காங். கூட்டணியிலிருந்து திமுக விலகியது.
அதிமுகவுக்கு, இது பெரும் சங்கடத்தை கொண்டு வந்து தந்திருக்கிறது. ஏற்கனவே மாணவர்கள் போராட்டம், இதில் இவர்களும் இன்னொரு பக்கம் செய்லபட, வரும் பாராளமன்ற கூட்டணியில் குழப்பத்தை தாராளமாகச் திமுக செய்யும் என்பது இன்னொரு கவலை. இது நாள் வரையில் அமைதி காத்து வந்த முதல்வரே "இது ஒரு நாடகம்" என்று அறிக்கை விடுமளவுக்கு மாற்றியிருக்கிறது. அதிமுகவுக்கு கையறுநிலையை கொண்டு வந்ததில் கலைஞர் மீண்டும் அரசியல் சாணக்கியன் என்று நிரூபித்திருக்கிறார்.
காங். இது பெரும் பின்னடைவே, தமிழகம் மட்டுமல்லாமல், தேசியளவிலும். ஆட்சியிலிருந்தாலும், திமுகவின் விலகல் ஒரு தர்ம சங்கடத்தை அளித்துவிட்டது.
தமிழகளவில், மக்களுக்குத் தெரியும் இந்த விலகல் எந்த விதமான பயனும் இல்லையென. சதுரங்க ஆட்டத்தில் வெட்டு நடந்துகொண்டிருக்கும் இடத்திற்கு அப்பால், சம்பந்தமேயில்லாமல் ஒரு மூவ் நடக்குமே அதுபோலத்தான் என்பது தமிழக மக்களின் பார்வை. காரணம் மாணவர்களின் முன்னெடுப்பு, டெசோவை அசாதாரணமாக கீழே தள்ளியது.
சோ, சுப்ரமணிய சாமி போன்றவர்களுக்கு வேலைக்கான நேரம் வந்துவிட்டது. டீ பார்ட்டி, அரசியல் கலந்தாலாசோனைகள், செவ்விகள் என இனி தேர்தல் வரைக்கும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பல லாபியிஸ்ட்டுகள் தமிழகம் நோக்கி வர விமானத்திற்கு சீசன் டிக்கெட் எடுத்திருப்பார்கள்.
இந்தியளவில், திமுகவிற்கு இது பெரிய வெற்றி, CNN ஆரம்பித்து விட்டது,. இன்னும் 2 நாட்களுக்கு TRP Rating இறங்காமல் திமுகவின் விலகலை வைத்து நிகழ்ச்சிகள், செவ்விகள் என ஒப்பேற்றிக்கொள்வார்கள்.
யாருக்கு எப்படியோ திமுக தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. இறுதிக்கட்ட ஈழப்போரின் போது கையறுநிலையிலிருந்தவர்கள் திமுக தொண்டர்கள்தான். இனிமேல் கொஞ்சம் சுவாசித்துக்கொள்வார்கள்.

என்னது அலசல்னு சொல்லிட்டு கொஞ்சோண்டு தண்ணி ஊத்தி அலசி இருக்கிங்க
ReplyDeleteசொல்வதைச் சுருங்க சொன்னால் போதும் பாருங்க. எதுக்கு வழ, வழா, கொழ கொழா?
Deleteஹி..ஹி...அப்படியா
Deleteஇது முழுக்க முக வின் தேர்தல் ஸ்டண்ட் மட்டுமே; இது பெரிய சாணக்கியத்தனம் என்று கழகக் கண்மணிகள் வேண்டுமானால் மகிழ்ச்சியடையலாம்.
ReplyDelete(எப்படியும் நீங்கள் எனது கருத்துக்குப் பதிலளிக்கப் போவதில்லை; ஆனால் எனது பார்வையைச் சொல்லாமலிருக்க முடியவில்லை!)
இதுல பதில் சொல்ல என்னங்க இருக்கு. சாணக்கியத்தனம்னா ஏதாவது பெரிய பலன் இருக்கனும். இந்த விலகல்னால என்ன பலன் இருக்கும்னு நினைக்கிறீங்க?
Deleteமுக வுக்கு வேறு வழி இல்லை என்பதுதான் நிலை.
Deleteகாங்கிரசோடு மீண்டும் கூட்டு என்று சொல்லிவிட்டு ஓட்டுக் கேட்கப் போனால் செருப்பால் அடிப்பார்கள் மக்கள்; ஏற்கனவே சட்ட மன்றத் தேர்தலில் வாங்கிய அடி இன்னும் வலிக்கிறது.
காங்கிரசோ திமுகவைப் பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என்று சொல்கிறது; விலக நினைத்தாலும் 2ஜி பயமுறுத்துகிறது.
முழி பிதுங்கிப்போய், வெளியே வந்தால்தான் தேர்தலில் ஓட்டுக் கேட்க முடியும் என்ற நிலை.
ஜெயோ உண்மையான தந்திரத்துடன் விசயமில்லாத காந்தையும் கழட்டி விட்டு விட்டு தன்னுடைய எல்லா வழிகளையும் திறந்து வைத்திருக்கிறார்..
கதிகலங்கிப் போய்த்தான் விட்டால் போதும் என்று கழட்டிக் கொண்டிருக்கிறார் முக. இலங்கைத் தமிழர் பெயரைச் சொல்லி கழட்டிக் கொண்டிருப்பதால் அதில் ஏதாவது தேறுமா என்று பார்க்கும் ஒரு கணக்கும் இருக்கிறது.
ஆக கிட்டத்திட்ட நொந்து வெந்து வெளி வந்திருப்பவரை, சாணக்கியத்தனத்துடன் வெளிவந்திருக்கிறார் என்று பெருமிதப் படுபவர்கள் நிச்சயம் பொதுப் பார்வையாளர்கள் அல்ல; முக வின் அடிமைகள்.
பொதுவாக அடிமைகளின் சிந்தனையை, மனோபாவத்தை வேறு திக்கில் மாற்றுவது மிகக் கடினம்.
அந்த நோக்கில்தான் கூறினேன்.
மேலும் உங்களுடைய பல பதிவுகளில் நான் பின்னூட்டியதும், அதற்கு ஒரு வரி இல்லை,ஒரு வார்த்தை பதில் கூட நீங்கள் அளித்திருக்க வில்லை,இதுவரை..எனவே நீங்களும் கழகக் கண்மணியாய் இருக்கும் பட்சத்தில் பதில்வராது என்று தோன்றியதாலும் அவ்வாறு கூறினேன்.
//இந்தியளவில், திமுகவிற்கு இது பெரிய வெற்றி,//
ReplyDeleteஉ.பிக்களுக்கு ஹிட்,
நீன்ங்க உ.பி ஆ சொல்லவேயில்லை :-))
இது செம காமெடியா ஹிட் ஆகி இருக்கு என்பது மட்டுமே உண்மை :-)).
நீங்க என்னமோ கலிஞர் ராச தந்திரம்ம் பண்ணிட்டார்னு சொல்லிக்கிட்டு இருக்குகிங்க,ஆனால் கலிஞரை இந்த முடிவை நோக்கி தள்ளியதே அம்மையார் தான் அப்போ யாரு பெரிய ராச தந்திரி?
கூடிய சீக்கிரம் மாணவர்களின் குரலுக்கு இசைவாய் அம்மையாரிடம் இருந்து அறிக்கை வரும்,பின்னர் தெரியும் சாணக்கியதனம்!
உங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் இன்னும் விளங்கலைன்னு நினைக்கிறேன்!
//பின்னர் தெரியும் சாணக்கியதனம்!///
Deleteஅது பத்தி இருக்கட்டும்ங்க. ஆனா காங்'ஐ திமுக வந்ததே சந்தோசம்தான் (ஒரு உபியா) (பின்னாடியே CBI வரும் பாருங்கன்னு ஒரு கார்ட்டூன் வேற பார்த்தேன்)
//சோ, சுப்ரமணிய சாமி போன்றவர்களுக்கு வேலைக்கான நேரம் வந்துவிட்டது. ///
ReplyDeleteஇவனுகளை நினைத்தால்தான் பீதியாக உள்ளது என்ன பண்ணுவானுங்கலோ பக்கிக...
Maakkaan.
தி.மு.க மீது சவாரிசெய்த காங்கிரஸை குப்புறவிழுத்தியுள்ளார் கருணாநிதி.காங்கிரஸுடன் கூட்டணிசேர ஜெயலலிதாவும், விஜயகாந்தும் முன்வரமாட்டார்கள்.ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒன்றாக சந்தர்ப்பம் இல்லை. விஜயாகாந்தை இழுக்க தூண்டில் போட்டுள்ளார் கருணாநிதி
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete