Wednesday, November 19, 2008

New Jersey-வலைப்பதிவர் சந்திப்பு-08


வணக்கமுங்க,
வட அமெரிக்க வலைப் பதிவாளர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து இந்தக் குளிர்காலத்திலேயும் சந்திக்கனும் முடிவு செஞ்சுட்டாங்க. எழுத்துதான் உலகம்னு இருக்குற நமக்கு ஏதுங்க குளிர், வெயில். அதுக்கு பேர் எல்லாம் வெக்கனுமாம்ல. அதனால அதுக்கு Thanksgiving 08 வெச்சாச்சுங்க(ரோஜாவுக்கு பேரா முக்கியம்). தமிழ்ல நன்றி நவிலல்னு வெச்சுக்கலாம்.

இடம்:
Hoysala Restaurant
Highwood Plaza
2 John F Kennedy Blvd,
Somerset, NJ 08873
Ph: 732-247-4300

View Larger Map

நாள்:
நவம்பர்-29-2008- சனிக்கிழமை.


நேரம்:
5:30துல இருந்து 7:30 மணி வரக்கும்.(அதுக்கு மேல அங்கே இருந்தா செவுனியக் காட்டி அப்புவேன்னு சொல்லிப்புட்டாரு அந்த ஹோட்டல் டேமஜரு).அதனால 5:15க்கே வந்துரோனும்.

இன்னும் சந்தேகம் இருந்தா எனக்கு ஒரு தனி மடல் போடுங்க: ilamurugu அட்டு gmail டாட்டு com.

தேவை:
நீங்க வருவீங்கன்னா ஒரு பின்னூட்டம்.(இல்லாட்டினா வாழ்த்தோ, முட்ட கோசோ, தக்காளியோ, முட்டையோ.. அனுப்பிருங்க). எதுக்குன்னா ஒரு கணக்குக்குதான்.

எதுக்குன்னு கேக்க மாட்டீங்களா. அதாங்க டேமில்ல Agenda: பதிவுகளில் மொக்கைய குறைப்பது எப்படின்னு மொக்கைதான் போடப் போறோம். அதாவது பதிவுகளின் நீர்த்துப்போதலை தவிர்த்தல்.(சிரிக்காதீங்க ஆமா).

அப்புறம் இந்த சந்திப்புக்கு வெத போட்ட நசரேயன், பேரு வெச்ச கொத்ஸ், இடம் புடிச்சுக்கொடுத்த KRS, நேரத்தை நிர்ணயம் பண்ணின பாபா எல்லாருக்கும் ஒரு நன்றி!

Friday, November 14, 2008

மகசூல்- ஐப்பசி-29


 • அட்ரா அவனை, கொல்றா ங்கோ.. இப்படித்தான் அடிச்சிக்கிட்டாங்க. இதுல அடிச்சவன் கெட்டவனாம். அடிபட்டவன் நல்லவனாம். அடிபட்டவன் மட்டும் சும்மாவா இருந்தான். அடிச்சவங்களை விட பெரிய ஆயுதமான கத்தி வெச்சிருந்தான். நிருபருங்களும், சட்டத்துறை வல்லுனர்கள் மட்டுமே பொது காரியத்துக்கு முன்னாடி நிப்பாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்போ மாத்திக்க வேண்டிய கட்டாயம். தேவரா இருந்தாலும், ஆதி திராவிடனா இருந்தாலும் ஜாதி கல்லூரிக்குள்ள எப்படிப்போச்சு? தேர்தல் வழியாத்தானே? யாராவது சொன்னாத்தான் காவல்துறை உள்ளே போவுமாம். நிக்கிற காவல் அதிகாரிங்க ஒருத்தரோட மவனோ, தம்பியோ இப்படி அடிவாங்கினா சும்மா இருந்திருப்பாங்களா? உள்ளே வெச்சி கட்டிருக்க மாட்டாங்க லாடம்? இவுனுங்க படிச்சு என்ன லாபம்? கொசுறு சேதி- இந்தியாவின் கொடி நிலாவில் நட்டாச்சாம். ரெண்டும் இந்தியாதான் நடத்திக் காட்டிருக்கு. • தமிழ் ஈழம் தப்புன்னு பாஜக மக்கள் சொல்றாங்க. ஆனா ஆந்திராவுல பாஜக ஆட்சி வந்தா தெலுங்கானா வருமாம். அத்வானி சொல்றாரு. என்ன வோட்டுப் பிச்சைடா சாமி இது. தமிழனுங்களை எல்லாம் தவிட்டுக்கா பெத்தாங்க? • அம்பேத்கார் ஒரு இனத்துக்காக போராடினார். அதுக்காக அவரையே அந்த இனத்தின் தலைவரா காட்டிக்கிறது தப்பு இல்லே? அப்புறம் அவரு போராடினத்துக்கான அர்த்தம் என்ன?


 • இங்கிலாந்தை நொறுக்கிய இந்தியா!-கிரிக்கெட், இதுமட்டுமா?பிரிட்டிஷ் டெலிகாமில் 10000 பேர் நீக்கம்!-'ரெட் அலர்ட்'டில் ஐரோப்பிய பொருளாதாரம்!! - என்ன எழவுடா இது அங்கே 7 1/2 ஆரம்பிச்சிருச்சா?


 • Tamilish பயங்கரமான விளம்பரம் குடுத்து முன்னாடி போயிட்டாங்க. மக்களும் ஆர்வமா அங்கே போறதுக்கு நேரம் பார்த்துட்டு இருக்காங்க.
  Caution: படம் பெரிசாக்கினா சில மேட்டர் மாதிரியான படங்கள் வரலாம். கவனம் தேவை
  நெறைய புது மக்கள் அங்கே வலம் வர்றது தெரியுது. ஆனா என்ன கொஞ்சம் மாதிரியான இடம்னு முதல் பார்வையில தெரியுது. தெரியலைங்க, புது மக்கள் அதைத்தான் விரும்பராங்களோ என்னமோ. ஆனா அவுங்க திரட்டிக்கு விளம்பரம் குடுத்து மத்த திரட்டிக்கு இலவசமாவே விளம்பரம் குடுத்துட்டாங்க. எல்லாத் திரட்டிக்கும் நெறைய பதிவுகள் சேர விண்ணப்பம் வருது. மத்தபடி தமிழ்ப் பதிவுகள் திரட்டிகளுக்குள்ள அடங்க மறுக்கும் காலம் வந்தாச்சு. Tamil Blogs world requires MOST Powerful tool to aggregate the rapidly growing blogs than Pligg/ fof.


 • மாயூ- பட்டம் வாங்கிட்டாருன்னு நிலைத்தகவல்(டேமில்ல சொல்லனும்னா Status Message போட்டிருந்தாரு) நானும் ரொம்ப பவ்யமா திடமா இருக்க வேண்டிய கால கட்டம், சீக்கிரம் வேலை கிடைச்சுடும் அப்படின்னு பெரிய அறிவுரை குடுத்துட்டு இருக்கேன். அவருடைய கூட்டாளி வந்து நச்'னு சொன்னாரு. "பட்டம் வாங்கியாச்சுல்ல, பறக்க விடு".

Friday, November 7, 2008

ராமனைத் தேடும் தமிழர்கள்

தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது
இராமாயணம்.
இராவணன் உருவில்
பக்க்ஷே இருக்க
ராமனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள்

Wednesday, November 5, 2008

தேன்கூடு?


சாகரன் கல்யாண் கட்டிய தேன்கூட்டை நிர்வகிப்பவர்களே! வாசகர்களே! என்னாயிற்று தேன்கூடு? ஏன் கலைக்கப்பட்டது?

 • பல மக்களின் கற்பனாற்றலின் உந்து விசையை அதிகரித்தது தேன்கூடுதான். அதன் போட்டிகளின் மூலம் குவிந்த கதை, கட்டுரை, கவிதைகள் எத்தனை?
 • தமிழ்மணத்தின் இன்றைய சூடான இடுகையின் முப்பாட்டன் தேன்கூட்டின் அதிகம் பார்வையிடப்பட்டவைகள்.
 • பெட்டகம், வார்த்தைகளுக்கான அர்த்தம் என பல சக்திகளை ஒன்றடக்கியதே தேன்கூடு.
 • சாகரன் என்ற மனிதனின் உழைப்பை ஏன் பெட்டியில் வைத்து பூட்டியிருக்கிறீங்கள். காரணத்தைச் சொல்லலாமே.
 • தேன்கூடு கலைக்கப்பட்டதா? இல்லை தொடருமா?
தேன்கூட்டைப்பற்றியும் சாகரன் பற்றியும் அறியாதவர்களுக்கு.

தற்போது இருக்கும் நிர்வாகத்தினருக்கு என் வேண்டுகோள். எனக்கும் கல்யாணைத் தெரியாதுங்க. ஆனா அவரோட உழைப்பு மட்டும் எனக்குத் தெரியுது. அதுக்காவது மதிப்பளித்து தேன்கூட்டை மறுபடியும் கொண்டுவாங்க.

சாகரன் மீண்டும் வலைப்பதிவுலகில் வலம் வரட்டும்.

Monday, November 3, 2008

நம்மவர்(1995)

ரொம்ப நாளைக்கப்புறம் விரும்பிப் பார்த்த படம் 'நம்மவர்'. ஒவ்வொரு வசனமும், காட்சியும், பாடல்களும் அர்த்தமுள்ளதாகவே இருந்துச்சுங்க. படம் வெளியானப்ப(1995) பார்க்கும்போது, புடிக்காத இந்தப் படம் இப்போ புடிக்குது. பெரும்பாலான கமல் படங்கள் எல்லாமே இப்படித்தான் போல. காலத்துக்கு ஏத்த மாதிரி படம் எடுக்க கமல் கத்துக்கனும். அதுக்காக பேரரசு ரேஞ்சுக்கு போறதெல்லாம் வேஸ்ட். படத்தின் இசையமைப்பாளர் மகேஸ், இன்னும் உயிரோடு இருந்திருந்தா ரகுமானுக்கு நல்ல சவாலா இருந்திருப்பாரு. கமலின் பல சோதனை முயற்சிகள் இந்தப் படத்துல உண்டுங்க.


 • கரண் அறிமுகம்

 • மகேஸ்சின் அற்புதமான இசை

 • இயக்குனர் சேதுமாதவன்(2வது படமா இருந்தாலும்)

 • நடன இயக்குனர் பிருந்தா. இவுங்களை எப்படி இந்தப் பாத்திரத்துக்கு ஒத்துக்க வெச்சாங்கன்னு தான் தெரியல, ஆனாலும் அற்புதமான தேர்வு.

 • நாகேசின் அற்புதமான நடிப்பு. ரொம்ப நாளைக்கப்புறம் நகைச்சுவை நடிகரை அபூர்வ சகோதரர்கள் படத்துல ஒரு வில்லனாக் கொண்டு வந்தவர் கமல். பின்னாடி மகளிர் மட்டும்ல ஒரு பிணமா நடிக்க வச்சாரு. இப்படி நாகேசின் பல முகத்தைக் கொண்டு வந்த பெருமை கமலையேச் சாரும். National Award Winner for best Support Actor.

 • படத்துல கவுதமி, கமல்.. காதல் காட்சிகள், சூடேத்துற விதம், ம்ம் கமலின் அக்மார்க். நல்லாத்தான் இருக்கு அம்மணியும்... ஹ்ம்ம்ம்ம்.நல்ல ஜோடி(வாழ்க்கையிலும் கூட)
 • செலவு ரொம்ப கம்மி
 • 'சொர்க்கம் என்பது நமக்கு', பாடல் உன்னால் முடியும் தம்பியின் அடுத்த பகுதியின்னாலும் காலத்துக்கேத்தது. இந்தப் பாட்டுக்கு ஏதோ விருது கூட கெடைச்சிதாமே. தெரிஞ்சா என்னான்னு சொல்லுங்க, Plz

படத்துல காட்சிகள், வசனம், அமைப்புகள், இசை, எல்லாம் அற்புதமா இருந்தாலும் இரத்த புத்துநோய் ஒரு சொதப்பல் முதுகெலும்பு. படத்த மட்டுமில்லாம நம்மளையும் நோகடிக்கிற ஒரே விசயம் இதுதாங்க. DVDல பார்க்க படம் அருமையா இருக்கு.

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)