Wednesday, March 8, 2006

பேர் வெச்சாச்சு

ஒரு சின்ன ஃபளாஷ் பேக் இத படிச்சுருங்க மொதல்ல. இப்போ வாங்க. பய பொறந்த அடுத்த நாள் எங்க அப்பாரு கைல ஜாதகத்தோடு வந்தாரு (அதான் மூலைக்கு மூல கம்யூட்டர்ல ஜாதகம் பாக்கற ஜோசியக்காரங்க இருக்காங்களே). மொதல்லாம் ஜாதகம்னா, நாலு மூலையில மஞ்ச தடவி, கட்டம் போட்டு மட்டும் கொடுத்துருவாங்க. ஆனா இப்போ அதுல ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா கடைசி பக்கம் நியூமராலஜிக்குன்னு ஒதுக்கி இப்படிதான் பேர் ஆரம்பிக்கணும், இவ்வளவு கூட்டு தொகை வரணும்னு ஒரு ராக்கெட் சயின்ஸ் அளவுக்கு போட்டு வெக்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஆச்சு, இப்போ நம்ம வேலை ஆரம்பிச்சது. என்ன பேர் வெக்கலாம்? அம்மணி முழுகாம இருக்கும் போதே ஆர்யா, அனில், ஹரி, ஸ்ருதி, அருண்(ணா),ராகா, பல்லவி அப்படின்னு நாம கணக்கு போட்டு டிவி யிலிருக்கிற சேனலுக்கு பேர் எல்லாம் வெச்சோம். என்ன அநியாயம் நாம வெச்ச பேர் ஒண்ணு கூட அந்த கடைசி பக்கத்துக்கு ஒத்து போகல. சரி, ஊரார் பிள்ளைக்கு எல்லாம் பேர் வெச்சு பேர் எடுத்த நாம; இதுக்கு எல்லாம் சலிச்சுக்கலாமா அப்படின்னு பேர் தேட ஆரம்பிச்சேன். அந்த ஜாதகத்து கடைசி பக்கம் ரொம்ப சுலபமாத்தான் எழுத்து குடுத்து இருந்தாங்க. க, கு, ச, ஞ இதவிட சுலபமா எழுத்து கெடைக்கவே கெடைக்காது. ஹி,ஹி அசால்ட்டுன்னு நெனச்சு ஒரு பத்து பேர் அப்படியே கொட்டிட்டு காலரை தூக்கிவிட்டேன். ஒரு கர்வமா பார்வை பார்த்தேன், நக்கலா அம்மணி சிரிச்சாங்க அதுல ஒரு பேர் கூட நியூமராலஜிக்கு ஒத்து வரலை.

அப்படி இப்படின்னு ஒரு மாசம் ஓடிப்போயிருச்சு.சச்சின்னு பேர் வெச்சேன், பழசுன்னுட்டாங்க. ஸ்வாகத்துன்னு வெச்சா ஹோட்டல் பேர்ன்னுட்டுங்க. ஷெர்வின்னு வெச்சு கூப்பிட ஆரம்பிக்க அது சர்நேம்- கடைசி பேருன்னு சொல்லிட்டாங்க. கடைசியா வலைப்பதிவிலும் போட்டுப் பார்த்தாச்சு. போன வாரத்து நட்சத்திரம் நிலா அம்சமா சில பேர் சொன்னாங்க. மார்ச் 12 க்குள்ள பேர் வெச்சாகனும்னு வீட்டுல கெடு வேற வெச்சுட்டாங்க. என்ன பண்ண?

"அபூர்வ ராகங்கள்" படத்துல நம்ம எம்.எஸ்.விசு அண்ணே கலக்கியிருப்பார். பாட்டெல்லாம் சூப்பர் ஹிட். சூப்பர் ஸ்டார் வேற அறிமுகமான படம். அதுல முதல் பாட்டு, முதல் வரியில என்னோட வாரிசு பேர் இருக்கிறதை அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன். நமக்கு கர்நாட இசை தெரியாது. நம்ம ஊர்ல இருக்கிறதுதானே தெரியும். மாரியம்மன் கோவில் ஆட்டம், கொட்டு, நாத்து நடற போது பாடுற பாட்டு, ஒப்பாரி, குளவ, ஏரிக்கரை பாட்டு, கூத்து பாட்டு அப்படின்னு ஆரம்பிச்சு எம்.எஸ், செளமியா அப்படின்னு கேட்டதனால இசையோட சம்பந்த படுத்தி பேர் வெக்கணும்னு ரொம்ப ஆசை. மொட்ட, ஜேசுதாஸ், பாலு இவுங்கெல்லாம்; எனக்கு இசை மேல ஒரு மதிப்பு வர வெச்சவங்க.

அது காலேஜ் முடிச்சுட்டு வெட்டியா ஊர் சுத்தின காலம். நம்ம கூட்டாளி ஒருத்தன் சாலி கிராமத்துல இருந்த ரெக்கார்டிங் தியேட்டர்ல ஒரு பெரிய செல்வாக்கோடு இருந்தான். குப்பை கூட்டுறதுல இருந்து, பூட்டு பூட்டுற வரைக்கும் அவந்தான் பொறுப்பு. அவனுக்கு குவாட்டர்ல்லாம் வாங்கி கொடுத்து ஒரு வாரமா மொக்க போட்டு அவுங்க முதலாளிக்கு தெரியாம ஒரு ஆல்பம் ரெக்கார்ட் பண்ணிணோம். 6 பேர் மட்டுமே வேளை செஞ்சு ஆண்கள் மட்டுமே பாடின ஆல்பம் அது.(எப்படி வியாபாரம் பண்றது தெரியாததால இன்னும் அது சும்மாவே இருக்கு). பொண்ணுங்க இல்லாத ஆல்பம் எப்படி வியாபாரம் ஆகும்னு யாருங்க அது முணு முணுக்கிறது. ஆல்பத்துக்கு பேர் என்னான்னு தெரியுங்களா? "வுடு ஜூட்".

சரி, நம்ம இசை ஆர்வத்த சொல்லியாச்சு, அதனால வாரிசுக்கு இசை சம்பந்தப்பட்ட பேர்தான்னு கடைசியா முடிவு பண்ணியாச்சு. அப்போ பேர் என்னவா இருக்கும்ன்னு யோசனை செஞ்சுகோங்க. க்ளூ எல்லாம் இந்த பதிவுலேயே இருக்கு.

2 comments:

 1. is it Anand???

  if it is true thne ithu mattum enna puthu pera?? :)

  --
  jagan

  ReplyDelete
 2. கூட்டாளி(சங்க ஆள் என்பதால்) சார்(மரியாதைகாக),

  வாழ்த்துகள்.

  நமக்கு சங்கித ஞானம் ரொம்ப கம்மி, பேர கண்டுபுடிக்கமுடியல :-(

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)