Wednesday, November 16, 2005

ஆண்-பெண், நன்மை-தீமை ஆகிய இருமைகளால்தான் பிரச்சினை

சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியது
ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிட்டால் நீங்கள் ஒரு பெண் அல்லது ஆண் என்பதை மறந்துவிட வேண்டும். இததுதான் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம். உங்கள் இல்லத்தில் நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ செயல்பட வேண்டியிருக்கும் என்பது வேறு விஷயம்.

ஆனால் உலகம் முழுவதிலும் காணப்படும் ஆன்மீக வழிமுறைகள் ஆன்மீகப் பாதையில் ஈடுபடுபவர்கள் துறவிகளாக இருக்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகின்றன? இதற்கான விடை மிகவும் எளிமையானது. உங்கள் மனத்தில் ஆண்-பெண், நன்மை-தீமை போன்ற இருமை எண்ணங்களை நீக்கிவிட வேண்டும் என்பதுதான் காரணம். இருமைகளுக்கு மத்தியில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது முழுமையானது. அந்த முழுமையை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் என்பதுதான் ஆன்மீகம்.

உங்கள் வாழ்க்கை இருமை எண்ணங்களைச் சார்ந்ததாக இருந்தால் நீங்கள் திறமையாக அம்மானை ஆட வேண்டியிருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருந்தால் நீங்கள் நீங்கள் திறமையாக அம்மானை ஆடுகிறீர்கள் என்று அர்த்தம். சரியாக ஆடாவிட்டால் எல்லாமே சிதறிப்போகும். ஒரு கல்லை நீங்கள் பிடிப்பதற்குள் மற்றதெல்லாம் கீழே விழுந்துவிடும். ஒரே சமயத்தில் ஐந்தாறு கற்களை வைத்துக்கொண்டு அம்மானை ஆடுபவர்களும் இருக்கிறார்கள். ஒன்று கீழே விழுந்தால் எல்லாமே கீழே விழுந்துவிடும்.

ஆக, இருமைகளுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டால் அம்மானை ஆட்டத்தைத் தவிர்க்கவே முடியாது. ஆடுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள். ஆடித்தான் ஆக வேண்டும். ஆன்மீகப் பாதையில் சென்றாலும் சரி, இல்லையென்றாலும் சரி - இந்த ஆட்டம் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது.

இந்த ஆட்டம் ஆன்மீகப் பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்ததன் விளைவு அல்ல. எப்படியும் நீங்கள் அம்மானை ஆடித்தான் ஆக வேண்டும். வாழ்வின் இருமைகளோடு நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டதன் விளைவு இது.

திருமணம் என்பது இருமைகளைச் சார்ந்தது. எனவே திருமண வாழ்வில் புகுந்த பிறகு இருமைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. உங்களைச் சுற்றியுள்ளவர்களால் உங்களுக்குத் தொல்லை வரத்தான் செய்யும். பெரும்பாலான வீடுகளில் - குறைந்தபட்சம் இந்திய வீடுகளில் - ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணால்தான் பெருமளவில் தொல்லைகள் வருகின்றன. இதுதான் பொதுவான நிலவரம்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் ஆணா பெண்ணா என்பதல்ல பிரச்சினை. நீங்கள் மற்றவர்களை ஈடுபடுத்தாமல் தனியாக ஏதோ செய்கிறீர்கள். எனவே உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள். இதுதான் பிரச்சினை. மொத்தக் குடும்பமும் ஆன்மீகப் பாதையில் செல்வதுதான் இதைத் தீர்க்கச் சிறந்த வழி. அப்போது எல்லாமே சுலபமாகிவிடும். ஆனால் இது எல்லா சமயங்களிலும் சாத்தியமாகாது. அப்படியானால் அம்மானை ஆடித்தான் ஆக வேண்டும்.

நன்றி-தோழி- பெண்களுக்கான ஒரு நல்ல வலை

3 comments:

 1. sir..enna aachu..ore aanmeegha vazhiyil poiteenga..

  ReplyDelete
 2. அது என்னங்க சொல்றதையெல்லாம் சொல்லிட்டுக் கடைசியிலே
  'தோழி- பெண்களுக்கான வலை'ன்னு போட்டு வச்சுட்டீங்க?

  மறுபடியும் ரெண்டா?

  ReplyDelete
 3. வருகைக்கு நன்றிங்க துளசி!

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)