Sunday, June 17, 2007

சிவாஜியும் பகுத்தறிவாளனும்

பொத்துக்கிட்டு வருதுங்க கோவம். இவுங்க பகுத்தறிவும், பொருளாதார விளக்கமும், சமுதாய பார்வையும் அருமைங்க. 60 வயசு தாத்தாவுக்கு 20 வயசு சோடியான்னு உள்குத்து பதிவுகள் போடுறீங்களே, கிளிண்ட் ஈஸ்ட் வுட் ஜே.லோவோட நடிக்க ஆசைன்னு சொன்னா ரசிப்பீங்களோ?

நீங்க சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் படத்துக்கு குடும்ப சகிதமா போறது இல்லியா? அங்கே அவுங்க அடிக்காத அடியா, பறக்காததையா ரஜினி பண்ணிட்டாரு? ஸ்பைடர் மேன் உதட்டோட முத்தம் குடுத்தா சரியா?

லாஜிக் இல்லாதது ரஜினி படத்துல மட்டும் இல்லீங்க எல்லாம் மொழியிலும் இருக்கு. அப்படி பார்த்தா தமிழ் சினிமாவுல பாட்டே இருக்கக்கூடாது. பாட்டு பாடியா உங்க காதலை தெரிவிக்கிறீங்க. எத்தனை பேருங்க பாட்டுப்பாடி காதலை தெரிவிச்சு இருக்கீங்க.சொல்லுங்க,தமிழ்சினிமா பகுத்தறிவு பாதையில் போகுதுன்னு ஒத்துக்கிறேன்.

ரஜினி சொல்ற அம்மா, அப்பா, குடும்ப பாசம் தப்பா?

ஏன்? வேட்டையாடு விளையாடு படத்துல கமல் என்ன 52 வயசு பொண்ணோடையா நடிச்சாரு? கமலினி முகர்ஜிக்கும், ஜோதிக்காவுக்கும் அவ்வளவு வயசு ஆகிடலையே? எம்.ஜி.ஆரு கூட நடிச்ச பொண்ணுங்களுக்கு அவரு வயசா என்ன?

ரஜினி படத்தை பாக்கனுமின்னா உங்க ஈகோவை எல்லாம் விட்டுட்டு போய் பாருங்க, ரசிப்பீங்க."அப்படிதான் நாங்க ஈகோவோட இருப்போம்"னா அவரு படத்தை ஏன் பார்க்க போறீங்க? பார்க்காம இருந்துட வேண்டியதுதானே?

என்னமோ போங்க, சிவாஜி படத்தை நானும் பார்த்துட்டேன். பால பாரதி சொன்னதைத் தவிர மத்தவங்க சொன்ன விதமோ, கருத்தோ சரியா இல்லே(இது சிவாஜி படத்துக்கு எதிர்மறையா பதிவிட்டவங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

டிஸ்கி:
1) நானும் ஒரு கமல் ரசிகன்
2) நானும் திராவிட நாட்டுல பொறந்த திராவிடன்தான்.
3) சாதி/மதம், பில்லி, சூன்யம் பார்க்காதவன்தான்
4) பெரியார் பொறந்த ஊரில் பொறந்து வளர்ந்து அவர் கொள்கைகளை பின்பற்றுபவன்தான்.
5) இயக்குனர் சீமானின் தமிழும் கருத்தும் என்னை கவர்ந்த படியால் அந்த கருத்துகள் வழி வாழ விரும்பும் ஒருவன் நான்.

23 comments:

  1. // லாஜிக் இல்லாதது ரஜினி படத்துல மட்டும் இல்லீங்க எல்லாம் மொழியிலும் இருக்கு. அப்படி பார்த்தா தமிழ் சினிமாவுல பாட்டே இருக்கக்கூடாது. பாட்டு பாடியா உங்க காதலை தெரிவிக்கிறீங்க. எத்தனை பேருங்க பாட்டுப்பாடி காதலை தெரிவிச்சு இருக்கீங்க. //

    எல்லாப் படத்துலயும் லாஜிக் பாக்கக் கூடாதுதான். ஒத்துக்கிறோம். ஆனா லாஜிக்கையே மறக்க வைக்கிற படங்கள்ள இந்த வகைகளும் ஒன்னு. இங்கிலீசுல இல்லியையான்னு கேப்பீங்க. ஆனா அவங்க லாஜிக்கை மறக்க காரணம் சொல்வாங்க. வெளிகிரகத்துல இருந்து வந்தது. ஏதோ அறிவியல் ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சாங்க..அப்படி இப்பிடின்னு. ஆனா இங்க? சாதராண மனுசங்களுக்குப் பொறந்து வளர்ந்து நூறு பேரை ஒதைக்கிறதெல்லாம் டூ மச். ரஜினி மட்டுமில்லை. எல்லாருக்கும் இது பொருந்தும். இங்க ஏன் நெறைய சொல்றோம்னா...மத்தவங்கள அவ்வளவா கண்டுக்கலை. ஆனா இங்க அப்படியா? நின்னா நிலம். அசைஞ்சா அலை. சிரிச்சா சிகரம்னு இருக்குறப்போ. பாலையும் தேனையும் போஸ்ட்டர்ல கொட்டுறப்போ. சாமிக்குக் கொட்டுறதையே நிறுத்தலாம்னு ஆன்மீகவாதிகளே பேசுறப்போ....மனுசனுக்கு..கொடுமைங்க. கொடுமை. அதுல இவரு மாதிரியே ரெண்டு ஜெராக்ஸ் மெஷினுங்க வந்திருக்கு. அதுங்களை எப்படி switch off பண்றதுன்னு தெரியலை.

    // சொல்லுங்க,தமிழ்சினிமா பகுத்தறிவு பாதையில் போகுதுன்னு ஒத்துக்கிறேன்.//

    பகுத்தறிவுப் பாதைலதான் போகனும்னு அவசியமில்லை. பொழுது போக்கு இருக்கட்டும். ஆனா பொழுது மட்டுந்தான் போக்குவேன்னு ஒருத்தன் சொன்னா அவன் சோம்பேறி. அதிலும் பலர் பின்பற்றும் ஒருத்தர் சொன்னா அது தப்பு. இதே சத்யராஜ் சொல்லீருந்தா எவன் கேக்கப் போறான். அவரு செஞ்சா அதே மாதிரி யாரும் செய்யப் போறதில்ல. இங்க அப்படியா?

    பாட்டுப் பாடுறது ரொம்பப் பொருத்தம். ஏன்னா இயல்பாவே தமிழில் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் பாட்டு இருக்கு. தாலாட்டு பாடுவாங்க. ஒப்பாரியோடதான் வழியனுப்புவாங்க. இன்னும் நெறையச் சொல்லலாம். அதோட தொடர்ச்சிதான் சினிமால பாட்டு. ஆனா அதையும் இயல்பு நிலையிலிருந்து எங்கையோ கூட்டீட்டுப் போயிட்டோம். எங்க கரும்புக்காட்டுக்குள்ளதான். :)))))))))))))

    ReplyDelete
  2. இன்னும் கொஞ்சம் சொல்லனும். இப்ப Ocean's 13 போறேன். பாத்துட்டு வந்து ராத்திரி சொல்றேன். :)

    ReplyDelete
  3. //சாதராண மனுசங்களுக்குப் பொறந்து வளர்ந்து நூறு பேரை ஒதைக்கிறதெல்லாம் டூ மச். ரஜினி மட்டுமில்லை. எல்லாருக்கும் இது பொருந்தும்.//

    //அதிலும் பலர் பின்பற்றும் ஒருத்தர் சொன்னா அது தப்பு. இதே சத்யராஜ் சொல்லீருந்தா எவன் கேக்கப் போறான். //

    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  4. //இன்னும் கொஞ்சம் சொல்லனும். இப்ப Ocean's 13 போறேன். பாத்துட்டு வந்து ராத்திரி சொல்றேன். :) //
    குசும்பை உங்க ஊர்லையும் குத்தகைக்கு எடுப்பாங்க போல இருக்கே.

    ReplyDelete
  5. ஜி.ரா, இதுக்கு மேல உங்க பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட மாட்டாது. உங்ககூட சண்டை போட விரும்பல. தனியா பேசிக்குவோம். உமக்கும் எனக்கும் என்னையா பிரச்சினை. Take this topic offline, இது ஜி.ராவுக்கு மட்டும்தான்

    ReplyDelete
  6. //ஊரெல்லாம் கும்மாளம்,
    புதுத்துணி, உதட்டுல் புன்னகை,
    தெருவெங்கும் பொங்கல் பொங்குது!
    பசி வந்த எந்தம்பி மட்டும்
    அழும் குரலோடு.




    "நல்ல நாள் அதுவுமாய் வந்துட்டியே"
    விரட்டியது குண்டம்மா.

    இந்த பொங்கல் நாளிலாவது
    பசிக்கத் தெரியாமல்
    இருந்திருக்கக் கூடாதா?


    தியேட்டர் வாசலில் பெரும் கூட்டம்
    3 நாளா 10 பேர் அலங்காரம் செய்ய
    100 அடி உசரத்துல ஒரு நடிகர்.





    குடம் குடமாய் பாலாபிசேகம்...
    ஒரு தம்ளருல குடுங்கய்யா
    தம்பி வயிறாவது நனையட்டும்.

    ஊரெல்லாம் கும்மாளம்,
    புதுத்துணி,
    உதட்டுல் புன்னகை,
    தெருவெங்கும் பொங்கல் பொங்குது!

    பசியோட திரும்பவும் தம்பி அழ,
    கையேந்தி ஆரம்பிச்சேன்
    "அம்மா தாயே.."//

    ReplyDelete
  7. மேலே இருக்கிற வரிகள் உங்க பதிவுல இருந்துதான் எடுத்தது

    ReplyDelete
  8. உங்களோட வாதங்களில் நியாயம் இருக்கு இளா. எனக்கு படம் பிடிச்சுதுன்னு நானும் பதிவு போட்டேன். நானும் ரஜினி ரசிகர் கிடையாது. ஆனா நல்ல பொழுதுபோக்கா இருந்ததால எனக்கு பிடிச்சுருந்தது அவ்வளவுதான்.

    அதுக்கும் மேல திரைப்படத்தில கதாபாத்திரங்களுக்கு முழுக்க தமிழ் பெயர்களும் (வில்லனுக்கு மட்டும் வேறு...! அதனை விமர்சகர்கள் கவனித்துக்கொள்ளட்டும்), திருமணம் தமிழ் திருமணம் என்றெல்லாம் கூட காட்சிகள் வைத்ததையாவது எதிர்மறையான விமர்சனம் அளிச்சவங்க பாராட்டியிருக்கலாம்னு தோணுதுங்க.(என்னோட தாழ்மையான கருத்து..)

    (sivaramang.wordpress.com)

    ReplyDelete
  9. //பாலையும் தேனையும் போஸ்ட்டர்ல கொட்டுறப்போ. சாமிக்குக் கொட்டுறதையே நிறுத்தலாம்னு ஆன்மீகவாதிகளே பேசுறப்போ....மனுசனுக்கு..கொடுமைங்க.//
    இந்த கொடுமையை யார் பண்ணாலும் ஒத்துக்க மாட்டேங்க. மடையர்கள்தான் அப்படி பண்ணுவாங்க. அதுக்கு சாட்சியா என்னோட கவிதைய பாருங்க. அதுமாதிரி ஒன்ன பார்த்துட்டு உணர்ச்சி வசப்பட்டு எழுதின கவிதைதான் இது Post

    ReplyDelete
  10. ஆனா இதைச் சொன்னதுக்குத்தான் கொலவெறியோட பின்னூட்டம் போட்டாங்க :)

    ReplyDelete
  11. இளா,

    விடுங்க... நம்ப ஜீரா என்ன தமிழ்ப்படம் பார்க்காத ஆளா?! :)

    நமக்கு பிடிச்சிருக்கு பார்க்கறோம்! ஜீராவுக்கு பிடிக்கலை... பார்க்கலை! அவ்வளவுதான்!

    இதுல நாம் ஏன் பார்க்ககூடாதுன்னும் ஜீரா ஏன் பார்த்தே ஆகவேண்டும்னும் பேசிக்கிட்டு இருந்தால் இது நடக்கற காரியமா?!

    அவரவர் ரசனை அவரவருக்கு! பாலாபிஷேகத்தை கண்டித்து கவிதை போட்டதால் ரஜினி படம் பார்த்து ரசிக்கக்கூடாதா என்ன? இல்லை ரஜினி படத்தை ரசிக்கறவங்க எல்லாம் சமுதாயசிந்தனை இல்லாத மாக்களா?! :)

    ReplyDelete
  12. அந்தக் கவிதைகள் எனதுதாங்க, பாலாபிஷேகம் பார்த்து வயிறு எரிஞ்சு உணர்ச்சி வசப்பட்டு எழுதினதுதான். நடிகர் வேணுமின்னாலும் மாறலாம். பால்/ பீர் ஊத்தினா மடையர்கள் மடையர்கள்தான். அதுக்காக ரஜினி ரசிகர்கள் மட்டும்தான் பண்றேனு ஏன் சொல்லனும்? கமல்/விஜய்/அஜித் ரசிகர்கள் பண்றது இல்லியா? அது சிலையாகட்டும், கட்அவுட் ஆகட்டும்.

    ReplyDelete
  13. இன்னைக்கு நம்ம ஆளுங்கள இங்கன கூட்டியாந்து துண்டப் போடலாம்னா பட்டா இல்லாதவன் பயிர்பன்னக் கூடாதுன்னு விவசாயி சொல்றாரேப்பா இதை யாரும் கேக்கப்படாதா

    ReplyDelete
  14. சிவாஜி படம் பண்றது தப்பு இல்லீங்க. பார்க்கிறதும் தப்பு இல்லீங்க. தியேட்டருக்குள்ள ஆடு, பாடு, சந்தோசமா இரு. ஆனா வயித்துல ஊத்த வேண்டிய பாலை துணி கட்டுன கட்டைக்கா ஊத்துவாங்க? பதிவா போடு, காசா பணமா? பேனர் கட்டாத அது காசு.

    ReplyDelete
  15. //பட்டா இல்லாதவன் பயிர்பன்னக் கூடாதுன்னு விவசாயி சொல்றாரேப்பா //
    ஐ, இது கூட நல்லா இருக்கே. Comment Moderation-க்கு இப்படி ஒரு பேர் வெச்ச அமுக மக்களுக்கு நன்றிங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  16. // ILA(a)இளா said...
    ஜி.ரா, இதுக்கு மேல உங்க பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட மாட்டாது. உங்ககூட சண்டை போட விரும்பல. தனியா பேசிக்குவோம். உமக்கும் எனக்கும் என்னையா பிரச்சினை. Take this topic offline, இது ஜி.ராவுக்கு மட்டும்தான் //

    சண்டையா...அத யாரு போட்டா....நீங்க வேற. இதெல்லாம் கலந்துரையாடல்தானே. நம்ம தனியா பேசிக்கிருவோம். நோ பிராபளம். :)

    // இளவஞ்சி said...
    இளா,

    விடுங்க... நம்ப ஜீரா என்ன தமிழ்ப்படம் பார்க்காத ஆளா?! :)

    நமக்கு பிடிச்சிருக்கு பார்க்கறோம்! ஜீராவுக்கு பிடிக்கலை... பார்க்கலை! அவ்வளவுதான்!

    இதுல நாம் ஏன் பார்க்ககூடாதுன்னும் ஜீரா ஏன் பார்த்தே ஆகவேண்டும்னும் பேசிக்கிட்டு இருந்தால் இது நடக்கற காரியமா?!//

    ரொம்பச் சரியா சொன்னீங்க இளவஞ்சி. :) நாம் பாக்கலைன்னா கொறஞ்சு போகுமா? நீங்க பாக்குறது தப்புன்னு நான் சொல்லலை. சொல்லவும் மாட்டேன். பிடிச்சிருக்கு பாக்குறீங்க. அதுல எந்தத் தப்பையும் நான் பாக்கலைங்க. சிவாஜி நான் பாக்காததுக்குக் காரணம் தேட்டர் வேற ஊர்ல இருக்கு. போக ரெண்டர மணி நேரம். வர ரெண்டர மணி நேரம். அப்படியில்லைன்னா கண்டிப்பா போயிருப்பேன். போகவே மாட்டேன்னு சொல்ல...நானென்ன உத்தம புத்திரனா? :-))))

    ReplyDelete
  17. ரஜினி படம் பார்த்தா பகுத்தறிவாளன் இல்லை என்று சொன்னால் சொன்னவனை தான் முதலில் பகுத்தறிய வேண்டும்....

    ரசிகனும், வெறியனுக்கும் முதலில் இவர்கள் வித்தியாசம் தெரிஞ்சுட்டு பேசட்டும்....விடுங்க இளா....

    ரஜினிய திட்ட வேண்டியது... ஆனா ரசிகர்களை முந்திக்கிட்டு போய் படம் பாக்க வேண்டியது... அப்படி என்ன தான் இருக்கு என்ற ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது ஏற்படுத்தும் சக்தி ரஜினியின் வெற்றிக்கு காரணம் அம்புட்டு தான்...

    Coooolllllllllll

    ReplyDelete
  18. ரஜினி ரசிகனும், வெறியனும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான், இதுல அவங்கவங்க வதிக்கேற்பவும், விருப்பத்திற்கேற்பவும் விசுவாசத்தைக் காட்டுறாங்க...

    சினிமா மட்டுமே பொழுதுபோக்கு, வியாபாரம், விளம்பரம்ன்னு எல்லாரும் ஒரு மாயையை ஏற்படுத்திருக்காங்க..

    விளையாட்டுன்னா கிரிக்கேட், பொழுதுபோக்குன்னா சினிமா..இது தவிர வேறேதும் தெரியாதுங்க நம்மக்களுக்கு...தெரிஞ்சிக்கவும் விரும்பறதில்ல...

    ReplyDelete
  19. ////ரஜினி ரசிகனும், வெறியனும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான்//

    என்ன லாஜிக்கோ... சத்தியமா எனக்கு புரியல.. முடிஞ்சா விளக்குங்க...

    //இதுல அவங்கவங்க வதிக்கேற்பவும், விருப்பத்திற்கேற்பவும் விசுவாசத்தைக் காட்டுறாங்க...//

    அவர்கிட்ட விசுவாசத்தை காட்ட என்ன இருக்கு.. எனக்கு ரஜினிய பிடிக்கும், எந்த அளவுக்கு என்றால் அவர் படம் வந்தால் தவறாமல் பார்க்கும் அளவுக்கு... அதை விட்டுட்டு ரஜினியை நேரில் பாத்து விட வேண்டும், அவரிடம் பேசிய ஆக வேண்டும் என அவர் வீட்டின் முன் போய் நிற்கும் அளவுக்கு அல்ல... அப்படி நிற்பவர்களை நான் குற்றம் சொல்லவில்லை. அது அவர் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் தன் வேலையை விட்டுட்டு அவரை போய் சந்திப்பது தான் தப்பு என்கிறேன்.

    //சினிமா மட்டுமே பொழுதுபோக்கு, வியாபாரம், விளம்பரம்ன்னு எல்லாரும் ஒரு மாயையை ஏற்படுத்திருக்காங்க..//

    சினிமாவும் ஒரு பொழுதுபோக்கு என்ற நிலையில் தான் நாங்கள் இருக்கோம்.. இந்த ப்ளாக்ம் ஒரு வகை பொழுது போக்கு தான்...

    //விளையாட்டுன்னா கிரிக்கேட், பொழுதுபோக்குன்னா சினிமா..இது தவிர வேறேதும் தெரியாதுங்க நம்மக்களுக்கு...தெரிஞ்சிக்கவும் விரும்பறதில்ல... //

    நீங்களா அப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டா என்ன பண்ண முடியும் சொல்லுங்க...

    தெரிதலும் தெளிதலும் அவரவர் எண்ணங்கள்.(விருப்பங்கள்)

    ReplyDelete
  20. Thirumavalavanuku "cut out" kaddi paaloothina enna solluvaanga???

    ReplyDelete
  21. தனிமனித தாக்குதல்- நம்ம மேலையுமா? அதுவும் ஒரு சினிமாவுக்காகவா நட்பை கலங்கப்படுத்துறது? நாமெல்லாம் ஒரு இனம் இல்லையா?யோசிங்க நட்பே?

    ReplyDelete
  22. உங்க பின்னூட்டத்துக்கு நன்றிங்க நல்ல முகமூடி

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)