Tuesday, February 21, 2006

நாலு விஷயம் - சங்கிலிப்பதிவு

கொஞ்சம் வருஷத்துக்கு முன்னே பச்ச சேலை வாங்கினா அண்ணன் நல்ல இருப்பான்னு சொல்லி, ஜவுளி கடைக்காரங்க எல்லாம் விக்காத பழைய சேலையெல்லாத்தையும் பச்ச கலருக்கு மாத்தி வித்தாங்க. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைங்க.

கொங்கு ராசாவுக்கு நம்ம மேலே ஏதோ பிரியம் போல. ராசா கார் வாங்கிட்டு ட்ரீட் கொடுக்காம ஏமாத்திட்டாரேன்னு கோவத்துல இருந்தேன். ஏதோ புதுசா வலைப்பதிவுல ஆரம்பிச்சிருக்காங்க சங்கிலி தொடர்ன்னு (tag-மொழி பெயர்த்தவர் ராசா) அதுல நம்மை இழுத்துவிட்டுட்டார் பெருமைக்குரிய ராசா. கொஞ்சமாவது வேலை வெட்டி இருக்கிறவங்களுக்குதான் அது பொருந்தும், நமக்கு.. ஹி ஹி.

இந்த நைஸ் பண்ற வேலையெல்லாம் வேணாம் ராசு ட்ரீட்தான் வேணும்
(காதலிக்க நேரமில்லை - விஷ்வநாதன்! வேலை வேணும், பாட்டு மாதிரி படிச்சுக்கோங்க)
கொங்கு ராசு! ட்ரீட்டு வேணும்
கொங்கு ராசு! ட்ரீட்டு வேணும்
கொங்கு ராசு! ட்ரீட்டு வேணும்

நாலு பேர்கிட்ட பழகி நல்லது கெட்டது தெரிஞ்சுக்கோ- இது என் அப்பா சொன்னது. நல்லது மட்டுமா கிடைக்குது? சரி விஷயத்துக்கு வருவோம்.

Four jobs I have had:

1.விவசாயம்
2.மேய்த்தல் (மனுஷப் பயலுகளை)
3.வளர்த்தல் (1 மாதமே ஆன என் செல்ல மகனை)
4.ஊர் சுத்தல் (ஊர் சுத்தின்னும் நமக்கு ஒரு பட்ட பெயர் இருக்கு)

Four movies I would watch over and over again:
1. சதிலீலாவதி
2. மைக்கேல் மதன காம ராஜன்
3. சிங்காரவேலன்
4. சர்வர் சுந்தரம்

Four places I have lived(for years):
1. டெல்லி
2. பெங்களூர்
2. லண்டன் (அள்ளி விடு)
4. செல்லிகாடு (என் தோட்டம்)
(தலைவர் மாதிரி இமையமலைகூட போலாம்னு ஆசைதான்)

Four TV shows I love to watch:

1.விஜய் டீ.வி. - லொள்ளு சபா..
2.ஜெயா டீ.வி காமெடி பஜார்
3.போகோ. ஜஸ்ட் ஃபார் ஃகேக்ஸ்
4. விஜய் டீ.வி.- முன்னே கடவுள் பாதி மிருகம் பாதி, இப்போ இல்லை (ஆள் மாறினதுக்கப்புறம் பார்க்கிறதை நிறுத்திட்டேன்)

Four places I have been on vacation:
1.சிவசமுத்திரம், சோம்நாத்பூர், ஹலபீடு(கர்நாடகா)
2.பாரிஸ்(தேன்நிலவு)
3.லண்டன்
4.நைனித்தால், டெல்லி, ஜெய்பூர், உதைப்பூர்,

Four of my favourite foods:
இதுல நானும் ராசாக்கட்சி இருந்தாலும்.
1. கோபி மஞ்சூரியன்
2. முள்ளங்கி சாம்பார்
3. அவித்த கடலை
4. சோளக்கருது

Four places I'd rather be now:
1. ஊர்ல பாட்மின்டன் விளையாட போயிருக்கலாம்
2. ஊர்ல கிரிக்கெட் விளையாட போயிருக்கலாம்
3. வேம்பநாடு
4. கொழிஞ்சாம்பாறை

Four sites I visit daily:
சைட்-- நானா.. ச்சே..சே. .. கல்யாணம் ஆகிடுச்சு ஓ இது வலைத்தளம் பத்தின கேள்வியா..
1. தமிழ்மணம்
2. தேன் கூடு
3. கூகிள்
4. யாஹூ


Four bloggers I am tagging*:

1. கைபுள்ள
2. நாட்டாமை
3. தாணு
4. டோண்டு
எப்படியோ 4 பேரை இழுத்துவிட்டாச்சு, இனி அவுங்கபாடு

9 comments:

 1. கொங்கு ராசு! ட்ரீட்டு வேணும்//

  அதான் உங்களுக்கு ஒரு சங்கிலி குடுத்தாச்சே.. மறுபடியும் ட்ரீட் கேக்கரீங்க..

  ReplyDelete
 2. ஹ்ம்ம் என்ன பண்றது, நம்ம ஊர்க்காரங்களுக்கு பேச சொல்லியா கொடுக்கணும்? வாயால அல்வா கிண்டுற மக்களாய்போய்ட்டோம். அவ்ளோதான் ட்ரீட்.

  ReplyDelete
 3. "சோலைக்கருது"- இது என்ன உணவு?

  ReplyDelete
 4. நமது இள அவர்களா?...

  நன்று நன்று. மிக நன்றாக எழுதிக் கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துக்கள் இள.

  ReplyDelete
 5. என்னங்க இளா,

  ஒக்காந்து யோசிச்சேன்
  நின்னுகிட்டு யோசிச்சேன்
  படுத்துகிட்டு யோசிச்சேன்
  நடந்துகிட்டும் யோசிச்சேன்
  கடைசிலதான் என்னான்னு தெரிஞ்சுது ! என்னைய இப்படி யோசிக்க வச்சுட்டீங்களே!

  " சோலைக்கருது = சோளக்கதிர் "
  இத நான் கண்டுபிடிச்துக்கு மெடல் எல்லாம் கொடுத்துராதீங்க!!

  ReplyDelete
 6. சோளக்கருது- சோளக்கதிர், மக்காசோளம். மனசுக்கு பிடிச்சத பேசும்போது அறிவு வேலை செய்யாதாமில்லை. அதுபோல ஏதோ ஒரு வேகத்துல மாத்தி அடிச்சுட்டேன்.
  -.நன்றி மூர்த்தி
  -.Jsri-விடை பாண்டி சொல்லிட்டார்
  -.கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச பாண்டிக்கு மெடல் இங்கே.
  http://www.milnet.com/pentagon/medals/PIM-Medal.gif

  ReplyDelete
 7. //"சோலைக்கருது"- இது என்ன உணவு?//
  சோளம்.. சோளக்கருது..

  அண்ணீ ஊர்ல இல்ல.. இவரு வேற ட்ரீட் ட்ரீட்'ங்கிறாரு.. அதான் டங்க் ஸ்லிப் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 8. //சோளக்கதிர், மக்காசோளம்.//
  இது ரெண்டும் வேற வேறன்னு தான நினைச்சேன்..? ;-)
  நீங்க எதை சொல்றீங்க..?

  ReplyDelete
 9. இளா,
  எய்ட்ஸ் பெண்கள் பற்றி வாசிக்க வரும்போது, எம்பேரும் சங்கிலித் தொடரில் இருப்பதை மிகத் தாமதமாகத் தெரிந்து கொண்டேன். அடுத்து எழுதிடறேன்.

  ReplyDelete

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)