நாளைய இயக்குனர், இந்தளவுக்குப் பிரபலமாகாத காலம்னு நினைக்கிறேன். தமிழ் குறும்படங்கள் வெகு சொற்பமாய் இருந்த காலம் அப்படின்னு நினைக்கிறேன். அப்பத்தான் இவரோட குறும்படம் ராமசாமியை யூட்யூப் மூலமா பார்க்கிற சந்தர்ப்பம் கிடைச்சது. அடடே, நல்லாயிருக்கே அப்படின்னு பலரும் இவர் பக்கம் திரும்பிப் பார்த்த சமயம் அதுதான்னு நினைக்கிறேன்.
ராமசாமி - வி.கே.ராமசாமியின் ஒரு காட்சியை அடிநாதமா வெச்சி சிரிக்க வெச்ச படம் அது. வெங்கட் சுந்தரோட அபாரமான நடிப்பு இல்லை, இல்லை அசால்ட்டான நடிப்புதாங்க படத்துக்கே பலம். இதுக்கும் பெரிய தொழில் நுட்பமில்லாத, பெரிய பட்ஜெட் எதுவுமில்லாத, இசைக்குன்னு தனியா ஒரு ஆள் கூட இல்லாம, பின்னி எடுத்த படம்.வசனம், நடிப்பு, காட்சி இவ்வளவுதான் இந்தப் படத்துக்கு ஆதாரம்.
அப்புறம் கொஞ்ச நாளிலேயே வந்துச்சு ஒரு பாட்டு. அதிபுதிரியாக ஹிட் அடிச்சுது, அதுதான் இவரின் அடுத்தக் குறும்படத்தின் பாடல் - அது ஊருக்கு 4 பேரு. சுருக்கமாக O4P. அந்த பாட்டுக்கு இசையமைச்ச பாலமுரளிக்கு செம திருப்பு முனையா இருந்துச்சுன்னு சொல்லிக்கலாம். படத்தை திரையரங்கத்துல எல்லாம் வெளியிட்டு, அதாங்க Screening [ஒன்னு ரெண்டு காட்சிகள் மட்டும் ஓடும்]. தொழில்நுட்பத்துல ஒரு திரைப்படத்துக்கான அத்தனை அம்சங்களும் இருந்துச்சு
எனக்கோ ஆச்சரியமான, ஆச்சர்யம், இந்தச் செய்திகளை எல்லாம் Facebook வழியாத்தான் தெரிஞ்சிகிட்டேன். இதற்காக இவர் செலவு செய்த பணமும், நேரமும் அதிகமா ஆகியிருக்கும். என்னமோ திட்டமிருக்கு.
ஊருக்கு 4 பேரு, பெரிய ஹிட் ஆச்சு. அபிநவ் (படத்தொகுப்பு) அவரோட அந்தப் படத்தோட லெவலே வேற மாதிரி ஆகிருச்சு. சினிமா மக்களெல்லாருமே இந்தப் படத்தை கண்டிப்பா பார்த்திருப்பாங்க. அதுவும் MLMஐ வெச்சி, நல்ல நோக்கத்தோட வந்ததால உண்மையாலுமே அதிரிபுதிரியா ஹிட்டடிச்சுது. பல விவாத மேடைகளில படத்தோட சாரம்சத்தைப் பத்தி பேசினாங்க.உண்மையாகவே MLM பத்தி பலருக்கும் இருக்கும் கேள்விகளை வெளிச்சம் போட்டு கேட்டாங்க. பதில் இல்லைங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அதுவும் இணையத்துல 10 நிமிசத்துக்கு மேல குறும்படம்னாவே ஓட்டிவிட்டு பார்க்கும் காலத்துல சற்றேறக்குறைய 30 நிமிசத்துக்கு படமெடுக்கிறதுக்கும் ஒரு தில் வேணும்
இவுங்க குழுவுல, ஆரம்பத்தில இருந்தே ஒளிப்பதிவுல கலக்கிட்டு இருக்கிறார். KB Prabhu.
ஆனா இதுக்கெல்லாம் முன்னாடியே(?!) 536 அப்படிங்கிற குறும்படத்தை எடுத்திருக்காங்க அப்படிங்கிறது பலரும் அறிந்திராத செய்தி. அது உங்களுக்காக

இராமசாமி - குறும்படம்
====0oo0=====

குறும்படம் ஊருக்கு 4 பேரு

குறும்படம் - 536
அப்புறம் மஞ்சள் வெயில் அப்படின்னு ஒரு படம்னாங்க, அது என்னாச்சின்னே தெரியலை(???!).
====0oo0=====
====0oo0=====
====0oo0=====
ஒரு சமயம் இவுங்களோட பேட்டி கோவையில தனியார் சேனல்ல ஒளிபரப்பாச்சு. அதுலதான் தெரிஞ்சது இயக்குநர் ஷங்கர் அழைச்சதையும், இவர்னால அவரிடம் உதவியாளரா சேரமுடியாத நிலையையும் இதுல சொல்லிருந்தாரு. ஆனா சரியான முடிவை கணேஷ் எடுத்திருக்காருன்னு நான் நினைக்கிறேன்.
அப்புறம் மஞ்சள் வெயில் அப்படின்னு ஒரு படம்னாங்க, அது என்னாச்சின்னே தெரியலை(???!).
====0oo0=====
வெங்கட் வேற ரெண்டு குறும்படத்துல படத்துல நடிச்சாப்ல. நாளைய இயக்குனர்ல கூட வந்தாப்ல. வெங்கட்டுக்கு ஷங்கர் படத்துல வாய்ப்பு கிடைக்கவும் இது உதவுச்சுன்னா
பாருங்களேன். நண்பன் படத்துல விஜய்க்கு சீனியரா நடிச்சிருப்பாப்ல.
YesKay தனியா படம் செஞ்சிருந்தாரு. (http://www.youtube.com/watch?v=kqxA_9hUCi0).
பாலமுரளி- பல குறும்படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. சமீபத்துல வெளியான புத்தகம் திரைப்படத்துக்கும் சில காட்சிகளுக்கு இசையமைச்சிருக்கிறதா கேள்வி.
அபிநவ்வோட பேரை பல குறும்படங்களில் பார்த்தேன். நாளைய இயக்குனர்ல வந்த பல படங்களில், இவுங்களோட பங்களிப்பு கண்டிப்பா இருக்கு.
====0oo0=====
2012ல் குட்டீம்மா படத்தைப் பத்தி சொன்னாங்க, படத்தோட trailer வந்திச்சு, அதுவும் சமீபமாத்தான். படத்தைப் பல இடத்துல Screening பண்ணியிருக்காங்க. பெரிய வெற்றின்னு வேற சொல்றாங்க. படம் Youtubeல வரும்னு காத்திட்டு இருக்கேன்.
B.லெனின், பாலு மகேந்திரா, அம்ஷன் அப்படிங்கிறவங்க எல்லாம் 1980/90களிலேயே இந்தக் குறும்படம்/Documentary எல்லாம் செய்த முன்னோடிகள்.
====0oo0=====
திரைப்படத்திற்காக குறும்படங்களை ஒரு Profile ஆ செய்வாங்க. அதுல கணேஷ் மாபெரும் வெற்றி பெற்றிட்டாரு.
குறும்படங்கள் மூலமா பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வெச்ச கணேஷுக்கு வாழ்த்துகள். குறும்படங்களுக்காக இருந்த பல பார்வைகளையும் மாத்தினதுல கணேஷூக்கு முக்கிய இடமுண்டு. இப்பவும் பலர் குறும்படம் எடுத்தா அது Youtube/Vimeoவுல வந்தாப் போதும்னு நினைக்கிறாங்க. இல்லைன்னா நாளைய இயக்குனர். இதுதான் இன்னிக்கு இருக்கிற தமிழ் குறும்பட சூழல்.
கூடிய சீக்கிரம் நாங்க உங்களை ஒரு திரைப்பட இயக்குநராப் பார்க்கனும் பாஸூ.
இப்படிக்கு
இதுநாள் வரைக்கும் வெகுதொலைவிலிருந்து உங்களைத் தொடரும் ஒரு ரசிகன்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete