Monday, November 29, 2010

தமிழ் கலாச்சாரம்னா? Living Together

என்னதான் கமல் சகலாவல்லவன்னாலும், பொது மேடைன்னு வந்துட்டா தன்னோட கருத்தைச் சொல்றதுல குழப்பம் வந்துரும், இல்லே நமக்கு புரிஞ்சிதா இல்லையான்னு நமக்கும் குழப்பம் வந்திரும். ரஜினி அரசியலுக்கு வர்றா மாதிரி பேசுறதும் அதே கணக்குத்தான். ஆனா கமல் பேசுறதுல ஒரு உள்ளார்த்தம் தெளிவா இருக்கும். அது இலக்கியவாதிங்களுக்கு மட்டும் டக்குனு புரிஞ்சிரும். இருங்க, எதை பேச வந்துட்டு எதைப் பேசிட்டு இருக்கேன் பாருங்க. ஆங், அதாவது தமிழ்கலாச்சாரம், சேர்ந்து வாழ்றது.. அதைப் பத்தி கமல் பேசுறது இல்லை, ஆனா நீங்க புரிஞ்சிக்குங்க. ஏன்னா இன்னைக்கு Living togetherக்கு முன்னோடி அவர் தான்.
தமிழ் கலாச்சாரங்கிறது ரொம்ப முக்கியமான விசயம், ஏன்னா அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை மாறிகிட்டே வரும். அதை காப்பாத்துறது ரொம்ப முக்கியம். அம்பது வருசத்துக்கு முன்னாடி விதவை கல்யாணம் பண்ணிகிட்டா குத்தம், அதே நூறு வருசத்துக்கு முன்னாடின்னா கொன்னுருவோம். அதான்
கலாச்சாரம்.

33 comments:

 1. Super Video ILA... i saw this many times...

  Yes. you are correct about his stand...

  ReplyDelete
 2. அய்யய்யோ இன்னும் இந்த ரீல் முடியலையா? ரீல் அந்து போச்சு போதும் சாமிகளா..
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 3. ***தமிழ் கலாச்சாரங்கிறது ரொம்ப முக்கியமான விசயம், ஏன்னா அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை மாறிகிட்டே வரும். அதை காப்பாத்துறது ரொம்ப முக்கியம். அம்பது வருசத்துக்கு முன்னாடி விதவை கல்யாணம் பண்ணிகிட்டா குத்தம், அதே நூறு வருசத்துக்கு முன்னாடின்னா கொன்னுருவோம். அதான்
  கலாச்சாரம்.***

  நம்ம புரிஞ்சுக்க வேண்டியது என்னனா இப்போ 2010தான். எல்லாரும் உடம்பை மறைச்சுக்கிட்டுதான் போறாங்க, 2030ல அம்மனமாப் போனா தப்பு இல்லைனு ஆயிடும்னு இப்போவே அம்மனமாப் போகக்கூடாது! 2030 வரட்டும். இன்னைக்கு தேதிக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம். 50 வருடம் முன்னாலெ செய்ததை கேலிபண்ணுவதும், 20 வருடம் பின்னால் செய்ய வேண்டியதை இப்போவே முந்திரிக்கொட்டை மாதிரி செய்வதோ நடைமுறைக்கு ஆவாது!

  ReplyDelete
 4. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி யோகேஷ், ஸ்ரீராம்.
  //இப்போவே முந்திரிக்கொட்டை மாதிரி செய்வதோ நடைமுறைக்கு ஆவாது/
  எப்படிங்க 2029ல 2010ல இருக்கிற மாதிரி இருப்பாங்க, அப்புறம் 2030 ஜனவரி ஒன்னாம் தேதி அப்படியே மாறிடுவாங்களா? Only the present exception cases will be the future life, is n't it?

  ReplyDelete
 6. ***Only the present exception cases will be the future life, is n't it?**

  அப்படி இருக்கனும்னு ஒண்ணும் அவசியமில்லைங்க! ஒரு சில விசயம் மாறவே மாறாது.

  நம்ம எம் ஆர் ராதா ரத்தக்கண்ணீர்லயெ சொல்லி இருப்பார்.

  கல்யாணம் பண்ணித்தான் வாழ வேண்டும் என்பது சட்டம்! முட்டாள்த்தனமான சட்டம்! சேர்ந்து வழ்வது தப்பே இல்லைனு. He also lived with serveral women. But the WHOLE WORLD did not change in 40 years!!!

  ReplyDelete
 7. //But the WHOLE WORLD did not change in 40 years!!!//
  I beg a pardon and cant accept this, since people started living together and happily say that they are(my neighbours on 2004) in bangalore. so the change is started, but not aggressively. Which shows the change is on its way.. it may not be 100% in day-1. now people of 1% living together may be increase to 10% in 2020, which may be 50% in 2050, rest of the 50% will get marry. I am sure that it is not going to be 100% in india, as we know whatz happening in USA

  ReplyDelete
 8. ***ILA(@)இளா said...

  //But the WHOLE WORLD did not change in 40 years!!!//
  I beg a pardon and cant accept this, since people started living together and happily say that they are(my neighbours on 2004) in bangalore.***

  It may be happening in Bangalore and Goa and Bombay and Delhi long time ago too. Not just in 2004! I dont think the #s are going to increase as you project :)

  I am told MGR never officially married Janaki Ramachandran. Celebrities lived like that too. But that wont work easily for a "common man" :)

  **so the change is started, but not aggressively.
  Which shows the change is on its way.. it may not be 100% in day-1. now people of 1% living together may be increase to 10% in 2020, which may be 50% in 2050,***

  You are too optimistic! :)

  May be it will decline year by year because such life style did not work out for Indian settings. There is always two sides for a coin :)

  ReplyDelete
 9. விவாதம் ரொம்ப ஜூடா இருக்கு, நான் இப்போதைக்கு வேடிக்கை பாக்கறேன், நான் கருத்து சொல்லி அதுக்கு பதில் சொல்லி நான் அதுக்கு பதில் சொல்லி - வேணாம்னு பாக்கறேன்.

  //Only the present exception cases will be the future life, is n't it?//

  அப்படி இல்லை இளா..
  The present exceptions will become future way of life. won't they? அப்படின்னு அமையணும் வாக்கியம். Question Tag பத்தி ஒரு இடுகை எழுதியிருக்கிறேன் பாருங்க

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 10. கமல் சார் கிட்ட என்ன கேள்வி கேட்டாங்கனு இந்த விளக்கம்னு தெரியலியே?

  ReplyDelete
 11. //won't they? //
  கேள்விய மாத்திப்போட்டாலும் அதே மாதிரி அர்த்தம்தான், ஆனா ஸ்டராங்கா இருக்கு.

  ReplyDelete
 12. //கமல் சார் கிட்ட என்ன கேள்வி கேட்டாங்கனு இந்த விளக்கம்னு தெரியலியே?//
  என்ன கேட்டிருப்பாங்க? சண்டியர்னு தலைப்பு வெக்கவேணாங்கிறதுக்கு ஏன் கிருஷ்ணசாமி இவ்வளவு மெனக்கெடுறார்னு கேட்டிருப்பாங்க.

  ReplyDelete
 13. ////won't they? //
  கேள்விய மாத்திப்போட்டாலும் அதே மாதிரி அர்த்தம்தான், ஆனா ஸ்டராங்கா இருக்கு.//

  அடங்கொய்யால.. நான் கேள்வியை மாத்திப் போடல, சரியாப் போட்டேன்.
  அதை விட்டுபோட்டு ஸ்ட்ராங்கா இருக்கு வீக்கா இருக்குன்னு சொல்லிகிட்டு..

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 14. //But that wont work easily for a "common man" :)//
  அவுங்கள இவுங்க வெச்சிருந்தாங்க- ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி இதை கேள்விப் பட்டிருப்போமே. அக்னிநட்சத்திரம் படம் வந்து 20 வருசம் இருக்காது? அதுல விஜயகுமாருக்கு ரெண்டு தாரம். ரெண்டாந்தாரங்கிறதே “living together" மாதிரி வராதா?

  ReplyDelete
 15. ***ILA(@)இளா said...

  //But that wont work easily for a "common man" :)//
  அவுங்கள இவுங்க வெச்சிருந்தாங்க**

  I STRONGLY believe mistress and the girl friend in living together are different. OR NOT?

  Some living-together expert can clarify this! :)

  ReplyDelete
 16. //Some living-together expert can clarify this! :)//

  அப்போ நீங்க யாரும் இதுல Expert இல்லயா? இல்லாமத்தான் இவ்வளவு விவாதமா?? :)

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 17. சே என்ன ஒரு கேவலம், லிவிங் டுகெதரா இல்லாதவங்கதான் இதைப் பத்தி பேசிகிட்டு இருக்கோம். எங்காவது ஒருத்தர் ஒரே ஒருத்தர் நான் “லிவிங் டுகெதர்’னு சொல்லட்டும் பார்க்கலாம்.

  ReplyDelete
 18. +++sriram said...

  //Some living-together expert can clarify this! :)//

  அப்போ நீங்க யாரும் இதுல Expert இல்லயா? இல்லாமத்தான் இவ்வளவு விவாதமா?? :)***

  ஏங்க, எல்லாம் தெளிவாத் தெரிந்துவிட்டால் எதுக்கு விவாதம்?? விதாதிக்கிறதே உங்களை மாதிரி பெரியவா என்ன் சொல்றீங்க்னு கேட்டு தெரிஞ்சுகிடத்தான்.

  லிவிங் டுகெதெரில் வரும் பெண்ணை "வைப்பாட்டி"னு சொன்னா அது பெரிய தப்பு, அவமானம்! ஏன்னா இவள் புதுமைப்பெண்! அவள் ஒரு கலாச்சாரத்தால் சீரழிக்கப்பட்ட அபலைப்பெண்! :)

  ReplyDelete
 19. ஒரு சந்தேகம், நெசமாத்தாங்க. வைப்பாட்டிங்கிறது முதல் பொண்டாட்டி இருந்தாத்தானே? இல்லாட்டி அந்தப் பேர் வராதுதானே

  ReplyDelete
 20. //ஏங்க, எல்லாம் தெளிவாத் தெரிந்துவிட்டால் எதுக்கு விவாதம்?? விதாதிக்கிறதே உங்களை மாதிரி பெரியவா என்ன் சொல்றீங்க்னு கேட்டு தெரிஞ்சுகிடத்தான்.//

  வருண், My earlier comment was written in lighter vein. I just wanted to play the "Joker's" role in a serious discussion. It wasn't meant to offend anyone. I apologize if it carried any different tone.

  அப்புறம் நான் “பெரியவாவும்” இல்லை, “பெரியவனும்” இல்லை.
  நானெல்லாம் ரொம்ப சின்னப் பையன் வருண். இந்த மேட்டர்ல எனக்கு இருக்கும் ஒரே கருத்து:

  Anything that happens between two consenting adults is a matter of personal choice between them. No outsider has any right to comment on them. அம்புட்டுதேன்

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 21. ***ILA(@)இளா said...

  ஒரு சந்தேகம், நெசமாத்தாங்க. வைப்பாட்டிங்கிறது முதல் பொண்டாட்டி இருந்தாத்தானே? இல்லாட்டி அந்தப் பேர் வராதுதானே?"***

  உண்மைதான்.

  ஆனா நம்ம ஊர் சண்டியர்கள் கல்யாணத்துக்கு முன்னாலேயே ஒரு சிலரை வச்சிட்டு, பிறகு "கல்யாணம்" செய்வதும் உண்டுனு நெனைக்கிறேன்.

  அதை வேணா லிவிங் டுகெதெர்னு சொல்லலாம். ஆனால் இதில் அந்த பெண் "வலிமை இல்லாதவர்" ரா இருப்பார் :)

  ReplyDelete
 22. ***sriram said...

  //ஏங்க, எல்லாம் தெளிவாத் தெரிந்துவிட்டால் எதுக்கு விவாதம்?? விதாதிக்கிறதே உங்களை மாதிரி பெரியவா என்ன் சொல்றீங்க்னு கேட்டு தெரிஞ்சுகிடத்தான்.//

  வருண், My earlier comment was written in lighter vein. I just wanted to play the "Joker's" role in a serious discussion. It wasn't meant to offend anyone. I apologize if it carried any different tone.

  அப்புறம் நான் “பெரியவாவும்” இல்லை, “பெரியவனும்” இல்லை.
  நானெல்லாம் ரொம்ப சின்னப் பையன் வருண். இந்த மேட்டர்ல எனக்கு இருக்கும் ஒரே கருத்து:

  Anything that happens between two consenting adults is a matter of personal choice between them. No outsider has any right to comment on them. அம்புட்டுதேன்

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  Wednesday, December 1, 2010 3:09:00 PM EST***

  நானும் ஒண்ணும் சீரியஸா சொல்லலைங்க.

  நம்ம இப்போ "லிவிங் டுகெதெர்" பத்திதான் பெசுறோம். எந்த ரெண்டு இண்டிவிஜுவல் பத்தியும் பேசலை. லிவிங் டுகெதெர் பத்தி விவாதிக்கிறதுல (வயது வந்த ரெண்டுபேர் பிரச்சினையா இருந்தாலும்) தப்பு எஹ்டுவும் இல்லைனு எனக்கு தோனுது.

  ReplyDelete
 23. ஆமா, டூ பாய்ஸ் இல்லே டூ லேடீஸ் லிவிங் டுகெதர்ல வருமா? அது வேறையா. சே, ஐ அம் கெட்டிங் டூ மச் கொஸ்டின்ஸ். எகொஇச

  ReplyDelete
 24. //அப்புறம் நான் “பெரியவாவும்” இல்லை, “பெரியவனும்” இல்லை//
  பெருசுன்னா சுருக்கமா சொல்ல வேண்டியதுதானே வருண்.

  ReplyDelete
 25. ***ILA(@)இளா said...

  ஆமா, டூ பாய்ஸ் இல்லே டூ லேடீஸ் லிவிங் டுகெதர்ல வருமா? அது வேறையா. சே, ஐ அம் கெட்டிங் டூ மச் கொஸ்டின்ஸ். எகொஇச
  Wednesday, December 1, 2010 4:06:00 PM EST ***

  அவங்க ரெண்டு பேரும் அடல்ட்ஸ்னா ஆண்-பெண், பெண்-பெண், ஆண்-ஆண் எதுனாலும் தப்பில்லைங்க :)

  ReplyDelete
 26. //நானும் ஒண்ணும் சீரியஸா சொல்லலைங்க. // புரிதலுக்கு நன்றி.

  //நம்ம இப்போ "லிவிங் டுகெதெர்" பத்திதான் பெசுறோம். எந்த ரெண்டு இண்டிவிஜுவல் பத்தியும் பேசலை.//

  நானும் எந்த ரெண்டு Specific Individual பத்தி பேசலை. 18 வயதுக்கு மேல் ஆன ரெண்டு பேர் சேர்ந்து வாழ முடிவெடுத்தா அது தப்பா சரியான்னு சொல்ல அந்த இருவரைத் தவிர யாருக்குக்ம் உரிமையில்லை.
  அவங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து வாழ்தல் சரின்னு பட்டா அவங்க அப்படி இருப்பதற்கு முழு உரிமையும் இருக்கு / இருக்கணும்.
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 27. //பெருசுன்னா சுருக்கமா சொல்ல வேண்டியதுதானே வருண்.//

  சாயந்திரம் ஒரே அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில்தானே இருப்போம் அப்ப வச்சிக்கறேன் கச்சேரியை.

  குட்டி போட்டு அஞ்சு வருஷம் ஆன பெரிசு நீங்களா நானா?

  ReplyDelete
 28. ***நானும் எந்த ரெண்டு Specific Individual பத்தி பேசலை. 18 வயதுக்கு மேல் ஆன ரெண்டு பேர் சேர்ந்து வாழ முடிவெடுத்தா அது தப்பா சரியான்னு சொல்ல அந்த இருவரைத் தவிர யாருக்குக்ம் உரிமையில்லை.***

  சரி, தப்பு என்பதை ஒதுக்கி வைப்போம்.

  இப்போ அர்ரெஞிட் மேரேஜும் ரெண்டு அடல்ட்ஸ் செய்வதுதான்.

  அதில் உள்ள நன்மை தீமைகளை விவாதிப்பது தப்பா?

  என்னைக்கேட்டால் நிச்சயம் அதைப்பற்றியும் விவாதிக்கலாம்.


  ***அவங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து வாழ்தல் சரின்னு பட்டா அவங்க அப்படி இருப்பதற்கு முழு உரிமையும் இருக்கு / இருக்கணும்.
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்***

  யாருடைய உரிமையும் நம்ம தட்டிப் பறிக்கலைங்க. ஆனால் நமெக்கெல்லாம் "freedom of speech" and "freedom of expression" இருக்கு. எந்த ஒரு விசய்த்தையும் லிவிங் டுகெதெர், அரேஞிட் மேரேஜ் போன்றவற்றை நிச்சயம் நாம் அலசலாம், பேசலாம். அந்த உரிமை நமக்கு உண்டு. அதை லிவிங் டுகெதரில் வாழ்பவர்களோ அல்லது அரேஞிட் மேரேஜ் செய்த்வங்களோ தட்டிப்பறிக்க முடியாது.

  ReplyDelete
 29. இளாவும் வருணும் மாத்தி மாத்தி “யு” ட்ரேன் போட்டுகிட்டு இருக்கும்போது, பாஸ்ஸ்ரீ வது ரவுண்ட் அபௌட்டா மாத்திட்டாரு.
  ஆமாம் இந்த “சேர்ந்து வாழும்” பழக்கத்த எப்ப தமிழ்/இந்திய/உலக கலாச்சாரமாச்சு?

  ReplyDelete
 30. //பாஸ்ஸ்ரீ//
  அரசூரான், பட்டபேரு நல்லா இருக்குங்க, I really liked it ;)
  நன்றி

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)