Thursday, March 30, 2006

எங்கே இருக்கு?சேலம் எங்கே இருக்கு?
**அமேரிக்காவுல...

கேட் எங்கே இருக்கு?
**பம்பாயில...

பம்பாய் எங்கே இருக்கு?
**திருநெல்வேலியில.

இப்படி உண்மை மட்டுமே சொன்னா ஏன் உலகம் என்னை கைபுள்ளத்தனமா, .. சே சின்னபுள்ளத்தனமா பார்க்குது?

யுகாதி

ஜெமினி டிவி பார்க்கிறவங்களுக்கும், உதயா டிவி பார்க்கிறவங்களுக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள்

இப்படிக்கு
சன் டிவி பார்க்கிறவர்

Monday, March 27, 2006

பட்டியல்


திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிற நேரத்தில் இந்த பட்டியல்.
சந்திப்போர்: "புன்னகை பூ" கீதா(தயாரிப்பாளர்), விஷ்ணு வர்த்தன்(இயக்குனர்).

இடம்: பெரிய நட்சத்திர ஹோட்டல்

காரணம்: புதிய/அடுத்த படம் பற்றிய விவாதம்.

அறிமுகம்: "புன்னகை பூ" கீதா- ரேடியோ ஜாக்கி-மலேசியா. தயாரித்த படங்கள்-அறிந்தும் அறியாமலும்.
விஷ்ணு வர்த்தன் - இயக்குனர், குறும்பு, அறிந்தும் அறியாமலும்.
கீதா : விஷ்ணு, அறிந்தும் அறியாமலும் மாதிரியே அடுத்த படமும் ஹிட் குடுக்கணும் விஷ்ணு.
விஷ்ணு: குடுத்துரலாம் மேடம், இசைக்கு கலக்க யுவன் இருக்கார், கேமராக்கு நீரவ் இருக்கார் அப்புறம் என்ன வேணும் சொல்லுங்க?
கீதா : நீங்க கதாபாத்திரம் சொல்றதுல பெரிய ஆளு, ஆனாலும் கதை கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம்?
விஷ்ணு: அது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லைங்க. போன படத்துல யுவன் ஒரு மேஜிக் பண்ணி "தீ பிடிக்க தீ பிடிக்க" எப்படி ஹிட் குடுத்தாரோ அது மாதிரியே பின்னிரலாம்
கீதா: எப்படிங்க விஷ்ணு? அது என்ன மேஜிக்?
விஷ்ணு: பழைய பாட்ட ரீ-மிக்ஸ் பண்ணி தமிழ்நாட்டையே ஆட வெச்சாரில்லையா, அது மாத்ரி நாமும் ஒரு கதை ரீ-மிக்ஸ் பண்ண போறோம்.
கீதா: (மனசுக்குள்) ஐயோ, எடுத்த பணமும் எகிறுரும் போல இருக்கே
விஷ்ணு: இப்போ மார்கெட்டுல யாரு கிங்கா இருக்காங்க? ஆர்யாவும், பரத்தும். அவுங்களையே ஹீரோவா போட்டுறலாம்
கீதா: ரெண்டு பேருக்கும் நல்ல, சமமான ரோல் தரணுமே, பிதாமகன் மாதிரி.
விஷ்ணு: இப்போதான் என்ன மாதிரி திங்க் பண்ணிரீங்க கீதா, அதே கதையை எடுத்துக்குவோம், கிராமத்தை சிட்டியாக்கிருவோம், அப்புறம் தவமாய் தவமிருந்து பதமப்ரியாவை கவர்ச்சி காட்டி ஒரு ஆட்டம் போட சொல்லலாம்? ஒரே கில்மாவா இருக்கும் இல்லையா?
கீதா: தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப வெவரமா இருக்காங்க, விவசாயின்னு ப்லாக் எழுதுர ஒருத்தர் கொஞ்சம் ஜாஸ்த்தியாவே வெவரம், அதனால கொஞ்சமாவது மாத்தணும், விஷ்ணு.
விஷ்ணு: ஓ, அப்படியா, பழைய ஹிட் படம் ஒண்ணு சொல்லுங்க.
கீதா: சத்யா, சூப்பர் ஹிட், செமையா கலக்கியிருப்பார் கமல்.
விஷ்ணு: அப்படின்னா, இதையும் ஒரு ஆக் ஷன் படமா தந்துருவோம், அதுல ஜனகராஜ் ரோல எடுத்துக்குவோம், அப்படியே மிக்ஸில போட்டு ஒரு அடி அடிச்சு, ஆக் ஷன் படமாக்கிறலாம். என்ன சொல்றீங்க?
கீதா: அட நல்லா இருக்கே? அப்போ இதுலையும் ஒரு ரீ-மிக்ஸ் வெச்சுருவோம்.
---------------------------------------------------------------------------------

ஆனா ஒண்ணுங்க, பரத்தும், ஆர்யாவும் நடிப்புலையும், சண்டையிலையும் பின்னி பெடல் எடுத்துருக்காங்க. கதைய படிக்கணுமின்னா இங்கே சொடுக்குங்க.

Friday, March 24, 2006

கையால வித்தை

குரு சிஷ்யன் படத்த எல்லாருமே பார்த்து இருப்பீங்க. துக்ளக் நடத்துற சோ அங்கேயும் அரசியல் பேசுவார்(இல்லே செய்வார்). யோசனை பண்றா மாதிரி எல்லா கட்சி சின்னங்களையும் கைக்குள்ளயே அடக்கி ஐடியா ரெடி பண்ணுவாருங்க. தி.மு.க வுக்கு ஆதரவா இருந்த காலத்தில் எஸ்.எஸ்.சந்திரனும் கொஞ்சம் படங்களில் இந்த கை வித்தையை காட்டினாரு.

ரஜினி ஒரு விரல காட்டி நூறுன்னார், சிம்பு அவர பார்த்து வெரல வளைச்சு வளைச்சு என்னென்னமோ பண்ணினாரு, விவேக் அதை வெச்சே காமெடி பண்ணினாரு. எவ்ளோ இருக்குங்க இந்த விரலுல.

ஒரு கட்சி ஆரம்பிச்சா பேர், கொடி, சின்னம், அப்புறமா எல்லாம் ரெடி பண்ணனும்.கண்டிப்பா கையால கட்சிய சொல்ல இந்தியாவில முடியாது. அத்தன கட்சி வந்தாச்சுங்க, வேணும்ணா காலால காட்டிக்கலாம், அதை இன்னும் யாரும் பண்ணலைங்க(நல்ல ஐடியா இல்ல).


காங்கிரஸ் ஆரம்பிச்சப்ப கைய காட்டினாங்க....அந்த ஒரு கையவே வெச்சு விரல்களை விரிச்சி சூரியன் மாதிரியா காட்டினாங்க தி.மு.க....

எம்.ஜி.ஆர் உலக நாடுகள்ல வெற்றிக்கு சின்னமா காட்டுற ரெண்டு விரல காட்டி ஜெயிச்சார்....


ஆனா இன்னைக்கு ஒரு புதுசா தமிழ்நாட்டுல ஒரு ஸ்டைல் வந்து இருக்கு பாருங்க. அதுதான் இப்போ கலக்கிட்டு இருக்கு.
#
#
#
#
#
@
#
$
%
^
#
#


வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

ஓ..ஓ.ஓ

Thursday, March 23, 2006

தில்லு!

எதுக்குமே ஒரு தில்லு(தைரியம்) வேணுமுங்க. நம்ம கைப்புள்ள மாதிரி, முடியுமோ இல்லையோ, அடி பின்னாடி விழுமுன்னு தெரிஞ்சும் சவடால் விடற ஆளுங்க நெறய பேர் இருக்காங்க.

எங்காவது வண்டியில போயிட்டு இருப்போம், சைக்கிள்ல யாராவது குறுக்கால வந்தா ஒரு மொறப்பு, இல்லைன்னா ஒரு ஏச்சு. ஏன்னா சைக்கிள்ல நம்மல துரத்தி புடிக்க முடியாது பாருங்க. அது சவடால்.

ரொம்ப தடவ பஸ்ல பார்த்திருபோம், கண்டக்டர் கிட்ட சண்ட வந்துரும் அப்போ சொல்லுவாங்க "வெளியே வா வெச்சுகிறேன்" அப்ப்டின்னா சவடால். "இங்கயே வெச்சுக்கலாம் வா" அப்படின்னு அப்பவே நம்ம கண்டக்டர் வெப்பார் ஆப்பு.அதுதாங்க தில்லு.

சரி, எதுக்கு இதெல்லாம்னு நீங்க கத்துறது கேக்குது. ஏற்கனவே வேலை பென்ட கழட்டுது அதுல பதிவு வேறையான்னு மத்தவங்க கேக்க, அப்ப பதிவு போடறது தாங்க தில்லு. அப்படியே கீழ உள்ள படத்த பாருங்க, அப்புறம் தெரியும் தில்லுன்னா என்னான்னு

#
#
#
#

#
#
#

Wednesday, March 22, 2006

வண்டிமாடு எட்டு வெச்சு...


கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...
வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ..
எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வெச்ச பொன்னு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியகண்டு
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பல்லப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...


அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா
அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடம்தானே
தவலைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடம்தானே

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...

வண்டி மாட்டப்பத்தி எழுத ஆரம்பிச்சு இப்படி பாட்டுல முடிஞ்சு போச்சேன்னல்லாம் நான் கவலப்படல, நான் ஓட்டின வண்டிமாடும், நான் விழுப்புண் வாங்கின கதையும் அப்புறமா வரும், வரும், வரும், வரும், வரும்..

Friday, March 17, 2006

ஆட்டுகுட்டி முட்டையிட்டு.

அட, இது கவிச்சி மேட்டர்தாங்க, ஆனாலும் சைவ சாப்பிடறவங்களும் படிக்கலாம்.
மனுஷங்கள்ல கருப்பரினம், வெள்ளையரினம்ன்னு இருக்கிற மாதிரி ஆடுகள்லயும் இருக்குங்க. வெள்ளாடுன்னு பேர் வெச்சுகிட்ட கருப்பாடு, செம்மறி ஆடுன்னு இரண்டு வகை (ஆடா பேர் வெச்சுகிட்டதுனெல்லாம் கேட்கப்படாது).ஆடுக்கார அலமேலு படத்துல லவ் மேட்டருக்கு எவ்ளோ உதவி பண்ணுச்சு அந்த கொம்பு வெச்ச ஆடு? அது மட்டுமா இராமநாராயணன் படத்துல ஆடும்தானே ஒரு ஹீரோ. நம்ம தாணு கூட ஆட்ட பத்தி கொஞ்ச நாள் முன்னாடி ஆட்ட பத்தி சொல்லி இருந்தாங்க.

எனக்கு தெரிஞ்சு இங்கிலிஷ் பேசுற ஒரே விலங்கு ஆடு தாங்க, நம்ம கவுண்டர் கூட இத சொல்லி சம்பாரிப்பாரு. மே, மே .ன்னு கத்தறத்துனால ஆடு மே மாசத்துலையா பொறக்குது. ஆடு தாடி வெச்சதுனால பெரியார் ஆகிருமா? இப்பன்னு பார்த்து மறுபடியும் பறவைக்காய்ச்சல் அப்படிங்கிறாங்க, ஆட்டோட வெல கண்டிப்பா இன்னும் கொஞ்சம் நாளுல எகிரிருங்களா?

எப்படி இருந்தாலும் ஆடு கசாப்புக்குதானே போக போகுது அதுக்காக பிரியாணிக்கு வெட்ட போற ஆட்டுக்கு பிரியாணி ஆடுன்னும், கீமாக்குப் வெட்ட போற ஆட்டுக்கு கீமா ஆடுன்னா சொல்றோம்? இல்லையே. அது என்னங்க காசாப்பு கடைக்கு போற ஆட்டுக்கு ஒரு மரியாதையும், சாமிக்கு வெட்ட போற ஆட்டுக்கு ஒரு மரியாதையும் கொடுக்கிறது. எல்லாம் போக போற ஆடு தானே.

அம்மா கூட இதப்பத்தி ஒரு சட்டம் போட்டு....... வேணாம் இப்போ இதப்பத்தி பேசினால் அரசியல் ஆகிரும். சரி, என்ன விஷயம் அப்படின்னு நீங்க கேட்கறது புரியுது. வேற ஒன்னும் இல்லைங்க நேத்து சாயங்காலம் நானும் கூட்டாளியும் வண்டில வரும்போது ஒரு பெரிய ஆட்டு மந்த குறுக்கால வந்துருச்சு, ஒரு 3 நிமிசம் ஆச்சு எல்லாம் போக, அப்ப கூட்டாளி கேட்ட ஒரு கேள்வி தான் இத்தனை கேள்விக்கும் காரணம்.என்ன கேட்டுருபான்னு நெனைக்கிறீங்க?

Wednesday, March 15, 2006

மஞ்சள் நீராட்டு விழா


"மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு,
மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு.
எஞ்சோட்டு பொன்னுகளே
இள மாந்தர் கன்றுகளே
வாழ குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க"

மஞ்சள் நீராட்டு விழான்னு ஒண்ணு நம்ம ஊர்ல இருக்குதுங்க, எப்போ வரும் தெரியுங்களா? நம்ம ஊர்ல மாரியம்மன் திருவிழா அநேகமா மாசி மாசம் வரும். கம்பம் போட்ட 15வது நாள் திருவிழா வரும். மாரியம்மன் பொங்கலுக்கு கடை, தூரி எல்லாம் இன்னும் கூட உண்டு. பொங்கலுக்கு அப்புறமா சாயங்காலம் சாமிய பல்லக்குல வெச்சு ஒவ்வொரு வீட்டுக்கு எடுத்துட்டு போவோம். பெரும்பாலும் இளவட்டங்க தான் தூக்கிட்டு போவோம்(நாம இன்னும் இளவட்டம் தானுங்களே)

சாமிய பல்லக்குல வெச்ச உடனே ஊத்திருவாங்க மஞ்ச தண்ணிய, பூசாரி தாங்க. அப்புறமா ஒவ்வொரு வீட்டுக்கு போகும்போதும் எல்லா வீட்டுலையும் சாமிக்கு முன்னாடி வந்து தண்ணி கொண்டு வந்து ஊத்துவாங்க. அதுவும் நல்ல தண்ணியாத்தான் இருக்கும். சில குசும்பு புடிச்சவங்க மட்டும் மஞ்சல தண்ணியில கலந்து சாமிய தூக்கிட்டு வரவங்க மேல ஊத்துவாங்க. அதுவும் எண்ணைய் கலந்து ஊத்துவாங்க, மஞ்சல் கறையே போகாது, அதுவும் எண்ணை கலந்துட்டா சுத்தம், கழட்டி கடாசிர வேண்டியதுதான். சில பொண்ணுங்களும் ஊத்துவாங்க(அவங்க எல்லாம் வாயாடியாத்தான் இருப்பாங்க).

இருங்க, சாமி தூக்கரவங்க யாருன்னு சொல்லிடரேன். எல்லாம் ஊர்ல பெரிய தலைங்க பசங்களாதான் இருப்பாங்க. பின்னாடி ஒரு 20 பேராவது வருவாங்க. அவுங்க பண்ற அலும்புதான் ஜாஸ்த்தியா இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்குள்ளையும் பூந்து ஒரு ஆம்பிளபுள்ளை விட்டாம மஞ்ச தண்ணிய ஊத்திருவாங்க. பொண்ணுங்களுக்கெல்லாம் ஊத்துர அளவுக்கு இன்னும் எங்க ஊர் முன்னேறல. இதுக்கு பயந்துகிட்டே சில பேர் மோட்டார் ரூமுக்கெல்லாம் ஓடிருவாங்க, விட்டுருவாங்களா நம்ம பசங்க, தண்ணி ஊத்தாம அந்த இடத்த வீட்ட விட்டு நகர மாட்டோம். சினிமால காட்டுன மாதிரியெல்லாம் இருக்காது.

எதுக்கு இதெல்லாம் கேப்பீங்களே பின்னே காலையிலிருந்து NDTVla ஹோலி பத்தியே பேசறாங்க அதனால தான் நம்ம ஹோலி பத்தி சொன்னேன். ஹ்ம் கொடுத்து வெச்ச வடக்கத்திக்காரங்க.

Saturday, March 11, 2006

வாழ்க! வாழ்க!


இன்று(11-Mar-2006) மண விழா காணும் நாமக்கல் சிபி சீரும் சிறப்பும் பெற்று மன நிறைவோடு பல்லாண்டு வாழ
... வருத்தப் படாத வாலிபர் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்!
உங்கள் இருவருக்கும் எல்லா வளங்களையும் ஆண்டவன் அளிக்க பிராத்திக்கிறோம்

Thursday, March 9, 2006

தலை சாயும் அலைகள்சோகங்களிம் கண்ணீரும்
மகிழ்வின் ஆணவமும்

காதலியின் சிணுங்கல்களும்
காதலனின் ஆளுமையும்

தனிமையாய் தனிமையும்
கூட்டத்தின் ஆரவாரமும்

மணல் வீடுகளாய் கற்பனைகளும்
கற்பனைகளாய் மணல்வீடுகளும்

பேனாக்களின் கனவுகளும்
கனவுகளோடு காகித பட்ட படிப்புகளும்

அதி காலை ஆழ்தியானமும்
மாலையோர படகு மறைவிகளும்

இவை யெல்லாம் என்று ஓயும்
நானும் ஓய்ந்து தலை சாய!

Wednesday, March 8, 2006

பேர் வெச்சாச்சு

ஒரு சின்ன ஃபளாஷ் பேக் இத படிச்சுருங்க மொதல்ல. இப்போ வாங்க. பய பொறந்த அடுத்த நாள் எங்க அப்பாரு கைல ஜாதகத்தோடு வந்தாரு (அதான் மூலைக்கு மூல கம்யூட்டர்ல ஜாதகம் பாக்கற ஜோசியக்காரங்க இருக்காங்களே). மொதல்லாம் ஜாதகம்னா, நாலு மூலையில மஞ்ச தடவி, கட்டம் போட்டு மட்டும் கொடுத்துருவாங்க. ஆனா இப்போ அதுல ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா கடைசி பக்கம் நியூமராலஜிக்குன்னு ஒதுக்கி இப்படிதான் பேர் ஆரம்பிக்கணும், இவ்வளவு கூட்டு தொகை வரணும்னு ஒரு ராக்கெட் சயின்ஸ் அளவுக்கு போட்டு வெக்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஆச்சு, இப்போ நம்ம வேலை ஆரம்பிச்சது. என்ன பேர் வெக்கலாம்? அம்மணி முழுகாம இருக்கும் போதே ஆர்யா, அனில், ஹரி, ஸ்ருதி, அருண்(ணா),ராகா, பல்லவி அப்படின்னு நாம கணக்கு போட்டு டிவி யிலிருக்கிற சேனலுக்கு பேர் எல்லாம் வெச்சோம். என்ன அநியாயம் நாம வெச்ச பேர் ஒண்ணு கூட அந்த கடைசி பக்கத்துக்கு ஒத்து போகல. சரி, ஊரார் பிள்ளைக்கு எல்லாம் பேர் வெச்சு பேர் எடுத்த நாம; இதுக்கு எல்லாம் சலிச்சுக்கலாமா அப்படின்னு பேர் தேட ஆரம்பிச்சேன். அந்த ஜாதகத்து கடைசி பக்கம் ரொம்ப சுலபமாத்தான் எழுத்து குடுத்து இருந்தாங்க. க, கு, ச, ஞ இதவிட சுலபமா எழுத்து கெடைக்கவே கெடைக்காது. ஹி,ஹி அசால்ட்டுன்னு நெனச்சு ஒரு பத்து பேர் அப்படியே கொட்டிட்டு காலரை தூக்கிவிட்டேன். ஒரு கர்வமா பார்வை பார்த்தேன், நக்கலா அம்மணி சிரிச்சாங்க அதுல ஒரு பேர் கூட நியூமராலஜிக்கு ஒத்து வரலை.

அப்படி இப்படின்னு ஒரு மாசம் ஓடிப்போயிருச்சு.சச்சின்னு பேர் வெச்சேன், பழசுன்னுட்டாங்க. ஸ்வாகத்துன்னு வெச்சா ஹோட்டல் பேர்ன்னுட்டுங்க. ஷெர்வின்னு வெச்சு கூப்பிட ஆரம்பிக்க அது சர்நேம்- கடைசி பேருன்னு சொல்லிட்டாங்க. கடைசியா வலைப்பதிவிலும் போட்டுப் பார்த்தாச்சு. போன வாரத்து நட்சத்திரம் நிலா அம்சமா சில பேர் சொன்னாங்க. மார்ச் 12 க்குள்ள பேர் வெச்சாகனும்னு வீட்டுல கெடு வேற வெச்சுட்டாங்க. என்ன பண்ண?

"அபூர்வ ராகங்கள்" படத்துல நம்ம எம்.எஸ்.விசு அண்ணே கலக்கியிருப்பார். பாட்டெல்லாம் சூப்பர் ஹிட். சூப்பர் ஸ்டார் வேற அறிமுகமான படம். அதுல முதல் பாட்டு, முதல் வரியில என்னோட வாரிசு பேர் இருக்கிறதை அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன். நமக்கு கர்நாட இசை தெரியாது. நம்ம ஊர்ல இருக்கிறதுதானே தெரியும். மாரியம்மன் கோவில் ஆட்டம், கொட்டு, நாத்து நடற போது பாடுற பாட்டு, ஒப்பாரி, குளவ, ஏரிக்கரை பாட்டு, கூத்து பாட்டு அப்படின்னு ஆரம்பிச்சு எம்.எஸ், செளமியா அப்படின்னு கேட்டதனால இசையோட சம்பந்த படுத்தி பேர் வெக்கணும்னு ரொம்ப ஆசை. மொட்ட, ஜேசுதாஸ், பாலு இவுங்கெல்லாம்; எனக்கு இசை மேல ஒரு மதிப்பு வர வெச்சவங்க.

அது காலேஜ் முடிச்சுட்டு வெட்டியா ஊர் சுத்தின காலம். நம்ம கூட்டாளி ஒருத்தன் சாலி கிராமத்துல இருந்த ரெக்கார்டிங் தியேட்டர்ல ஒரு பெரிய செல்வாக்கோடு இருந்தான். குப்பை கூட்டுறதுல இருந்து, பூட்டு பூட்டுற வரைக்கும் அவந்தான் பொறுப்பு. அவனுக்கு குவாட்டர்ல்லாம் வாங்கி கொடுத்து ஒரு வாரமா மொக்க போட்டு அவுங்க முதலாளிக்கு தெரியாம ஒரு ஆல்பம் ரெக்கார்ட் பண்ணிணோம். 6 பேர் மட்டுமே வேளை செஞ்சு ஆண்கள் மட்டுமே பாடின ஆல்பம் அது.(எப்படி வியாபாரம் பண்றது தெரியாததால இன்னும் அது சும்மாவே இருக்கு). பொண்ணுங்க இல்லாத ஆல்பம் எப்படி வியாபாரம் ஆகும்னு யாருங்க அது முணு முணுக்கிறது. ஆல்பத்துக்கு பேர் என்னான்னு தெரியுங்களா? "வுடு ஜூட்".

சரி, நம்ம இசை ஆர்வத்த சொல்லியாச்சு, அதனால வாரிசுக்கு இசை சம்பந்தப்பட்ட பேர்தான்னு கடைசியா முடிவு பண்ணியாச்சு. அப்போ பேர் என்னவா இருக்கும்ன்னு யோசனை செஞ்சுகோங்க. க்ளூ எல்லாம் இந்த பதிவுலேயே இருக்கு.

Tuesday, March 7, 2006

வருத்தப் படாத வாலிபர் சங்கக் கூட்டம்

வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் மிகவும் முக்கியமான முதல் கூட்டம் இன்று முடிவடைந்தது. தேர்தல் கூட்டணிக்காக் எங்களுக்கு வரும் தொல்லைகளுக்கு முற்று புள்ளி வைக்க சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. வ. படாத. வா. சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கை விட கடமைப்பட்டு இருக்கின்றேன்.

1. எங்களது சங்கம் யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது. அதனால் யாரும் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
2. இந்தமுறை நாங்கள் தேர்தலில் போட்டியிட போவதில்லை. எங்களது செயல் அனைத்தும் 2011 வருடத்து தேர்தலை குறிவைத்தே இருக்கும்.
3. பார்த்திபன், கட்டதுரை என்ற பெயர் உள்ளவர்களை வேட்பாளர் என்ன கட்சியின் கடைசித்தொண்டனாக கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
4.மிகவும் முக்கியமானது, கட்சிகளின் நேரடி தொல்லைகளால் கைப்புள்ளை இமையமலை செல்ல யோசித்துவருகிறார். அதற்காக யாரும் தீக்குளிக்க வேண்டாமென கேட்டுகொள்கிறோம்.

Friday, March 3, 2006

பேர் வைக்கலாம் வாங்க.

ஒரு மாசம் ஆச்சுங்க என் மகன் பிறந்து. இன்னும் பேர் வெச்சபாடில்லை. எங்கேன்னு போய் சொல்லுவேன், ஆள் ஆளாக்கு ஒரு பேர் சொன்னாங்க, நமக்கு அதில்லெல்லாம் திருப்தி வரலைங்க. மக்களே, உலக தொலைக்காட்சி, அட சே. உலகில் முதன் முறையாக வலை பதிவு மூலமாக குழந்தைக்கு பேர் வைத்த பெருமை நம் தமிழ் வலைப்பதிவாளர்களை சேரட்டும்.

என் வாரிசுக்கு ஒரு பேர் வெக்க வாங்க, அதிலே ஒரு கண்டீசன். பேர் ச, கு, க வில ஆரமிபிக்கணும். ம்ம், சொல்லுங்க பார்போம்.

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)