"இணையவாதிகள் கொதிக்கிறாங்க, இவுங்க சமூகத்துல இருந்து தனியாத் தெரியறாங்க. சமூகத்துக்கும் இவுங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை"
அப்படின்னு ஒரு நண்பர் சொன்னாரு. அதுக்காகத்தான் இந்தப் பதிவு.
தினமும் நமக்கு பேச, எதாச்சும் ஒன்னு புதுசு புதுசாக் கிடைக்கனும். அதாங்க, ஏதாவது ஒரு வீட்டுக்கு முன்னாடி, விசாலமான திண்ணையில் பெருசுங்க உக்காந்துகிட்டு, வெத்தலை இடிச்சிகிட்டே ஊர்க்கதை பேசுவாங்க இல்லை.. அட, அதுவுமில்லைன்னா, ஓசியிலோ இல்லை கடன் வெச்சோ டீ குடிச்சாலும், ஒரு பத்தி விடாம பத்திரிக்கையைப் படிச்சிட்டு வம்பளப்பாங்களே டீக்கடை பெஞ்ச், இப்படி இருக்கிற இன்னொரு இடம்தாங்க இந்த இணையத்துல இருக்கிற சமூக வலைதளங்கள். சினிமா விமர்சனமோ, கவர்ச்சி நடிகைகளின் கல்யாணமோ, ஈழப்பிரச்சினையோ, ஏதாச்சும் ஒன்னைப் பேசிக்கிட்டே இருப்பாங்க. தினமும் எதாவது ஒன்னு சூடாகிடும். மாணவர்கள் பிரச்சினையைப்பத்தி ரத்தம் கொதிக்கிற மாதிரி பேசிட்டே இருப்பாங்க. பாலாவோட பரதேசி டீசர் வந்தவுடனே, அதை மறந்துட்டு பாலாவை திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் புதுசா வந்த போப் பத்தி, இப்படி தடம் மாறிட்டே இருக்கு இணையவாதிகளின் பேச்சு.
" Loneseoவின் Rhinocerros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகத்துக்கு வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் முக்கியமான ஒரு விசயத்தை பேசிக்கொண்டிருக்கும்போது, முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும் திடும் என்று புழுதியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் incongruity யும் அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா, ஆப்ரிக்க வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கிவிடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்!"
மேலே இருக்கிறதைச் சொன்னது, கணையாழியின் கடைசிப் பக்கங்கள்ல - ஆகஸ்ட் -1973ல் சாட்சாத் வாத்தியார் சுஜாதா சொன்னதேதான். அப்ப இருந்த நிலைமைக்கு அவர் சொன்னது, திண்ணைப்பேச்சாளர்களுக்கோ, டீக்கடை பெஞ்ச் தேய்ச்சவங்களுக்கோ. ஆனா இன்னிக்கு அதே இணையவாதிகளுக்கும் பொருந்துது. இதுல இருந்து என்ன தோணுது... இருங்க இருங்க இன்னொன்னையும் சொல்லிடறேன்.
எஸ்.வி. சேகர் ஒரு நாடத்துல சொல்லியிருப்பாரு, "பரபரப்பான செய்தின்னா, முதல் ரெண்டு நாள் முதல் பக்கத்துலையும், அப்புறம் ரெண்டு நாளைக்கு 2ம் 3ம் மூன்றாம் பக்கத்துலயும், ஒரு வாரங்கழிச்சுப் பார்த்தா கடைசிப்பக்கத்துலேயும், அடுத்த வாரம் அந்தச் செய்தியே இல்லாமையும் போயிடும்"னு நாளிதழ்களை பத்தி கிண்டலாச் சொல்லியிருப்பாரு.
இதையேத்தான் இணையவாதிகளும் செய்யறோம். இதுல ஒரு வித்தியாசமும், இல்லை. அதனால Moral of the Story is நாம மாறவே இல்லை. பேசுறதுக்கான இடம்தான் மாறியிருக்கோ ஒழிய, முறை மாறவேயில்லை.
Thanks: Img From Dinamalar- Tea Kadai Bench
உங்க நண்பர் சொன்னதை தப்புனெல்லாம் சொல்ல முடியாது. இணைய உலகம் ஒரு மாதிரி சமூகத்தை விட்டு பிரிந்துதான் இருக்கு. :-0
ReplyDeleteதவறுங்க. சமூகம் அப்படின்னாவே இணையத்துல இருக்கிறவங்களும் சேர்ந்துதான். இணையத்தை பாவிக்கிற எல்லாருமே இணையவாதிங்க அப்படிங்கும்போது, இந்த வாதமே தவறுங்க.
Deleteஉங்க நண்பர் சொன்னதுல உண்மை இல்லாம இல்ல.. முகம் தெரியாதுன்ற தைர்யத்துல தான் பலரும் இங்கே அதீதமாய் உணர்ச்சி வசப்படுகிறார்கள்.
ReplyDeleteசமூகத்துக்காக அறச்சீற்றம் கொள்ளும் பலரும் தெருவில் இறங்கி போராடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? எச்சில் கையால் காக்கா ஓட்டாதவர்கள் கூட இணையத்தில் வள்ளலாக முடியும்.
இங்கே எல்லாமே அதிகப்படி தான்.
நல்லாச்சொன்னீங்க.
ReplyDeleteநன்றிங்க ஐயா!
ReplyDeleteஇதில் இருந்து தாங்கள் சொல்ல வரும் கருத்தை நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் இதுதான் எனக்கு பிடிக்கிறது நான் என்ன செய்ய
ReplyDelete