நாங்கள் க்ரிக்கெட், இறகுப் பந்து என்று விளையாடிக் கொண்டிருக்கையில் "விளையாட்டுன்னா அது கபடி மாதிரி வீரமா இருக்கனும்டா, அதை விட்டுட்டு இது எல்லாம் விளையாட்டா?" என்று சொல்லுவான் என் நண்பன் செந்தில். இது கொங்கு வட்டாரம் என்பதால் கபடியே வீரமான விளையாட்டாக சொல்லிக்கொண்டான். இதே மதுரைப் பக்கமாக இருந்தால் சல்லிக்கட்டு என்று சொல்லியிருப்பானாக இருக்கும்.
சல்லிக்கட்டு, இன்று பலவாறான பரபரப்புகளை பரப்பிக்கொண்டிருக்கிறது இணையத்தில். இது தான் தமிழன் வீரமென்றும், பண்டைய தமிழர்களுக்கான விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. அப்படியா? முதல்வன் படத்தில் சம்பந்தமேயில்லாமல் "எங்க ஜாதி ஆளை அடிச்சி போயிருவானா?" என்று திடீரெனக் கூவும் போக்குவரத்து ஊழியர் மாதிரி , ஒரு சாதிக்காரர்கள் இது எங்கள் விளையாட்டு இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று போராட்டம் வேறு. அப்ப மத்த சாதிக்காரனுக்கு அது வீரமில்லையா? இதில் மாடுகளைக் காப்பாற்ற வழக்குகள் வேறு. அடப்பாவிகளா, மாட்டு மேல பரிதாபப் பட்டுதான் வேணாம்ங்கிறீங்களா? மனுசனுக்கு அடிபடுமே அதைப் பத்தி கவலைப் படலையா? மாடு முட்டி சாவறானே அவனுக்கு இழப்பீடு என்ன கிடைத்துவிடும்? எந்த காப்பீடு திட்டமாவது இதற்காக இருக்கா? இருக்காது. ஏனெனில் இதற்கெல்லாம் காப்பீடு கிடைக்காது. அடிபடுறானே, அவனை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்வீர்கள்? உங்க ஒரு நாள் கூத்துக்கு செத்துப்போறவனுக்கும், கால், கை போறவனுக்கும் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? மாட்டை கொடுமை படுத்துகிறார்கள் என்று போராடும் மக்களை விட்டுவிடுவோம். அவர்களுக்கு மாட்டுக்கறி விற்கும் கடைகளுக்கான முகவரி தெரியாமல் இருந்திருக்கும். வீரம் வீரம் அப்படின்னு சொல்லிட்டு செத்துப்போறவனுக்காக யார் போராடப்போறாங்க? விவேக் தெளிவாகவே ஒரு படத்தில் சல்லிக்கட்டை எதிர்த்து பேசியிருப்பார். மனுசன் தெரிஞ்சு தான் போராடுறான், அப்ப என்ன வேண்டுமென்றாலும் ஆகட்டும் என்பது எல்லாம் முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.
வீரமென்றால் அடுத்த வருடம் காளைகளை விட்டுவிட்டு சிங்கம், புலி போன்ற விலங்குகளை வீரம் என்ற பெயரில் அடக்கிக்கொள்ளுங்கள். மதுரை வட்டாரங்களைத் தவிர்த்து வேறு எங்கும் நடைபெறாத இந்த விளையாட்டை தமிழர்களின் பண்பாடு என்று பொதுமைப் படுத்தாதீர்கள்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ஜல்லிக்கட்டை பற்றிய மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து உள்ளீர்கள்! நன்றி!
ReplyDeletehttp://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post.html
ReplyDeletejayakumar