
திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிற நேரத்தில் இந்த பட்டியல்.
சந்திப்போர்: "புன்னகை பூ" கீதா(தயாரிப்பாளர்), விஷ்ணு வர்த்தன்(இயக்குனர்).
இடம்: பெரிய நட்சத்திர ஹோட்டல்
காரணம்: புதிய/அடுத்த படம் பற்றிய விவாதம்.
அறிமுகம்: "புன்னகை பூ" கீதா- ரேடியோ ஜாக்கி-மலேசியா. தயாரித்த படங்கள்-அறிந்தும் அறியாமலும்.
விஷ்ணு வர்த்தன் - இயக்குனர், குறும்பு, அறிந்தும் அறியாமலும்.
கீதா : விஷ்ணு, அறிந்தும் அறியாமலும் மாதிரியே அடுத்த படமும் ஹிட் குடுக்கணும் விஷ்ணு.
விஷ்ணு: குடுத்துரலாம் மேடம், இசைக்கு கலக்க யுவன் இருக்கார், கேமராக்கு நீரவ் இருக்கார் அப்புறம் என்ன வேணும் சொல்லுங்க?
கீதா : நீங்க கதாபாத்திரம் சொல்றதுல பெரிய ஆளு, ஆனாலும் கதை கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம்?
விஷ்ணு: அது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லைங்க. போன படத்துல யுவன் ஒரு மேஜிக் பண்ணி "தீ பிடிக்க தீ பிடிக்க" எப்படி ஹிட் குடுத்தாரோ அது மாதிரியே பின்னிரலாம்
கீதா: எப்படிங்க விஷ்ணு? அது என்ன மேஜிக்?
விஷ்ணு: பழைய பாட்ட ரீ-மிக்ஸ் பண்ணி தமிழ்நாட்டையே ஆட வெச்சாரில்லையா, அது மாத்ரி நாமும் ஒரு கதை ரீ-மிக்ஸ் பண்ண போறோம்.
கீதா: (மனசுக்குள்) ஐயோ, எடுத்த பணமும் எகிறுரும் போல இருக்கே
விஷ்ணு: இப்போ மார்கெட்டுல யாரு கிங்கா இருக்காங்க? ஆர்யாவும், பரத்தும். அவுங்களையே ஹீரோவா போட்டுறலாம்
கீதா: ரெண்டு பேருக்கும் நல்ல, சமமான ரோல் தரணுமே, பிதாமகன் மாதிரி.
விஷ்ணு: இப்போதான் என்ன மாதிரி திங்க் பண்ணிரீங்க கீதா, அதே கதையை எடுத்துக்குவோம், கிராமத்தை சிட்டியாக்கிருவோம், அப்புறம் தவமாய் தவமிருந்து பதமப்ரியாவை கவர்ச்சி காட்டி ஒரு ஆட்டம் போட சொல்லலாம்? ஒரே கில்மாவா இருக்கும் இல்லையா?
கீதா: தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப வெவரமா இருக்காங்க, விவசாயின்னு ப்லாக் எழுதுர ஒருத்தர் கொஞ்சம் ஜாஸ்த்தியாவே வெவரம், அதனால கொஞ்சமாவது மாத்தணும், விஷ்ணு.
விஷ்ணு: ஓ, அப்படியா, பழைய ஹிட் படம் ஒண்ணு சொல்லுங்க.
கீதா: சத்யா, சூப்பர் ஹிட், செமையா கலக்கியிருப்பார் கமல்.
விஷ்ணு: அப்படின்னா, இதையும் ஒரு ஆக் ஷன் படமா தந்துருவோம், அதுல ஜனகராஜ் ரோல எடுத்துக்குவோம், அப்படியே மிக்ஸில போட்டு ஒரு அடி அடிச்சு, ஆக் ஷன் படமாக்கிறலாம். என்ன சொல்றீங்க?
கீதா: அட நல்லா இருக்கே? அப்போ இதுலையும் ஒரு ரீ-மிக்ஸ் வெச்சுருவோம்.
---------------------------------------------------------------------------------
ஆனா ஒண்ணுங்க, பரத்தும், ஆர்யாவும் நடிப்புலையும், சண்டையிலையும் பின்னி பெடல் எடுத்துருக்காங்க. கதைய படிக்கணுமின்னா இங்கே சொடுக்குங்க.
//விவசாயின்னு ப்லாக் எழுதுர ஒருத்தர் கொஞ்சம் ஜாஸ்த்தியாவே வெவரம்,// எப்படி..எப்படி.. ? சைக்கிள் கேப்புல.. ம்ம்.. ரைட்டு நடத்துங்க..
ReplyDeleteஎன்னதான் இருந்தாலும் சமீபத்திய தமிழ்ப்படச் சூழல் சற்று திருப்தியளிப்பதாக இருக்கிறது. (எல்லாம் தலைகளின் படம் வரும் வரைதான்).
ReplyDeleteபட்டியல் படத்தில், வன்முறையை நியாயப்படுத்த எதுவுமில்லை. கதை தன்போக்கிலேயே போகிறது. முடிவும் இயல்பாகவே இருக்கிறது. சகட்டு மேனிக்குச் சீவுசீவென்று தலைகளைச் சீவிவிட்டு கடைசியில் இரண்டோ ஐந்தோ வருட சிறைத்தண்டனைக்குப்பின் நாயகியோடு கைகோர்த்துக் கொண்டு வரும் அபத்தங்கள் இப்படத்திலில்லை. நாயகத்துதியில்லாமல், சுயதம்பட்ட வசனங்களில்லாமல் இயல்பாகவே வந்தபடம்.
எதையும் ஒப்பிட்டுத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தவகையில் தமிழ்ப்படங்களில் குறிப்பிடத்தக்க படம் பட்டியல்.
ராசா > சைக்கிள் கேப் கெடைச்சவே விட மாட்டோம், இங்கே ஆட்டோ கேப் இல்லே அதான்.. விடுவோமா?
ReplyDeleteவசந்தன்> கதை பழசுன்னாலும் நீங்க சொல்றத ஏத்துகுறேன் வசந்தன்
ஏத்துத்தானே ஆகணும்.
ReplyDeleteஇல்லைனா 'சப்பை' வீடு தேடி வருவான்ல.
*சப்பை யாருன்னு தெரியுதா? கடசியல செல்வாவைக் (பரத்) கொலை பண்ணின சாமியோட புது அடியாள்.