அமெரிக்காவில் வாழ் மக்களின் whatsapp குழுக்களில் ஒன்று. தினமும் காலை எழுந்தததிலிருந்து இரவு படுக்க போகும் வரை பெரிய அடிதடி நடந்துகொண்டே இருக்கும். அதுவும் எதற்கு தெரியுமா? அடுத்து அம்மா ஆட்சி வேண்டுமா? ஐயா ஆட்சி வேண்டுமா? இல்லை கேப்டன் ஆட்சி வேண்டுமா என்று. இதில் கொடுமை என்னவென்றால் இணையத்தை விட கேவலமா எதிர் கட்சியைத் திட்டிக்கொள்வதுதான், குழுவில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்கள் என்பது வேறு விசயம். இதில் குறிப்பிடத்தக்க இன்னோர் விஷயம், குழுவில் இருக்கும் பாதிபேருக்கு இந்தியாவில வாக்குரிமை இல்லை, அதாவது அமெரிக்க வாசிகளாக மாறி பல ஆண்டுகள் ஆனவர்கள். மீதி பாதிப் பேர் வாக்களிக்க எக்காரணம் கொண்டும் போக மாட்டார்கள். இவர்கள்தான் தமிழகத்தின் அடுத்த ஆட்சியைப் பற்றி விவாதிப்பவர்கள்.
காலையில் அந்தக் குழுமம் போனவுடன் ஒன்றே ஒன்றுதான் தோன்றும், அதையும் நடிகர் கமல் அவர்கள் சொல்லி வைத்துவிட்டார் "போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா"
காலையில் அந்தக் குழுமம் போனவுடன் ஒன்றே ஒன்றுதான் தோன்றும், அதையும் நடிகர் கமல் அவர்கள் சொல்லி வைத்துவிட்டார் "போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா"
Hahaha
ReplyDelete