Sunday, October 9, 2005

சுத்தம் சோறு போடும்!


இதுவும் ஒரு புலம்பல்தாங்க..
பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் நிலநடுக்கம், கத்ரீனா & ரீட்டா, சென்னை கடலோர பகுதியில் மாதத்துக்கொருமுறை கொந்தளிப்பு...... என்னதான் நடக்குது இந்த உலகத்தில. ஏன் நடக்குது இதெல்லாம்? முற்பகல் செயின் பிற்பகல் விளையும் அப்படிங்கிறது நம்ம மக்களுக்கு மட்டும் இன்னும் ஏன் புரியவே மாட்டேங்குதுங்க. ஒரு இந்தியன் வெளிநாட்டுக்கு போனா தெரியற முதல் வித்தியாசம் என்ன தெரியுங்களா? "சுத்தம்". சுத்தம் சோறு போடும் அப்படின்னு சொன்னா, உடனே "அப்போ சுகாதாரம் குழம்பு ஊத்துமா"ன்னு வியாக்கியானமா கேள்வி மட்டும் கேட்கிறோம், அதை கடைபிடிக்கிறோமா சத்தியமா இல்லைங்க. போன வருஷம் விவசாயத்துக்கு தண்ணி இல்லாம நாம பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாதுங்க. அட, நெல்லம் பயிறுக்கு தண்ணி இல்லாங்காட்டியும் பரவாயில்லைங்க, நம்ம முப்பாட்டன் காலத்திலிருந்து செழிப்பா இருந்த தென்னை மரத்தையெல்லாம் காப்பாத்த நாங்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்லைங்க. டிராக்டர்ல எல்லாம் தண்ணி கொண்டு வந்து ஊத்தி காப்பாத்துனோம்.
எங்க தாத்தா, ஒரு நவீன விவசாயிங்க. தாத்தா இப்போ இல்லைங்க, இதெல்லாம் தெரிஞ்சுதானோ என்னமோ மேட்டாங்காட்டுல எல்லாம் மாஞ்செடி நட்டு வெச்சார், மகராசன். அதோட மட்டும் இல்லாம எங்க ஊர்ல முக்கால்வாசி பேர் மாஞ்செடி வைக்க காரணமாகவும் இருந்தார். அதனாலதானோ என்னமோ இப்பொவெல்லம் தண்ணி இல்லாட்டியும் எங்க ஊர் இப்போ சமாளிக்கவாவது முடியுது.

சரிங்க விஷயத்துக்கு வருவோம். யாரும் தப்பு செஞ்சாலும் பாதிக்கப்படுறது என்ன மாதிரி இருக்கிற விவசாயிங்கதான். நகரம் முழுசும் புகை, நாத்தம், சாக்கடை தண்ணிய ஆத்துல கலந்துவிட்டுறது அப்படின்னு முடிஞ்ச வரைக்கும் சுற்றுபுறத்த நாசம் பண்ணிடறாங்க. அப்புறமா பூமி நடுங்குது, கடல் கொந்தளிக்குதுன்னு சொல்றது தப்புங்க.

நான் சொல்றதை நம்பலைன்னா இந்த தொடுப்பை தட்டி பாருங்க

3 comments:

  1. புலம்பல் சரி..ஆனா, நில நடுக்கத்துக்கும் மாசுக்கும் என்னங்க சம்மந்தம் ???

    ReplyDelete
  2. தாத்தா தென்னை மாங்கண்றுகளை வைத்தார் நீங்க என்ன வச்சீங்க?
    புலம்பலையா?

    ReplyDelete
  3. லொள்ளு சாமி..
    நன்றாக எழுதியிருக்கிறீர்...விவசாயமும், தொழில் வளர்ச்சியும் சூழலைப் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும். புயல்கள் அதிக எண்ணிக்கையில் அதிக சக்தியுடன் உருவாதல் "Global Warming"ன் மறு விளைவே என நிறைய நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
    காஷ்மீர் பூகம்பம் இயற்கையானது என்றாலும், 100க்கும் மேற்பட்ட மனிதர்களின் நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட பூகம்பங்கள் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் அது போன்ற ஒரு பூகம்பம் மகாவில் ஏற்பட்டது

    பொருளாதார வளர்ச்சி நம் நாட்டின் ஏழ்மையை போக்க முக்கியம் எனினும் அதை பொருப்புடன் செய்வது எல்லோருடைய கடமையும்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)