Wednesday, November 19, 2008

New Jersey-வலைப்பதிவர் சந்திப்பு-08


வணக்கமுங்க,
வட அமெரிக்க வலைப் பதிவாளர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து இந்தக் குளிர்காலத்திலேயும் சந்திக்கனும் முடிவு செஞ்சுட்டாங்க. எழுத்துதான் உலகம்னு இருக்குற நமக்கு ஏதுங்க குளிர், வெயில். அதுக்கு பேர் எல்லாம் வெக்கனுமாம்ல. அதனால அதுக்கு Thanksgiving 08 வெச்சாச்சுங்க(ரோஜாவுக்கு பேரா முக்கியம்). தமிழ்ல நன்றி நவிலல்னு வெச்சுக்கலாம்.

இடம்:
Hoysala Restaurant
Highwood Plaza
2 John F Kennedy Blvd,
Somerset, NJ 08873
Ph: 732-247-4300

View Larger Map

நாள்:
நவம்பர்-29-2008- சனிக்கிழமை.


நேரம்:
5:30துல இருந்து 7:30 மணி வரக்கும்.(அதுக்கு மேல அங்கே இருந்தா செவுனியக் காட்டி அப்புவேன்னு சொல்லிப்புட்டாரு அந்த ஹோட்டல் டேமஜரு).அதனால 5:15க்கே வந்துரோனும்.

இன்னும் சந்தேகம் இருந்தா எனக்கு ஒரு தனி மடல் போடுங்க: ilamurugu அட்டு gmail டாட்டு com.

தேவை:
நீங்க வருவீங்கன்னா ஒரு பின்னூட்டம்.(இல்லாட்டினா வாழ்த்தோ, முட்ட கோசோ, தக்காளியோ, முட்டையோ.. அனுப்பிருங்க). எதுக்குன்னா ஒரு கணக்குக்குதான்.

எதுக்குன்னு கேக்க மாட்டீங்களா. அதாங்க டேமில்ல Agenda: பதிவுகளில் மொக்கைய குறைப்பது எப்படின்னு மொக்கைதான் போடப் போறோம். அதாவது பதிவுகளின் நீர்த்துப்போதலை தவிர்த்தல்.(சிரிக்காதீங்க ஆமா).

அப்புறம் இந்த சந்திப்புக்கு வெத போட்ட நசரேயன், பேரு வெச்ச கொத்ஸ், இடம் புடிச்சுக்கொடுத்த KRS, நேரத்தை நிர்ணயம் பண்ணின பாபா எல்லாருக்கும் ஒரு நன்றி!

34 comments:

 1. இந்த படத்துல இருக்கறது உங்களை மாதிரியே இருக்குதுங்கண்ணா..என்ன முன்ன பார்த்ததுக்கு கொஞ்சம் ஒடம்பு வச்சுட்டீங்க போல :))

  ReplyDelete
 2. குளிர் காலத்தில் ஒரு சூடான சந்திப்பு, வந்துட்டா போச்சு

  ReplyDelete
 3. நானும் வர்றேன்.. நானும் வர்றேன்...

  ப்ளைட் டிக்கெட்டை என் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

  :-)

  சந்திப்பு இனிமையாக, ஜூப்பராக, குஜாலாக, கலக்கலாக நடைபெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. //..என்ன முன்ன பார்த்ததுக்கு கொஞ்சம் ஒடம்பு வச்சுட்டீங்க போல :))//
  இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லே. வர்றீங்களா இல்லையா? என்னையா இது 2 பேர்தான் அட்டெண்டன்ஸ் குடுத்திருக்காங்க. இதுக்கு எங்காவதுஒரு வீட்டுலயே சந்திப்ப வெச்சுக்கலாமே..

  ReplyDelete
 5. //பதிவுகளில் மொக்கைய குறைப்பது எப்படின்னு மொக்கைதான் போடப் போறோம். அதாவது பதிவுகளின் நீர்த்துப்போதலை தவிர்த்தல்.//

  அய்யய்யோ நீங்க நெம்புகோல் பதிவரா? வெவரம் தெரியாம பழக்கவழக்கம் வெச்சுகிட்டேனே...

  ReplyDelete
 6. எங்கள் கொள்கைக்கு எதிரான மீட்டிங். அதனால நான் வரமாட்டேன்

  ReplyDelete
 7. //இந்த படத்துல இருக்கறது உங்களை மாதிரியே இருக்குதுங்கண்ணா..என்ன முன்ன பார்த்ததுக்கு கொஞ்சம் ஒடம்பு வச்சுட்டீங்க போல :))//

  கொஞ்சம் தானா??????????

  ReplyDelete
 8. அண்ணே பதிவு போடும் போது படம் போட மறந்துடாதிங்க ;))

  என்ஜாய் ;))

  ReplyDelete
 9. நானும் கலந்து கொள்வேன்.

  ReplyDelete
 10. I will also try to attend this meet. Please count me in...

  ReplyDelete
 11. //ilamurugu அட்டு //

  இதான் எனக்குத் தெரியுமே!!

  ReplyDelete
 12. //இதான் எனக்குத் தெரியுமே!!//
  என்னங்க பண்ண, அகத்தின் அழகு முகத்துல தெரிய மாட்டேங்குது.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்,

  மொக்கை போடக்கூடாதுன்னா, என்னையெல்லாம் எழுதவேண்டாம்னு சொல்றீங்களா

  ReplyDelete
 14. சந்திப்பு முடிஞ்சதுக்கப்புறம் நாட்டாமைங்க உங்க கேள்விக்கு பதில் போடுவாங்க பாருங்க.. விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லே...

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்! குதூகல ஒன்றுகூடலா இருக்க வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 16. பதிவர் வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 17. இளா
  கொத்தனாரை ஒரு குறுக்கெழுத்து போட்டு கொண்டாறச் சொல்லுங்க!

  சத்யா - வேற ஏதோ ஒரு சமாச்சாரம் கொண்டு வரேன்-ன்னு சொன்னாரு-ல்ல? :)

  @கப்பி!
  அது இளா, இளா, இளாவே தான்-யா!
  நானும் சொன்னேன், நீயும் சொல்லிட்ட! :)

  //ILA said...
  //ilamurugu அட்டு //
  //என்னங்க பண்ண, அகத்தின் அழகு முகத்துல தெரிய மாட்டேங்குது//

  அகத்தின் அழகு ஜெகத்தில் தெரியும் அண்ணாச்சி! :)

  ReplyDelete
 18. பை தி பை
  வாட் இஸ் தி மீனிங் ஆஃப் ஹோய்-சாலா? (இந்தியில் படிக்காதீங்க சாமீ) :)

  ReplyDelete
 19. சந்திப்பு வெற்றிகரமான மொக்கையாக நடைபெற துபாய் மொக்கைக்குழுவினரின் சார்பாக வாழ்த்துக்கள்.. :))

  ReplyDelete
 20. ரோஜாவுக்கு பேருதானுங்களே முக்கியம்.. இல்லேன்னா அவங்களை விஜயசாந்தின்னு கூப்பிட்டுடுவாங்களே!!!

  ReplyDelete
 21. //அதாவது பதிவுகளின் நீர்த்துப்போதலை தவிர்த்தல்.////

  யாராவது தமிழ் டு தமிழ் மொழிபெயர்த்து சொல்லுங்கப்பூ...

  ReplyDelete
 22. Almost உள்ளேன் ஐயா!!!
  Tomorrow I'll confirm ஐயா!!!

  ReplyDelete
 23. இந்த முறை கலந்து கொள்ள முடியவில்லை. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள் !

  ReplyDelete
 24. மக்கா அவ்வளவுதான் மக்களா?

  ReplyDelete
 25. வருகை:
  1)இளா
  2)மருதநாயகம்
  3)பாபா
  4)கொத்ஸ்
  5)இனியா
  6)மொக்கைச்சாமி
  7)மோகன்கந்தசாமி
  8)ச்சின்னப்பையன்
  9)KRS
  10)நசரேயன்

  ReplyDelete
 26. சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. ஆகா இந்த பதிவ கொஞ்சம் லேட்டா பாத்துட்டேன்...பரவால ...நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம்....

  ReplyDelete
 28. inimelae ennaiyum vilayatuku sethukukonga.

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)