மேலே சொன்ன பழமொழி மாதிரி எனக்கு புடிக்காத சமாச்சாரத்தை சொல்லப்போறேன், வேற எதைப் பதிவுலகத்தைப் பத்திதான். நம்மளப் பத்தி எல்லாருக்கும் தெரியுமே, சொல்லி என்ன ஆவப்போவுது. விதிமுறை மீறல் சகஜந்தானுங்களே.
1. எதுக்கு எடுத்தாலும், பதிவுலகத்தை விட்டுப்போறேன்னு சொல்றதும், போறதும். நின்னு ஆடினாதாங்க சச்சின். வந்தோம் திட்டினாங்க, அதனால மட்டைய தோள் மேல போட்டுகிட்டு பெவிலியன் போனா சும்மாவா இருப்பீங்க? ஆடி செஞ்சுரி அடிங்க இல்லைன்னா கட்டைய போடுங்க. பெவிலியன் போய்ட்டா யாரும் கண்டுக்க மாட்டாங்க.
(நாமே ஒரு முறை அப்படி சொல்லி இருக்கோம். ஆபிஸுல அவ்ளோ ஆணி, அதுவுமில்லாம ஆபீசுல புளாகரையும் புடுங்கிட்டாங்க. ஆபிசுல ஆணின்னா சரி. கொளுகை ஈரவெங்காயம்னு சொல்றதெல்லாம் பயந்துகிட்டு போற மாதிரிதான்)
2. கேடுகெட்ட கெட்ட வார்த்தைங்க. இல்லாத கெட்ட வார்த்தையெல்லாம் பதிவுலகத்துல எழுதிட்டா திருந்திடுவாங்கன்னு நம்பிக்கையில எங்கள மாதிரி மக்களையெல்லாம் முகம் சுழிக்க வெக்கிறது. இதனால எங்களை மாதிரி மக்கள் எல்லாம் திரும்பி அந்தப் பதிவுக்கே போவ மாட்டாங்க. அப்புறம் என்ன, நீங்களும் உங்க எதிர் கட்சியும்தான் அதை படிச்சிக்கனும். நாம வழக்கமா, பாசமா கும்மி அடிக்க போயிருவோம்.
3. கும்மி அடிக்கிறது. ஒன்னியுமே இல்லாத பதிவுக்கு 100, 200 கும்மி அடிக்கிறது. இது கும்மி அடிக்கிறவுங்களுக்கு சந்தோசமா இருந்தாலும் அடுத்தவங்களுக்கு கடுப்பு ஆவுது.
4. வித்தியாசமா சிந்திக்கிறது. எல்லாருக்குமே ஒரு விஷயம் புடிச்சு எழுதினா,எல்லாரும் ஒரே மாதிரி எழுதுறாங்களேன்னு கடுப்புல எதிர்மறையா எழுதுறது. இதுக்கு பொறாமைன்னும் சொல்லலாம். போறாமைன்னும் சொல்லலாம். மனசுக்கு புடிக்கலைன்னாலும் போட்டி போட பயந்துகிட்டு எதிர்மறையா எழுதிட்டுப் போயிறது. இது போட்டி நிறைந்த உலகம் சாமிகளா.
5. இனவெறி. இவுங்க போட்டுக்கிற சண்டையில நம்ம தலைதான் உருளுது. ஒரு பக்கத்துக்கு மாங்கு மாங்குன்னு பதிவை அடிச்சுட்டு திரும்ப படிச்சு பார்த்தா இவங்க திட்டுவாங்கன்னு 2 வரி, அவுங்க திட்டிவானங்கன்னு 2 வரி அழிச்சுட்டு கடைசியா பார்த்தா பதிவையே அழிச்சு இருப்போம். அப்புறம் ஒரு வாரம் கம்னு உக்காந்துட்டு வேற யோசனை பண்றது. ஒன்னும் தோணாம பின்னூட்டம் மட்டும் போட வேண்டியதுதான்.
6.முகமிலி. பதிவு போடும் போது நல்லவங்க மாதிரி பதிவு போட வேண்டியது. அப்புறமா அனானியா வந்து ஆட்டம் போடுறது. அதுவும் கெட்ட வார்த்தையில.
7. பதிவுலகமே மொத்த உலகம்னு உக்காந்து இருக்கிறது. வேற பொழப்பையும் பாருங்களேன். நண்பர்களைப் பார்க்கப் போங்க, நல்ல புஸ்தகம் படிங்க, மொக்கை போடுற படம் பாருங்க, ஊர் சுத்துங்க, படம் வரைங்க, பைக் எடுத்துட்டு அதிரடிக்காரன் மாதிரி தூள் கிளப்புங்க.(நன்றி: பூர்ணா)
8. இப்போ தலைப்புக்கு ஏத்தா மாதிரி குட்டி சுவரான விஷயம். பதிவுலகத்தால தமிழ் நண்பர்கள் நிறைய கிடைச்சுட்டாங்க. எந்த ஊர்லையும் தமிழ் மக்கள் இருக்கிறதானால. மத்த மாநிலமோ, மத்த நாட்டு மக்களோடயோ பழகுற வாய்ப்பு குறையுது. இதனால ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழ ஆரம்பிச்சுடோமோன்னு ஒரு பயம். இது குறையா நிறையா?
அழைக்க விரும்புவது,
(நாம கூப்பிட்டு மத்தவங்க கோட்டாவுல கை வெக்கக் கூடாது பாருங்க).
அதனால நம்ம ஸ்டைலுல
1. இடுப்ப ஆட்டியே நம்ம மனச அள்ளும் ஷகீரா(சரியாத்தான் தட்டி இருக்கோம்)
2. அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் ஒசாமா
3. பாவப்பட்ட மைக்கேல் ஜாக்சன்
4. ஹ்ம்ம்ம், ஜெனிலியா டி ஸொசா
5. ஜெயிலில் களி தின்னும் பாரிஸ் ஹில்டன்
6. ஜெயிக்கப்போற ஹிலாரி கிளிண்டன்
7.ஹிலாரிக்கே தண்ணி காட்டும் ஒபாமா
சரித்திரத்துல முதல் முறையா செத்து போனவரை கூப்பிடுறேன். அதுவும் இப்போ அதிகம் பேர் இவுர பேரைதான் சொல்லிக்கிட்டு இருக்கிறோம், அது
8. சிவாஜி(அதிருதா..)
இந்தப் 8 விளையாட்டுக்கு கூப்பிட்ட கப்பி, சிறில்,
ராயல் கூப்பிட்ட வியர்டுக்கும்(பதிவுலக வியர்டுகள்)
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
லொள்ளு தாங்கலியே...
ReplyDelete9. ஒழுங்கான அழைப்புக்கெல்லாம் இப்டி பதிவு போடுறது :))
விதைச்சது ஒண்ணும் முளைக்கறமாதிரி இல்லையே!
ReplyDeleteஎல்லாம் 'சாவி'தானா?
ஆக மொத்தம் இப்போ பதிவெழுதறவங்கள்ல 99% உங்களுக்குப் பிடிக்காது. நல்லா இருங்கடா சாமி.
ReplyDelete//// சிறில் அலெக்ஸ் said...
ReplyDeleteலொள்ளு தாங்கலியே...
9. ஒழுங்கான அழைப்புக்கெல்லாம் இப்டி பதிவு போடுறது :)) //
//சிறில் அலெக்ஸ் said...
எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க.
http://theyn.blogspot.com/2007/06/7-9.html
2:44 PM //
//posted by ILA(a)இளா at 3:15 PM on Jun 21, 2007 //
இவ்ளோ சீக்கிரமா யாருங்க எழுதப் போறாங்க. வேகமா எழுதி உங்களுக்கு பதிலடி கொடுத்துட்டோம்ல
//4:14 PM
ReplyDeleteதுளசி கோபால் said...
விதைச்சது ஒண்ணும் முளைக்கறமாதிரி இல்லையே!
எல்லாம் 'சாவி'தானா?
//
பரவாயில்லீங்க டீச்சர், மனசு பாரம் கொஞ்சம் கொறையுது. அது போதாதா?
//இலவசக்கொத்தனார் said...
ஆக மொத்தம் இப்போ பதிவெழுதறவங்கள்ல 99% உங்களுக்குப் பிடிக்காது. நல்லா இருங்கடா சாமி//
எல்லாரையும் பாகுபாடு இல்லாம புடிச்சு போனதுனாலதான் இவ்ளோ வருத்தம்.
:))
ReplyDelete//விதைச்சது ஒண்ணும் முளைக்கறமாதிரி இல்லையே!//
ரிப்பீட்டு..
:))))
ReplyDeleteநானும்கூட உங்கள கூப்பிட்டிருக்கேனே :))
http://kappiguys.blogspot.com/2007/06/blog-post_1204.html
உங்க அழைப்பை ஏத்துகிட்டாச்சு கப்பி, கொஞ்சம் அட்வான்ஸா :)
ReplyDelete//சந்தோஷ் said...
ReplyDelete:))
//விதைச்சது ஒண்ணும் முளைக்கறமாதிரி இல்லையே!////
விதைச்சது எல்லாம் முளைச்சிருந்தா நல்லா இருந்துருக்கும் இல்லே. நாம சொன்னதை முன்னாடி யாரும் சொல்லாம அதாவது விதைக்காமையா இருந்து இருப்பாங்க?
//1. இடுப்ப ஆட்டியே நம்ம மனச அள்ளும் ஷகீரா//
ReplyDeleteஇது நல்ல பாதிக்கு தெரியுமா?
//(சரியாத்தான் தட்டி இருக்கோம்)//
எதையா தட்டி வச்சீர்...
இது என்ன புது விளையாட்டு?
ReplyDeleteஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்க.. :-P
ReplyDelete////1. இடுப்ப ஆட்டியே நம்ம மனச அள்ளும் ஷகீரா//
ReplyDeleteஇது நல்ல பாதிக்கு தெரியுமா?
//(சரியாத்தான் தட்டி இருக்கோம்)//
எதையா தட்டி வச்சீர்... //
குசும்புதானே. நம்ம ஊர்லயும் ஷகீரா மாதிரியே ஒரு டிரம் இருக்குல, அதை மனசுல வெச்சுதான் சொன்னேன். உமக்கும் தெரியும். ஆனாலும் எகத்தாளத்துக்குன்னே பேசறது.
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDeleteஇது என்ன புது விளையாட்டு? //
ஆமா, ஆமா. ஆனா இந்த விளையாட்டு சரியா வரல.
உம்ம்...மனசில இருந்ததெல்லாம் கொட்டியாச்சு போல...
ReplyDeleteநல்லா இருந்ததய்யா...
//உம்ம்...மனசில இருந்ததெல்லாம் கொட்டியாச்சு போல...//
ReplyDeleteஇதுக்கு பேரு கூட குமைதல் திணையாம்
எல்லார் மனசிலேயும் புகுந்து
ReplyDeleteபுறப்பட்டீங்க மாதிரி இருக்கே.
நல்லா இருக்கு இந்த 8.
எத்தனை நாள் ஆதங்கமோ!!! நல்லா இருங்க...
ReplyDelete//எல்லார் மனசிலேயும் புகுந்து
ReplyDeleteபுறப்பட்டீங்க மாதிரி இருக்கே.
நல்லா இருக்கு இந்த 8. //
எல்லார் மனசுலேயும் இருக்குறதுதாங்க. ஆனா யாரும் சொல்ல முன் வரது இல்லே. நாம் வந்துட்டோம் அவ்ளோதான்
//எத்தனை நாள் ஆதங்கமோ!!! நல்லா இருங்க//
ReplyDeleteஎத்தனை வருஷ ஆதங்கம்னு கேளுங்க சரியா இருக்கும் :)