Thursday, December 29, 2005

சண்டக்கோழி-விமர்சனம்


படத்துக்கு, வேகம்னு பேர் வெச்சு இருக்கலாம், அவ்வளவு வேகம். படம் ஆரம்பிச்சதுக்கும், இடைவேளைக்கும் என்னமோ ஒரு நிமிஷம்தான்கிற மாதிரி முதல் பாதி சரியான வேகம்.

படத்தின் கதை நாம எப்போங்கோ சொல்லிருக்கோம் இத சொடுக்கி பார்த்துக்கோங்க.

படத்துல குறைன்னு சொன்னா அது CLIMAX௯தான். நட்சத்திர அந்தஸ்த்து இல்லைன்கிற குறை CLIMAXல தெரியுது. படம் முடிஞ்சப்புறம் "சே! CLIMAX௯ல விஜய்யோ, ஜெயம் ரவியோ நடிச்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்குமே" அப்படிங்கிற குறை இருக்கத்தான் செய்யுது. சண்டை காட்சிகளில் ரொம்ப சிரமப்பட்டு இருக்காங்க, அதுக்கான பலனும் தெரியுது.

விஷாலும் சரி, மீரா ஜாஸ்மினும் சரி, ராஜ்கிரணும் சரி நடிப்புல பின்னி பெடல் எடுத்திருகாங்க. யுவன் இசை ரசிக்கிற மாதிரி இருக்கு, "இரவு" பாடல் படம் முடிஞ்சாலும் முணுமுணுக்க வைக்குது. 'ஜி' படத்துக்கப்புறம் இந்த படம் அப்படிங்கிறதுனால கடுமையாவே உழைச்சிருக்கார் லிங்குசாமி. மறுபடியும் ஜெயிச்சு காட்டியிருக்கார்.

குடும்பத்தோட பார்க்கலாம், நல்ல படம்ங்க

Friday, December 23, 2005

சிறந்த இந்தியர் 2005

இந்த வருடத்திய சிறந்த இந்தியருக்கான் தேர்வு பட்டியலை ஏர்டெல் , NDTV நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. ஒரு 10 பேர் பட்டியலையும் அது குடுத்து இருக்கிறது (அதில் ஏன் கலா நிதி மாறன் பெயர் இல்லை?)

ராகுல் டிராவிட் - வழக்கம்போல பொறுப்புகளை தோல்மேல் சுமந்து விளையாடுவதில் எந்த மாற்றமும் இல்லை, டால்மியா-பாவார் அரசியலில் "தாதா" ஓரங்க்கட்ட பட இவருக்கு அடித்தது யோகம்.

சானியா மிர்சா - ஒரு காலத்தில் பி.டி.உஷா பெற்ற புகழை விட அதிகமாக குறுகிய காலத்தில் பெற்றார், சச்சரவும் கூட. பெண்கள் டென்னிசுக்கு அம்மணி போட்டதுதான் பிள்ளையார் சுழி. இப்பொழுது அம்மணி தரப்பட்டியலில் இடம் குறைந்து வருகிறார், பார்த்துக்கோங்க.

சோனியா காந்தி, மன்மோகன் சிங் - அரசியலில் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை.

நிதிஷ் குமார் - உண்மைய சொன்னேன் சீட்டு கெடச்சது அப்படின்னு பாட்ஷாவுல தலைவர் சொல்வார். அது மாதிரி சொல்லி கில்லி மாதிரி வெற்றி பெற்றவர். என்ன செய்வார் என பொறுத்து இருந்து பார்ப்போம். பீஹாரின் தலை எழுத்த மாத்திட்டா அடுத்த வருஷம் என்னுடையா ஓட்டு இவருக்குதான், இப்போ இல்லே.

நாரயண மூர்த்தி - இவரால வாழ்ற மக்கள் நிறைய, இருந்தாலும் பெங்க்ளூருக்கு ஏதாவது செய்ங்க.

S. மஞ்சு நாத் - பாவபட்ட ஜென்மமம், ஒரு காலத்தில் சத்யஜித் தூபே, இப்போ இவர், பீஹாரின் ரத்தப்பசிக்கு பலியாகும் IIT. IIMகள் பட்டியலில் இவருக்கும் இடம் கிடைத்து இருக்கிறது. என்னுடையா ஓட்டு இவருக்கு கண்டிப்பாக உண்டு.

அத்வானி, அருணா ராய், லக்ஷ்மி மிட்டல், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் எல்லாம் எதுக்கு இந்த பட்டியலில்?

Thursday, December 15, 2005

தொடர்பு எல்லை

இன்னிக்கு என்னோட நண்பர் ஒருவர் அலுவலக மடல்ல தன்னோட சந்தோசத்தைப் பகிர்ந்துகிட்டார். அது அவருக்கு சந்தோசம், எனக்கு கவலையாய் பட்டுச்சு. அது தானுங்க இந்தப் பகிர்வுக்குக் காரணம்.நண்பர் கன்னடிகர், Onsite போயி 3 வருசம் ஆச்சு. அமெரிக்காவுல பிள்ளைப் பெற்றுக்கொண்டால், அமெரிக்காவோட குடியுரிமை கிடைச்சிருமாம். அதனால அவரும், அவர் மனைவியும் மட்டுமே பேறு காலம் மட்டுமில்லைங்க, பிரசவத்தையும் சமாளிச்சுட்டாங்க. பிரசவம் ஆகி 4 மாசம் இருக்கும். நிற்க.இந்த மாதிரி புலம் பெயர்ந்து வாழ்வதால்(நண்பருக்கு தற்காலிக பெயர்வுதானுங்க) வாழும் தலைமுறைக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. வெளிநாட்டில் வாழும் வாரிசுகளால், மூத்த தலைமுறையினருக்கு பெருமையாய் இருந்தாலும் அவர்கள் இழப்பது ஏராளம். ஏனெனில் இந்த நண்பரின் எடுத்துக்காட்டைப் பாருங்களேன்.இப்ப முதல் பத்தியைப் படிங்க புரியும், சந்தோசத்துக்கான காரணம், தன்னோட குழந்தையை பெற்றோர்கள் இணையம் வழியாய் பார்த்துட்டாங்களாம்.(Yahoo Messenger- Video Chat). பெற்றோர்களும் சந்தோசப் பட்டுட்டதா சொன்னாரு. எனக்கென்னமோ அப்படித் தெரியலைங்க. இந்த மாதிரி மாய உலகத்துல வாழ எதற்கு உறவுகள், ஒரு எட்டு அவங்களோ இல்லே இவுங்களோ பார்த்துட்டு வந்திருக்கலாமே?கொஞ்சம் வருசம் கழிச்சு அந்தப் பையன், தாத்தா பாட்டியோட யாஹூவிலயே பேசிட்டு இருப்பான். கண்ணியில வந்தா மட்டும்தான் தாத்தா பாட்டியைத் தெரியும், நேரில் பார்த்தால் தெரியாது.

அதே மாதிரி பெற்றோரை நினைச்சுப் பாருங்க.அள்ளியெடுத்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, குழந்தைக்கு சேவை செய்யுற அந்த சந்தோசம் இந்த கண்ணாடித்திரையில் கிடைச்சிடுமா, என்ன?

 வருங்காலத்துல யாஹூ மாதிரி இன்னும் நிறைய வரலாம். எல்லாம் மாயை தானுங்களே. இந்த மாதிரி காட்சியை சினிமாவுல கூட இன்னும் நாம பார்க்க ஆரம்பிக்கலை. ஆனா உண்மையா நடந்துட்டு வருது. எனக்கு மட்டும் சினிமா எடுக்கிற சக்தி இருந்தா இதையே ஒரு படம் கண்டிப்பா எடுப்பேன்.சரி, நம்ம புராணம் விடுங்க. வீட்லயே இணைப்பு வாங்கித்தந்து பெற்றோரை தினமும் பார்க்க வெக்கனுமாம். அதுதான் நமக்கு குடுத்த assignment, மேலாளர் ஆச்சே. Indicomஓ, ரிலையன்ஸோ தயார் பண்ணிட்டு வந்து பதில் சொல்றேங்க!

Tuesday, December 13, 2005

தத்துவம்

சில நேரங்களில் தத்துவம் நல்லாதான் இருக்கும், இப்போ இருக்குற கொஞ்ச நேரத்துல சிரிக்க வைச்ச சில மகத்துவமான தத்துவங்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன். நன்றி Junker

1) ரயில் எவ்வளவு வேகமா போனாலும், கடைசி பெட்டி கடைசியாதான் போகும்

2) Cell Phoneல balance இல்லைன்னா call பண்ண முடியாது....ஆனா மனுஷனுக்கு கால் இல்லைன்னா balance பண்ண முடியாது

3) பஸ் போயிட்டா பஸ் ஸ்டேண்ட் அங்கையே தான் இருக்கும், ஆன cycle போயிட்டா cycle stand கூடவே போகும்

4) Filesன்னா உட்கார்ந்து பார்க்கனும், ஆன Piles ன்னா பார்த்து உட்க்காரனும்

5) கட்டில் உடைஞ்சால் படுக்க முடியாது, கண்ணாடி உடைஞ்சால் பார்க்க முடியாது. ஆனால் முட்டைய உடைச்சால் தான் ஆம்லெட் போட முடியும்

6) அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம், பால் கொட்டினா வேற பால் வாங்கலாம் ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது

7) வாயால "நாய்"ன்னு சொல்ல முடியும் ஆனா... நாயால "வாய்"ன்னு சொல்ல முடியுமா?

8) நேரம் சரி இல்லைன்னா ஒட்டக்கத்துக்கு மேல ஏறி உக்கார்ந்தாலும் நாய் கடிச்சு வைக்கும்

நாளை என் மனதை உலுக்கிய "தவமாய் தவமிருந்து" படத்தை விமர்சிக்கிறேன்

Wednesday, November 16, 2005

ஆண்-பெண், நன்மை-தீமை ஆகிய இருமைகளால்தான் பிரச்சினை

சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியது
ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிட்டால் நீங்கள் ஒரு பெண் அல்லது ஆண் என்பதை மறந்துவிட வேண்டும். இததுதான் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம். உங்கள் இல்லத்தில் நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ செயல்பட வேண்டியிருக்கும் என்பது வேறு விஷயம்.

ஆனால் உலகம் முழுவதிலும் காணப்படும் ஆன்மீக வழிமுறைகள் ஆன்மீகப் பாதையில் ஈடுபடுபவர்கள் துறவிகளாக இருக்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகின்றன? இதற்கான விடை மிகவும் எளிமையானது. உங்கள் மனத்தில் ஆண்-பெண், நன்மை-தீமை போன்ற இருமை எண்ணங்களை நீக்கிவிட வேண்டும் என்பதுதான் காரணம். இருமைகளுக்கு மத்தியில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது முழுமையானது. அந்த முழுமையை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் என்பதுதான் ஆன்மீகம்.

உங்கள் வாழ்க்கை இருமை எண்ணங்களைச் சார்ந்ததாக இருந்தால் நீங்கள் திறமையாக அம்மானை ஆட வேண்டியிருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருந்தால் நீங்கள் நீங்கள் திறமையாக அம்மானை ஆடுகிறீர்கள் என்று அர்த்தம். சரியாக ஆடாவிட்டால் எல்லாமே சிதறிப்போகும். ஒரு கல்லை நீங்கள் பிடிப்பதற்குள் மற்றதெல்லாம் கீழே விழுந்துவிடும். ஒரே சமயத்தில் ஐந்தாறு கற்களை வைத்துக்கொண்டு அம்மானை ஆடுபவர்களும் இருக்கிறார்கள். ஒன்று கீழே விழுந்தால் எல்லாமே கீழே விழுந்துவிடும்.

ஆக, இருமைகளுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டால் அம்மானை ஆட்டத்தைத் தவிர்க்கவே முடியாது. ஆடுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள். ஆடித்தான் ஆக வேண்டும். ஆன்மீகப் பாதையில் சென்றாலும் சரி, இல்லையென்றாலும் சரி - இந்த ஆட்டம் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது.

இந்த ஆட்டம் ஆன்மீகப் பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்ததன் விளைவு அல்ல. எப்படியும் நீங்கள் அம்மானை ஆடித்தான் ஆக வேண்டும். வாழ்வின் இருமைகளோடு நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டதன் விளைவு இது.

திருமணம் என்பது இருமைகளைச் சார்ந்தது. எனவே திருமண வாழ்வில் புகுந்த பிறகு இருமைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. உங்களைச் சுற்றியுள்ளவர்களால் உங்களுக்குத் தொல்லை வரத்தான் செய்யும். பெரும்பாலான வீடுகளில் - குறைந்தபட்சம் இந்திய வீடுகளில் - ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணால்தான் பெருமளவில் தொல்லைகள் வருகின்றன. இதுதான் பொதுவான நிலவரம்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் ஆணா பெண்ணா என்பதல்ல பிரச்சினை. நீங்கள் மற்றவர்களை ஈடுபடுத்தாமல் தனியாக ஏதோ செய்கிறீர்கள். எனவே உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள். இதுதான் பிரச்சினை. மொத்தக் குடும்பமும் ஆன்மீகப் பாதையில் செல்வதுதான் இதைத் தீர்க்கச் சிறந்த வழி. அப்போது எல்லாமே சுலபமாகிவிடும். ஆனால் இது எல்லா சமயங்களிலும் சாத்தியமாகாது. அப்படியானால் அம்மானை ஆடித்தான் ஆக வேண்டும்.

நன்றி-தோழி- பெண்களுக்கான ஒரு நல்ல வலை

Tuesday, November 8, 2005

தீபாவளி!

தீபாவளி கொண்டாட்டத்தில் ஒரு கேமரா கவிதைMonday, October 24, 2005

காக்கா!


இது கரைவது கூட இசைதான்கிறாங்க
கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்கிறார்கள்.
சனீஸ்வரனின் வாகனமாம், கருப்பாய் இருந்தால் அண்ட காக்காயாம், மனிதன் இறந்தால் இவர்களுக்கு சாப்பாடாம் (முன்னோர் என்று அர்த்தமாம்)
தலைவர்களின் சிலைகளை இவர்கள் மட்டும்தான் அசிங்கப் படுத்துகிறார்காளாம்(கண்ணகி சிலை இப்போ எங்கே சாமி?).
சில வீடுகளில் தினமும் ஆகாரமிடுகிறார்கள்(எதற்கு என்று தெரியாமலே)
நாம் தலைக்கு சரியா குளிக்காமல் விட்டு புண் வந்தால் காக்கா புண்ணாம்.
வடாம் காய வைப்பதற்க்கு ஒரு Duplicate காக்கா
வேலை இல்லா மக்கள் ஒன்று கூடி எங்காவது சேர்ந்தால் காக்கா கூட்டம்.
பங்கிட்டு உண்பதற்க்கு காக்கா தான் உதாரணம் (இது ஒண்ணு தான் காக்காய் பற்றி நல்ல விதமாக தோன்றியது),
அட நம்ம சிவாஜி (ரஜினி- சிவாஜி இல்லைங்க, பராசக்தி சிவாஜி) காக்கா பாட்டுலாதாங்க அவரோட கலைப் பயணத்தினை ஆரம்பிச்சார்.
கோழி புடிக்கிறதுக்கு ஒரு அர்த்தம்ன்னா, காக்கா புடிக்கிறதுன்னா வேற அர்த்தம்
இதனோட பேர சொன்ன முகம் சுழிக்கிறவங்க எல்லோரும் இவுங்க பேர அப்படியே ஆங்கிலத்துல மொழி பெயர்த்து பேரின் கடைசியில ஒரு "N" சேர்த்தால் முகம் சுழிக்கிறவங்க எல்லாம் இதுக்கு அடிச்சுக்குவாங்க (Crow+N= CROWN)(எங்கியோ போயிட்டேடா)

என்னடா ஒரே காக்கா புராணமா இருக்கேன்னு உங்க மனசுல ஒரு கேள்வி வந்து இருக்குமே? வேற ஒண்ணும் இல்லீங்க, தோட்டதுல கேமரா வெச்சுகிட்டு ஏதாவது பட்டாம்பூச்சி, குருவி கிடைத்தால் அழகா படம் போட்டு பேர் வாங்கலாம்ன்னு நினைச்சேன், நம்ம நேரம் எதுவும் கிடைக்கலை. வல்லவனுக்கு (சிலம்பரசன் இல்லீங்க) புல்லும் ஆயுதம் அதான் ஒரு ஒத்த காக்காய புகைபடமா எடுத்து அதைப்பற்றி ஒரு வலைப்பூ. (பின்னூட்த்துல பின்னீறாதீங்க சாமீயோவ்)

Monday, October 17, 2005

மழை!
சந்தோஷம்!
எதுக்கு? டிராவிடுக்கு கேப்டன் பதவி கிடைச்சதே அதுக்கா இல்ல மஜா பாட்டு hit ஆயிடுச்சே அதுக்கா? இதெல்லாமா நமக்கு சோறு போட போகுது? இல்லீங்க. சந்தோஷத்துக்கு காரணமே வேற.

காவேரி எங்க ஊர் பக்கம்தான் ஓடுதுனாலும் அதனால எங்களுக்கு எந்த பலனும் இல்லை. எங்களுக்கு ஏரித்தண்ணியும், கிணத்துத்தண்ணியும் தான் உதவுது, அதுவும் மழை நல்லா பெய்தால்தான். இந்த வருஷம் வருண பகவானுக்கு ஒரு பெரிய நன்றி சொல்லனும். 10 வருஷம் ஆச்சு எங்க ஊர் ஏரி நிரம்பி. சுனை, ஊத்து தண்ணியெல்லாம் நான் டவுசர் போட்டு ஒடக்கான் அடிச்ச காலத்துல பார்த்தது.(10 வது லீவ்லதான் நான் லுங்கிகட்ட ஆரம்பிச்சேன்). இந்த வருஷம்தான் ஊத்து தண்ணி பள்ளத்துல(வண்டிதடம்) ஓடுது, ஏரியும் நிரம்பி வழியுது. அதுக்கு கிடா வெட்டு, பூசைன்னு நடக்குதா, இல்ல. மழை வர வைக்கதான் கழுதைக்கு கல்யாணம், பூசைன்னு நடத்துவாங்க, வந்துட்டா... மறந்துருவோம்ல. என்ன மனுஷ பயலுகடா? அதுக்கு தான் நம்மோட வலை மூலமா வருண பகவானுக்கு ஒரு பெரிய நன்றி.(வருண பகவான் BLOG படிப்பாரான்னு எல்லாம் பின்னூட்டம் போடாதீங்க).

நேத்து தோட்டத்துல நாத்து நடவு நடக்கும் போது எடுத்த புகைபடம்

Sunday, October 9, 2005

சுத்தம் சோறு போடும்!


இதுவும் ஒரு புலம்பல்தாங்க..
பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் நிலநடுக்கம், கத்ரீனா & ரீட்டா, சென்னை கடலோர பகுதியில் மாதத்துக்கொருமுறை கொந்தளிப்பு...... என்னதான் நடக்குது இந்த உலகத்தில. ஏன் நடக்குது இதெல்லாம்? முற்பகல் செயின் பிற்பகல் விளையும் அப்படிங்கிறது நம்ம மக்களுக்கு மட்டும் இன்னும் ஏன் புரியவே மாட்டேங்குதுங்க. ஒரு இந்தியன் வெளிநாட்டுக்கு போனா தெரியற முதல் வித்தியாசம் என்ன தெரியுங்களா? "சுத்தம்". சுத்தம் சோறு போடும் அப்படின்னு சொன்னா, உடனே "அப்போ சுகாதாரம் குழம்பு ஊத்துமா"ன்னு வியாக்கியானமா கேள்வி மட்டும் கேட்கிறோம், அதை கடைபிடிக்கிறோமா சத்தியமா இல்லைங்க. போன வருஷம் விவசாயத்துக்கு தண்ணி இல்லாம நாம பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாதுங்க. அட, நெல்லம் பயிறுக்கு தண்ணி இல்லாங்காட்டியும் பரவாயில்லைங்க, நம்ம முப்பாட்டன் காலத்திலிருந்து செழிப்பா இருந்த தென்னை மரத்தையெல்லாம் காப்பாத்த நாங்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்லைங்க. டிராக்டர்ல எல்லாம் தண்ணி கொண்டு வந்து ஊத்தி காப்பாத்துனோம்.
எங்க தாத்தா, ஒரு நவீன விவசாயிங்க. தாத்தா இப்போ இல்லைங்க, இதெல்லாம் தெரிஞ்சுதானோ என்னமோ மேட்டாங்காட்டுல எல்லாம் மாஞ்செடி நட்டு வெச்சார், மகராசன். அதோட மட்டும் இல்லாம எங்க ஊர்ல முக்கால்வாசி பேர் மாஞ்செடி வைக்க காரணமாகவும் இருந்தார். அதனாலதானோ என்னமோ இப்பொவெல்லம் தண்ணி இல்லாட்டியும் எங்க ஊர் இப்போ சமாளிக்கவாவது முடியுது.

சரிங்க விஷயத்துக்கு வருவோம். யாரும் தப்பு செஞ்சாலும் பாதிக்கப்படுறது என்ன மாதிரி இருக்கிற விவசாயிங்கதான். நகரம் முழுசும் புகை, நாத்தம், சாக்கடை தண்ணிய ஆத்துல கலந்துவிட்டுறது அப்படின்னு முடிஞ்ச வரைக்கும் சுற்றுபுறத்த நாசம் பண்ணிடறாங்க. அப்புறமா பூமி நடுங்குது, கடல் கொந்தளிக்குதுன்னு சொல்றது தப்புங்க.

நான் சொல்றதை நம்பலைன்னா இந்த தொடுப்பை தட்டி பாருங்க

Saturday, September 24, 2005

(ஹ)அரிக்கேன்

(ஹ)அரிக்கேன்.

(ஹ)அரிக்கேன்,நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஊர்ல, கரண்டு இல்லாத வீட்ல, ராவுக்கு (ராத்திரிக்கு) வெளிச்சத்துக்காக ஏத்தி வைப்பாங்க. அதுக்கு பட்டணத்துல சிம்னின்னும், எங்க ஊர்ல ராந்தல்ன்னும் பேரு. 2 வாரமா அரிக்கேன்'ங்ர வார்த்தை அடிக்கடி தொலைகாட்சியில், செய்தித்தாள்களிலும் தலைப்புச்செய்தியாய் வருது. அட என்னடா நம்ம ஊர் மேட்டரு எல்லாம் அமெரிக்காவுல அடிபடுதே என்னான்னு பார்க்கலாம்னு கொஞ்சம் விளக்கம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டாதான் தெரியுது, அது அமெரிக்காவுல வர்ற புயலோட பெயராம். கத்த்ரீனா, ரீட்டான்னெல்லாம் பேர் வெச்சுருக்காங்க.

அரிக்கேன் அப்படின்னா துர்தேவதைன்னு அர்த்தமாம். இதனால அதிகம் பாதிக்கபடறது கடலோரத்துல இருக்கிற மட்டும் இல்லை, மத்திய அமெரிக்காவும் சூறாவளின்னால பாதிக்கபடுது. ஒவ்வொரு வருஷமும் உயிகளின் இழப்பு அதிகமாயிட்டே வருது. இதுக்கு என்னதான் முடிவு? கடவுள்தான் சொல்லனும்.

அதிகப்படியான தமிழ் மக்களை கொண்ட நகரம் ஹுஸ்டன். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஹூஸ்டன் நகர மக்களை வெளியேர அமெரிக்க அரசு சொல்லிருக்காங்க. உயிருக்கு பயந்து மக்கள் எல்லோரும் ஒரே நேரத்துல மூட்டை முடிச்சுகளுடன் வெளியேர, வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கு. இன பாகுபாட்டோடுதான் சேவை செய்யறாருன்னு கத்ரீனாவால கெட்ட பேர் வந்துருச்சு, ரீட்டாவ எப்படி சமாளிக்க போறாரோ?

ஆமா ஹரிக்கேன்னுக்கு துர்தேவதைன்னா அர்த்தம்ன்னா, நம்ம ஊர்ல ஏன் விளக்குக்கு இப்படி ஒரு பேர்? இருட்டை துரத்திறதனால இந்த பேர்ன்னா, இருட்டுக்கு துர்தேவதைன்னா பேர்? தெரிஞ்சா சொல்லுங்களேன்.

Monday, September 19, 2005

சானியா மிர்சா


சின்ன வயசு, டென்னிஸ்ன்னா என்னான்னு தெரிஞ்ச காலத்தில், நம்மளோட Fav. சபாடினி. யார் யாருக்கோ நாம support பண்றோமே, நம்ம நாட்டிலிருந்தும் யாராவது விளையாட வந்தால் நல்லாயிருக்குமேன்னு நினைப்பேன். அப்புறம் மேரி பியர்ஸ், அன்னா அப்படின்னு வந்தாங்க, அப்போ ஜொள்ளு விட்டது என்னவோ உணமைதாங்க.

அந்த நேரத்தில் தான் நம்ம சானியா மிர்சா களம் இறங்கினாங்க. அவுங்க அழகுதாங்க, ஆனாலும் நாம என்னமோ அவுங்ககிட்ட ரசிச்சது விளையாட்டதானே தவிர அழகை இல்லை. எல்லா இந்தியனுக்கும் விளையாட்டு மேல இருந்த தீராத தாகம்தாங்க எனக்கும் இருந்தது. பெரிய levela பரிசு வாங்கலன்னாலும் நல்லாவே விளையாடறாங்க. கண்டிப்பா இன்னும் ஒண்ணு இல்லை ரெண்டு வருஷத்துல பெரிய level kku வந்துருவாங்க.

ஆனா இது நம்ம மக்களுக்கு பொறுக்காதே. சானியா போடுற துணி இஸ்லாமத்துக்கு ஒத்து வராதுன்னு ஒரு அமைப்பு, சானியாவுக்கு மிரட்டல் விட்டு இருக்காங்க. இதுல என்ன கொடுமைன்னா, என்ன மாதிரி சாமானியனுக்கு சானியா முஸ்லிம்ன்னு தெரிஞ்சதே அந்த மிரட்ட்லுக்கு அப்புறம் தான். ஏனுங்க சானியாவுக்கு ஒரு 8 கஜம் சேலை கட்டி டென்னிஸ் விளையாட விட்டுரலாமா? யோசனை பண்ணுங்க சாமி. இப்பத்தான் இந்தியா ஒவ்வொரு விளையாட்டிலும் பிரகாசிக்க ஆரம்பிச்சிருகாங்க இந்த நேரத்துல இது எல்லாம் தேவையா?

Thursday, September 15, 2005

ஊர் சுத்தல்- கர்நாடகா


நம்ம ஊர்ல இந்த வருஷம் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சி, விவசாயம் பண்றவங்களுக்கு ஏதோ பரவாயில்லை. ஆனா பாருங்க, எங்க ஊர்ல இப்போ கூலி வேலைக்குதான் ஆளுங்க கிடைக்கவே மாட்டேங்றாங்க. காரணம் என்னன்னு யோசிச்சு, விசாரிச்சு பார்த்தாதான் உண்மை தெரியவருது. முன்னாடி தோட்டத்துல வேலை பார்த்த அத்தனை பேரும் Factory இல்லாங்காட்டி கடைல வேலை பார்க்கிறாங்க.

காரணம்:
1. தோட்டத்துல வேலை பார்க்கிறதை கெளரவ கொறச்சலா, அடிமைத்தனமா நினைக்கிறாங்க.
2. பணம் கொஞ்சம் கூடுதலா கிடைக்குது.
3. வாரம் ஒரு நாள் விடுமுறை.
4. வேர்வை சிந்தி உழைக்க தயாராக இல்லை.


ஆனா பாருங்க போன வாரம் கொஞ்சம் கர்நாடகா விவசாய நிலங்களை சுத்தி பார்க்க ஒரு வாய்ப்பு கெடைச்சுது. அங்கே, வேலை ஆள் சுலபமா கிடைக்கிறாங்க. வளமையா இருக்காங்க. இந்த புகைபடங்களை பாருங்க புரியும்.


இதெல்லாம் ஒரு புலம்பல்தாங்க. இன்னும் நிறையா இருக்குங்க.

Monday, August 29, 2005

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் 
ராதாமோகனின் 2வது படம் என்கிறதனால் கொஞ்சம் எதிர்பார்ப்போடுதான் படம் பார்க்க போனேன். எடுத்தவுடனே மண்டையில் ஒரு Flash, தெய்வமகன் மாதிரி இருக்கேன்னு நெனச்சேன். அப்புறம்தான் படம் அப்படியில்லை அப்படின்னாரு Director.     சின்ன கதை. அக அழகா? புற அழகா? ஒரு பட்டிமன்றம். அக அழகில் உற்றார், உறவினர்களின் அன்பைப் பெற்ற ஒருவன், புற அழகை பெற முயற்சிக்கும் போது ஏற்படும் குழப்பங்களே படம். சின்ன வயசுல ரவிகிருஷ்ணாவிருக்கு முகத்துல ஒரு தழும்பு(வடு) விழுந்துடுது. கொஞ்சம் பெருசான அப்புறம் (இளமையில) feel ஆகுறார். அதை மறைக்க Plastic Surgery பண்ண முயல, பணம் தேவைப்பட, Part time வேலை பார்க்க, நண்பர்கள், அம்மா, அக்கா வோடு பிரச்சனை, அப்படின்னு போகுது கதை. .....படத்தின் சிறப்பே வித்யசாகரின் இசை. வித்தியாசமான கதை & திரைகதை, துணிச்சலான முயற்சி. ஆனால் Art Film இல்லை. பொன்னியின் செல்வன் - சிறுகதை

Wednesday, August 24, 2005

விவசாயி

கடவுள் என்னும் முதலாளி
கணடெடுத்த தொழிலாளி

விவசாயி ..... விவசாயி .....

முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து

மண்ணிலே முத்து எடுத்து பிறர் வாழ
வணங்கும் குணம் உடையோன் விவசாயி ....

விவசாயி ..... விவசாயி .....

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?

ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்

விவசாயி ..... விவசாயி .....

கருப்பு என்றும் சிவப்பென்றும் வேற்றுமையா
கருதாமல் எல்லாரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி!
உழைத்தால் பெருகாதோ சாகுபடி!

விவசாயி ..... விவசாயி .....

இருந்திடலாம் நாட்டில் பல வண்ண கோடி
எத்தனையோ கட்சிகளின் எண்ண படி
பறக்க வேணும் எங்கும் ஒரே சின்ன கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்ன கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்ன கொடி

விவசாயி ..... விவசாயி .....
இந்த பாடல் எனக்கு என்றுமே ஒரு வேதம் போல. இருப்பதோ வெளியூரில், ஆனாலும் விவசாயம் மீது எனக்கு அளவுகடந்த மோகம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் விவசாயம் செய்ய ஆசைப்பட்டு, முடியாமல் வேறு ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன்.
விவசாயி என்ற எண்ணம் என்றும் என் மனதில் இருந்தே இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு. நன்றி!

Edited Several Times

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)