Showing posts with label சங்கிலி. Show all posts
Showing posts with label சங்கிலி. Show all posts

Wednesday, July 20, 2011

மூனு - சஙகிலித் தொடர்

ரொம்ப வருசம் ஆச்சு இப்படி கேள்வி பதில் பதிவு போட்டு. முன்னொரு காலத்துல ஆறு, எட்டு, நாலுன்னு போயி இப்ப மூனுன்னு வந்திருக்கு. சிறுமுயற்சி முத்துக்கா ஒரு open invitation வெக்க, அட எழுதுவோமேன்னு தோணிச்சு. பார்த்திபன் சொல்றா மாதிரி கேள்வி கேட்குறது ரொம்ப புடிக்கும், ஆனா கேட்குறது நானா இருக்கனும்’ இதான் நம்ம கொளுகை(உனக்குமா?)





சரி ஆரம்பிப்போமா?

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
* பயணம். வகை தொகையில்லாம வண்டி ஓட்டுறது,அதுவும் தூரமா போயிட்டு வர்றது, காரணமே இல்லாம பயணிக்கிறது இப்படி. இதுக்காக கார், பைக்குன்னு நினைச்சிறாதீங்க. சைக்கிள்ல ஆரம்பிச்சு, சும்மானாச்சுக்கும் 3-5 மைல் வரைக்கும் நடக்குறது கூட எனக்கு புடிக்கும். ஆனா ஜிம்ல treadmilல நடக்கறது மட்டும் ஆவாது.

* பாட்டு கேட்குறது. திருச்சி, கோவை, இலங்கை வானொலியில ஆரம்பிச்ச பழக்கம்., இப்ப செல்பேசியில ஒரு FM விடாம கேட்டுகிட்டு இருக்கேன்.

* வாசிப்பது. புஸ்தகம், பதிவு, ட்விட், buzz, அட இவ்வளவு ஏங்க, மொக்கையா இருக்கிற நேரத்துல விளம்பரம், ஸ்பாம் மெயில் கூட விடறதில்லை.


2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

* நண்பர்களை நம்பும் போது சரியா நம்மள ஏமாத்துறது. அது விளையாட்டா இருந்தாலும் எனக்கு புடிக்காது. நேத்து மாயவரத்தான் அப்படித்தான் செஞ்சாரு. இன்னிக்கு எலியும் பூனையுமா ஆக்கிட்டேன். சும்மா இருக்கேன், தொலைபேசி எண் குடுங்க மொக்கை போடலாம்னு ட்விட் ஒன்னு போட்டேன். சும்மா இருக்காம எவனோ வெளங்கா வெட்டி பேசுற தொலைக்காட்சி நிகழ்ச்சியோட எண்ணைத் தந்தாரு. நானும் யோசிக்காம பேசிட்டேன். மவனே, வந்துச்சே கோவம், பொதுவுல அப்படி யாரையுமே பேசினது இல்லே. வயசு மரியாதை இல்லாம கூட பேசிட்டேன். அப்புறமா யோசிச்சேன். சிறுபுள்ளைத்தனமா அந்தாளுதான் பண்றாருன்னா நாமளுமா, கொஞ்சம் பெரிய மனுசனாட்டம் இருக்கலாம்னு மன்னிப்பும் கேட்டுட்டேன். பெரியவர் இல்லையா வயசுக்காவது மரியாதை குடுத்திருக்கலாம். ப்ச்.

* திட்டு. திட்டுறது எனக்கு புடிக்கவே புடிக்காது. எங்கம்மா சின்னவயசுல (இன்னும் சின்ன வயசு தானேடா) என்னை நிறைய திட்டிட்டாங்க போல. அதான் புடிக்கிறது இல்லே. அன்பா சொன்னாவே நடந்துரும்ங்கிறது என்னோட எண்ணம்

* தமிழில் ஆங்கிலம். தமிழ் தெரியும் ஆனா பேசமாட்டாங்க. சும்மா கலாய்க்கவோ, தொழில் முறைக்கோ பேசிக்கலாம்,. வீட்ல கூடவா? நாம தமிழ்ல பேசினா பொடணிக்கு பின்னாடி போயி பெரிய இவன்னு பேசுறது. நீங்க என்னா ஆக்ஸ்போர்ட்க்கு பக்கத்துலயா பொறந்தீங்க? தமிழ்நாட்டுலதானேடா

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

*ப்ப்ப்ப்பாஆம்பு. பார்க்கக்கூட புடிக்காத ஒரு ஜந்து. ஐயோ. அடுத்த விசயத்துக்கு போயிருவோம்
*Snakes
*நாகராஜன்னு பேர் வெச்சிருந்தா கூட பயம்தான். ஆல் பயம் ஒன்லி பாம்ப்ரூஊ.நோமோர் பயம்ஸ்

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
* பெண்கள்
* Girls
* ladies
(மேலே இருக்கிறவங்க யாரையாவது ஒருத்தரை புரிஞ்சிகிட்டேன்னு சொல்லுங்க பார்க்கலாம். முத்தக்கா, இதை சாய்ஸ்ல வேற விட்டிருந்தாங்க :))

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

* இப்ப இருக்கிறது. கழுவாத தேநீர் குவளை(டீ கப்னு தமிழ்ல சொல்லுவாங்க)
* என்னோட செல்பேசி, அலுவலக தொ(ல்)லைபேசி
* கணினி(சோறு போடுற ஆத்தா)

6) உங்களை சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?
இப்போதைக்கு
*சிவகார்த்திகேயன்
*வடிவேலு
* கவுண்டர்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

* இந்த வருசம் 100 பதிவாவது போடனும்னு எல்லாத்தையும் Draftல போட்டுட்டிருக்கேன்

* ஒரு குறும்படம் (வரும் ஆனா வராது ஆனா வரும்)

* தவிர, சும்மாதான் இருக்கேன்னு ஒத்துகிறேன்

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

ஓஹ் சீரியஸான கேள்வி,

* முதியோர்களுக்கான இல்லம்

* சொந்த வீட்ல குடியிருக்கிறது

* இசையமைக்கிறது

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
* பல் விளக்குதல்

* குளித்தல்

* சாப்பிடுதல்

(இந்த மூன்றையுமே முடிக்க எத்தனை லட்சகணக்கான பேர் கஷ்டப்படறாங்க தெரியுங்களா? என்ன அவுங்களுக்கெல்லாம் வயசு 6க்குள்ள இருக்கும்)

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

* இந்த மாசம் சம்பளம் இல்லே

* நீயெல்லாம் பதிவு போடலைன்னு யார் அழுதா?

* மத்தவங்க என்கிட்ட கடன்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
* பதிவு போட்டவுடனே 100 பின்னூட்டம் வர மாதிரி எழுதறதுக்கு கத்துக்கனும்

* விசில் அடிக்க - சே, தொண்டை வறண்டு, தலை வலி வந்ததுதான் மிச்சம். அஸின் மாதிரி யாராவது சொல்லிகுடுக்க சொல்லி கேட்டா சீக்கிரமா கத்துக்குவேன்(நானென்னா விஜயான்னு கேட்க கூடாது)

* இந்த அமெரிக்கன் மாதிரி இங்கிலி பீசு பேசனும் (முனியப்பன் கோவில் மேல் பள்ளிகூடத்துல படிச்சதுக்கு இங்கிலீசுல பேசுறதே ஓவரு, இதுல அமெரிக்கன் மாதிரியா. கொஞ்சம் ஓவராத்தான் போறேனோ?)

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
* மனைவி சமைக்கிறது
* அம்மா சமைக்கிறது
*  வேற யாராவது சமைக்கிறது
(’யாரு சமைச்சாலும் ரவுண்டு கட்டுவேன்’ அப்படிங்கிறதைதான் இப்படி சொல்றேன். அன்லிமிட்டட் மீல்ஸ்னா ரெண்டே ரெண்டு மட்டும் சாப்பிடுவேன்)

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

அது மாசம் மாசம் மாறுமே. இந்த மாசம்

* டூ படத்துல இருந்து நதியிலே

* 180- நீ கோரினால்

* யுவன் யுவதி - Oh my angel

14) அழைக்க விரும்பும் 3 பேர்
* புதுகை அப்துல்லா

* ஜாக்கி சேகர்

* இந்த வார நட்சத்திரம் சிபி செந்தில்குமார்

Thursday, June 21, 2007

எட்டும் எட்டும் குட்டிச்செவுரு

மேலே சொன்ன பழமொழி மாதிரி எனக்கு புடிக்காத சமாச்சாரத்தை சொல்லப்போறேன், வேற எதைப் பதிவுலகத்தைப் பத்திதான். நம்மளப் பத்தி எல்லாருக்கும் தெரியுமே, சொல்லி என்ன ஆவப்போவுது. விதிமுறை மீறல் சகஜந்தானுங்களே.

1. எதுக்கு எடுத்தாலும், பதிவுலகத்தை விட்டுப்போறேன்னு சொல்றதும், போறதும். நின்னு ஆடினாதாங்க சச்சின். வந்தோம் திட்டினாங்க, அதனால மட்டைய தோள் மேல போட்டுகிட்டு பெவிலியன் போனா சும்மாவா இருப்பீங்க? ஆடி செஞ்சுரி அடிங்க இல்லைன்னா கட்டைய போடுங்க. பெவிலியன் போய்ட்டா யாரும் கண்டுக்க மாட்டாங்க.

(நாமே ஒரு முறை அப்படி சொல்லி இருக்கோம். ஆபிஸுல அவ்ளோ ஆணி, அதுவுமில்லாம ஆபீசுல புளாகரையும் புடுங்கிட்டாங்க. ஆபிசுல ஆணின்னா சரி. கொளுகை ஈரவெங்காயம்னு சொல்றதெல்லாம் பயந்துகிட்டு போற மாதிரிதான்)

2. கேடுகெட்ட கெட்ட வார்த்தைங்க. இல்லாத கெட்ட வார்த்தையெல்லாம் பதிவுலகத்துல எழுதிட்டா திருந்திடுவாங்கன்னு நம்பிக்கையில எங்கள மாதிரி மக்களையெல்லாம் முகம் சுழிக்க வெக்கிறது. இதனால எங்களை மாதிரி மக்கள் எல்லாம் திரும்பி அந்தப் பதிவுக்கே போவ மாட்டாங்க. அப்புறம் என்ன, நீங்களும் உங்க எதிர் கட்சியும்தான் அதை படிச்சிக்கனும். நாம வழக்கமா, பாசமா கும்மி அடிக்க போயிருவோம்.

3. கும்மி அடிக்கிறது. ஒன்னியுமே இல்லாத பதிவுக்கு 100, 200 கும்மி அடிக்கிறது. இது கும்மி அடிக்கிறவுங்களுக்கு சந்தோசமா இருந்தாலும் அடுத்தவங்களுக்கு கடுப்பு ஆவுது.

4. வித்தியாசமா சிந்திக்கிறது. எல்லாருக்குமே ஒரு விஷயம் புடிச்சு எழுதினா,எல்லாரும் ஒரே மாதிரி எழுதுறாங்களேன்னு கடுப்புல எதிர்மறையா எழுதுறது. இதுக்கு பொறாமைன்னும் சொல்லலாம். போறாமைன்னும் சொல்லலாம். மனசுக்கு புடிக்கலைன்னாலும் போட்டி போட பயந்துகிட்டு எதிர்மறையா எழுதிட்டுப் போயிறது. இது போட்டி நிறைந்த உலகம் சாமிகளா.

5. இனவெறி. இவுங்க போட்டுக்கிற சண்டையில நம்ம தலைதான் உருளுது. ஒரு பக்கத்துக்கு மாங்கு மாங்குன்னு பதிவை அடிச்சுட்டு திரும்ப படிச்சு பார்த்தா இவங்க திட்டுவாங்கன்னு 2 வரி, அவுங்க திட்டிவானங்கன்னு 2 வரி அழிச்சுட்டு கடைசியா பார்த்தா பதிவையே அழிச்சு இருப்போம். அப்புறம் ஒரு வாரம் கம்னு உக்காந்துட்டு வேற யோசனை பண்றது. ஒன்னும் தோணாம பின்னூட்டம் மட்டும் போட வேண்டியதுதான்.

6.முகமிலி. பதிவு போடும் போது நல்லவங்க மாதிரி பதிவு போட வேண்டியது. அப்புறமா அனானியா வந்து ஆட்டம் போடுறது. அதுவும் கெட்ட வார்த்தையில.

7. பதிவுலகமே மொத்த உலகம்னு உக்காந்து இருக்கிறது. வேற பொழப்பையும் பாருங்களேன். நண்பர்களைப் பார்க்கப் போங்க, நல்ல புஸ்தகம் படிங்க, மொக்கை போடுற படம் பாருங்க, ஊர் சுத்துங்க, படம் வரைங்க, பைக் எடுத்துட்டு அதிரடிக்காரன் மாதிரி தூள் கிளப்புங்க.(நன்றி: பூர்ணா)

8. இப்போ தலைப்புக்கு ஏத்தா மாதிரி குட்டி சுவரான விஷயம். பதிவுலகத்தால தமிழ் நண்பர்கள் நிறைய கிடைச்சுட்டாங்க. எந்த ஊர்லையும் தமிழ் மக்கள் இருக்கிறதானால. மத்த மாநிலமோ, மத்த நாட்டு மக்களோடயோ பழகுற வாய்ப்பு குறையுது. இதனால ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழ ஆரம்பிச்சுடோமோன்னு ஒரு பயம். இது குறையா நிறையா?


அழைக்க விரும்புவது,
(நாம கூப்பிட்டு மத்தவங்க கோட்டாவுல கை வெக்கக் கூடாது பாருங்க).

அதனால நம்ம ஸ்டைலுல
1. இடுப்ப ஆட்டியே நம்ம மனச அள்ளும் ஷகீரா(சரியாத்தான் தட்டி இருக்கோம்)
2. அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் ஒசாமா
3. பாவப்பட்ட மைக்கேல் ஜாக்சன்
4. ஹ்ம்ம்ம், ஜெனிலியா டி ஸொசா
5. ஜெயிலில் களி தின்னும் பாரிஸ் ஹில்டன்
6. ஜெயிக்கப்போற ஹிலாரி கிளிண்டன்
7.ஹிலாரிக்கே தண்ணி காட்டும் ஒபாமா
சரித்திரத்துல முதல் முறையா செத்து போனவரை கூப்பிடுறேன். அதுவும் இப்போ அதிகம் பேர் இவுர பேரைதான் சொல்லிக்கிட்டு இருக்கிறோம், அது
8. சிவாஜி(அதிருதா..)

இந்தப் 8 விளையாட்டுக்கு கூப்பிட்ட கப்பி, சிறில்,

ராயல் கூப்பிட்ட வியர்டுக்கும்(பதிவுலக வியர்டுகள்)

Thursday, April 19, 2007

போலியும் அழகே!

அழகு-இதைப்பத்தி கல்லுல இருந்து கருகமணி வரைக்கும், பக்கம் பக்கமா எழுதிட்டாங்க, நாம மட்டும் என்னாத்தைங்க எழுதறது?

காதலிக்க ஆரம்பிக்கும்போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும். அப்புறம் அதுவே நாசமாப் போயிரும், அது வேற கதை, விடுங்க விஷயத்துக்கு வருவோம். காதலிக்க ஆரம்பிக்கும்போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும் அப்போதாங்க "வானம், நிலா, காத்து,மனசு" அப்படின்னெல்லாம் கவிதை எழுத வரும்.

ஒத்த வரியில சொல்றதுன்னா அழகு மனசுலதாங்க இருக்கு.


மனசு சந்தோசமா இருந்தா எல்லாமே
அழகுதாங்க.

இதோட முடிச்சுககிலாந்தான். ஆனா அப்படி முடிச்சுட்டா எப்படின்னு? யாராவது கேள்வி கேட்டுட்டா? நமக்குதான் கேள்வி கேக்குறது புடிக்குமே, கேட்குறது நாமா இருந்தா மட்டும்.

இந்த அழக( பதிவைத்தான் ஆனந்த விகடன்லயா படிக்க போறாங்க, எல்லாம் நம்ம பதிவர்கள்தான். அதனால பதிவுலகில நாங்கண்ட அழகை மட்டுமே சொல்லப் போறேன். மொதல்ல நம்மள இந்த பதிவுக்கு அழகா இழுத்துவிட்ட அனுசுயாக்கிட்டே இருந்தே ஆரம்பிக்கிறேங்க


  1. அனுவின் மலர்கள் அழகு,
  2. ராசாவின் வென்னிலா கேக் அழகு,
  3. வாத்தியாரின் வளர்சிதைமாற்றம் அழகு,
  4. கொறிக்கக் கொடுத்த ஓமப்பொடி அழகு,
  5. மதியின் தமிழ் அழகு,
  6. ஜி.ராவின் சொல்வன்மை அழகு,
  7. ராமின் கைப்புள்ளைத்தனம் அழகு,
  8. கைப்புள்ளையின் குயிஜு அழகு,
  9. தேவ் செதுக்கிய ரஞ்சனா அழகு,
  10. கெளதமின் தடாலடி அழகு,
  11. பினாத்தலாரின் கனவில் வந்த தமிழ்மணம் அழகு,
  12. பிரியனின் அருகில் இல்லா பொழுதுகள் அழகு,
  13. அருட்பெருங்கோவின் கவிதைகள் எல்லாமே அழகு,
  14. நவீன் பிரகாஷின் காதல் மோகம் கொள்ளை அழகு,
  15. சிபியின் கலாய்த்தல் அழகு,
  16. போலியின் தொழில்நுட்பம் அழகு,
  17. பாலாபாரதியின் பதிவர் கூட்டம் அழகு,
  18. இட்லிவடை முந்தித் தந்த, பதிவர் கூட்டம் புகைப்படம் அழகு,
  19. விடாது கருப்பின் பெரியார் அழகு,
  20. பொன்ஸ்'ன் சந்திரா அத்தை அழகு,
  21. லிவிங் ஸ்மைலின் தீரம் அழகு,
  22. இராமநாதன் காட்டிய பூச்சி அழகு,
  23. கொத்ஸின் பின்னூட்டம் அழகு,
  24. கானா பிரபாவின் புன்னகை அழகு,
  25. துளசி அக்காவின் தில்லி அழகு,
  26. பொட்டீ கடையின் டவுசர் அழகு,
  27. லக்கியின் கலைஞர் அழகு,
  28. பங்காளி சந்தோஷின் பார் டான்ஸர் அழகு,
  29. டோண்டுவின் போண்டா அழகு,
  30. பாஸ்டன் பாலாவின் சுட்டிகள் அழகு,
  31. TBR Joseph திரும்பிப் பார்த்தால் அழகு,
  32. கோவியின் காலங்கள் அழகு,
  33. செந்தழலின் வேலை தேடல் அழகு,
  34. வெட்டியின் தூறல் அழகு,
  35. நாகை சிவாவின் கொசு அழகு,
  36. தேசிகனின் அழகே அழகு,
  37. நாட்டாமையின் பிரியாணி அழகு,
  38. சவுண்ட் பார்ட்டியின் சேட்டன் அழகு,
  39. மா.சிவக்குமாரின் நேர்த்தி அழகு,
  40. ஜெசிலாவின் குட்டிக் கவிதைகள் அழகு,
  41. கால்காரி நீமோ அழகு,
  42. உஷாவின் மாயாவும் அழகு,
  43. சர்வேசனின் வெங்காயம், உருளை, தக்காளி அழகு,
  44. எஸ்கேவின் மன்னாரு அழகு,
  45. ஷைலஜாவின் தமிழ் நடை அழகு,
  46. சிறில் கட்டிய தேன் அழகு,
  47. முகமூடியின் முள்ளம் பன்றி அழகு,
  48. நிலாவின் ஆத்தா அழகு,
  49. சின்னக்குட்டியின் ஓடும் படங்கள் அழகு,
  50. செல்லாவின் உணர்ச்சி வேகம் அழகு,
  51. கண்மணியின் அல்வா அழகு,
  52. இம்சை அரசி சமையல் அரசியானது அழகு,
  53. கார்த்திக் பிரபுவின் அத்தை பெண்கள் அழகிகள்,
  54. கப்பி மேய்த்த மாடு அழகு,
  55. நிலவு நண்பன் தூக்கம் தொலைத்த இரவுகள் அழகு,
  56. பாண்டி வடித்த ஜொள் அழகு,
  57. இராம.கியின் செந்தமிழ் அழகு,
  58. மை ஃபிரண்டின் குழந்தை மனசு அழகு,
  59. நிவேதாவின் உடைபட மறுத்த பிம்பங்கள் அழகு,
  60. மயூரேசனின் ஈழத்தமிழரைப் பற்றிய ஒலிப்பதிவு அழகு,
  61. மோஹன் தாஸ் தோற்ற காதல் அழகு,
  62. மு.கார்த்திகேயனின் பிச்சைக்காரர் அழகு,
  63. கீதா சாம்பசிவத்தின் தமிழக சுற்றுலா அழகு,
  64. ஈழ பாரதியின் போராட்டம் அழகு,
  65. பத்ரியின் உண்மை அழகு,
  66. குழலியின் மறுக்கப்பட்ட கதை அழகு,
  67. KVராஜாவின் கொஸப்பேட்டை அழகு,
  68. ஆசிப் மீரான் ஆடிய கிரிக்கெட் அழகு,
  69. தூயா வேண்டிய சிறகுகளும், பெரிய்ய்ய்ய தலைப்புகளும் அழகு,
  70. KRS'ன் கண்ணன் பாட்டுக்கள் அழகு,
  71. சுடுவனம் நித்தியா வருடிய நினைவுகள் அழகு,
  72. வரவனையின் சொந்த செலவில் சூன்யம் அழகு,
  73. நான் தினமும் உழும் முகுந்தனின் இ-கலைப்பை அழகு,
  74. கல்யாண் கட்டிய தேன்கூடு அழகு,
  75. காசி அண்ணன் பரப்பிய தமிழ்மணம் ரொம்ப அழகு,
  76. கடைசியாக என்னுள் நான் அழகு....

மேற்சொன்ன அனைத்து அழகுகளுமே எதையும் தேடாமல் என்னோட மனசுல இருந்ததுங்க. சிலது விடுபட்டு இருந்தா அடுத்த வாட்டி பார்த்துக்கலாம். அந்தந்த பதிவர்கள் சுட்டிகளை பின்னூட்டத்துல குடுத்தீங்கன்னா நல்லா இருப்பீங்க சாமி.

யாரோ 3 பேரை கூப்பிடனுமாமே அந்த 3 பேர் இவுங்கதான். முடிஞ்சா எழுதி பாக்கட்டும்.

1. Bill Gates

2. George W Bush

3. Tony Blair

யாரையும் தொந்தரவு பண்ணாம இருக்கனும்னு ஐயன் சொன்னதுங்க, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

Sunday, May 28, 2006

நானும்தான் விவரம் தருவேன்

வலைப்பதிவர் பெயர்:
இளமுருகு, யாருமே இப்படி கூப்புடறது இல்லை, சுருக்கி "இளா"ன்னு மாத்திபுட்டாங்க. எல்லாரும் செல்லமா கூப்பிடுற இன்னொரு பேர் ராஜா. ஊர்ல "வாத்தியார் வீட்டு ராஜா"ன்னும் ஒரு பேர் இருக்கு.இன்னும் சில பேர் "சின்ன வாத்தி"ன்னுதான் கூப்பிடறாங்க.

வலைப்பூ பெயர் :
விவசாயி

சுட்டி(url) :
http://vivasaayi.blogspot.com/
http://binarywaves.blogspot.com

ஊர்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு சொன்னாலும், செங்கை-பவானி அருகில்

நாடு:
இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
அப்படியெல்லாம் யாரும் இல்லீங்க, 3 ராஜாக்கள் தான் தமிழ்ல பதிவு எழுத தூண்டினாங்க(கே.வி.ராஜா, நாமக்கல் ராஜா, ராசா). நாம ப்லாக் ஆரம்பிச்ச காலத்திலேயே இங்க்லீஷ்ல பீட்டு விட்டவங்க.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
24-Aug-2005-தமிழ்

இது எத்தனையாவது பதிவு:
55

இப்பதிவின் சுட்டி(url):
http://vivasaayi.blogspot.com/2006/05/blog-post_28.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
வேலை வெட்டி இல்லாம இருக்கிறப்போ வேலை செய்ய

சந்தித்த அனுபவங்கள்:
வாழ்க்கை ஒரு நாடக மேடை, நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்.

பெற்ற நண்பர்கள்:
எல்லாருமே நண்பர்கள்ன்னு நினைக்கிற அப்பாவி இந்த விவசாயி

கற்றவை:
கைமண்தான் (விவசாயத்த பத்தி பேசலைங்க)

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
கொஞ்சம் கம்மிதான்

இனி செய்ய நினைப்பவை:
செய்வதை திருந்தச் செய்ன்னு எங்க அப்பாரு சொன்னதை தெளிவா செய்யபோறேன். (தந்தை சொல் தட்டாத பிள்ளை நாம)

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
சாதாரண விவசாயி. அவ்வளவுதானுங்க. நமக்கு வெளம்பரமெல்லாம் வேணாமுங்க.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
தோட்டம் இருக்கிறவங்க எங்க வேல பார்த்தாலும் சனி ஞாயிறாவது விவசாயம் பாருங்க.

Tuesday, February 21, 2006

நாலு விஷயம் - சங்கிலிப்பதிவு

கொஞ்சம் வருஷத்துக்கு முன்னே பச்ச சேலை வாங்கினா அண்ணன் நல்ல இருப்பான்னு சொல்லி, ஜவுளி கடைக்காரங்க எல்லாம் விக்காத பழைய சேலையெல்லாத்தையும் பச்ச கலருக்கு மாத்தி வித்தாங்க. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைங்க.

கொங்கு ராசாவுக்கு நம்ம மேலே ஏதோ பிரியம் போல. ராசா கார் வாங்கிட்டு ட்ரீட் கொடுக்காம ஏமாத்திட்டாரேன்னு கோவத்துல இருந்தேன். ஏதோ புதுசா வலைப்பதிவுல ஆரம்பிச்சிருக்காங்க சங்கிலி தொடர்ன்னு (tag-மொழி பெயர்த்தவர் ராசா) அதுல நம்மை இழுத்துவிட்டுட்டார் பெருமைக்குரிய ராசா. கொஞ்சமாவது வேலை வெட்டி இருக்கிறவங்களுக்குதான் அது பொருந்தும், நமக்கு.. ஹி ஹி.

இந்த நைஸ் பண்ற வேலையெல்லாம் வேணாம் ராசு ட்ரீட்தான் வேணும்
(காதலிக்க நேரமில்லை - விஷ்வநாதன்! வேலை வேணும், பாட்டு மாதிரி படிச்சுக்கோங்க)
கொங்கு ராசு! ட்ரீட்டு வேணும்
கொங்கு ராசு! ட்ரீட்டு வேணும்
கொங்கு ராசு! ட்ரீட்டு வேணும்

நாலு பேர்கிட்ட பழகி நல்லது கெட்டது தெரிஞ்சுக்கோ- இது என் அப்பா சொன்னது. நல்லது மட்டுமா கிடைக்குது? சரி விஷயத்துக்கு வருவோம்.

Four jobs I have had:

1.விவசாயம்
2.மேய்த்தல் (மனுஷப் பயலுகளை)
3.வளர்த்தல் (1 மாதமே ஆன என் செல்ல மகனை)
4.ஊர் சுத்தல் (ஊர் சுத்தின்னும் நமக்கு ஒரு பட்ட பெயர் இருக்கு)

Four movies I would watch over and over again:
1. சதிலீலாவதி
2. மைக்கேல் மதன காம ராஜன்
3. சிங்காரவேலன்
4. சர்வர் சுந்தரம்

Four places I have lived(for years):
1. டெல்லி
2. பெங்களூர்
2. லண்டன் (அள்ளி விடு)
4. செல்லிகாடு (என் தோட்டம்)
(தலைவர் மாதிரி இமையமலைகூட போலாம்னு ஆசைதான்)

Four TV shows I love to watch:

1.விஜய் டீ.வி. - லொள்ளு சபா..
2.ஜெயா டீ.வி காமெடி பஜார்
3.போகோ. ஜஸ்ட் ஃபார் ஃகேக்ஸ்
4. விஜய் டீ.வி.- முன்னே கடவுள் பாதி மிருகம் பாதி, இப்போ இல்லை (ஆள் மாறினதுக்கப்புறம் பார்க்கிறதை நிறுத்திட்டேன்)

Four places I have been on vacation:
1.சிவசமுத்திரம், சோம்நாத்பூர், ஹலபீடு(கர்நாடகா)
2.பாரிஸ்(தேன்நிலவு)
3.லண்டன்
4.நைனித்தால், டெல்லி, ஜெய்பூர், உதைப்பூர்,

Four of my favourite foods:
இதுல நானும் ராசாக்கட்சி இருந்தாலும்.
1. கோபி மஞ்சூரியன்
2. முள்ளங்கி சாம்பார்
3. அவித்த கடலை
4. சோளக்கருது

Four places I'd rather be now:
1. ஊர்ல பாட்மின்டன் விளையாட போயிருக்கலாம்
2. ஊர்ல கிரிக்கெட் விளையாட போயிருக்கலாம்
3. வேம்பநாடு
4. கொழிஞ்சாம்பாறை

Four sites I visit daily:
சைட்-- நானா.. ச்சே..சே. .. கல்யாணம் ஆகிடுச்சு ஓ இது வலைத்தளம் பத்தின கேள்வியா..
1. தமிழ்மணம்
2. தேன் கூடு
3. கூகிள்
4. யாஹூ


Four bloggers I am tagging*:

1. கைபுள்ள
2. நாட்டாமை
3. தாணு
4. டோண்டு
எப்படியோ 4 பேரை இழுத்துவிட்டாச்சு, இனி அவுங்கபாடு

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)