Monday, November 29, 2010

தமிழ் கலாச்சாரம்னா? Living Together

என்னதான் கமல் சகலாவல்லவன்னாலும், பொது மேடைன்னு வந்துட்டா தன்னோட கருத்தைச் சொல்றதுல குழப்பம் வந்துரும், இல்லே நமக்கு புரிஞ்சிதா இல்லையான்னு நமக்கும் குழப்பம் வந்திரும். ரஜினி அரசியலுக்கு வர்றா மாதிரி பேசுறதும் அதே கணக்குத்தான். ஆனா கமல் பேசுறதுல ஒரு உள்ளார்த்தம் தெளிவா இருக்கும். அது இலக்கியவாதிங்களுக்கு மட்டும் டக்குனு புரிஞ்சிரும். இருங்க, எதை பேச வந்துட்டு எதைப் பேசிட்டு இருக்கேன் பாருங்க. ஆங், அதாவது தமிழ்கலாச்சாரம், சேர்ந்து வாழ்றது.. அதைப் பத்தி கமல் பேசுறது இல்லை, ஆனா நீங்க புரிஞ்சிக்குங்க. ஏன்னா இன்னைக்கு Living togetherக்கு முன்னோடி அவர் தான்.
தமிழ் கலாச்சாரங்கிறது ரொம்ப முக்கியமான விசயம், ஏன்னா அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை மாறிகிட்டே வரும். அதை காப்பாத்துறது ரொம்ப முக்கியம். அம்பது வருசத்துக்கு முன்னாடி விதவை கல்யாணம் பண்ணிகிட்டா குத்தம், அதே நூறு வருசத்துக்கு முன்னாடின்னா கொன்னுருவோம். அதான்
கலாச்சாரம்.

Monday, November 22, 2010

வரம் தருவாளா வரலட்சுமி

இது ஒரு பெண் கடவுள்கிட்ட பாடுற தோத்திற பாடல்..
ஓ..நீங்க பக்திமானா?
ஆ...அதெல்லாம் இல்லீங்க, நான் புத்திமானாங்கிறங்கிறதே கேள்விகுறியா இருக்கு..
கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போல கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக்கழிவுகள் கழுவும் வேளையில் கூட நின்றவன் உதவிட வேண்டும்
சமையலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திட திண் தோள் வேண்டும்
மோதி கோபம் தீற்க வசதியாய், பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்குப்பின்னால் துடிக்கும் இதயமும் அது ரத்தம் பாய்ச்சி நெகழ்த்திய சிந்தையும்
மூளை மடிப்புகள் அதிகமுள்ள மேதாவிலாச மண்டையும் வேண்டும்
வங்கியில் இருப்பு, வீட்டில் கருப்பென வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும் நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில் பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்
இப்படி கணவன் வரவேண்டும் என நான் ஒன்பது நாட்கள் நோன்பிமிருந்தேன் வரந்தருவாள் என் வரலட்சுமியன் கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன்...

தேடி எங்க போனா அந்தப் பொண்ணு?
பீச்சுக்குத்தான்

பொடி நடைபோட்டே இடை மெலியவனென கடற்கரைதோறும் காலையும் மாலயுமென
காலையும் மாலையும் தொந்திகணபதிகள் தெரிவது கண்டேன்
முற்றும் துறந்த மங்கையரோடு அம்மண துறவிகள் கூடிடக் கண்டேன்
மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட அக்காள் இல்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டுமென்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்பார்த்தேன்
வர வர புருச லட்சணம் உள்ளவர் திருமணச் சந்தையில் மிகமிகக் குறைவு
வரந்தரக் கேட்ட லட்சுமி உனக்கு, வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன், ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடந்தது உண்டோ?
இதுவும் ஒதுவும் அதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்கும் உண்டோ?
உனக்கேனும் அது அமையப் பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன் ஸ்ரீவரலடசுமி நமோஸ்துதே!!!

Friday, November 19, 2010

கிழிந்தது இந்தியாவின் முகத்திரை

இந்த இணையப்பக்கத்திலிருக்கும் ஒலிகளைக் கேட்டு முடிக்க சில மணிநேரங்கள் ஆகலாம், ஆனால் இதுதான் , இவர்கள்தான் நம்மால் ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்பட்டிருப்பவர்கள். Corporateகளின் வசம் அரசியல் மாறிவருவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.

கீழ்காணும் தொடுப்புகளில் லஞ்சம், அரசவைக்கு திமுக ஆடிய ஆட்டம், மாறனின் double game, கனிமொழி மீது ராசாவிற்.. தமிழில் கொச்சையாக வருகிறது அதனால ஆங்கிலத்திலேயே இருக்கட்டும்..Rasa had crush on Kanimozhi, அழகிரியின் செல்வாக்கு.. இன்னும் இன்னும்


The Raja-Radia Tapes

The Kanimozhi-Radia Tapes

The Vir Sanghvi- Niira Radia Tapes

Personal - vote for this post

The Ratan Tata, Barkha Dutt & Other Tapes

இது விகடனில் வந்தது

இவை அனைத்தையும் சத்தமில்லாமல் மறைமுகமாக காங்கிரஸ் கட்சிதான் செய்து முடித்திருக்கிறது என்றும் விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக் கட்டும் என்று உத்தரவிட்டது பிரதமர்தான். இதைத் தொடர்ந்து வருமான வரித் துறையும் மத்திய அமலாக்கப் பிரிவும் தன்னுடைய விசாரணையைத் தொடங்கின. ராசாவின் நிழல் மனிதர்களை இந்த மூன்று அமைப்புகளும் கண்காணித்தன. காங்கிரஸ் நினைத்திருந்தால்... இதை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.

அடுத்ததாக டெல்லி மீடியாக்கள் இந்த விஷயத்தை எடுத்தன. அவர்கள் எதுவும் அரசல் புரசலாக இல்லாமல் பல்வேறு ஆவணங்கள், தஸ்தாவேஜுகளை மீடியாக்களில் வெளியிட்டன. இந்த ஆவணங்கள் மத்திய அரசாங்கத்தின் வசம் மட்டுமே இருக்கக் கூடிய மிக மிக முக்கியமான ஆவணங்கள். அதைப் பத்திரிகைகளுக்கு சப்ளை செய்வதிலும் காங்கிரஸ் பிரமுகர்களின் கை இருக்கிறது.

மேலும் டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு பொதுநல அமைப்புகள் சென்றன. அவர்களுக்கு இந்த ஆவணங்களைக் கொண்டு போய் வலியக் கொடுத்ததிலும் இவர்களது கை உள்ளது.

மூன்றாவதாக எதிர்க்கட்சிகள் ராசாவுக்கு எதிரான கோபத்தைக் கிளப்பியது. இதில் முக்கியமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அவர்கள் அமைச்சர்களின் கடிதங்களை வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பினார்கள்! நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் ஆவணங்கள் சரளமாக அவர்களது கையில் புழங்கியது. இவை அனைத்துமே மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிலர் மூலமாகத்தான் தரப்பட்டது. எனவே, ராசாவை வீழ்த்த அனைத்து அஸ்திரங்களும் காங்கிரஸ் கொட்டடியில் தயாரானவைதான்!'' என்று சொல்லி மிரள வைக்கிறார்கள்.


பிற்சேர்க்கை:

இதை ரெண்டு விதமா பார்க்கவேண்டிய விசயத்தை எப்படி அரசியலாக்குறாங்க பாருங்க. பதவி பேரம் எப்பவுமே நடக்கிறதுதான். ஏன் நம்ம ஐயா பேசாத பேரமா? லஞ்சம் வேற பேரம் வேற. பேரம் சாதாரணமா நடக்கிறதுதான். என்ன பொதுவுல வெச்சிதனால கேவலமா இருக்கு. நல்லா கோர்த்துவிட்டிருக்காங்க. அதாங்க சூட்சுமமே. இன்னொன்னு லஞ்சம், அது தப்பு. சட்டம்தன் கடமையச் செய்யட்டும். செஞ்சா என்ன தண்டனை.
http://www.outlookindia.com/article.aspx?268078 . ஆனா நீரா ராடியாவுக்கு என்ன தண்டனை கிடைக்கும்னு நினைக்கிறீங்க? ஒன்னுமே இல்லே. ஏன்னா lobbiest வேலையே இது. ஏன் லாரி தரகு அலுவலகம், கல்யாணத் தரகர்னு இல்லையா அதுமாதிரிதான் இதுவும். Power brokerage, not a big deal. So Niira Radia is safe. ஏன்னா அதுதான் அவுங்க வேலையே. அதுக்குத்தானே குடுத்தாங்க ‘துட்டு’. எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? எயதவேனே காங்கிரஸ்தானே. அதுவுமில்லாம பேரத்துக்கு எல்லாம் தண்டனை சட்டத்துல இல்லவே இல்லை. லஞ்சம் குடுத்தவன் மாட்டலாம், வாங்கினவன் மாட்டலாம். தரகர்களுக்கு தண்டனை காங்கிரஸ் ஆட்சியில கிடைக்காது, ஏன்னா குட்ரோச்சி இல்லே?

என்னுடைய பார்வையில் இதெல்லாம் பேரத்திற்காக நடந்த பேரங்கள். இவர்கள் எல்லாம் படுத்திய பாட்டை சரியான நேரத்தில் போட்டு வாங்கியிருக்கிறது காங்கிரஸ். இதுவே திமுக மீது காங்கிரஸ்க்கு இருக்கும் வெறுப்பை காட்டுகிறது. ஆனால் இதையே வேற விதமாகவும் யோசிக்கலாம். உண்மையாவே இந்தக் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் உண்மையாக நடக்க வேண்டி நேர்மையாக நடந்திருக்கலாம். ஆனால் ஒன்று, காங்கிரஸை கண்டிப்பாக பாராட்டவே வேண்டும். எவ்வளவோ பிரச்சினை வருமென்று தெரிந்தே இதைச் செய்திருக்கிறார்கள்/அனுமதித்திருக்கிறார்கள். இந்த நேர்மை மற்ற ஆட்சிகளிலும் தொடரவேண்டும். குறிப்பாக தமிழகத்தில். நம்ம ஆட்சி எப்படி, ஆட்சிய புடிச்சவுடனே எதிர்கட்சி தலைவரை ‘தூக்கு’வாங்க. நல்லா கவனிங்க, மேல இருக்கிற இணைப்புல எல்லாம் பதவி பேரங்கள்தான். ஸ்பெக்ட்ரமோ, லஞ்சமே இல்லை. கீழே ஒரு தொடுப்பு குடுத்திருக்கேன் பாருங்க. அதுல கொஞ்சமா இருக்கும், ஆனா நேரடியா எதுவுமே இல்லே.

அதேமாதிரி, இந்த பேரங்கள் எல்லாம் Corp மாதிரி நடத்திருப்பது அருமை. பலநாடுகள் இதை ஏற்கனவே செய்திருச்சுருக்காங்களே. இந்தளவுல பார்த்தா ராகுலின் முனைப்பு நிறையவே தெரியுது. நல்லா கவனிச்சீங்க, இத்தனை மணிநேர தொலைபேசி உரையாடல்ல சோனியா, ராகுலின் பெயர்கள் வருவது என்னமோ 5க்குள் தான் இருக்கும். இதுலயே தெரியலீங்க எப்படி வேலை செஞ்சிருக்காங்கன்னு.

இந்த இணைப்புல இருக்குற அலைபேசி உரையாடல்கள் முன்னது போல அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது, ஆனா லஞ்சம், Corp அநியாயங்கள் இதுலதான் இருக்கு. http://www.outlookindia.com/article.aspx?268069. அனில் அம்பானிக்கு 75ஆயிரம் கோடி கடன் இருக்காம், ராடியா சொல்றாங்க, திங்கட்கிழமை பங்குச் சந்தை பாருங்க, பாதாளத்துல நிக்கலாம்.

ஏற்கனவே தமிழ்காரன்னா வடக்கத்திக்காரனுக்குத் தொக்கு, இப்ப இதுவேறையா சொல்லவே வேணாம். 40 சீட்டை குடுத்ததுக்கு காங்கிரஸ்காரன் வெச்சான்ல ஆப்பை. சோனியா எப்பவுமே பொறுமையா பார்த்துதான் அடிக்கிறாங்க, அதாவது சாணக்கியத்தனமா. ஈழத்துலயும் அதுதான் ஆச்சு. ஆனா கலைஞருக்கே ஆப்பு வெச்சாங்க பாருங்க, அதுதான் அட்டகாசம்.

தயாநிதிமாறன் விளையாண்ட விளையாட்டப் பார்த்து அண்ணனும் தம்பியும் சேர்ந்திக்குவாங்க. மாறம் பாடு திட்டாட்டம்தான். அதுவுமில்லாம மாறனை மத்தியில யாருமே விரும்பலை. ஏன்னு தெரியல. சும்மா பதவிக்காக 600 கோடி ரூபாயை தயாளு அம்மாகிட்ட குடுக்கிறார்னா எவ்வளவுய்யா சம்பாரிப்பீங்க?

அப்புறம் லஞ்சம் லஞ்சம்னு சொல்றோமே, அது என்ன 1.75 லட்சம் கோடியா? இல்லவே இல்லை. நீங்க ஒரு கார் வாங்குறீங்க, அதுக்கு விலை ரூ10, அடுத்த வருசம் அதை ரூ10க்கே விக்கிறீங்க. இதைத்தான் ராசா பண்ணினாரு. ஆனா நீங்க வித்த வருசத்துல அந்த காரோட விலை ரூ20. அதாவது வித்தியாசம் ரூ10. அந்த ரூ10 தான் இந்த 1.75 லட்சம் கோடி. அதை ரூ10க்கே விக்க மாறின காசுதான் லஞ்சம்னு சொல்றோம். அதுவுமில்லாம சொல்லாம கொள்ளாம ஏலத்தையும் மூடியிருக்காங்க. இதெல்லாம்தான் சிக்கலே. புரிஞ்சுதுங்களா? 1.75 லட்சம் கோடி அரசுக்கு ஆன நஷ்டம்.

Media எல்லாம் இதைப் பத்தி பேசவே மாட்டாங்க. அப்படி ஒரு டீலிங் அது. அதனால நாம இங்கே கூவிக்குவோம். அப்ப இனி.....நமக்கு 500 ரூபாய் பத்தாது ஆளுக்கு 1 லட்சம்னு கேட்டு வாங்கனும், அதுதான் ஜனநாயகம்.

Wednesday, November 17, 2010

WinNTம் எமகண்டமும்

இப்ப பாருங்க, யாருமே வேலை நடக்கிற இடத்துல நடக்குற சம்பவங்களை பதிவா எழுதறது இல்லே(இப்படி சொல்றதுக்காகவேதான் இந்தப் பதிவு ஹிஹி), சினிமா எப்படி எடுத்தாங்கன்னு சொன்னா தீவாளி அன்னிக்கு பட்டாசு கூட வெடிக்காம பார்குறோம், நான் இப்படி துணி தெச்சேன், நான் இப்படி வண்டி ஓட்டுனேன், இப்படி code எழுதினேன்னு சொன்னா கேட்போம்? அது ஒரு செமை மொக்கையா இருக்கும்ல. ஏன் அப்படி?

அப்புறம், இந்தப் பதிவு தொழில்நுட்பம் சார்ந்தது, server, shutdown, restart, patch, legacy application அப்படின்னு என்னான்னு தெரிஞ்சா மட்டும் படிங்க, இல்லாட்டி சோத்தங்கை பக்கம் மேல் மூலையில் X இருக்கும் பாருங்க, அதை அழுத்திட்டு வேற வேலை பாருங்க.

போன மாசம் ஒரு வெள்ளைக்கார பிக்காலி பம்பிகிட்டே வந்து “நீ Windows NTல வேலை செஞ்சிருக்கேன்னு சொன்னியே? அதெல்லாம் ஞாபகம் இருக்கா?
எனக்கு சுத்தமா மறந்து போயிருச்சு, நம்ம டீம்லயும் யாரும் சரியா ஞாபகம் இல்லேங்கிறாங்க. நீதான் மறக்காம இருக்க சுக்கு காபி எல்லாம் குடிக்கிறியே, ஒரு சர்வர் இருக்கு வந்து பார்க்கிறியா”னு கேட்டான். அடப்பாவி, சுக்கு காபிக்கும் ஞாபகத்துக்கும் எப்படி முடிச்சு போடுதுபாரு இந்த பாடு. இந்தமாதிரி கேள்வி கேட்டே இவுனுங்க பொழப்ப ஓட்டுறானுங்க. முடியாதுன்னு சொன்னா கடேசில ஒரு நாள் ஆப்பு வெப்பாங்க, முடியும்னு சொன்னா ரெடிமேட் ஆப்பு. சரி, எவ்வளோ பார்த்துட்டோம், இதை பார்க்கமாட்டோமான்னு “சரி பீட்டரு, வந்து பார்க்கிறேன், விசயத்தை மெயில்ல போட்டு”ன்னேன்.

Toவுல ஒரு அம்பது பேரு இருப்பாங்க, CCல எங்கூரு மட்டுமில்லாம உலகத்துல இருக்கிற எல்லாம் மேனேஜருக்கும் சேர்த்து, கொட்டாம்பட்டி வார்டு மெம்பர் வரைக்கும் சேர்த்து ஒரு 500 பேருக்கும் மேலேயே இருக்கும், பாவி புள்ளை ஒரு மடல் போட்டான். அப்பவே சுதாரிச்சிருக்கோனும். நமக்குத்தான் வெவரம் பத்தைலேயே. விவரம் என்னான்னா Windows NT 4.0 Server ஒன்னு இருக்கு, அதுக்கு ஒட்டுப்போடனும்(Patching). எனக்கு சிரிப்பா வந்துச்சு, Microsoft, Windows NT க்கு Support நிறுத்தியே பல வருசம், ஆச்சு, அதுவுமில்லாம Windows NT எல்லாத்தையும் upgrade பண்ணி பல வருசம் இருக்கும். இனிமே என்ன patch இருக்கும்னு பார்த்தா நிறைய இருந்துச்சு, அதுவும் தானா பண்ணிக்காது, நாமாத்தான் ஒன்னொன்னையும் புடுங்கனும். மடலோ இப்படிக்கா அப்படிக்கான்னு பறக்குது, ஒருத்தன் வேணாங்கிறான், இன்னொருத்தன் வேணுங்கிறான், பாதிபேரு நடுநிலமை வகிக்கிறா மாதிரியும் ச்சும்மா பறக்குது.

அட, அப்படி என்ன அந்த வழங்கியில இருக்குன்னு கேட்டா, மாசத்துக்கு ஒரு தடவை ஓடுற application ஒன்னு இருக்கு. மாசக்கடைசியானா ஓடோடு ஓடுன்னு ஓடி ஒரு pdf தரும். எல்லாருக்கு அந்த pdfஐ தலை மடல் போடுவாரு. ஒருத்தனும் சீண்டாமாட்டான். நானெல்லாம அந்த மெயில் பார்த்தவுடனே DELETE பண்ணிருவேன். அந்தப் pdfக்கு ஒரு சர்வரு, அதுக்கு வேலை பார்க்கிறது ஆளு. தூ, இதெல்லாம் ஒரு பொழப்பான்னு தலைக்கிட்ட கேட்ட முடியுமா? சரின்னு ஒரு நல்ல ராகு காலத்துல மேனேஜரை டீ குடிக்கிற இடத்துல நிறுத்தி, ”ஆசானே இந்த சர்வரை தொடறதும் விஜய்கிட்ட மோதுறதும், கரண்டு கம்பிய கையால தொடர்ரதும் ஒன்னுத்தான்”னேன். அதுக்கு அவரு டீய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும் அப்படின்னு உறிஞ்சிகிட்டே, அதுக்குத்தான் நீ இருக்கியே அப்புறம் என்னன்னு போயிட்டாரு. ஏண்டா உலகத்துல நான் ஒருத்தான் கைப்புள்ளையா? நான் என்னடா உங்களுக்கு பாவம் பண்ணினேன்? இந்த சின்னப் புள்ளைய ஏண்டா இப்படி இம்சை பண்றீங்க.

ஒரு சுபயோக சுபதினம் குறிச்சாங்க, எதுக்கு? ஆப்பை எனக்குச் சொருகத்தான். இன்னிக்கு காலையில வேலைக்கு வந்தவுடனே தலை கூப்பிட்டு ”வாங்க எல்லாரும் கும்மியடிக்கலாம்”ன்னு கூட்டிட்டு போனாரு. ச்சும்மா ஒரு 45 நிமிசம், காலங்காத்தால தூங்க வெக்கிறது எப்படின்னு சொன்னாருன்னு நினைக்கிறேன்... இல்லாட்டா கைய மேல கீழ ஆட்டி வேற பேசினாரா, அநேகமா டீ எப்படி ஆத்துறதுன்னு சொல்லிக்காட்டுறாருன்னு நினைக்கிறேன். ஆனா அதுல ஒன்னு மட்டும் புரிஞ்சது,
அந்த அப்ளிக்கேசனை எழுதனுது ஒரு 3ர்ட் பார்ட்டி, அவன் இப்போ இல்லே, அதனால நம்மாள அத மாத்த வக்கில்லை, காசு செலவு பண்றதுக்கு வசதியில்லை. அதனால இந்த கருமாந்திரத்தையே கட்டிக்கிட்டு அழுவனும். ”

இதை 30 விநாடியில படிச்சிட்டீங்கதானே, இதைத் தான் அவரு 45 நிமிசம் ஆத்துனாரு. பாருங்க,.... சர்வர் upgrade நேரத்தை ஒரு எமகண்டத்துல 9லிருந்து 12 மணியிலையா வெக்கனும்? எமன் எப்படி வர்றான் பாருங்க. இதுல என்ன காமடின்னா இந்த சர்வரை 12 வருசமா யாரும் பேட்சும் பண்ணலை, restartம் பண்ணலை. Windows NT புதுசா வயசுக்கு வந்தப் பொண்ணு மாதிரி, தொட்டா கோச்சுக்கும் (bsod). முப்பாத்தம்மனையும், பாடிகாட் முனீஸ்வரைனையும் கும்பிட்டுகிட்டு வேலைய ஆரம்பிக்க போனா, பொது மாத்து போடுறா மாதிரியே என்ன சுத்தி ஒரு 15 பேரு கூடி வந்து நின்னுகிட்டாங்க. கண்டிப்பா ஏதாவது பிரச்சினைன்னா என்னால எழுதிருச்சி போவ முடியாது, ஏன் என்னோட இருக்கையில இருந்துகூட எழுதிருக்க முடியாது. அவ்ளோ நெருக்கம். இதுல டோக்கன் சிஸ்டத்துல என் கியூப்புக்கு வெளியே கூட்டம் வேற. ஸ்பெஷல் பஸ்ஸும், செருப்புக்கடையும் போடாதது ஒன்னுதான் பாக்கி. காலங்காத்தால 12b பேருந்து மாதிரி அடைச்சிகிட்டு நிக்கிறானுங்க. உச்சா வேற வர்றா மாதிரியே இருக்கு.

ஏற்கனவே கொஞ்சம் வீட்டு வேலையெல்லாம் செஞ்சு வெச்சிதனால ஒரு batch file தட்டினேன். குடுகுடுன்னு மானிட்டர்ல ஓடுது, இதை எதிர்பார்க்காத என் தலை, இன்னொரு தலைகிட்ட “பார்த்தியா, எப்படி வேலை செய்யறான் பாரு. என் அணியில எல்லாருமே இப்படித்தான் வேலைய சீக்கிறமா முடிக்கிறதுன்னு முன்னாடியே ப்ப்ப்ளான் பண்ணி பண்ணுவோம்” அப்படின்னு அலப்பறை வேற. எல்லாம் முடிஞ்சது, restart பண்ண வேண்டிய நேரம். வேர்த்து விறுவிறுக்க எல்லாரையும் திரும்பி பார்க்கிறேன், கையில அருவா வெச்சிகிட்டு நிக்கிற மாதிரி இருந்துச்சு. கண்ணமூடிகிட்டு RESTARTஐ தட்டினேன். BIOS வந்துச்சு, பூட்டப் மெனு வந்துச்சு, அப்புறம் Windows NT Screen வந்துச்சு, வந்துச்சு, அப்புறம் அதுலேயே நின்னுக்கிச்சு. பேருந்தா இருந்தா, எல்லாரும் தள்ளுங்கன்னு சொல்லலாம்.. இதுக்கு? அப்பத்தான் ஒரு முந்திரிகொட்டை, மறுபடியும் restart பண்ணலாம்னு சொல்ல, நான் வேணாம்னுட்டேன். சுத்தி இருந்தவனுங்க எல்லாம் தன்னோட அலைபேசியில் கூகிலடிச்சு இதைப் பண்ணலாம், அதைப்பண்ண்லாம், இருக்கிற எல்லா forumல இருக்கிறதை எல்லாம் படிக்கிறானுங்க. 20 நிமிசம் ஆச்சு. ஒருத்தன், சர்வர் ஊத்திகிச்சு. கிளம்புங்க காத்து வரட்டும்ங்கிறான்.

யக்கா இந்தக் கதையக் கேளேன், ராசாக்கா பொண்ணு ஓடிப் போயிருச்சாம்ல.”
ஆமாண்டி அப்பவே தெரியும், அவ அலுக்குனது என்னா.. குலுக்குனது என்னா

அப்படின்னு ஊருல எப்படி பொரணி பேசுவாங்களோ அது மாதிரியே பேசறானுங்க. பாதிப்பேரு கிளம்பிட்டாங்க, பாவம் அவுங்க மட்டும் எவ்ளோ நேரம் சும்மாவே நிப்பாங்க. நான் என் தலையப் பார்த்தேன், மொறச்சா மாதிரியே இருந்துச்சு “நான் என்னய்யா பண்ணுவேன்?” அவரோட கையைப் பார்த்தேன், பாசக்கயிறு சுருட்டி வெச்சா மாதிரியே இருந்துச்சு. தீடீர்னு ஒரே கைதட்டல், என்னடான்னு திரும்பி மானிட்டா பார்த்தா login screen வந்துருச்சு. எல்லாரும் எனக்கு கை குடுக்கிறாங்க, தலை தட்டிகுடுத்துட்டு போனாரு.


அடுத்த மாசமும் pdf மடலுக்கு வரும், அதுல அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கனும். உச்சா போவனும், வழிய விடுங்கப்பா.

Friday, November 5, 2010

வலிகளோடு தீபாவளி

அன்றுமட்டும் யாரும் எழுப்பாமல் எழுவான் தம்பி
”தலைக்கு எண்ணைய் தேய்ச்சி குளிடா”
அம்மாவின் கத்தல் தாளாமல்
ஒற்றை விரல் தொட்டு தலையில்
தேய்த்துக்கொண்டு குளியலறைக்கு ஓடுவான்
அப்பாவோ, சதசதவென எண்ணையிலேயே
துணிதுவைக்கும் கல்லின் மீது ஊறிக்கொண்டிருப்பார்


அம்மா எண்ணைய் பிசுக்கோடு
அன்றும் சமையலறையில பரபரப்பா இருப்பாள்
குளிப்பதென்னவோ மதியம் ஆகிவிடும்
எனக்கோ அலங்காரம் செய்து தோழிகளோட
கோவில் போய்வருவதே வேலை.
தாவணியின் சரசரப்போடு மிடுக்கோடு
நடந்து பழகும் நாள் அதுதானாயிருக்கும்,
போட்டிருக்கும் துணிகளைக் காட்டத்தான்
தோழிகளோட சேர்வதே அன்று.


புதுப்படம் பார்த்து துவைத்து கசங்கி
பசியோட வேகமாய் வருவான் தம்பி,
படம் பார்த்த கதை சொல்லி அடுத்தக் காட்சிக்கு
போக அப்பாவிடன் நைஸ் செய்வான்.
குளித்து புத்தாடை அணிந்து ஜம்மென்று
சாப்பிட உட்காருவார்கள் அப்பாவும் அம்மாவும்.
முறுக்கு, ஜிலேபி என்றும்
இட்லியும் கறிக்கொழம்பும் ஆவி பறக்கும்.

சாப்பிடும்போதே தொலைக்காட்சிக் நிகழ்ச்சிகளுக்கு
போர் ஒன்று மூளும், இறுதியில் வெல்வார் அப்பா,
யார் வீட்டுப் பட்டாசில் சத்தம் அதிகம் என்பதில் ஆரம்பித்து யார் வீட்டின் முன் அதிகம் குப்பையென காண்பதில்
முடியும் எங்களின் கெளரவம்.
அயல்நாட்டு வரனைக் கட்டிக்கொண்டதற்காக
தீபாவளி வராமலாப் போகும்?

இன்றும் தீபாவளியாம்...
நேற்று வைத்த சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு

வேகவேகமாய் அலுவலகம் செல்லும் வழியில்
அலைபேசியில் வாழ்த்துச் சொல்ல அழைத்தால்
வெடிச்சத்தம் இந்த ஊர் வரைக்கும் கேட்கிறது.
மனசு முழுசும் கொண்டாட்டத்துடன் அலுவலகம்
வந்தால் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும்
அவனவன் வேலையை வாங்குவதில் கெட்டி.

பகலில் பதிவு செய்த தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை இரவில் பார்த்தும்,
காப்பிசெய்த வாழ்த்துக்களை மின்னரட்டை,
முகநூல், நுண்ணிடுகை, தனி மடல், குழு மடல்
எல்லாவிடத்துலேயும் தூவி,
முகம் தெரியா மக்களுடன் கோவிலில் சாமி கும்பிடுகிறேன்.கொண்டாட்டமில்லாத இந்த ஊரில் அவன் விசேசம் எனக்கில்லை
என் விசேசம் அவனுக்கில்லை,
ஆக மொத்தத்தில்
மனசில் ஆரம்பித்து மனசில்லாமலே முடிகிறது
எங்களுக்கும் தீபாவளி!

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)