
சின்ன வயசு, டென்னிஸ்ன்னா என்னான்னு தெரிஞ்ச காலத்தில், நம்மளோட Fav. சபாடினி. யார் யாருக்கோ நாம support பண்றோமே, நம்ம நாட்டிலிருந்தும் யாராவது விளையாட வந்தால் நல்லாயிருக்குமேன்னு நினைப்பேன். அப்புறம் மேரி பியர்ஸ், அன்னா அப்படின்னு வந்தாங்க, அப்போ ஜொள்ளு விட்டது என்னவோ உணமைதாங்க.
அந்த நேரத்தில் தான் நம்ம சானியா மிர்சா களம் இறங்கினாங்க. அவுங்க அழகுதாங்க, ஆனாலும் நாம என்னமோ அவுங்ககிட்ட ரசிச்சது விளையாட்டதானே தவிர அழகை இல்லை. எல்லா இந்தியனுக்கும் விளையாட்டு மேல இருந்த தீராத தாகம்தாங்க எனக்கும் இருந்தது. பெரிய levela பரிசு வாங்கலன்னாலும் நல்லாவே விளையாடறாங்க. கண்டிப்பா இன்னும் ஒண்ணு இல்லை ரெண்டு வருஷத்துல பெரிய level kku வந்துருவாங்க.
ஆனா இது நம்ம மக்களுக்கு பொறுக்காதே. சானியா போடுற துணி இஸ்லாமத்துக்கு ஒத்து வராதுன்னு ஒரு அமைப்பு, சானியாவுக்கு மிரட்டல் விட்டு இருக்காங்க. இதுல என்ன கொடுமைன்னா, என்ன மாதிரி சாமானியனுக்கு சானியா முஸ்லிம்ன்னு தெரிஞ்சதே அந்த மிரட்ட்லுக்கு அப்புறம் தான். ஏனுங்க சானியாவுக்கு ஒரு 8 கஜம் சேலை கட்டி டென்னிஸ் விளையாட விட்டுரலாமா? யோசனை பண்ணுங்க சாமி. இப்பத்தான் இந்தியா ஒவ்வொரு விளையாட்டிலும் பிரகாசிக்க ஆரம்பிச்சிருகாங்க இந்த நேரத்துல இது எல்லாம் தேவையா?
ஏனுங்க "I am cute no shit" போன்ற வாசகங்கள் தேவைன்னு நினைக்கிறீங்க
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅவுங்க துட்டு அவுங்க டப்பு அவுக போடுறாக. அது பத்தி நமக்கின்னாங்க. நல்லா வெள்ளாண்டா ஓ போடுவோம். இல்லன்னா முட்டா கங்குலிய துரத்தினாப்பில துரத்திடுறோம் நம்ம நினப்பிலருந்து....அம்புடுதான். இதுக்காக அவுங்கள சீ செவுரா (அல்லது அதுபோல ஏதோ ஒரு பெத்த பேரு) படம் போட்ட டீ சர்ட் போட்டு அறிவுசீவிங்களோட ஐக்கியமாயிடுங்கன்னா சொல்லமுடியும்.
ReplyDelete