Monday, June 18, 2007

அதிரும் தமிழ்மணம்

கடந்த 2 மாதமாக் தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் வியக்க வைக்குதுங்க. 40 பின்னூட்ட ஊயரெல்லையை உயர்த்தி 40+,அனைத்து பின்னூட்டங்களும் மற்றும் நட்சத்திரம்ன்னு டேப்(Tab) Browsing நுட்பத்தை கொண்டு வந்தாங்க. அதுதான் முதல், அப்புறம் சூடான இடுகைகளும், பரண் போன்ற நல்ல விஷயங்களும் கொண்டு வந்து இருக்காங்க. மறுமொழிதிரட்டியும் அருமை. ஆனால் அது எந்த அளவுக்கு பயன்படுதுன்னு தெரியலைங்க.


அதுவுமில்லாம இப்போ தமிழ்விழி-விழியத்திரட்டி என்னும் அடுத்த தலைமுறைக்கான நுட்பமான ஓடும் படங்களுக்கான திரட்டியும் கொண்டு வந்து இருக்காங்க. திரட்டி போட்டியும் பலமா இருக்குற இந்த காலத்துல இப்படி அசத்துறாங்களே. வாழ்த்துக்கள்! குழும பதிவுல சமீபமா பதிவு போட்டவங்க பேர் மட்டும் வந்துகிட்டு இருந்தது, அதுவும் இப்போ சரியாகிருச்சு. யாரோ பலமான ஒரு நுட்பர் பிஸ்து கிளப்புறாரு. அவருக்கு Hats Off!

அதேமாதிரி தமிழ்மணத்தின் வேகம் இப்போ ரொம்ப நல்லா இருக்கு. புது சர்வருல ஓட்டுறாங்களோ இல்லை அகலப்பாட்டை அதிகப்படுத்துனாங்களோ தெரியல. ஆனா வேகம்.
எனக்கும் சில விஷயங்களை தமிழ்மணத்துக்கு சொல்லனும் நினைக்கிறது உண்டு. அவை


1) Tab Browsing க்கு ஏத்தா மாதிரி வடிவமைத்தல். IE 7 மற்றும் இதர browerகளில் ஒரு Browser மட்டும் திறந்து மற்ற வலை தளங்களை இன்னொரு Browser திறக்காமையே பார்க்க முடியும். தமிழ்மணத்துல இருக்கிற ஒரு இடுகையை திறந்தால் இன்னொரு browser திறக்கும். படித்து விட்டு அந்த browserஐ மூடாமல் இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லையெனில் மறுபடியும் அதேகதைதான். இல்லையெனில் வலது பட்டனை தட்டி Open in New Tab தட்ட வேண்டி இருக்கிறது. Tab Browsing ல் பிரச்சினை தமிழ்மணத்தில் மட்டும் இல்லை தனியாக browser திறக்கும் அனைத்து தளங்களிலுமே இந்த பிரச்சினை இருக்குதுங்க.


2) 1024 x 768-Best with 1024 x 768 resolution அப்படின்னு முகப்புல போட்டு இருக்கிறது தெரிஞ்சே இந்தக் கேள்வி. இப்போ வர பொட்டி எல்லாம் குறைந்தபட்சம் 1280 x 800ல் தான் வருது.அதாவது 256 MB Display Memory. இந்த resolutionல் தமிழ்மணத்தை திறந்தால் பின்னூட்டப் பக்கம் சற்றே கலைஞ்ச மாதிரி இருக்குது.

3) குறிச்சொல் குறிப்பிட்டு இப்போ பதிவுகளை தெரிவிக்கிறது இல்லே, (நினைக்கிறேன்) அப்புறம் "அனைத்து குறிச்சொற்களும்..." அப்படின்னு ஒரு கட்டம் வருதே அது எப்படி? அதுல பதிவுகளும் வருதே. பதில் தெரியாமதாங்க கேட்கிறேன். வழி இருந்தா சொல்லுங்க, ப்ளீஸ்


இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களைத் தவிர தமிழ்மணம் எங்கள் மனசுகளை அதிர வைக்குதுங்கோவ்வ்.

8 comments:

 1. //1) Tab Browsing க்கு ஏத்தா மாதிரி வடிவமைத்தல். IE 7 மற்றும் இதர browserகளில் ஒரு Browser மட்டும் திறந்து மற்ற வலை தளங்களை இன்னொரு Browser திறக்காமையே பார்க்க முடியும். தமிழ்மணத்துல இருக்கிற ஒரு இடுகையை திறந்தால் இன்னொரு browser திறக்கும். படித்து விட்டு அந்த browserஐ மூடாமல் இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லையெனில் மறுபடியும் அதேகதைதான். இல்லையெனில் வலது பட்டனை தட்டி Open in New Tab தட்ட வேண்டி இருக்கிறது. Tab Browsing ல் பிரச்சினை தமிழ்மணத்தில் மட்டும் இல்லை தனியாக browser திறக்கும் அனைத்து தளங்களிலுமே இந்த பிரச்சினை இருக்குதுங்க.//

  இதை நீங்க உங்க கணினியில் setup செய்துக்க வேண்டியதுதான். Firefox பயனர்கள் இந்த உதவிப் பக்கத்தை பார்க்கவும். உங்களைப் போன்ற IE7 பயனர்களுக்கான உதவிக் குறிப்பை இங்கே காணலாம்.

  ReplyDelete
 2. Either you use tabs or you don't. If you are a tab user, you will naturally want all your new windows and pop-ups to open in tabs. Right? Here is how to fix this default behavior.
  I believe there are two type of browser users. Either you have multiple browser windows open at once... or you would rather have multiple browser tabs open at once. Previously only firefox had the tab option; now IE7 users have it as well.

  However, by default in IE7 tabs are enabled but a request for a new browser session opens a new window? Why?

  If you hit CTRL and a link, you should expect a new tab to open, not a new window.

  Here's how to have new windows and pop-ups to default to new tabs:  1. Open IE7
  2. Click Tools
  3. Click Internet Options
  4. Click Settings(Tabs)
  5. Select Always open pop-ups in new tab
  6. Click OK until you are back in your browser

  ReplyDelete
 3. தலைவா உங்களால் இந்த TAB பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்தது... நன்றிங்கோ..

  ReplyDelete
 4. Also clicking on middle (mouse wheel) button will open the URLs in a tab. I find it helpful.

  ReplyDelete
 5. For FireFox Users
  Open external links in new windows or the current tab
  The New pages should be opened in: setting in Tools > Options... > Tabs applies to links both from the current page and links triggered from other programs. If you want all links from other programs to be opened differently from links in the current page, you can use about:config to edit the preference browser.link.open_external. The values are:

  1
  Open links from other programs in the current tab
  2
  Open links from other programs in new windows
  3
  (Default) Open links from other programs in new tabs in an existing window

  Thanks Voice of Wings

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)