Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Wednesday, January 13, 2016

சல்லிக்கட்டு ஒரு சப்பைக்கட்டு

நாங்கள் க்ரிக்கெட், இறகுப் பந்து என்று விளையாடிக் கொண்டிருக்கையில் "விளையாட்டுன்னா அது  கபடி மாதிரி வீரமா இருக்கனும்டா, அதை விட்டுட்டு இது எல்லாம் விளையாட்டா?" என்று சொல்லுவான் என் நண்பன் செந்தில். இது கொங்கு வட்டாரம் என்பதால் கபடியே வீரமான விளையாட்டாக சொல்லிக்கொண்டான். இதே மதுரைப் பக்கமாக இருந்தால் சல்லிக்கட்டு என்று சொல்லியிருப்பானாக இருக்கும்.

சல்லிக்கட்டு, இன்று பலவாறான பரபரப்புகளை பரப்பிக்கொண்டிருக்கிறது இணையத்தில். இது தான் தமிழன் வீரமென்றும், பண்டைய தமிழர்களுக்கான விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. அப்படியா? முதல்வன் படத்தில் சம்பந்தமேயில்லாமல் "எங்க ஜாதி ஆளை அடிச்சி போயிருவானா?" என்று திடீரெனக் கூவும் போக்குவரத்து ஊழியர் மாதிரி , ஒரு சாதிக்காரர்கள் இது எங்கள் விளையாட்டு இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று போராட்டம் வேறு. அப்ப மத்த சாதிக்காரனுக்கு அது வீரமில்லையா? இதில் மாடுகளைக் காப்பாற்ற வழக்குகள் வேறு. அடப்பாவிகளா, மாட்டு மேல பரிதாபப் பட்டுதான் வேணாம்ங்கிறீங்களா? மனுசனுக்கு அடிபடுமே அதைப் பத்தி கவலைப் படலையா? மாடு முட்டி சாவறானே அவனுக்கு இழப்பீடு என்ன கிடைத்துவிடும்? எந்த காப்பீடு திட்டமாவது இதற்காக இருக்கா? இருக்காது. ஏனெனில் இதற்கெல்லாம் காப்பீடு கிடைக்காது. அடிபடுறானே, அவனை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்வீர்கள்? உங்க ஒரு நாள் கூத்துக்கு செத்துப்போறவனுக்கும், கால், கை போறவனுக்கும் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? மாட்டை கொடுமை படுத்துகிறார்கள் என்று போராடும் மக்களை விட்டுவிடுவோம். அவர்களுக்கு மாட்டுக்கறி விற்கும் கடைகளுக்கான முகவரி தெரியாமல் இருந்திருக்கும். வீரம் வீரம் அப்படின்னு சொல்லிட்டு செத்துப்போறவனுக்காக யார் போராடப்போறாங்க? விவேக் தெளிவாகவே ஒரு படத்தில் சல்லிக்கட்டை எதிர்த்து பேசியிருப்பார். மனுசன் தெரிஞ்சு தான் போராடுறான், அப்ப என்ன வேண்டுமென்றாலும் ஆகட்டும் என்பது எல்லாம் முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.

வீரமென்றால் அடுத்த வருடம் காளைகளை விட்டுவிட்டு சிங்கம், புலி போன்ற விலங்குகளை வீரம் என்ற பெயரில் அடக்கிக்கொள்ளுங்கள்.  மதுரை வட்டாரங்களைத் தவிர்த்து வேறு எங்கும் நடைபெறாத இந்த விளையாட்டை தமிழர்களின் பண்பாடு என்று பொதுமைப் படுத்தாதீர்கள்.

Thursday, March 14, 2013

இணையவாதிகளுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?

"இணையவாதிகள் கொதிக்கிறாங்க, இவுங்க சமூகத்துல இருந்து தனியாத் தெரியறாங்க. சமூகத்துக்கும் இவுங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை
அப்படின்னு ஒரு நண்பர் சொன்னாரு. அதுக்காகத்தான் இந்தப் பதிவு.


தினமும் நமக்கு பேச, எதாச்சும் ஒன்னு புதுசு புதுசாக் கிடைக்கனும். அதாங்க, ஏதாவது ஒரு வீட்டுக்கு முன்னாடி, விசாலமான திண்ணையில் பெருசுங்க உக்காந்துகிட்டு, வெத்தலை இடிச்சிகிட்டே ஊர்க்கதை பேசுவாங்க இல்லை.. அட, அதுவுமில்லைன்னா, ஓசியிலோ இல்லை கடன் வெச்சோ டீ குடிச்சாலும், ஒரு பத்தி விடாம பத்திரிக்கையைப் படிச்சிட்டு வம்பளப்பாங்களே டீக்கடை பெஞ்ச், இப்படி இருக்கிற இன்னொரு இடம்தாங்க இந்த இணையத்துல இருக்கிற சமூக வலைதளங்கள். சினிமா விமர்சனமோ, கவர்ச்சி நடிகைகளின் கல்யாணமோ, ஈழப்பிரச்சினையோ, ஏதாச்சும் ஒன்னைப் பேசிக்கிட்டே இருப்பாங்க. தினமும் எதாவது ஒன்னு சூடாகிடும். மாணவர்கள் பிரச்சினையைப்பத்தி ரத்தம் கொதிக்கிற மாதிரி பேசிட்டே இருப்பாங்க. பாலாவோட பரதேசி டீசர் வந்தவுடனே, அதை மறந்துட்டு பாலாவை திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் புதுசா வந்த போப் பத்தி, இப்படி தடம் மாறிட்டே இருக்கு இணையவாதிகளின் பேச்சு.


" Loneseoவின் Rhinocerros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகத்துக்கு வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் முக்கியமான ஒரு விசயத்தை பேசிக்கொண்டிருக்கும்போது, முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும் திடும் என்று புழுதியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் incongruity யும் அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா, ஆப்ரிக்க வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கிவிடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்!"

மேலே இருக்கிறதைச் சொன்னது, கணையாழியின் கடைசிப் பக்கங்கள்ல - ஆகஸ்ட் -1973ல் சாட்சாத்  வாத்தியார் சுஜாதா சொன்னதேதான். அப்ப இருந்த நிலைமைக்கு அவர் சொன்னது, திண்ணைப்பேச்சாளர்களுக்கோ, டீக்கடை பெஞ்ச் தேய்ச்சவங்களுக்கோ. ஆனா இன்னிக்கு அதே இணையவாதிகளுக்கும் பொருந்துது. இதுல இருந்து என்ன தோணுது... இருங்க இருங்க இன்னொன்னையும் சொல்லிடறேன்.

எஸ்.வி. சேகர் ஒரு நாடத்துல சொல்லியிருப்பாரு, "பரபரப்பான செய்தின்னா, முதல் ரெண்டு நாள் முதல் பக்கத்துலையும், அப்புறம் ரெண்டு நாளைக்கு 2ம் 3ம் மூன்றாம் பக்கத்துலயும், ஒரு வாரங்கழிச்சுப் பார்த்தா கடைசிப்பக்கத்துலேயும், அடுத்த வாரம் அந்தச் செய்தியே இல்லாமையும் போயிடும்"னு நாளிதழ்களை பத்தி கிண்டலாச் சொல்லியிருப்பாரு.


தையேத்தான் இணையவாதிகளும் செய்யறோம். இதுல ஒரு வித்தியாசமும், இல்லை. அதனால Moral of the Story is நாம மாறவே இல்லை. பேசுறதுக்கான இடம்தான் மாறியிருக்கோ ஒழிய, முறை மாறவேயில்லை.

Thanks: Img From Dinamalar- Tea Kadai Bench

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)