சிவாஜி சிவாஜின்னு பேசுற நேரத்துல கமுக்கமா ஒரு பெரிய படம் ரெடி ஆகிட்டே இருக்கு. அது தசாவதாரம். இசைக்கு ஹிமேஷ், நடிப்புக்கு(?!) மல்லிகா ஷெராவத்.. இன்னும் இப்படி பெரிய பட்டாளமே தமிழுக்கு வர இருக்காங்க. கே.எஸ். ரவிக்குமாருக்கு வரலாறு, கமலுக்கு வேட்டையாடு விளையாடுன்னு பெரிய வெற்றிக்கு பின்னாடி இப்படி ஒரு படம் வருது. ஆனா விளம்பரமோ பரபரப்போ கூட இல்லை. அதுக்குதான் இப்படி ஒரு வோட்டெடுப்பு.
கொசுறு சேதி:
ஆகஸ்டு 18 உலகமெங்கும் அவதாரம்.
'புலி பதுங்குவது பாய்வதற்காக'ன்னும் ஒரு ஆப்ஷன் சேர்த்துக்குங்க இளா.
ReplyDeleteஎப்படியும் இது வெற்றி கூட்டணி தான்...
ReplyDeleteதெனாலி, பஞ்சதந்திரம் ரெண்டுமே சூப்பர் படம் தான்.
ஆனா சிவாஜிக்கூட கம்பேர் பண்ண தேவையில்லை. இது வேற மாதிரி படமா இருக்கும் ;)
நெறய இருக்கு.. ஆனா வெளிக்காட்டிக்கறதில்லை.
ReplyDeleteஇது படம் நல்லா இருக்கும்ன்ற நம்பிக்கையினால வர அமைதி!
சிவாஜி படத்துனால தசாவதாரம் எடுபடலை
ReplyDelete///
:)
பாலாஜி சொன்னதே தான்... அது வேற டிராக், இது வேற டிராக் ....
ReplyDeleteநோ கம்பேர்ஷன்.....
விவசயிக்கு , நான் சொல்லி தெரியனும் இல்லை
ReplyDeleteபதறு எப்பவும் மேல பரக்கதாம் செய்யும் அதனால
எந்தபயனும் இல்லை கமலின் படம் நெல்லு மாதிரி.
_ அன்பே சிவம்
புதுச்சேரி.
//பதறு எப்பவும் மேல பரக்கதாம் செய்யும் அதனால
ReplyDeleteஎந்தபயனும் இல்லை கமலின் படம் நெல்லு மாதிரி.//
இதுல எனக்கு உடன்பாடு இல்லீங்க பாசறை.
இங்க பாருங்கய்யா...சொன்னா கோவிச்சப்படாது. empty vessel makes more noise. தமிழ்ல சொன்னா...நெறகுடம் தழும்பாது. ;)
ReplyDelete(ம்ம்ம்...நம்மள இன்னைக்கு யாரெல்லாம் வந்து கும்மப் போறாங்களோ!) :)
//ஆனா சிவாஜிக்கூட கம்பேர் பண்ண தேவையில்லை. இது வேற மாதிரி படமா இருக்கும் ;)//
ReplyDeleteஅதே... அதே...
ஒரு ரசிகனா ரெண்டு படத்தையும் பார்த்து ரசிக்க வெயிட்டிஸ்... :)
தசவதாரம் திரைக் கதை இருக்கு படிக்கிறிங்களா ? உலகநாயகனின் தசவதாரம்
ReplyDeleteராகவன்,
ReplyDeleteஉண்மைய சொன்னதுக்காக அப்படி உங்கள மொத்த விட்டுடுவோமா!
என்னுடைய கருத்து என்னண்ணா..கமல் படத்திற்கு ஒரு வயதுக்கு மேல் உள்ளவர்களிடம் தான் எதிர்பார்ப்பு .ஆனால் ரஜினி படத்துக்கு சின்னஞ்சிறுகளும் எதிர்பாக்குறாங்க .சிறுசுங்க விரும்புறதாக பெற்றோரும் ரஜினி படத்துக்கு கூட்டமா போறாங்க .ஆனால் கமல் படத்துக்கு பெரும்பாலும் குடும்ப தலைவர் மட்டும் போயிட்டு வந்துடுவாரு .சில விஷயங்கள கிரகிச்சுகிறதுக்கு அதற்கான அறிவும் முதிர்ச்சியும் வேணுமில்ல.
ராகவன்,
ReplyDeleteஇப்ப தான் பார்த்தேன் .விஜயகாந்த் கட்சி கரை போட்ட துண்டு போட்டிருக்க மாதிரி இருக்கு ..சொல்லவேயில்ல!
கமல் படத்து ரசிகர்கள் பொதுவா ஆழ்ந்த விசயஞானம் உள்ளவங்கதான். அவங்க இப்டி விளம்பரம் பண்றதாலயெல்லாம் படம் ஓடும்ங்கறதுல நம்பிக்கையில்லாதவங்க அதான் காரணம் :)
ReplyDeleteவெட்டி சொன்ன மாதிரி அது வேற ட்ராக் படத்து கதைக்காகவும் நடிப்புகாகவும் மட்டுமே பார்க்கற விசயம்.
அடக்கி வாசிப்பது போலத் தெரிகின்றது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். என் மனதில் ஒரு ஆங்கிலப்படத்தின் (BEDAZZLED) தழுவலாக இருக்கும் எனப் படுகின்றது.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறதாம். அடுத்த வாரம் மல்லிகா கமல் சூடான படங்களுடன் இன்னுமொரு பதிவு வருமே.
ReplyDelete// ஜோ / Joe said...
ReplyDeleteஆனால் கமல் படத்துக்கு பெரும்பாலும் குடும்ப தலைவர் மட்டும் போயிட்டு வந்துடுவாரு .சில விஷயங்கள கிரகிச்சுகிறதுக்கு அதற்கான அறிவும் முதிர்ச்சியும் வேணுமில்ல. //
அப்படிச் சொல்லுங்க. :) நம்ம எப்பவும் ஒரே கச்சிதானே :)
// ஜோ / Joe said...
ராகவன்,
இப்ப தான் பார்த்தேன் .விஜயகாந்த் கட்சி கரை போட்ட துண்டு போட்டிருக்க மாதிரி இருக்கு ..சொல்லவேயில்ல! //
யெய்யா இதெல்லாம் ஞாயமில்லை. சொல்லீட்டேன். அது துண்டில்லை. ஜாக்கெட்டு. விஜயகாந்து புகழ் ஆம்ஸ்டர்டாம் வரைக்கும் இருக்குன்னா சொல்றீங்க! ஆனா திமுக அதிமுகவும் அந்த அளவுக்கு விஜயகாந்தைக் கொண்டு வந்தாலும் வந்துரும். நம்ப முடியாது.
//ஆனா சிவாஜிக்கூட கம்பேர் பண்ண தேவையில்லை. இது வேற மாதிரி படமா இருக்கும் ;) //
ReplyDeleteithuthaan ennoda karuthum.repeat pannikiren :-)
இது தமிழுக்கு புது பரிமாணம். அப்படின்னு இயக்குனர் நம்ம சகாக்கிட்டே சொன்னாராம். பார்ப்போம். தமிழ்மணம் தசாவதாரத்தை மறக்ககூடாதுன்னு போட்ட பதிவுதான் இது.
ReplyDeleteபோலி டோண்டு உருவானதுக்கும் ஒரு கமல் பதிவுதான் காரணமாமே? தெரியுமா சேதி? பேச்ச மாத்தறேனோ?
தசாவதாரம் எதிர்பார்க்கபடலேன்னு எப்படி சொல்றீங்க முதல்ல? சிவாஜி இப்ப ரிலீஸ். அதுனால இவ்ளோ ந்யூஸ். அப்புறம் எப்படி ஒப்பிடறது?
ReplyDeleteசிவாஜி பத்தி எல்லாரும் பேசுறாங்க... அதுனால உங்களுக்கு இப்படித் தோணியிருக்கு.
தலைவர் படம் ரெடி ஆகட்டும். அவர் ஒருத்தரே எல்லாருக்கும் சேர்த்து வச்சு பேசுவார் பாருங்க. புரிஞ்சிக்கறது நம்ம பொறுப்பு.
ஆனா ஒண்ணு சிவாஜி உடனே பாக்கிறேனோ இல்லையோ... தசாவதாரம் வந்த உடனே பார்த்தாகனும் நமக்கு.
வெயிட்டீஸ்....
ரஜினியிடம் எதிர்பார்க்கிறார்கள், இதாச்சும் சினிமாத்துறைக்கு பெருமை சேர்க்குமா?ன்னு!
ReplyDeleteகமலிட்ட அந்த அவசியமே இல்லன்னேன்!
ஜோ
ReplyDelete//
ரஜினி படத்துக்கு சின்னஞ்சிறுகளும் எதிர்பாக்குறாங்க .சிறுசுங்க விரும்புறதாக பெற்றோரும் ரஜினி படத்துக்கு கூட்டமா போறாங்க .ஆனால் கமல் படத்துக்கு பெரும்பாலும் குடும்ப தலைவர் மட்டும் போயிட்டு வந்துடுவாரு .சில விஷயங்கள கிரகிச்சுகிறதுக்கு அதற்கான அறிவும் முதிர்ச்சியும் வேணுமில்ல.//
உண்மைய சொன்னதுக்காக அப்படி உங்கள மொத்த விட்டுடுவோமா! :-) :-)
சிவாஜி ட்ரைலரைப் பாக்கறபோது என்னோட வாண்டு துர்காவோட முகபாவங்களைக் கோடி ரூபாய் கொடுத்தாலும் எங்கயும் பாக்கமுடியாது. கண்ணுங்க மின்னுது. புன்னகை விரியுது. எகிறிக் குதிக்காத குறை. அதான் ரஜினி!
ஆனா நம்ம பெருந்தலை கமலோட ரேஞ்சே வேற!
ரெண்டு பேருக்கும் வெவ்வேறு ஆடியன்ஸ். அதனால ஒப்பிடறது தப்பு.
தசாவதாரத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அதே வேளையில் என் குட்டிப்பொண்ணு துர்காவுக்காக 16-ந்தேதி பாஸ்டன்ல சிவாஜி பாக்கறதுக்காக டிக்கெட் முன்பதிவு செய்யப் போறேன்!
தசாவதாரத்தைப் பாக்கறபோது மேல நான் சொன்ன துர்காவோட முகபாவங்களை என் முகத்துல பாக்கலாம்! :-)
//இங்க பாருங்கய்யா...சொன்னா கோவிச்சப்படாது. empty vessel makes more noise. தமிழ்ல சொன்னா...நெறகுடம் தழும்பாது. ;)//
ReplyDeleteஎன்ன ஜிரா இப்படி சொல்லிட்டீங்க?
பதிவுகள் பத்தி உள்குத்தா?
;-))
சரி..மன்சூரலிகான் படமும் விஜயகாந்த் படமும் எந்த எதிர்பார்பும் கிளப்புவதில்லை.. அதுக்கு காரணம் கமல் மாதிரி அவங்களும் நிறைகுடங்கள்னு இப்பத்தான் புரியுது(இப்படி சொல்லவே கஷ்டமா இருக்கு.. என்னா பன்றது?)..
அப்ப தாசாவாதாரம் படத்துக்கு எந்த விளம்பரமும் கட் அவுட்டும் மவுன்ட் ரோட்டில் டிஜிட்டல் பேனாரும் வைக்க மாட்டாங்கதானே? வச்சா அப்ப வந்து தசாவதாரம் empty vessel னு சொல்லுவீங்கதானே??
அப்புரம்.. படம் வரட்டும்.. கல்லா நிறையுதா இல்லையான்னு பார்க்கலாம்.. சரிங்களா?
//(ம்ம்ம்...நம்மள இன்னைக்கு யாரெல்லாம் வந்து கும்மப் போறாங்களோ!) :) //
கும்மரதா? என்னங்க? பதிவெல்லாம் படிக்கிறதே இல்லயா? ரஜினிய பத்தி நல்லதா பேசினா வயிதெரிச்சல் தாங்காம வந்து குய்யோ முய்யோன்னு கத்தர கூட்டம்தான் அதிகமா இருக்கு.
சரி..பதிவ பத்தி.
இளா.. சிவாஜிக்கு அடுத்தபடியா எல்லாரும் எதிர்பார்க்குர படம் தாசாவதாரம்தான்.. அது வரப்போகும் நேரத்தில் தேவையான சத்தங்கள் இருக்கும்.. அது empty vessel என்பதால் அல்ல.. தேவைப்படுவதால்.
ஜாஃபர் சாதிக்
ReplyDeleteஒரே ஒரு விஷயம், 50 வருடங்கள் கழித்தாலும், தசாவதாரம் படம் கமலின் திற்மைக்காக வியந்து பாராட்டப்படும். சிவாஜி ரஜினி மேல் தற்காலம் இருக்கும் அர்த்தமற்ற மக்களின் பாசத்தால் ஓடுகிறது. இந்த பாசம் ரஜினி சினி ஃபில்டில் உள்ளவரை நீடிக்கலாம். எம்.ஜி.ஆருக்கு ஒரு கூட்டம் இருந்ததல்லவா? அதுபோல்தான். என்றைக்கு உள்ள தலைமுறை எம்.ஜி.ஆர் படங்களை பார்த்து சிரிக்கின்றன. இதே கதிதான் சில காலம் கழிந்தபின் ரஜினிபடங்களுக்க்கு ஏற்படும். ஆனால் இன்றும் சிவாஜியின் நடிப்பை இளம் தலைமுறைகளாலும் வியக்காமால் இருக்க முடியாது. கமலும் அப்படித்தான்.
தசாவாதாரம், சிவாஜி மாதிரியோ சந்திரமுகி மாதிரியோ தறிகெட்டு ஓடும் என்றெல்லாம் நான் நம்பவில்லை.
ReplyDeleteஆயினும் நல்ல சினிமாவை எதிர்பார்ப்பவர்களுக்கு சரியான தீனியை தரும் என்று மட்டுமே நம்புகிறேன்.
ஜஃபர் சாதிக் சொன்னது நல்ல கருத்து:
ReplyDeleteஇன்றைக்கு MGR படங்கள் எப்படி காமெடி ஆகிவிட்டனவோ, அந்தகதி தான் நாளை ரஜினி படங்களுக்கும்.
கமல் என்னிக்கும் கமல் தான்.
கமல் ஹாசன் மாபெரும் நடிகன், ரஜனி காமெடி நடிகன். கமல் படங்கள் நிலைத்து நிற்கும் ரஜனி படங்கள் சலசலப்பை கொடுக்கும் பின்னர் சாய்ந்து விடும்.
ReplyDeleteசிவாஜி இப்ப வரும் படங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது இதில் தசாவதாரம் மட்டுமல்ல எல்லா படங்களும் அடங்கும். சிவாஜி மோகம் முடிய இன்னும் 50 நாட்களாவது ஆகும்.. அப்புறமா இதப் பத்தி பேசலாம்.
ReplyDeleteபாவம் கமல் சிவாஜில ப்பாட்டு எடுக்க ஆன செலவ அவர் கைல தந்தா மருத நாயகம் பாதி முடிச்சிரலாம். மக்கள் அவர்மேல வச்சிருக்க நம்பிக்கை அவ்வளவுதான். மத்தபடி மருத நாயகம் ஹாலிவுட் அளவுல தயாரிக்கவேண்டிய அவசியமே இல்ல நம்ம ஊர்ல ஹாலிவுட்ட விட அதிக அளவு காசு செலவு செய்யத் தயாரா இருக்காங்க. ஆனா நீங்க துப்பாக்கிய தூக்கி போட்டா அது எதிரிய சுட்டுட்டு திரும்ப உங்க கைக்கு வரணும்.
:)