ஆமா..

00000000000000000000


போன வாரம் ஒரே கும்மாங்குத்து வாரம். ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க. நான் அவுங்களை குத்துவேன், இவுஙகளை குத்துவேன்னு ஒரே வன்முறை. சே ஒரு விவஸ்தை இல்லாம குத்துனாங்க, குத்து வாங்கினாங்க. பரிசல்காரன், கார்க்கி எதிர்வினையாம், அதுவும் அவருக்கு கண்ணாலம் ஆவலன்னு ஒவ்வொரு தடவையும் சொல்லும்போது, பாவம், ”கார்க்கி அம்மாகிட்ட இந்த வருத்தத்தையும் சொல்லுங்கப்பா” ,விக்னேஷ்வரி அம்மணியும் கோதாவுல இறங்கிட்டாங்க... கேபிள், நாஞ்சில், அக்பர்
வடகரை வேலன், அபிஅப்பா.

00000000000000000000


எது தந்தாய் என் வாழ்வே by செல்வநாயகி

ஜாதி, கடல்கடந்தும் ஒரு தலைமுறை கடந்தும் மறக்க முடியாம போனதுதான், இன்னொரு காத்திருப்போம், தொலயுமா இந்தச் சனி? நாற்றை பிடிங்கி வேறிடத்தில் நடறது மாதிரிநட்டா சாதி அழிய வழி இருக்கும் போல.

00000000000000000000


வானமே எல்லை? Starjan ( ஸ்டார்ஜன் )

விவசாயம் பட்டுப்போச்சு, மழை இல்லை, வேலை இல்லை.. என்ன பண்ண? நகரமயமாக்கல்னால என்னென்ன கொடுமையோ.. இப்படி எல்லாருமே போயிட்டா கிராமமும்?சோத்துக்கு என்ன வழி?

00000000000000000000சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை by கலையரசன்
கலையரசனின் அருமையான ஆரம்பம், வழக்கம்போல அமெரிக்க அதிகாரம்,, சிவப்பு ட்விஸ்ட்னு ஆரம்பிச்சுடாதீங்க. இப்படியே இருந்தா இது ஒரு பெரிய தொடருக்கும் வரலாற்றுப்பதிவுக்குமான விதைன்னே சொல்லலாம்.

00000000000000000000


மூளைக்கு வேலை டாப் 10+6.5 by IdlyVadai
மூளையை கழட்டுவாங்களாம், ஸ்கேன் பண்ணுவாங்களாம், என்ன முடிவுன்னு பார்ப்பாங்களாம், இந்த வாரத்து சிறந்த நகைச்சுவைப் பதிவு இதுதானுங்க.

00000000000000000000


செழியனின் விகடன் சிறுகதை by சுரேஷ் கண்ணன்

ஆனந்தவிகடனில் இந்தக் கதையப் படித்த பின் ஒரு 4 மணிநேரம் எதுவுமே செய்யவோ, பேசவோ தோணவில்லை. காரணம் இந்த மார்க் மாதிரி ஒரு 100 பேரை பார்த்திருப்பேன், அவர்களோடு வாழ்ந்திருப்பேன். அவர்களின் கஷ்டமும், அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் .. சொல்லி மாளாது. சுரேஸ்கண்ணன்- இது இரண்டாவது முறையாக நான்நினைத்த கருத்தைச் சொல்லியிருக்கிறார். என்னமோ இதைப் படிச்ச பின்னாடி இன்னமும் மனசு கனத்துப் போவுது.

சிபஎபா’ன்னா?
இந்த வாரம் சங்கமம்- அழியாத கோலங்கள்ல இருந்து ஒரு பதிவு-

காசி- வலையுரையாடல் மறைந்த அண்ணல் சிந்தாநதி எழுதியது

Monday, July 19, 2010

சிபஎபா Jul-19-201

நம்பியவர்கள் ஏமாற்றப்படுவார்கள்! By மருதன்
இதுவும் ஒரு மாதிரியான போலி பிரச்சினைதான், ஆனால் நல்லதுக்காக. போபால் பிரச்சினைக்காக செஞ்ச தில்லாங்கடிதான், செம கலக்கல் பதிவு.
----------------------------------------

கமலா தாஸின் கவிதை by Deepa

நல்லதொரு பிரதி. ஒரு பெண்ணின் சுதந்திரத்தை சொல்லும் இதுவும் ஒரு முறை. அழகு!----------------------------------------

தவளைக்கல் by விக்னேஷ்வரி
எப்பவாவது இந்த மாதிரி உணர்வுபூர்வமான கதை படிக்கிறதுண்டு. ஆச்சர்யமான விசயம், விக்னேஷ்வரிக்கு இது முதல் கதையாம். நம்பவே முடியல, கதையப் படிச்ச பின்னாடி மனசு மேல ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டு அமுக்கிற மாதிரி உணர்வு. போனவராம் அம்மணி பொஸ்தகத்துல வேற வந்திருக்காங்க.
----------------------------------------

யூஸ் அண்ட் த்ரோ by ஈரோடு கதிர்
வாழ்க்கையே குப்பைமேடாகிட்டு இருக்கு, இதைச் சொன்னவரு அமெரிக்காகாரரு. ஈரோட்டுல இருந்து இது வேற பார்வை. உண்மையாவே மனுச ஜென்மங்கள் எல்லாம் உருப்படாமதான் போறோமா? அதனாலதான் முதியோர் இல்லங்கள் நம்மூர்ல பெருகுதா?
----------------------------------------.
வண்டியை விற்கும்போது கவனிக்க வேண்டியவை by VJR
சின்னதா கருத்து/சமூக பார்வை, அசத்தலான நடை.புதுசா வந்தாலும் புல்லட் மாதிரி பாயுராரப்பா!(lateஆ வந்தாலும் latest -பழசு ஆயிருச்சு)

----------------------------------------
கொஞ்சம் சலிப்பு வருதுன்னுநினைக்கும் போது சகாவரம்- செம நச். அடுத்த வரம் நோக்கி..
----------------------------------------
இது டிவிட்களின் தொகுப்பு. யார் தமிளன்(நல்லா கவனிங்க தமி’ள’ன்). இப்படி வாரத்துக்கு மூனு இல்லே நாலாவது போகும். மிஸ் பண்ணாதிங்க, ட்விட்டர் ஜோதியில ஐக்கியமாகிருங்க.
----------------------------------------
எவ்வளவு அலட்சியமா இருக்கோம். சுஜாதா சொன்ன 5 காசு கணக்கு இன்னிக்கு 29பைசாவாகிருச்சு. ஒரு நல்ல விதை, அடுத்த முறை கடைக்கு போயிட்டு வர்றப்ப கண்டிப்பா ரசீத நல்லா பாருங்க. கேபிள் போட்டது ஒரு சின்னவிதைதான், வளருமா?
----------------------------------------
ஆண்டி மடமும் தமிழக காங்கிரசும் by கோவி.கண்ணன்
கோவிகண்ணன் சாட்டையடிப் பதிவு, வழக்கம்போலதான்னாலும் பிடிச்சது, வழவழன்னு எழுதாம 140 எழுத்துக்குள்ள சுருக்கி அடிங்க கோவி..
----------------------------------------
பதிவுலகத்துல டார்டாய்ஸ் சுத்துறது ரெண்டு பேர், அதுல ஒன்னு கானா, இன்னொருத்தர் யார்னு விளக்கத்துக்கு அப்புறம் சொல்றேன்.

ஆடி1 அன்னிக்குனாலே நம்ம ஊர்ல எப்படியாப்பட்ட விசேசம் இருக்கும் தெரியுங்களா, தேங்காய் சுடறது என்ன? பக்கத்து வீட்டு அக்கா அவுங்க அம்மா வீட்டுக்கு போறதென்ன, மாமா அப்படியே சோகமாகுறது என்ன? பொண்டாட்டி ஊருக்குபோயிட்டான்னு எல்லாம் யாரும் கத்தறது இல்லே, ஆனா கண்டிப்பா ராத்திரியில மாமா வீட்டுக்குள்ளேயே தகிரியமா சரக்கடிச்சுட்டு இருப்பார், நாம போன சில்லி சிக்கனும், சோடாவும் உண்டு.
* அந்த இன்னொருத்தர் யாரு? வேற யாரு, நாந்தான்.

----------------------------------------

சாரு நிவேதிதாவுக்கு மறுப்பு by மருதன்
மருதனின் வரலாற்று பதிவுகள் எல்லாமே சுடும், இது வேற மாதிரி சுட்டிருக்கு. போனவாரம் சாருவுக்கு நேரம் சரியில்லை போல, ஏதோ வாசகர் ஆதங்கத்துல ஏதோ கேட்க போய் அவரைத் “தெருநாய்” ஆக்கிட்டார், ஆ.விகடன் மனம் கொத்திப்பறவையில் 'Nude' நந்துவை சுந்தர ராமசாமியின் பேரன்னு சொன்னாரு, அதுவும் உண்மையில்லை.கொஞ்சமாவது விசாரிக்க மாட்டாரா?

இந்த வாரம் முதல் சங்கமம்- அழியாத கோலங்கள்ல இருந்து ஒரு பதிவு-கொசுறுன்னு வெச்சுக்குங்களேன், இந்த வாரம் வாத்தி இளவஞ்சி எழுதிய வென்றுவாடி என் மகளே

Thursday, July 15, 2010

மீட்டரு பீட்டரு

இது ரொம்ப வருசத்துக்கு முன்னாடி பண்ணிட்டு இருந்தேங்க. இப்போ திரும்பவும். ஏதாவது சேதி படிச்சோம்னா நமக்கு சட்னு ஒன்னும் தோணும்பாருங்க அதுதான் மீட்டரு பீட்டரு. இதுல மீட்டருங்கிறது செய்தி. எங்கேயாவது படிச்சிருப்போம், பீட்டரு? அது நாம விடறதுதானுங்க.
---------------------------------------------
மீட்டரு: கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உழவன் சேர்ந்தான், உழைப்பாளி சேர்ந்தான், அன்னத் தாய் சேர்ந்தாள், பொன்னுத்தாய் சேர்ந் தாள். இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த்தாய்!" - வைரமுத்து

பீட்டரு: இப்படியே பேசிட்டு இருந்தா அவுங்களும் இன்னும் கொஞ்ச நாள்ல காப்பீடு வாங்க வந்துர மாட்டாங்க?
-----------------------------
மீட்டரு: தனிநபர் அந்தரங்கத்தை காக்கும் வகையில் புதிய சட்டம்: குழு அமைத்தது மத்திய அரசு
பீட்டரு: இப்பவாவது தெரிஞ்சிக்கோங்க, எங்க நித்தியோட பவர் என்னான்னு.

------------------------------
மீட்டரு: கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான விஜயசாந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


பீட்டரு: எகொஇச, இங்கே கலவரம் பண்ணினாவே போலீஸ் வராது, சில சமயம் காவல்துறையே கலவரம் பண்ணுவாங்க. எங்களைப் பொறுத்தவரையில் எதிர்கட்சி பண்ணினாத்தான் கலவரம். நாங்களே பண்ணினால் அது சட்டம் கடைமையைச் செய்யுதுன்னு சொல்லுவோம். அது நடுராத்திரியிலும் நடக்கலாம், கஞ்சாவை போலீஸே விளையவெக்கும்.
-----------------------

மீட்டரு: ரூ.5,000 வரை சொத்துக்களுக்கு பத்திரப்பதிவு இலவசம்.

பீட்டரு: 5000க்கு சொத்து கிடைக்குதா என்ன?
--------------------------------------

மீட்டரு: கருணாநிதியின் மனப்பான்மையை காங்., புரிந்து கொள்ள வேண்டும்'- ஜெ
பீட்டரு: மொதல்ல, உங்க கட்சி மனப்பான்மைய புரிஞ்சுங்க, இல்லாட்டி ஒரு நாள் நீங்களே மறந்தாப்ல திமுகவுல சேர்ந்துரப் போறீங்க.

-------------------------------
மீட்டரு: தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு

பீட்டரு:நீங்க எங்களுக்கு இலவசம்னு ஒரு பண்பாட்டை கற்றுக்கொடுத்திருக்கீங்க.

----------------------------------------

மீட்டரு: பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் அகில பாரத இந்து மகா சபை சார்பாக நித்தியானந்தா படத்துக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. அந்த அமைப்பின் கர்நாடக மாநிலத் தலைவர் வாசுதேவராவ் கஷ்யப்பா, ''நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தரைவிட வயதில் மூத்தவர். அவங்க ரெண்டு பேருக்கும் இருப்பது, அம்மாவுக்கும் மகனுக்கும் இருக்கும் தாய்-பிள்ளை(!) உறவு. இந்துக்களுக்கு எதிராக சதி செய்யும் விதமாகத்தான் காங்கிரஸ் இப்படிப்பட்ட கட்டுக் கதைகளைப் பரப்புகிறது!''
பீட்டரு: ங்கொய்யால சுனாமி பெங்களூருக்கு வராதுன்னா என்ன வேணுமின்னாலும் பேசலாமா?

---------------------------------
மீட்டரு: கேட்கக் கூடாததை கேட்டு சிக்கல் ஏற்படுத்தக்கூடாது : முதல்வர் அறிவுரை
பீட்டரு: ச்சும்மா இருங்கப்பா, அவரு குடும்ப பிரச்சினையைப் பத்தி பேசிட்டிருக்காரு

---------------------------

Monday, July 12, 2010

சிபஎபா Jul 12

நாணயத்தின் மறுபக்கம் by புதுகைத் தென்றல்

குடும்பஸ்தினிக்குத்தான்(குடும்பஸ்தன் இருக்கும் போது குடும்பஸ்த்தினி இருக்கக்கூடாதா?) இந்த மாதிரி அடுத்த பக்கம் தெரியுது. பெற்றோர்களுக்கு நாம் கொடுக்கும் சிரமங்கள் தெரிவதில்லை. அவர்களும் கண்டுகொள்வதில்லை என்றுதான் நினைத்திருந்தேன். நானும் இது மாதிரி சில விசயங்கள் செய்திருக்கிறேன். ஆனால் வருடம் ஒரு முறை என்பதாலோ என்னவோ என் பெற்றோர் அதை விரும்புகிறார்கள். எல்லா வாரமும் இது மாதிரின்னா? அவங்க இன்னும் பெற்றோரா மாறலைன்னுதானே அர்த்தம்.


-------------------------------------

நாங்களும் மீன்களும்! by சந்தனமுல்லை

மீன் புத்தகம், மீன் படம், மீன் குழம்பு.. எப்படி யெல்லாம் தொடர்பு’படுத்தறாங்க’. அம்மாக்களின் வலைப்பூ காத்து வாங்குது அம்மாக்களே, அவுங்க அவுங்க பதிவுகள்ல பட்டைய கிளப்புறாங்க. இதுவரைக்கு தீஷு அம்மான்னா இப்போ இவுங்களும். ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க. நல்லதுதானே----------------------------------
இப்போவெல்லாம் சமுதாயப் பார்வை கொண்ட பதிவுகள் நிறைய போடுறாரு. பல சினிமாப் பதிவுகளும்..நல்லதொரு பரிணாமம். இவர் சொன்னதுக்கப்புறம்தான் அந்த நிகழ்ச்சிய பார்க்கனும்னு தோணுது. தப்புன்னு தெரிஞ்சே 25 பேரு வந்திருக்காங்கன்னா என்னத்தைச் சொல்ல. தப்பை ஏத்துக்கிறதுக்கு தகிரியம் வேணும்டா, அது உன்கிட்ட இருக்கான்னு பாருன்னு எங்க தமிழ் வாத்தியார் சொல்வாரு, அதான் ஞாபகத்துக்கு வந்துச்சு :)


----------------------------------
படிச்சவுடனே, ஆகா அருமை, wowன்னு சொல்லவைக்கிற கவிதைகள்.

----------------------------------நல்லதொரு சிறுகதை, தேர்ந்த நடை. சஞ்சிகையில் வர வேண்டிய ஒன்று. கொஞ்சம் காலம் தாழ்த்திதான் படிக்க கிடைத்தது.


----------------------------------


நோய்க்கூறு மனநிலை பத்ரி சேஷாத்ரி


இதை வேண்டுமென்றே போனவாரம் தவிர்த்தேன் காரணம், தமிழர்களின் நிலையைச் சொன்னால் கோவம்தான் வருது, ஏன்னா நாம அப்படித்தானே!

----------------------------------


ரிக்சா..!!! by கார்த்திகைப் பாண்டியன்


ஆயிரந்தான் இருந்தாலும் காசு காசுதாங்கிறதுதான் இந்தக் கதையோட சாராம்சம், மனுசனோட உணர்வு, உழைப்பெல்லாம் யாருக்கு வேணும் சொல்லுங்க.


----------------------------------அண்ணாச்சி! பழைய பாஃர்முக்கு வந்துட்டார் போல. நல்லதொரு பதிவை தந்திருக்காரு. நீங்க எப்ப இப்படி ஆர்டர் எடுப்பீங்க பத்ரி?

----------------------


மோகம் 30 நாள் by ஆதிமூலகிருஷ்ணன்


மீண்டும் தாமிரா(ஆதிமூலகிருஷ்ணன் எல்லாம் நமக்கு சரிப்படலைங்க, தாமிராதான் பெஸ்ட்). அதெப்படிய்யா சுலபமா 30 நாளுக்கு கணக்கு சொல்றீங்க. சே.. செம பிரிட்டிஷ். எங்க ஊர்ல பிரிட்டிஷ்னா பயங்கர மூளைக்காரங்கன்னு அர்த்தம்.----------------------------------


என்ன செய்யலாம்? by யுவகிருஷ்ணா


பிச்சைக்காரர்களுக்கு’னு, தட்டவே ஒரு மாதிரியா இருக்கும் போது அவுங்க வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு நாளைக்கு அவுங்களை மாதிரி வாழ்ந்து பார்னு யாரோ சொன்னாங்க. அவுஙகளை வாழ வைக்க வேண்டியது சமூகத்தோட கடமையாச்சே. அதுக்கு ஒரு திட்டம் கொண்டுவந்தா நொல்ல சொல்லைன்னு சொல்லிகிட்டு. லக்கிகிட்ட இருந்து இப்படி ஒரு ஆழ்ந்த பதிவு படிச்சு பல வருசம் ஆச்சு. நல்ல பதிவு, சவுக்கடி மாதிரி. பாப் மார்லி மாதிரி இன்னொரு பதிவு வருமா பாஸ்?


----------------------------------கேபில், கலக்குறீங்க. அப்படின்னு சொல்லலாம்னா அது பதிவுக்கு மட்டும்தான். வெளிச்சம் போடப்படும் விசயங்கள் நிறைய இருக்கு. ப்ச்

----------------------------------


இதன் பெயர் தனிமை by Vidhoosh(விதூஷ்)


பதிலோ பின்னூட்டமோ சொல்லத் தோணலைங்க. படிச்சுக்குங்க.


------------------------

பேட்டின்னா வேட்டி கிழியும்(நன்றி-கோவி), ஆனா இந்தப் பதிவு கண்ணீரில் திளைத்தது. ஜோசப் நல்லாயிருக்கனும்யா நீ! பதிவுலகமே போதைதான்யா, நல்ல விசயங்கள் வந்துகிட்டே இருக்கும்போது எனக்கு போதை எப்படி குறையும்?


----------------------------------
இது ஒரு சின்ன விளம்பரம். புஸ்தகப் போட்டின்னு வெச்சுங்களேன். உங்க ஆதரவும் தேவை இல்லையா?


----------------------------------

Saturday, July 10, 2010

First Tamil blogpost - iphone

தமிழில் முதல் பதிவு, இதிலென்ன சிறப்புன்னு கேட்குறீங்களா?? ஐபோன் மூலம் பதிவிடுகிறேன். நன்றி செல்லினம். அடுத்த கட்டத்தில் பதிவுலகம்.

Tuesday, July 6, 2010

சிபஎபா- Jul-05-2010

- அம்மாஞ்சி அம்பியின் வழக்கமான பதிவுதான், ஒன்னும் சிறப்பாவோ புதுசாவோ ஒன்னுமில்லை. வழக்கம் போல நல்லப் பதிவு. பூரிக்கட்டை, அம்மணிகிட்ட பயம்னு ஷங்கர் மாதிரி அதே டெம்ப்ளேட். ஆனாலும் ஒவ்வொரு முறையும் ரசிக்கிறோமே ...:))

 • LP Records சுழற்றும் நினைவுகள் - கானா பிரபா ..எல்லாரும் டார்டாய்ஸ் சுத்துவாங்கன்னா இவரு ரெக்கார்ட சுத்த விட்டிருக்காரு. நானும் இந்த மாதிரி நிறைய தேடினதாலோ என்னமோ இந்தப் பதிவு எனக்கு சட்னு பிடிச்சுப்போயிருச்சு. தவற விடாதீஙக. • 68வது பிரிவு (மீள்பதிவு) -Perundevi ன் இந்தப் பதிவு, சட்னு விமர்சிக்கவோ, கருத்துச் சொல்லவோ வராது. ரொம்ப யோசிக்க வைக்குது, புரியுது ஆனா புரியல, ஆனா புரிஞ்சதுதான் உண்மை. • துப்பறியும் காந்த் ! சிநேகிதன் இப்பவெல்லாம் நகைச்சுவைப் பதிவுகளே வர்றது இல்லீங்க. எல்லாம் திட்டறதும், ஷங்கர் படத்துல வர்ற கதாநாயகன் மாதிரியே எழுதறாங்க(இதைத்தானே 2005லும் சொன்னீங்கன்னு
  கேட்கப்படாது, அப்போ வவாச இருந்துச்சு).இந்தப் பதிவு படிச்சதுக்கப்புறம், கொஞ்சமாச்சும் சிரிக்க முடிஞ்சது :) • மாப்பிள்ளை தோழனும் தெரட்டிப்பாலும் - //இப்போ படிச்சு, ஊரு விட்டு ஊரு வந்து, எங்கெல்லாமோ சுற்றும் வாய்ப்பு உண்டு, ஆனால் எப்போதுமே அந்த ஸ்வீட் சாப்பிடும் பொழுது அம்மாவின் நினைப்பு என்னை அறியாமல் வந்து விடும், அம்மா ஏதாவது கல்யாணத்துக்கு / விசேஷத்திற்கு போனால் கூட, இலையில் விழும், மைசூர் பாகு / லட்டு போன்றவைகளை புடவையில் முடிந்து வீட்டிற்கு வந்து எனக்கு கொடுப்பார்// கடைசி பாரா படிக்கும்போது கனமாச்சுங்க மனசு • காசு மேலே காசு வந்து by சந்தனமுல்லை//வீட்டிலிருந்து பணம் வாங்குவது மெதுவாக குறைந்திருந்தது. மேலும் எனக்கான தேவைகளையும் நானே சந்திக்க துவங்கியிருந்தேன்//படிக்கவே சந்தோசம் தரும் வசியம், நடுத்தர குடும்பத்தினருக்குத்தான் தெரியும் இந்த சந்தோசம் எவ்வளவு பெருசுன்னு. ஆனா அடுத்த வரிதான் உண்மையாவே நடுத்தரக் குடும்பம் பண்ற வேலை //ஃபான்ஸி பொருட்கள்தான். அப்புறம் நண்பர்களுக்கு ட்ரீட். கல்லூரி காலத்தின் ட்ரீட்கள்// கலக்கலான் அனுபவங்களின் தொகுப்புன்னே சொல்லலாம். • பதிவுலகில் பெற்றது (பாகம் /3) ஜாக்கிசேகரின் இந்தப் பதிவு, வரலாற்றில் பொறித்துக்கொள்ள வேண்டிய இடுகை. பதிவுலக நண்பர்களே, காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள், இந்த இடுகையை உங்கள் பதிவில்
  வைங்கள். யாராவது எழுதி என்னத்த **ங்குன அப்படின்னு கேட்டா இதைப் படிக்கச் சொல்லுங்க.Hats Off Jackie! • வாட் ஹேப்பன் ஆதவன்? by ☀நான் ஆதவன்☀ -- ஒத்த கேள்விய வெச்சுகிட்டு இந்தியப் பயணத்தையே முடிச்சுட்டாரு. :) நல்ல கலக்கலான நடை. • தமிழ் இணைய மாநாடு - அனுமதிச் சீட்டுப் பிரச்னை by Badri - பத்ரியின் இந்தப் பதிவுக்கு விளக்கமெல்லாம் தேவை இல்லை. சிலாகிச்சும் நான் படிக்கலை, ஏன்னா இது அப்படியாப்பட்ட பதிவு இல்லை. ஆனா படிங்க. இதோ இன்னொன்னும் http://thoughtsintamil.blogspot.com/2010/07/blog-post.html • சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 12 by சீதாம்மா.. சே!.. என்ன ஒரு தொகுப்பு. எப்படி தவறவிட்டேன்னு தெரியல. மீதி 11 பகுதியையும் படிச்சுட்டுதான் ஓய்ஞ்சேன். தவறவிடாதீங்க. • வெளிச்சுவர் லவ் by பத்மா
  //!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... -->காதலிலும் , கவிதையிலும் எதார்த்தங்கல்தான் எப்பொழுதும் தலைமை தாங்குகின்றன . அதுபோல் உங்களின் கவிதையும்
  அருமை //
  சின்ன கவிதைதான், ஆனா என்னென்னமோ யோசனை பண்ண வெக்குது. • எக்ஸ்க்யூஸ் மீ! ஒரு கப் காபி சாப்பிடலாமா? by யுவகிருஷ்ணா. லக்கி வர வர பத்திரிக்கை எழுத்துக்களை பதிவுலகத்துக்கு போட்டுறார். இங்கே என்ன காசா குடுக்கிறாங்கன்னு கேட்க கூடாது. தொழில் வேற ஆர்வம் வேற. :) • இது நமது தேசம் அல்ல by வினையூக்கி
  பல விசயங்களை உள்ளடக்கிய கதை. நான் வெளிநாட்டில் இருப்பதனால் என்னென்னமோ தோன்றியது. அருமையான சிறுகதை, தவற விடாதீர்கள். • மயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும்.by அபி அப்பா
  அபிஅப்பா.. என்ன சொல்றதுன்னு தெரியல. கண்ணீர் மல்கதான் இதை தட்டச்சுறேன். யாரோ ஒருத்தர்தான், ஆசிப் அண்ணாச்சிக்கு நடந்தபோது இதே உணர்வு வந்தது, மறுபடியும் இப்போ.
 • Sunday, July 4, 2010

  குறள்-66-குழல் இனிது

  ஒரு இல்லத் திரையரங்கம் (DTS-Home Theatre) வாங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளையக்கனவு. கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட மன உந்துதல் அது. வேலைக்கு சென்ற பொழுதும் பொருளாதாரப் பற்றாக்குறையால் என் கனவு, கனவாகவே இருந்து வந்தது. திருமணம் ஆனபின் மனையாள் வயிற்றிலேயே குழந்தை கர்னாடக இசை கேட்கவைக்க வேண்டும் என்ற நினைப்பும் நிறைவேறவே இல்லை.

  ஆயிற்று எனக்கு ஒரு ஆண் வாரிசு பிறந்தும் அவன் தவழ ஆரம்பித்தும் ஒரு மாதம் ஆயிற்று. இன்று அனைத்தும் கூடி வர இல்ல திரையரங்கம் வாங்கிவிட்டு, கடையில் பணம் கட்ட வரிசையில் நிற்கிறேன். "மாப்ளே, மோனோ, ஸ்டிரியோ எல்லாம் சத்தம் தாண்டா போடும், இல்ல திரையரங்கம் மட்டும் தாண்டா இசையை சொல்லும்" 10வருடத்துக்கு முன் கல்லூரி நண்பன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

  "சார், நீங்க வாங்கியிருக்கிற Home Theatre உலகத்துல சிறந்த மாடல்ல ஒன்னு" வீட்டில் Home Theatreஐ அந்தந்த இடத்தில பொருத்தி சரிபார்த்துவிட்டு போகும்போது பொறியாளர் சொல்லிவிட்டு சென்றார்.

  மனதில் இறுமாப்பும், பெருமையுடன் இளையராஜாவின் திருவாசக வட்டை உள் செலுத்தி கேட்க ஆரம்பித்தேன். என் தந்தையும் என் கூட அமர்ந்து அமைதியானார். அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்து வட்டையும் கேட்க ஆரம்பித்தோம். கல்லூரி நண்பன் சொன்ன மாதிரியே இதுதான் இசை, மத்ததெல்லாம் சத்தம்தான். அவன் வார்த்தைகள் ஒரு ஞானியின் தத்துவமாய் இப்போது தோன்றியது.

  "என்னங்க" சத்தமாய் மனையாள் அழைக்க ஓடினேன்.

  "இங்கே பாருங்க பையன் என்ன சொல்றான்னு"

  ஆச்சர்யமாய் என் வாரிசை நோக்கினேன் "ம்ம்மா, ம்ம்மா" பேச ஆரம்பித்தது என் பிஞ்சு.

  மனசுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள், பட்டாம்பூச்சிகள்,.. என்னவென்று சொல்ல வார்த்தைகளே இல்லை. வாங்கிய Home Theatre சத்தமாய் ஒரு கர்னாடக இசையை ஒலிக்க "அப்பா அந்த சத்தத்தை குறைச்சுட்டு இங்கே வாங்க உங்க பேரன் என்ன சொல்றான்னு கேளுங்க"

  அந்த சத்தத்தை அணைத்துவிட்டு என் தந்தைக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறக்க அறைக்குள் வந்தார்.

  குறள்:

  குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
  மழைலைச்சொல் கேளாதவர்

  அதிகாரம்:மக்கட் பேறு(குறள் 66)

  தம் மக்களின் மழலைச்சொல்லக்கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்

  Thursday, July 1, 2010

  ஆணின் விந்து

  ந்த ஊர் ரயிலில் காலையில் மட்டும் தெறிக்கிற கூட்டம் இருக்கும். வழக்கமாய் எனக்கு உட்கார இடம் கிடைத்துவிடும், சில நாட்களில் கிடைக்காது. அப்போதெல்லாம் நல்ல இறக்கமாய் துணி போட்டிருக்கும் நங்கையின் எதிரில் நின்றுகொள்வேன், எப்படியும் யாருக்கு முன்னாடியோ நின்று கொள்ள வேண்டியிருக்கும், அழகாய் இருக்கிற பெண் என்றால் கசக்குமா? அதுவும் ரசித்தபடியே நேரம் போகும். இந்த ஊரில் பெண்கள் இறக்கமாய் துணி போட்டு வருவார்கள், மேலாடை கீழிறக்கமாகவும், கீழாடை மேலேறியும் இருக்கும், ஆனா நாம்தான் பார்க்க கூடாது. அவர்கள் அங்கங்களை நாம் பார்ப்பதும், ரசிப்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்ககூடாது. அவள் அப்படி பார்ப்பதையோ, ரசிப்பதையோ விரும்புவதில்லை. ஆனாலும் உடை குறைந்தே இருப்பது இன்றும் எனக்குப் புரியாத புதிர்.


  ன்று எனக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. ’அதோ அந்தப் பெண் பாரேன், எவ்வளவு இறக்கமாய்..’ என்று மனசு சொல்லுமுன்னே அவள் முன்னாடி நின்றிருந்தேன். எங்கேயோ பார்த்தவாறே, அவளைக் குனிந்து பார்க்கையிலே, ஆஹ்ஹ். கருப்பு வளையம் தெரியுமளவுக்கு இறங்கியிருந்தது மேலாடை. என்ன நினைத்தேனோ தெரியவில்லை. அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு, ரகசியமாய் உடையைச் சரி செய்ய சொன்னேன். சிரித்தபடியே, சாவதானமாக சரி செய்தாள். இப்பொழுது கருவளையம் மறைந்தது, சரியா என்றபடி என்னைப் பார்த்தாள், அதாவது மீதமிருக்கும் அனைத்தையும் அவள் அனுமதியுடனே ஐந்து நிமிடம் ரசித்துவிட்டு, சரியென்றேன். அவளுக்கும் தெரியும் நான் ரசித்தது, எனக்கும் தெரிந்தது நான் ரசித்ததை அவள் ரசித்தது.


  ப்படியாகவே ரயிலில் அவளைச் சந்திக்கும் நாட்கள் அதிகமானது, சில நேரங்களில் இன்று ’அது’ தெரியவில்லையே என்று சொல்லிவிட்டே ரசிக்க ஆரம்பித்தேன். இத்தாலியப் பெண்ணாம், தனியாய்தான் இருக்கிறாளாம். ஒரு நல்ல வெள்ளியன்று, எங்காவது வெளியே செல்லலாமா என்றாள். அரை இருட்டில் குடித்தோம், ஆடினோம்.. தடவினோம். முடிந்தவரையில் என் விரல்களால் தடவி சுகம் கண்டபோது அவள் சிரித்தபடியே வீட்டுக்குப் போலாமா என்றாள்.


  வளது வீடு சிறியதுதான், அவ்வளவுதான் கலைக்கவைத்திருக்க முடியும் என்று சொல்லுமளவுக்கு சுத்தமாய் இருந்தது. அவளுக்கு ஒரு பழக்கம், கூடலின் போது குடிப்பாளாம். வியப்பாய் இருந்தது, உணர்வில்லாதவளோ என்று கேட்ட பொழுது, ’போதையேறிக்கொண்டே சுகம் பழகிப்பார்’ என்றாள். ’சுகம் நீ குடுக்கும்பொழுது போதேயேற்றிக்கொள்கிறேன்’ என்றேன்.


  டலிறவில் எனக்கு முதல் முறை இது என்று சொன்னபோதுதான் என்னை நம்ப மறுத்தாள். பதினைந்து நிமிட வாக்குவாதத்தில் என்னை இறுதியாக நம்பினாள். கூடலில் மதுவின் முதல் விழுங்கை ஆரம்பித்தாள் நான் முடித்திருந்தேன், மேலும் வற்றியிருந்தேன். உதட்டின் ஓரம் ஒரு சிரிப்பை போதையோட சிதறவிட்டு இரண்டாம் விழுங்கிற்கு ஆயத்தமானாள். அவளது ஐந்தாம் விழுங்கில் நான் இரண்டாம் சுற்றிற்கு ஆயத்தமானேன். இப்பொழுது அவள் அதிகம் விழுங்கிருந்தாள், பிறகு விழுங்குவதை நிறுத்துவிட்டு என்னோடு பயணித்தாள்.

  ப்படியாக வார இறுதியல்லாமல், பல நாட்கள் அவள் மது விழுங்கினாள். பல நாட்கள் அவள் மதுக்கிண்ணம் தீர்ந்த பிறகும் நான் அயராது இருந்திருந்தேன். நாட்கள் நகர்ந்தது....  ன்றும் எனக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. இத்தாலியப் பெண் தூரமாய் அமர்ந்திருந்தாள், கையசைத்து சிநேகமாக சிரித்தாள். அவளுக்கு எதிர் திசையில் நகர்ந்தேன். ’அதோ அந்தப் பெண் பாரேன், எவ்வளவு இறக்கமாய்..’ என்று மனசு சொல்லுமுன்னே அவள் முன்னாடி நின்றிருந்தேன்.அவள் லத்தீனோப் பெண்ணாம். எங்கேயோ பார்த்தவாறே, அவளைக் குனிந்துப் பார்த்தேன்....

  ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

    கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

  Labels

  18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)